Posts

புகைக்கூட்டம்

மண்ணிலிருந்து விண்ணிற்கு மலர் தூவல் புகைப்போக்கி வழியாக !       --  பிரவீணா தங்கராஜ் .

இரவில் விமானம்

ஐந்து நிமிட எரிநட்சத்திரம் வானில் விமானம் .     --  பிரவீணா  தங்கராஜ் .

இயற்கையோடு என் வாழ்க்கை

அழகிய அருவி ,   அருகினில் ஓடம்  ஆகாய மேகம் ,        ஆளவரும் சூரியன் . இசைக்கும் குயில்கள்  , இன்சுவை கனிகள் . ஈரம் கொண்ட தாமரை -அதற்மேற் ஈர நிர் பனித்துளிகள் , உறங்க வைக்கும் தென்றல் ,       உரிமையிடும் மலர்வாசம் . ஊஞ்சலிடும் மர விழுது ,                         ஊர்ந்து செல்லும் வண்ணத்துப்பபூச்சி. என்னையே மறந்தேன். எழுதும் சில கவிகளில் , ஏற்றம் கொண்ட வானவில் , ஏணியாக உயர சொல்லும் .  ஐயம் இன்றி உளவுவேன் , ஐம்பூதம் துணையுடன் , ஒரு தனிமை உலகில் , ஒருத்தியாய் மண்ணில் , ஓங்கிய மூங்கில் , ஓதும் வண்டுகளின் ரிங்காரம் . ஔவை கூட வாழவில்லை  ஔவை கூட நினைக்கவில்லை  அஃ கணமே வாழ்வோம்  அஃதுவே வாழ்க்கை . -- பிரவீணா  தங்கராஜ் . 

அமாவாசை

களங்கமற்ற நிலவின் மீது பழி சுமத்திவிட்டனரோ ? வானில் புதைந்து கொண்டது .         --  பிரவீணா  தங்கராஜ் .

தந்தை மனம்

சாக்கடை தொழிலாளிக்கு மணக்கிறது , அவன் பிள்ளை கல்வி கற்பதால் .           --   பிரவீணா  தங்கராஜ் .

மது

இந்தியாவில் குடிமக்களும் இருக்கின்றனர் . மதுபானத்தை கையில் ஏந்தியப்படி .           --   பிரவீணா   தங்கராஜ் .

அரசியல் மேடை

பொய்களை மேடை போட்டும்  பேசலாம் வாக்குறுதி என்ற பெயரில் .            --  பிரவீணா  தங்கராஜ் .

கணிப்பொறி

Image
வியத்தகு நிறைந்த உலகில் விஞ்ஞானம் விசித்திரம் படைக்கும் விளையாட்டு மானிடனின் மகத்துவம் மாசற்றதே சிறிதளவு மனித மூளையில் சீற்றமிகு உலகம் உருவாகும் தொலைக்காட்சி போன்றது ஒரு தோற்றம் தொட்டு  பழகினால் நாட்டில் ஏற்படும் முன்னேற்றம் இதிலும் சில சமூக விரோத செயல் என்னவென்று கூற இருப்பினும் இரண்டும் கலந்த படைப்பே ! கணிப்பொறியின் கண்டுபிடிப்பு நாட்டிற்கு கண்ட நாள் முதல் உயர்வு மட்டுமே அதிகம்.              -- பிரவீணா தங்கராஜ் .

குழந்தை தொழிலாளி

என் மகன் வேலைக்கு செல்கிறான் . பெருமைப்பட்டு அல்ல , வருத்ததுடன் பெற்றோர் .                 --  பிரவீணா  தங்கராஜ் . *ஏப்ரல் 2009 - இல் "மங்கையர் மலரில் " பிரசுரிக்கபட்டவை  .

காலம்

அடுத்த ஜென்மத்திலாவது சுறுசுறுப்பாக வாழா வேண்டும் காலத்தை போல .               -- பிரவீனா தங்கராஜ்.