Posts

தீவிகை அவள் வரையனல் அவன் -17

Image
  தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 -17     வைஷ்ணவி தன் அன்னை தோளில் சாய்ந்து சம்யுவை பார்க்க, சம்யு தாய் மகளை பார்த்து தன் அன்னையினை எண்ணி ஏங்கி அதனை மறைக்க முயன்றாள்.       "மன்னிச்சுடு... நான் ஒன்றும் கெட்டவள் இல்லை. உன்னை முதல்ல வீட்டுல பார்த்தப்பவும் திட்டியிருக்கேன். கல்யாணம் ஆனப் பிறகும் உன்னை காயப்படுத்தியிருக்கேன். நான் எதுக்கு அப்படி செய்தேன்னா."      "நீங்க செய்யறதுக்கு ஏதோ காரணம் இருக்கு அத்தை. அது புரியுது. ஆனா ஏன்னு தெரியலை. அப்பா ஏதோ செய்துயிருக்கார். என்ன செய்தாரென்று தான் தெரியலை.       இதெல்லாம் தெரிஞ்சுக்கவோ ஆரவ் முன்ன மாதிரி பேசிடவோ எதிர்பார்த்து இங்க வரலை. நான் ஆரவ் என்னை திருமணம் செய்வாரென்று நினைத்து இருக்கல. நான் எதுவும் பிளான் பண்ணலை அத்தை. அன்றைக்கு விபத்து நடந்து மயக்கம் தெளிந்த பிறகு இங்க இப்ப நடப்பது வரை எதுவுமே தெளிவா புரியலை" என்று விளக்க முற்பட,      "உனக்கு விஷயம் தெரியுமா தெரியாதா? ஆரவ் ஜெயிலுக்கு அனுப்பி, வைஷ்ணவியை கெட்டவளா சித்தரிக்க எண்ணினா, பெற்ற அம்மா மனசு என்ன செய்யும் சொல்லு..." என்று சுபாங்கினி கண்ணீர்

சிரமமில்லாமல் சில கொலைகள் -3

Image
  🩸-3        டெய்சி மருத்துவமனையில் ஸ்டக்சரில் கொண்டு செல்ல அவ்விடம் பார்த்தவளுக்கு இதயம் தாறுமாறக துடித்தது.      மூச்சிரைக்க திரும்பி "இவ்விடம்  வேண்டாம்" என்றாள். டெய்சியின் தமிழ் நியூயார்க் மக்களின் அறிவுக்கு சென்றடையவில்லை.       ஆண்டர்சனுக்கு மட்டும் டெய்சியின் பேச்சு எங்கோ எதிரொலித்தது போன்ற உணர்வு.       சுவாசக்காற்றை பொருத்தி அங்கே டாக்டரும் செவிலியும் உயிரை காக்க போராட, அங்கே பனியில் உருவான புகையில் இருந்து கண்கள் அற்ற உருவம் மருத்துவ உடையணிந்து வாயினை பொத்தி அருகே வந்தது. அது டெய்சியினை சிகிச்சையளிக்கும் மருத்துவர் உடலில் சென்று கலந்தது.     டெய்சி இதயம் வேகமெடுத்தது... உபகரணங்கள் பொருத்தி இதயத்துடிப்பை சரிபடுத்த முயன்றனர் செவிலியர்கள்.      மருத்துவ உடையணிந்த மருத்துவரோ டெய்சி அருகே வந்து அவளுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில், அவ்வறையே அதிர உச்சபட்ச குரலில், "மனதின் எண்ணங்கள் நற்நாற்றம் வீச வேண்டும். அதுயில்லயேல் இதயம் தீய எண்ணங்களை தூவி மூளைக்கு கெடுதல் செய்தி அனுப்பி, விசுவாசமாக இருக்க வேண்டிய இடத்தில் உயிரை குடிக்க ஏற்றுவிக்கும். ஆதலால் இதயம்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15

Image
                                        💟 ( ௧௫) 15                            ஊரே திருவிழா போல வீதியில் வந்து மித்திரனையும் ருத்திராதேவியையும் கண்டு ஜோடி பொருத்தம் கண்டு அளவில்லா ஆசை தீர கண்களால் பருகி நின்றனர்.              வீதி எங்கும் ஆர்பரித்த கூட்டம் அரண்மனையில் வந்து நிற்க பூத்தூவளாக மலர் மழை பொழிந்தது. காவலர்கள் மந்திரிகள் என்றே வரவேற்க, வரவேற்க்க வேண்டிய தாயோ அவர்கள் அறையில் தாழிட்டு இருக்க மித்திரன் ருத்திராவிடம் என்ன சொல்ல என்றே திரும்ப         '' சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை பிரபு... எமக்கு புரிகின்றது. அத்தை அவர்கள் ஏற்கும் வரை காத்திருகின்றேன். என்ன இருந்தாலும் புத்திர சோகம் அல்லவா ? அதுவும் முதல் பிள்ளை என்றாலே அம்மாவின் மனம் கணக்கும் தானே ? அறிவேன். மேலும் அரசர் பரிதி மன்னன் நிலைமை அறிந்து தான் வந்தோம் '' என்றே ருத்திரா ஆறுதலாக சொல்ல அங்கே மித்திரன் தந்தை கிளி வடிவில்         '' ஆஹா மருமகளே.. நீ கொய்த எம் மூத்த மகனின் சிரம் எமது யாக்கை என்றதால் எமக்கு உம்மீது   வருத்தம் கோவம் என்பது எல்லாம் கூட இல்லை. இப்படி தீங்கு இழைத்த து

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14

Image
  ( ௧௪) 14            விழாக்களில் நாளும் நெருங்க ஒரு அண்டை நாட்டு இளவரசனாக மித்திரன் ருத்திரா நாட்டிற்கு வருகை புரிந்தான்.            அரசவையில் சற்று தள்ளி இருந்த அப்பெரிய மாட மாளிகையில் மஞ்சரிக்கு வளையல் பூட்டு நடைப் பெற்றது.                மற்ற நாட்டின் ராஜாக்கள் மேகவித்தகனுக்கு வாழ்த்து கூறி நட்பு பாராட்டி மகிழ மித்திரனும் அதே போல நட்பை பாராட்டினான்.      விழாவில் பல நாட்டு இளவரசர்கள் வந்து சேர்ந்தனர் .                   ருத்திரா பார்வை மருந்துக்கும் மித்திரனை காண மறுத்தது. மஞ்சரி தான் மித்திரனை கண்டு முறுவளித்து மேகவித்தகனை காண அவனோ இமையை மூடி திறந்து நான் பார்த்து கொள்கின்றேன் என்றே வாக்கு கொடுத்தான்.           அப்பெரும் சபையில் அறிவிப்பாக அச்செய்தி அகத்தியனால் சொல்ல பட்டது.           இன்று வந்திருக்கும் இளவரசர்களுக்கு அறிய வாய்ப்பு இன்று எமது மகள் ருத்திராவை மணம் புரிய அறிய வாய்ப்பு.              அதாவது ஆகபட்டது ஒரே முறையில் தொலை தூரத்தில் இருக்கும் ஒரு மீன் சக்கர கேடயத்தையும் , வானில் புறாவின் காலில் கட்டி பறக்கவிடும் ஓலையினையும் , நீரில் காவலர்கள் போடும் ரத்தின கற