Posts

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5

Image
                                                                 💟(௫) 5                பரிதியின் கதிர் அங்கே இருக்கும் இடமெல்லாம் வெளிச்சம் தர மித்திரன் சோம்பலுடன் எழுந்தான். இன்று ருத்திராவை பிரிய வேண்டும். துர்வசந்திரன் எந்த நங்கையை தேர்ந்து எடுத்து பலியிட போகின்றானோ அதனை தடுத்து அவனை அங்கே முன்னே அமர்த்தி அவனின் எண்ணத்தை கலைய வேண்டும்.... இத்தனையும் முடியுமா? அவனும் நானும் பயின்றது ஒன்றல்லவா... அவன் என்னை மாற்றி விட்டால்? இல்லை பிறப்பு என்பது எமக்கு முன்னால் அவதரித்து இருக்கலாம்.... ஆனால் எம்மை வீழ்த்த ஒருவன் பிறப்பெடுக்க வேண்டுமெனில் அது யாம் பெற போகும் சேய்களாக தான் இருக்க முடியும் என்றவனின் பார்வை ருத்திரா வதனதில் நின்றது.       ''ருத்திரா... எமது பயணம் தொடர வேண்டும் உம்மை...'' என்றே தயங்க      ''எம்மை காக்க எமக்கு தெரியும்... எம்மை தொடர வேண்டிய தேவை உமக்கு வேண்டாம்... மீண்டும் சந்திக்கும் நிலை வரும் நேரம் கரம் பிடிக்கின்றேன்.(நீ கரம் பிடிக்கின்றாயா? இல்லை சிரம் கொய்ய போகின்றாயா அந்த இறைவனுக்கே வெளிச்சம்)           நொடிக்கு ஒரு முறை திரும்பி

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4

Image
     💟 (௪) 4           ருத்திரா என்றே மையல் சொட்டும் மித்திரன் அழைப்பில் ருத்திரன் அஞ்சி தாடி தடவி பார்த்தபடி       ''மூடனே ... இங்கு மஞ்சரியை தவிர்த்து நங்கை எவருமில்லை..'' என்றே பேச        ''மெய் தானாக மேடை ஏறாது அப்படி தானே பரவாயில்லை... யானே செப்புகின்றேன்.. உன் மொட்டு போன்ற செவியில் ஏற்றி கொள்... உன் ஒட்டுதல் எல்லாம் பலே தான் அதில் எல்லாம் நான் கண்டறிய இயலவில்லை.. ஆனால் சில பல பிழைகள் இருந்தது. முதல் பிழை நீ பெண் புரவியில் வந்தது.. எந்த ஒரு ஆண்மகனும் அவனுக்கு ஏற்ற ஆண் புரவியில் தான் பயணபடுவான். பிழை இரண்டு நீ என்னை தாக்கும் பொழுது பின் பக்கம் வந்தாய்.. வீரன் நல்லவனாக இருப்பின் நெஞ்சில் நேருக்கு நேர் தாக்க வருவான் கெட்டவனாக இருந்தால் தாக்கி விட்டு தான் பேச்சே ஆரம்பிப்பான்.. நீ பெண் அதனால் இது எதுவும் அறியாமல் பின் நின்று தாக்கினாய் சொன்னதும் முன்னே வந்தாய்.. அதிலே உன்னை கவனிக்க செய்தேன். புரவியில் ஏறியதும் இன்னும் கூர்ந்து ஆராய்ந்தேன்.           அதைவிட நீயும் மஞ்சரியும் சேர்ந்து தான் ஆற்றில் காலையில் குளித்து முடித்து இருக்க வேண்டும். ஒரே நேரத

