Posts

கோடைக்கால பிடித்தம்

கவிஞர்களுக்கும் கவிதைக்கும் மழைக் காலம் பிடித்தம் எனக்கு மட்டும் சுட்டெரிக்கும் பகலவனின் கதிர்கள் வயல்வரப்பில் வழிந்தோடும் நீரில் பட்டு தங்கமாய் மின்னும் ஆகசிறந்த கோடைகாலமே எனக்கு பிடித்தம் அப்பொழுது தானே கல்லூரி விடுமுறையென்று   நீ அங்கே இன்னுமொரு வெய்யோனாய் காட்சி தருவாய்...!                      பிரவீணா தங்கராஜ் . 

பச்சை பட்டாடை

வானம் பூமியின் கிழிந்த ஆடையை மின்னல் ஊசி கொண்டு தைக்க மழையாக நூல் தரித்து பூமியி(வய)ல் பச்சை பட்டாடையுடுத்த வானம் ஞாயிறின் கதிரொளில்நிமிர்ந்தது  .                   பிரவீணா தங்கராஜ் .

தாயாக தலையணை

மெத்தையில் சாய்ந்தும்  கண்ணீரை உறிஞ்சி ஆறுதல் படுத்திவிடுகிறது தாய்-தந்தை யில்லாதவர்க்கு தாயாக மாறி விடுகிறது தலையணை .          -- பிரவீணா தங்கராஜ் .

இறவாதக் காலம்

Image
நினைவு சங்கிலியை மெல்ல மெல்ல அவிழ்த்து இறந்தக் காலத்தை நினைவு காலத்தில் முனைப்பாய் கொண்டு வந்து கவிழ்த்தேன் தட்டாம் பூச்சியை தாவிப் பிடித்ததும் ஆற்று நீரில் அமிழ்ந்து அள்ளி குளித்ததும் மணற்பரப்பில் கோட்டை கட்டி மணலை குழப்பியும் இரட்டை சடையில் வண்ணரிப்பனை முடித்திட தெரியாது விழித்து நின்றதும் வரப்பு நீரில் கொலுசுகள் இசைக்க துள்ளி ஓடியதையும் மயிலிறகை புத்தகத்தில் பொத்தி வைத்து எழுதுக்கோளின் மரத்தூளை உணவளித்து காத்திருந்தேன் குட்டி போடவும்  பூப் போட்ட பாவாடையில் மிட்டாயை கடித்து  தோழிக்கு பகிர்ந்து உண்ட மணித்துளிகள் தந்தையின் கையிருப்பில் பார்த்த பேய் படங்கள் அரைப் பெடல் அடித்து சைக்கிளோட்டி கீழே விழுந்த சிராய்ப்புகள் வெள்ளி கிழமை தோறும் ஒளிப்பரப்பாகவும் புதுப் பாடல்பனை பழத்தை பற்களில் சிக்கி முகத்தில் அப்பியும் எவ்வித நெருடல்களையும்  மனதில் பதிய வைக்காது சுற்றி திரிந்ததை பத்திரமாக  மெல்ல மெல்ல இதயத்தில் கட்டிப் பதித்துக் கொண்டேன் நிகழ்கின்ற சங்கிலி தொடர் அனுபவங்கள் அதனுள் பாதிக்காத வண்ணம் இறந்த காலத்தை இறவாத காலமாக வைத்திருக்க...                                       -- பிர

எந்த நொடியில் என்னிதயம்

அவள் புள்ளி வைத்து போட்ட கம்பிக் கோலத்தில் என்னிதயமும் அடைப்பட்டதா ? அவள் வீட்டுப் பூவை பறித்தப் போது என்னிதயமும் பறிபோனதா ? அவள் மயிலிறகு தொலைத்து தேடிய போது என்னிதயமும் தொலைந்ததா ? அவள் எழுதுகோலை பல்லிடுக்கில் கடித்தப் போதே என்னிதயமும் கடிபட்டதோ ? அவள் காந்தப் பார்வைக்கு கூடுதல் ஒளிவீச மைதீட்டிய போது என்னிதயமும் ஒளிவீசியதோ ? எப்படி இழந்தேன் என்னிதயத்தை யாரேனும் காதலில் முனைவர் பட்டம் பெற்றிருப்பின் எந்த நொடியில் என்னிதயம் களவாடப்பட்டதென சொல்லுங்கள் அதை அவளுக்கு சொல்லவேண்டும் அவளொரு கள்வனின் காதலியென்று ஆம் நான் கள்வனே அவள் இதயத்தை திருடியதால்...          -- பிரவீணா தங்கராஜ் .

