Posts

சிரமமில்லாமல் சில கொலைகள்-8

Image
🩸-8  ஆரோல் பயணம் செய்து வந்து கோவா வந்து நிற்க, அங்கே மெர்லின் வந்த சுவடு தான் இல்லை.  எங்கே போனால் என்பது குழப்பத்தை தர, எரிச்சலில் தேடுதல் அடைந்தான்.  மாறா படத்தில் வருவது போல ஒவ்வொரு இடமாக அவளை பற்றி கேட்க யாருமே அறிந்தபாடுயில்லை. அங்கயிருந்த ஜாஸ்மினை கேட்டால் சொல்லியிருப்பார்களோ என்னவோ. மெர்லின் தவிர்த்து வேறு யோசிக்காதவனாக இருந்தான்.  மெர்லினோ ஜாஸ்மினோடு சென்னைக்கு வந்து இறங்கியிருந்தாள். அவளுக்கு சென்னை வந்ததும் வியேர்த்து வழிந்தது. கைகள் நடுக்கத்தில் உதற மயங்கி சரிந்தாள்.  ஜாஸ்மின் உடனடியாக மருத்துவமனை அழைத்து வந்து சேர்த்திருந்தாள்.  மருத்துவர் சிகிச்சை செய்து பார்த்து, "நத்திங் சீரியஸ். பிறந்ததிலருந்து நியூயார்க்ல இருந்து இங்க வந்ததில் நம்ம தட்பவெட்ப நிலை ஒத்துக்கலை. சரியாகிடும்... இந்த லோஷன் டேபிளேட் எடுத்துக்க சொல்லுங்க. எல்லாம் தானா சரியாகிடும். அடிக்கடி ஜூஸ், இளநீர் எடுத்துக்கோங்க. கண் விழித்ததும் கூட்டிட்டு போங்க" என்று நகர்ந்து விட ஜாஸ்மின் சற்று நேரம் இருக்க, மெல்ல மெர்லின் இமை திறந்தவள் பாரம் கூடிய நிலையில் சோர்ந்து இருந்தாள்.  கேப் புக் செய்து ப

சிரமமில்லாமல் சில கொலைகள்-7

Image
🩸-7      மெர்லின் தனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்து யோசனையில் முழ்கினாள்.       "என்னாச்சு...?" என்று தபித்தாள் கேட்டு முடிக்கவும் திரும்பியவள், "நீங்களும் என்னோடவே வரலாமே. எதுக்கு தனியா போகணும். அதுவும் இல்லாம அங்க யாரையும் தெரியாது." என்று மெர்லின் கூறினாள்.    கிறிஸ்டோபர் ஒரு அட்ரஸை நீட்டி, இது ஜாஸ்மின்... லாஸ்ட் இயர் இங்க வந்தப்ப, பழக்கம். நமக்கு இண்டியாவில் யாரையும் தெரியாது. அதனால ஜாஸ்மினுக்கு ஊரைச்சுற்றி பார்க்க போறதா சொல்லியிருக்கேன். உண்மையும் அது தான் என்றாலும். இங்க நடக்கற விசித்திர நடவடிக்கையில் நீ அங்க போறது தான் நல்லது. இங்க இருக்கற அலுவலக பணியை பார்த்து முடித்து தான் நாங்க வரணும். அதுவரை தனியா மேனேஜ் பண்ணிக்கோ." என்று கூறவும் அந்த அட்ரஸை எடுத்து படிக்க துவங்கினாள்.     ஜாஸ்மின் போனமுறை வந்தப்ப நல்ல பழக்கம். சர்சிற்கு வந்தப் பொழுது கர்த்தரின் புகழ் பேசி பரப்ப வந்தவள்.      மெர்லினை விட சற்று பெரியவள். அதனாலோ என்னவோ காதல் திருமணம் இத்யாதிகளில் வெறுப்பு தான். அதனாலே கர்த்தரை பற்றி புகழ் பாடி அவரின் பெருமையை பரப்புபவள்.      மெர்லினு