உன் விழியும் என் ளும் சந்தித்தால்...-3

Image
                                                                        💟 (௩) 3                         இரு ஆண்கள் இருக்கும் இக்குகையில் மஞ்சரி எவ்வித தயக்கமின்றியே துயில் கொள்ள முனந்தாள். அங்கே பெரிய பெரிய இலைகள் எல்லாம் பறித்து இருவர் உறங்க ஏற்பாடாக இருந்த இலை மஞ்சத்தில் பார்வை சென்றது மித்திரனுக்கு.        அப்படி என்றால் இருவரும் ஒன்றாக துயில் கொள்ள எண்ணினாரோ?! என்றே எண்ணியவன் பார்வை அங்கே நிலைக்க ருத்திரன் செரும கண்டு விழியை அகற்றினான்.      ''அது யாம் அங்கே துயிலுறங்க செல்கின்றேன்'' என்றே மித்திரன் அடுத்த பக்கம் சென்று கையை சிரத்திற்கு முட்டு கொடுத்து உறங்க செய்ய இமையை மூடினான்.         ருத்திரனுக்கோ நேற்றே எனது உறக்கதினை பறித்து குடிலுக்கு காவல் புரிந்தேன்... இன்றேனும் நிம்மதியாக உறங்க செய்யலாம் என்றே மஞ்சரியோடு பஞ்சணை செய்தால் இவன் ஒருவன் நடுவே நந்தி போல வந்து இருக்கின்றானே... இவனிடம் இருந்து மஞ்சரியை காக்க யாம்ன இன்றும் எம் நித்திரையை துறக்க வேண்டுமா என்றே ருத்திரன் எண்ணியபடி ஒரு கல்லில் சாய்ந்து வாளை எடுக்க வசதியாக அமர்ந்து கொண்டான்.      அங்கே தீ

உன் விழியும் என் வாளும் சந்திதால்...-2

Image
    💟 (௨)2                       ஊசி நுழைவில் தன்னை தான் ருத்திரன் குள்ளநரி என்று சொன்னது புரியாமல் இல்லை மித்திரனுக்கு.... இருந்தும் மெல்ல குறுநகையோடு நித்திரை செய்ய... வெண்ணில ஒளியில் அந்த தாமரை விழிகள் அவனுள் நட்சத்திரமாக மின்னியது.          அவளுக்குள் என்னை பார்த்த கணம் மின்னல் வெட்டியது. நிச்சயம் என்னை பற்றி அறியலாகும் திகதியில் அவளாகவே மெய்யுரைப்பாள்.           அதிகாலை வெய்யோனின் கதிர் அவ்வனத்தில் இருந்த இருளை அகற்ற பரிதியின் கதிர்கள் இலைகளின் வழியே குடிலை அடைய மித்திரன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்தான்.     ருத்திரனோ குளித்து முடித்து ஆடையணிந்து பரிதியினை வணங்கி நின்றான். மஞ்சரியும் ருத்திரனும் ஒரே மாதிரி முகத்தில் தாமரை கைகளை தாங்கி பின்னர் மார்பின் அருகே வணக்கம் வைத்து சூரிய நமஸ்காரம் வைத்து இருக்க அது மித்திரன் விழியினில் பதிந்து மீண்டது.         மித்திரன் அதன் பின்னே அருவி நீரில் குளித்தவன் மனதை ஆற்றின் மையத்தில் இருந்து பரிதியினை தனது இரு வலிய கைகளை மேலே தலைக்கு மேல் எழுப்பி வணங்கி முகம் மற்றும் அதன் பின் மார்பில் வைத்தவன் நீரை மும்முறை வணங்க

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

Image
  உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-2 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-3 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...10 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...11  உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...12   உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13    உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15(முடிவுற்றது)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1

Image
                உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...!                               💟(௧)1                         தனது வெண்ணிற புரவியில் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்துச் சென்று கொண்டுயிருந்தான் மித்திரன்.            திசை வந்த இடம் நோக்கி புரவியில் இருந்து குதித்து தனது உடைவாளை எடுத்தான். அந்த பாழடைந்த கோவிலில் யாருமில்லை என்று சொன்னாலும் அவனது உள்ளுணர்வு யாரோ இருப்பதாகவே எடுத்துரைக்கச் சுற்றிமுற்றி கண்களை சுழல விட்டவன் ஒரு தூணில் அருகே வந்ததும் அவனின் மீது வாள் ஒன்று வர நொடியில் சுதாரித்து தனது உடைவாளால் அதனைத் தடுத்தான்.       ''பின்னிருந்து தாக்கும் வீரன் எவனோ? முன்னே வந்து நேருக்கு நேராக வாள் வீச அச்சமோ?'' என்ற மறுநொடி அந்த வாளுக்குச் சொந்தமான கைகள் முன்னே வந்து நின்றது.       ''யாருக்கு அச்சம்....? எமக்கா? மோதி பார்த்து எம் வாளுக்கு பதில் சொல்லி பிறகு சொல்'' என்றே ஒருவன்  முகம் மறைக்கும் அளவிற்கு தாடி மீசை கொண்ட அவன் வாளில் சண்டையிட செய்தான். மித்திரனும் சண்டையிட்டவரே         ''யார் நீ எதற்காக எம்மை தாக்கா முயன்றாய்?'&#

