Posts

மாயா கண்ணன்

Image
மாயா கண்ணனின் அழகில் மயங்கிய மாது ராதையே... கண்ணனே... உன் மனதைப்  பறித்து போன மன்மதேனே... கருமைதான் உன் நிறமென்றாலும் மங்குவதில்லை காதலுமென்றும் அளவில் குறைவதில்லை இதயத்தில் அமர்வாய்... இடையினை தொடுவாய்... இணைவாய் தருவாய் உன் போன்ற உருவிலொரு சிசுவாய் உந்தன் அணைப்பொன்றை பெற துடித்திடவே உந்தன் ராதையை ஏங்கச் செய்கின்றாய்.... நாவில் ருசியில்லை... நலிந்தும் போனேனே... நாமெனும் பந்தத்தில் மீண்டும் துளிர்ப்போமே... கோபியர்  கொஞ்சும் கண்ணனே - நீ கோகுலத்தில் சீதைக்கு உரியவனாகவே வந்திடு! கொஞ்சும் தமிழில் கதை அளாவி வஞ்சமின்றியே காதல் மழை பொழிந்துவிடு ! கண்ணன் ராதை காதலை போல் காவியத்தில் என்றும் பெயரை நிலைநாட்டுவோம் .                                            --பிரவீணா தங்கராஜ் .

உன்னை ஒன்று கேட்பேன்

Image
நிலவுப் போல தேய்கின்றேன் நித்திரை யின்றி வாடுகின்றேன் சூரியன் போல வதைத்தாலும் உன் வெட்பத்தையே நாடுகின்றேன் உன்னை ஒன்று கேட்பேன் உண்மைச் சொல்லிச் சென்றிடு ஞாயிறு திங்கள் போலில்லாமல் வானமாக என்னுடன் வாழ்வினில் பங்குக் கொள். வசந்தத்தை கையினில் ஏந்தியே ... வளமாக மாற்றிடலாம் வாழ்வையே ...                                 -- பிரவீணா தங்கராஜ்.                   

புன்னகை விதை

வெண்மை , கருமை வேறுபாடு யில்லா புன்னகை ஏழ்மை , செழுமை பார்க்காத புன்னகை முகத்தில் கரையும் நகைப்புக்கு நாட்கள் கூடுதலே  ! பல முகமூடி அணிந்து செல்லாதே ! சிறு புன்னகை மட்டுமே அணிந்து சிறக்க வாழ்ந்திடு !                           --பிரவீணா தங்கராஜ் .

*வானக்கடலில் ஓடி விளையாடுவோம்!!*

வானவில்லை ஏணியாக்கி மேகத்திரை விலக்கிச் சென்று வானக்கடலில் ஆடி மகிழ்வோம் குட்டிப் பெண்ணோ வானகடலில் நட்சத்திர மீன் பிடித்து சிரிக்கையிலே... சுட்டி பையன் நிலவுதனை எட்டி உதைத்து  மகிழ்ந்திடவே... வானக்கடலில் மேக அலையில் சிப்பி பொருக்கி களித்திடுவோம் கற்பனை யில்லா கனவில்லாது சிறகை விரித்தே பறந்திடுவோம் வானவில்லின் ஏணியினை வாசமிக்க மலரினைக் கொண்டு அலங்கரிப்போம் நிஜ உலகுக்கு செல்லாது இங்கேயே நிஜமாய் வானக் கடலில் ஆடிமகிழ்வோம் .                              -- பிரவீணா தங்கராஜ் . 

காதல் பிதற்றல் - 19

உன் பெயரை எழுதும் போது மட்டும் பேனா மை அதிகம் கசிகின்றது  உன் பெயருக்கு முத்தமிடுகின்றதோ ...?!                  -- பிரவீணா தங்கராஜ் .

👉எனது கிறுக்கல்கள்👈

வறுமைகள் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum                   *** மணல் திருட்டு – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum         *** தோற்பது தந்தை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum                   -- பிரவீணா தங்கராஜ் .

கோலங்கள்

Image
வாசலடைத்து கோலமிட்டு வரப்பாக செம்மனிட்டு கோமாதா சாணம் உருட்டி பூசணிப் பூ சூடி கண்டுமகிழ்ந்த காலமெல்லாம் கனவாகப் போனது அடுக்குமாடி கட்டிட வாழ்க்கையில் ஸ்டிக்கர் கோலங்கள் .                                  -- பிரவீணா தங்கராஜ் .

ஆட்கொள்கின்றாய் காதல் பிதற்றல் - 18

நான் ஒன்றும் அழகியில்லை என்றுதானே ஐம்புலன்களின் ஒன்றான உதடு சொல்லியது. இருந்தும் அதை உன் கூர்மையான மீசைமுடி கொண்டு ஆட்கொள்(ல்ல)ள   வருகின்றாய் நியாமா ...?!      --பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -17 அறிவியல் கூற்று

சூரியனின் அருகே செல்லமுடியதாம் அறிவியல் கூற்று பொய்யானது உன்னருகே நான் வந்துவிட்டேனே ...!                 --பிரவீணா தங்கராஜ் .

பைத்தியக்காரன்

பணத்திற்கும் பகட்டிற்கும் பரவசமில்லா பரதேசியவன் இருக்குமிடம் தெருச் சாலை உடுத்துமாடை கிழிசல் என்றெல்லாம் கவலைப்படாத ஜென்மம் அவன் சொர்க்கம் , நரகம், இன்பம், துன்பம் உணவு, உறக்கம், உறவு இத்யாதிகளை துச்சமென எண்ணுபவன் பணத்தை கூட காகிதமென்பவன் ஞானியின் சிந்தனையுடைய இவனை ஞானியென்று கூறுவர் சிலரே பலருக்கோ இவனொரு பைத்தியக்காரன் அப்படியெனில் ஞானிக்கும் பைத்தியக்காரனுக்கும் வித்தியாசமில்லையோ..?!                             -- பிரவீணா தங்கராஜ் .