தீவிகை அவள் வரையனல் அவன்-25

Image
🪔🔥-25      மருந்தின் வீரியத்தில் மயக்கத்திற்கு சென்ற சம்யுக்தாவை அந்தப் பெண் யாருமறியாது அந்த அறைக்கு சம்யுவை இழுத்து சென்று படுக்க வைத்தாள்.        ட்ரிப்ஸ் போட்டு விட்டு வியேர்வையை துடைத்து முடித்தாள்.       மீண்டும் போனை எடுத்து நடந்தவையை அந்த டாக்டரிடம் கூறி முடித்தாள்.        மறுப்பக்கம் "என் மகள் இந்தியா வரும்வரை அந்த பெண்ணை இதே போல மயக்கத்துல வைச்சியிரு. அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். உன் பங்குக்கு நான் பேசிய பணம் உன் அக்கவுண்டுக்கு வந்திடும் சரியா " என்று ஆசைக் கூட்டியே வைத்தார்.       பணம் என்றால் பிணமும் வாயை பிளக்க, அங்கே காவல் புரிந்தாள் அனுரேகா.       "ஏ... அனுரேகா.. அங்கயே என்ன பண்ணற. லன்ச் டைம் வா சாப்பிடலாம்." என்றதும்  சம்யுக்தாவை பார்த்து மருந்து தான் வேலை செய்தாயிற்றே. அடுத்த முறை மயக்கமருந்து செலுத்தும் பொழுது பார்க்கலாமென்று சென்றாள்.       திவேஷ் ஆரவிற்கு பயந்து அடுத்த நாளே லண்டன் ஓடினான்.        அங்கு சென்ற பிறகு நிலவரத்தை அறிய தந்தையிடம் சம்யுக்தாவை பற்றி கேட்க, அவள் ஆரவிடம் வந்து நேரவில்லை என்றும் சுவாமிநாதனை பார

தீவிகை அவள் வரையனல் அவன் -24

Image
  🪔🔥-24      தந்தையற்ற ஆரவிற்கு தந்தை வயதில் சுவாமிநாதன் காலில் விழவும் ஒருகணம் இயல்பான குணம் எட்டி பார்த்து கலங்கியது.     "அய்யோ... நான்..." என்றவன் பேசவும் விடாமல் தடுத்தது அவரின் முன்பு செய்த செயல்.       "இங்க பாருங்க முதல்ல சிகிச்சை ஒத்துழையுங்க... மீதி அப்பறம் பேசலாம். நான் எல்லாத்தையும் மறக்க முயற்சிக்கறேன்." என்று எழுந்து கொள்ள முயன்றான்.      "சம்..சம்யு... எங்க?" என்றான்.      "அவ... அவ வெளிய தான் இருக்கா. உங்களை இந்த நிலையில் பார்க்க முடியாம அழுதுட்டு இருக்கா. சரியாகிட்டு வாங்க." என்று நடந்தான்.    அதன் பின்னரே சுவாமிநாதன் நிம்மதியாக சிகிச்சைக்கு ஒத்துழைத்தார்.      வெளியே வந்த பிறகு சுபாங்கினி "சம்யுக்தா எங்கடா...?" என்றதும்           "அம்மா... அவ இங்க தான் வந்தா... எங்க போனா தெரியலை. வந்துடுவா..." என்று பேச சுபாங்கினி கோபத்தோடு      "அவளை என்ன வார்த்தையில சுட்ட..." என்று கேட்க, சந்துரு மூலமாக சுபாங்கினி அறிந்து ஆரவை அறைந்து நின்றாள்.      "டேய்.... உன்னை பார்க்க வந்தா டா....  நான் தான்

தீவிகை அவள் வரையனல் அவன்-23

Image
  🪔🔥-23       அதிகாலை என்றுமில்லாத மகிழ்வு பொங்க எழுந்தாள். இத்தனை நாள் தேக்கி வைத்த வலி, பாரம் போனதன் விளைவாக இருக்கும்.        நேற்று பழைய ஆருவோடு இசைந்தது மனம் என்று குத்தாட்டம் போட அதே புத்துணர்வோடு எழுந்து குளித்து முடித்து தன் கையால் ஆருக்கு காபி தயாரிக்க சென்றாள்.      வெளியே நியூஸ் பேப்பரை விசிறி கிடக்க அதை எடுத்து தட்டில் வைத்து காபியை எடுத்து வைத்தவள். மற்ற பாலை ஆப் செய்ய காத்திருந்தாள்.      ஆரவை எழுப்பி விட்டது சந்துருவின் போன் அழைப்பு.      எடுத்து காதில் வைத்து சவகாசமாக "என்னடா...?" என்றதும் சந்துரு அப்பக்கம், "டேய் சம்யு அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். நேற்று மண்டப வாசலில் காரிலே மயங்கி இருந்தார். அத்தை பார்த்துட்டு அவங்க ஒர்க் பண்ணற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்காங்க. சம்யுவுக்கு கொஞ்சம் பதமா சொல்லி கூட்டிட்டு வா." என்றான்.       "என்னடா எல்லாரையும் ஒன்று சேர்த்து வைக்கிறதா நினைப்பா. இங்க பாரு என்னை பொருத்தவரை அந்தாளு எப்பவோ இறந்துட்டார். அவர் நடிப்பார் அதை பார்க்க நான் ஒன்றும் கேனயன் இல்லை. ஏற்கனவே இது மாதிரி பிளான் போட்டுட்டார் வைடா..." என்று