தீவிகை அவள் வரையனல் அவன்-12

Image
தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-12     மனமெங்கும் ஆரவ் சூழ்ந்து இருக்க முகமெங்கும் வெட்கங்கள் குடியேற, தனியுலகத்தில் சஞ்சரித்தாள் சம்யுக்தா.     ஆரவின் மீது கை கோர்த்து பார்த்த அந்த நொடிகளை எண்ணி எண்ணி இரசித்தவளுக்கு தன்னை கண்கானிக்கும் தந்தை வந்து சென்ற சுவடை அவள் அறியவில்லை.         சுவாமிநாதன் இம்முறை நேரிடையாக அவனிடம் மோதிடலாமா? என்று யோசிக்க, ஆரவ் பணிபுரிவதை அறிந்து அங்கு சென்று நாளை மாலை சந்திக்க எண்ணினார்.       அடுத்த நாள் காலை, ஆரவ் என்றுமில்லாமல் அதிகமாகவே வேலை விஷயமாக பேப்பரில் வரும் செய்தியை தேடி பார்த்தான்.     நேற்றைய சம்யுக்தா கைபற்றிய கணம் அவளின் மென்கைகள் தொட்டகணம், இவளை மணக்க நீ இன்னமும் நல்ல உத்தியோகம் வாய்ப்பை பெற்றிருக்கணும் என்று மனச்சாட்சி சொன்னது.       சுபாங்கினி கொடுத்த டீயை பருகியவாறு பார்த்தவன், வட்டத்தில் சில கம்பெனிகள் வந்து நிற்க, இன்று செல்ல நேரம் பார்த்தான்.        காலேஜில் சென்றவன் முதல் இரு ப்ரியட் அட்டன் செய்து அதன் பின் கிளம்பி, அவனை தேடிய சம்யுக்தாவுக்கு சந்துரு தான் பதிலளித்தான்.     "அவன் இப்பவே வேற வேலைக்கு தேடறான் மா."

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-11

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்-11         சம்யுக்தாவிடம் பேசி வைத்தவனுக்கு அடுத்து ஒரு அழைப்பு வந்தது.       வீட்டின் உரிமையாளர் குமாரவேலின் மனைவி நீலா தான் அழைத்து இருந்தார்.     "ஆரவ் தம்பி உங்களிடம் பேசணும்னு நேற்று காலையில் இருந்து நினைத்துட்டு இருந்தேன். அங்கிள் வீடு காலி பண்ண சொல்லியிருந்தாரா தம்பி.?" என்று வினாவாக கேட்க     "ஆமா ஆன்ட்டி. ஆன்ட்டி நாங்க வாடகை சரியா மூன்றாம் தேதியே கொடுத்தோம். அப்படியிருந்தோம் ஏன் ஆன்ட்டி காலி பண்ண சொல்லிட்டீங்க. என்ன காரணம் ஆன்ட்டி." என்று கேட்டான்.     "அதை சொல்ல தான் போன் பண்ணினேன் தம்பி. நீ யாரையாவது விரும்பறியா ஆரவ்?" என்றாள் நீலா.        வீட்டை காலி செய்வதற்கும் தன் காதலுக்கும் என்ன சம்மந்தம். முதலில் தன் காதல் இவர்களுக்கு எப்படி தெரியுமென்ற குழப்பத்தோடு,     "ஆன்ட்டி நான் காதலிக்கறேன். ஆனா அதுக்கும் வாடகை விடற உங்களுக்கும் என்ன சம்மந்தம். அவள் இன்றைய காதலி நாளைய மனைவி ஆன்ட்டி." என்று குழம்பி மனதில் இருப்பதை கேட்டதும்.       "சொல்லறேன் தம்பி. நீ விரும்பறது பெரிய இடமா? அவங்க அப்பா பேரு சுவாமிநாத

