Posts

அழைப்பாயா ...என் சிசுவே ...!

கை பிடித்த கணவனை விட -உன்னை நான் காதலிக்கிறேன்... நீ அந்த கருமை நிற கண்ணன் நிறமா? காதலை பறை சாற்றும் சிவப்பு நிறமா? தெரியவில்லை -இருந்தும் உன்னை நான் காதலிக்கிறேன்... நீ நல்லவனா அதற்கு எதிர் மறையா ஆனாலும் விரும்புகிறேன்... நீ ஆணா ...?  பெண்ணா... ? அது கூட தெரியா மடந்தை நான். கேளீர் கூட கேளிக்கை செய்கின்றனர் கட்டிய கணவனை விட, நீ இப்பொழுது விரும்பும் உயிர் பெரிதா என்று?! உண்மை தான்... நீ என்னுள் ஜனித்த நாள் முதல் உயிராய் உருகுகின்றேன் . நீ மொழியும் ஒற்றை சொல்லிற்காக அழைப்பாயா 'அம்மா 'என்று அந்த அழைப்பிற்காக உருவம் தெரியா உன்னை விரும்புகிறேன்... என் சிசுவே ...!                        --  பிரவீணா தங்கராஜ் .

உன் பார்வையால்...

கவிதைக்கு பஞ்சமடி பெண்னே ! உன் பார்வையை வீசிவிட்டு செல் ... ஆயிரம் கவிதைகளை படைத்திட ...                                                      -- பிரவீணா தங்கராஜ் .

மழைத்துளி

Image
                   ஒரு சொட்டு நீரில் கூட  அலையாய் பிரவேசிக்கும் என்னை வீணாக்காதீர்கள் ...                             இப்படிக்கு ,                           மழைத்துளி .                                                               -- பிரவீணா தங்கராஜ் .

பொல்லாத காதல்

                              இதயம் எனும் வீட்டினில் கண்கள் எனும் வாயிற்கதவினால் பூட்டினாய் ... மையல் எனும் ஜன்னல் வழியாக - உன்னில் தென்றலாய்  நுழைந்திடுவேன் .                                                            -- பிரவீணா தங்கராஜ் .

மயான பூமி

சாதி , மத பேதமின்றி          கூட்டு குடும்பமாக                    மாறி அமைதியாக                           வாழ்கின்றான் மனிதன்                                      மயானத்தில் .....                                           --   பிரவீணா  தங்கராஜ் .

நின்றபடி கால்வலி பயணம்

தேடி தேடி பார்த்தேன் ஓடி ஓடி பார்த்தேன் கிடைக்கவில்லை  , பேருந்தில் மட்டும் பயண இருக்கை .           -- பிரவீணா  தங்கராஜ் .

வரலாறு

விஷ்ணுவின் வரலாற்றை  அறிந்த மனிதனுக்கு , சிவனின் வரலாற்றை   அறிந்த மனிதனுக்கு , ஏசுவின் வரலாற்றை   அறிந்த மனிதனுக்கு , நபிகளின் வரலாற்றை   அறிந்த மனிதனுக்கு , கடவுள் ஒருவனே எனும் வரலாறு  அறிய மறந்தது ஏன் ?  -- பிரவீணா  தங்கராஜ் .

கல்லூரி

கல்லூரி நுழைவில் ஓர் மிரட்சி வகுப்பறை தேடலில் ஓர் பதற்றம் நல்லதொரு தோழியின் தேடல் புகட்டவரும் ஆசிரியரை பற்றிய எதிர்பார்ப்பு  படிப்பில் வரும் ஆர்வம் சிறிது அரட்டை பெரிது மிதிவண்டி நிறுத்தும் குட்டிசுவர் உண்ணுவதற்கு ஏற்ற இதமான மரநிழல் நினைத்ததை கிறுக்க மரமேஜை நிஜங்களை பகிர்ந்து கொள்ளும் நெஞ்சங்கள் தாமதமாக சென்றால் பரிசாக திட்டுக்கள் ஆசிரியருக்கு பெயர் சூட்டும்  அறியாமை சக தோழியருடன் கொண்டாடும் விழா குறும்பு இன்ப துன்பத்தினை ஏற்க சில தோள்களும்  திறமை வளர்த்து களிப்பூட்டும் தோழிகள் தனிப்பட்ட திறமைக்கென  ஏற்படும் போட்டிகள் அதிரடி தேர்வில் எழுது கோல்  தலை கவிழ தலை நிமிரும் என் கண்கள் நேர்க்கொண்டு அலட்சிய தருணங்களை அனுபவம் ஆக்கி சான்றோனாக உலக அவைக்கு தந்தாய் ! பிரிவின் இறுதி நாளாம் கல்லூரி வாழ்விற்கு கண்ணீருடன் கண்கள் விடைகொடுக்கும் நேரமாம் உதட்டளவில் பிரிகின்றோம் மனதில் ஞாபக சின்னத்தோடு !                  --  பிரவீணா  தங்கராஜ் .    *ஜூலை 2008 -இல் "யூத் ரிப்போர்ட்டர் " எனும் இதழில் சுருக்க பிரசுரிக்கபட்டவை .

காய்ந்த மிளகாய்

மாடியில் சூரியன் சுட்டு வறுத்தாலும் , கர்வ சிரிப்பில் காய்கிறது . மனிதனும் ஒரு நாள் மேலோக மாடியில் வாணலியில் வறுத்து எடுக்கபடுவர் என்பதால் ..             --   பிரவீணா  தங்கராஜ் .

கற்றுக்கொள்

கூவுகின்ற குயிலிடம் , இனிமையை கற்றுக்கொள் . காட்டை ஆளும் சிங்கத்திடம் , தன்மானத்தை கற்றுக்கொள் . வீட்டை காக்கும் நாயிடம் , நன்றியை கற்றுக்கொள் . வீட்டை சுமக்கும் நத்தையிடம்  , நிதானத்தை கற்றுக்கொள் . ஊர்ந்து செல்லும் எறும்பிடம் , சுறுசுறுப்பை கற்றுக்கொள் . உயிரை  அற்பமாக நினைக்கும் மானிடம் , மானத்தை கற்றுக்கொள் . பருந்திடம் குஞ்சியை காக்கும் கோழியிடம் , தாய்மையை கற்றுக்கொள் . பாலும் , நீரும் பிரித்து உண்ணும் அன்னத்திடம் , உண்மை காதலை கற்றுக்கொள் . ஒற்றைக்காலில் தவம் கிடக்கும் கொக்கிடம் ,  விட முயற்சியை கற்றுக்கொள் . வெட்டினாலும் சிரிக்கின்ற மரத்திடம் , தியாகத்தை கற்றுக்கொள் . ஐந்து அறிவு ஜீவனிடம் கற்றுக்கொள் . தீமை உண்டு மனிதா  அதை விடுத்து ,  கற்றுக்கொள்  மனிதா  நன்மையை மட்டும் . உன்னிடம் பிறர்  கற்றுக்கொள்ள தேடட்டும்  நன்மையை ............!               -- பிரவீணா  தங்கராஜ் .