எட்டுவழிச்சாலை

பாதைகளை ஏற்படுத்தி கால்களை முடமாக்கும் எட்டுவழிச்சாலை         -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 36 இதழின் ஏக்கம்

சில்லறை முத்தங்களை யாசகம் கேட்கின்றேன் நீயோ அழுத்தக்காரன் அழுத்த முத்தம் போதுமென்கின்றாய்... சில்லறை முத்தமோ அழுத்த முத்தமோ ஜெயிப்பது எதுவோ இதழின் ஏக்கம் சரி எதற்கிந்த முத்தப்போராட்டம் இரண்டுமே ஜெயிக்க பிராப்தம் செய்கின்றேன் இதழுக்காக ...                -- பிரவீணா தங்கராஜ் .

விடைகள் இல்லா வினாக்கள்

Image
சின்ன சின்ன குடில்கள் எங்கே ? ஸ்வரமாய் இசைக்கும் கீச்சுக்குரல் எங்கே ? நெல்மணியை அலகில் கொத்தி சிறகையடிக்கும் தூக்கனாங் குருவி எங்கே ? அது சரி நெற்கதிர் தான் எங்கே ? சாணம் கரைத்து தெளித்த வீடு எங்கே ? நீரைக் கலக்காத பசும்பால் எங்கே ? மந்தை மந்தையாய் புற்கள் மேயும் மாட்டு கூட்டம் தான் எங்கே ? அது சரி நீர் தான் எங்கே ? சிலுசிலுவென வீசும் தென்றல் எங்கே ? நெடுஞ்சாலையில் நிழல்தந்த மரங்கள் எங்கே ? மரத்தின் வேரை பிடியாக பிடித்த மண் எங்கே ? மண்ணின் தோழன் மண்புழு எங்கே ? அது சரி நிலம் தான் எங்கே ? விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே நீரைப் பறித்தாய்... நிலத்தைப் பறித்தாய்... வாழும் நிலத்தின் வளத்தைப் பறித்தாய்... போராட்டம் அது மட்டும் வாழ்வில் எதற்கு ? நாளை சரித்திரம் சொல்வதென்ன ? தமிழ் எங்கே ? தமிழ் மொழி எங்கே ? தரணியில் திமிர் பிடித்த தமிழன் எங்கே ? கவிகள் மட்டும் பல தந்து சென்றான ? அது சரி மனித நேயம் எங்கே ? தமிழ் நாடு எங்கே ? என்று கேட்டு புலம்பவா ? விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே .                        -- பிரவீணா தங்கராஜ் .

இரசாயன - ஹைக்கூ

Image
தொழிற்சாலைகள் பெருகின சேய்கள் குறைந்தன இரசாயன மாற்றத்தால். -- பிரவீணா தங்கராஜ்.

நான் மழலையாகி மகிழ்கிறேன்

Image
நான் மழலையாகி  மாறிதான் போகின்றேன் உப்பு மூட்டையாய்  மழலை யாசைகள் பனிக்கூழ் கண்டதுமே  துள்ளிடு மிதயம் பாகாய் உருகி வழிந்தே  ருசித்திடுவேன் மழைச்சாரல் வந்ததுமே  பரவசமாய் களித்திடுவேன் மண்வாசம் நுகர்ந்திட்டே  நனைத்திடுமே யாக்கையுமனமும் தாளில் கப்பல் செய்தே  பயணித்திடும் மழலைனான் எலிப்பூனை நகைச்சுவையை  இந்நாளும் ரசித்திடும் குழவினான் மகவுக்கு முழுமிட்டாய்  தின்றால் பூச்சுவருமென்று பாதிமிட்டாய் பங்குச்செய்து  கொள்ளும் கள்ளபிள்ளைனான் தவறு செய்து  விழிபிதுங்கி நிற்பதாகட்டும் திக்கி திணறி மெய்பேசி  ஒப்புக் கொள்வதாகட்டும்  பிடிவாதம் செய்து போலி சினத்தால்  முகத்தை திருப்பிக்கொள்வதாகட்டும் எந்தன் மழலைக் குணம்  அப்படியே தான் என்னுளுள்ளது உயிர்ப்புடன் வைத்தே  நான் மழலையாகி மகிழ்கிறேன்.         -- பிரவீணா தங்கராஜ் .