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-10

Image
  தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-10            சம்யு வரும் பொழுதே ஜார்ஜ் சுபாஷும் வழி மறித்தனர்.     "ஏம்மா தங்கச்சி அன்னிக்கு ரிப்ளை பண்ணலை சொன்ன. இப்ப சீனியர் ஆரவ் காதலி சொல்லறியாமே. பையன் நிஜமாவே விரும்பறானா." என்று கேட்க சம்யுவோ      "நீங்க நம்பினா ஆமா அண்ணா. நம்பலைனா இல்லைண்ணா." என்று சிரிக்க,     "நல்லா இருந்தா சரி." என்று கிளம்பினார்கள்.       யோகிதா தான் "ம்ம்... சம்யு காலேஜ்ல வந்து ஆறு மாதத்தில் இந்தளவு பாப்புலர் ஆகிட்ட. என்ன ஒரு குறை நீயும் அண்ணாவும் நேரில் பேசியோ அறிமுகப்படுத்தியோ செய்யாமா எஸ்கேப் ஆகற" என்று கிண்டல் செய்ய புன்னகை பூத்தவள் அப்படியே உறைந்து போனாள்.     ஆரவ் கண்கள் ரௌவுத்திரமாக திவேஷ் சட்டையை உலுக்கி கொண்டுயிருந்த காட்சியை கண்டு.       ஆரவ் இருந்த இடம் நோக்கி ஓடிட, "யாரிடம் காதல் டயலாக் விட்ட..." என்று ஒரு குத்து விட்டான். ஓட்டு மொத்த சினத்தை காட்டி விட, தடுக்க கூட அஞ்சி நின்றாள் சம்யுக்தா.      சம்யுக்தாவை பார்த்த பின் திரும்பியவன், "இதோட உன் வேலையை நிறுத்திடு... இந்த சிண்டு முடித்து சண்டையை மூட்டற வே

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-9

Image
தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-9      சம்யுக்தா மனம் ஆரவினை பார்க்க சொல்ல அவனோ தன் வகுப்பறை மட்டுமே குறியாய் சென்றான்.      இது அன்று மட்டும் நிகழவில்லை. ஒரு மாதக் காலம் இப்படி தான் நகர்ந்தது.        ஆரவ் வரும் நேரத்திற்குள் தானாக வந்து தவம் கிடக்கும் தாரகையாக இருந்தாள் ஆரவ். ஆரவ் கேன்டீனில் எந்த இடத்தில் அமருவான். மாலையில் எந்த மரத்தின் திக்கில் நிற்பான். அவனின் உற்ற நண்பன் யார். எப்படிப்பட்ட பையன். இப்படி எல்லாவற்றிலும் ஒரு ஆவல் எழ அனைத்தும் அறிந்தாள்.     அவனுக்கு இதுவரை காதலி என்றவள் இல்லையென்பது வரை அறிந்து இருப்பினும் ஆரவோடு பேச பழக தயக்கமிருக்க அதற்கான காலநேரத்திற்கு காத்திருந்தாள்.      அன்று கேண்டீனில் எப்பொழுதும் போல வந்தவள் பார்வை ஆரவை காண தோழிகளோ அவளை அறியாது கேண்டீனில் ஆர்டர் கொடுத்து விட்டு சாப்பிட்டனர். கடைசியாக பில் மொத்தமாக வர அதை சம்யுக்தாவிடம் தள்ளி விட்டு ஓட முயல, யோகிதாவை பிடித்தவள்    "யோகி நான் இன்னிக்கு பார்த்து பர்ஸ் எடுத்துட்டு வரலை டி" என்று சொல்ல ஆரவ் திரும்பி பார்க்க, சம்யுக்தா அவனை கண்டு யோகிதாவை பார்த்து வைக்க, யோகிதாவோ,     &qu