சிரமமில்லமல் சில கொலைகள்-6

Image
🩸-6  ஆரோல் அங்கே துர் ஆவியினை ஓட்டும் பாஸ்டர் வீட்டில் பெற்றவரோடு சென்று தனக்கு நடந்தவையும், அவர்களுக்கு நடந்தவைகளையும் சொல்லி, தங்களுக்கு ஏன் அவ்வாறு தோன்றுகின்றதென கேட்க, பாஸ்டரோ ''இது ஒரு ஜென்மத்தின் தொடர்புகளாக இருப்பின் தங்கள் செய்த பாவ புண்ணிய கணக்கில் கடந்த ஜென்மங்களில் ஏதேனும் தவறு செய்து அதன் காரணமாக தோன்றலாம்.  ''கடந்த காலத்தின் நடந்தவை என்ன என்பது நான் அறிய இயலாதவை. வேண்டுமெனில் உங்களுக்கு பாதுகாப்பு மந்திர ஜெப கயிரை தருகின்றேன். அதை அணிந்து கொள்ளுங்கள் பெரிய பாதர் வெளியூர் சென்றிருக்க அவர் வந்தபின்ன கேட்டுக்கலாம். முடிந்தால் போன ஜென்மத்தின் பாவங்களுக்கு ஒரு மன்னிப்பு கோரி ஒரு பிரேயர் செய்து கொள்வோம். பழி தீர்க்க வெறியோடு இருக்கும் அந்த ஆன்மா ஒரு வேளை மனம் இறங்கலாம்'' என்றே முடித்திட ஜார்ஜ் மேரி ஆரோல் மூவரோடு ஒரு சின்ன பிரேயர் வைத்து மண்டியிட்டு வணங்கி ஜெபித்தனர்.  கண்கள் மூடி இருக்க சிறிது நேரம் ஜெபித்தனர். அதில் யவனரதியாக மெர்லின் இளவரசி தோரணையில் கோவிலின் முன் அமர்ந்து எதையோ பருக, சில நொடிகளில் மெர்லின் அதாவது யவனரதி மயங்கி தள்ளாடினாள்

தீவிகை அவள் வரையனல் அவன்-22

Image
  🪔🔥-22     சாப்பிட அமர்கையில் அந்நிகழ்வு தோன்ற தான் செய்தது. அதனை மறக்க முனைந்து அவளை காண யுக்தா பாதி சாப்பாட்டை வைத்ததும் நகர்த்தி வைக்க அங்கே பரிமாறப்பட்டவை எல்லாமே அன்று உண்ட அதே வகைகள்.     ஆரவ் யுக்தா கண்கள் சேர்ந்து தங்கள் பழைய நினைவை அசைப்போட்டது.     ஊட்டி சென்ற முதல் நாள் மதியம் அளவுக்கு அதிகமாகவே யுக்தா தட்டில் உணவு அதிகமாகயிருக்க, "ஆரு... எனக்கு இது அதிகம். நிறைய சாதம் வேஸ்ட் ஆகிடும்" என்று சொல்லவும்,       "நாம ஷேர் பண்ணிக்கலாம்." என்றவன் யுக்தாவின் இதழில் இருந்து உதிர்ந்த உணவோடு சேர்த்து சாப்பிட்டாரன்.    ஒரு தட்டில் காதலர்கள் உண்டார்கள். ஆரவ் அவனாக எடுத்து ஊட்டவும் யுக்தா கண்கள் பனித்தது.      "சந்தோஷமா இருக்கேன் ஆரு. அம்மா கையில் சாப்பிட்ட திருப்தி. உன்னிடம் கிடைத்து இருக்கு. லவ் யூ ஆரு." என்று நெஞ்சில் சாய்ந்தவள் கண்களை ஆரவ் துடைத்து விட்டான்.        இன்றும் அதே நினைவோடு கண்கள் பனிக்க, ஆரவோ கையை உதறி எழுந்துக் கொண்டான்.     யுக்தா இம்முறை கூடவே எழுந்துக் கொள்ளாமல் இருக்க, ஆரவ் தான் இழுப்புக்கு வராது நின்றான்.       அங்கே ச

தீவிகை அவள் வரையனல் அவன்-21

Image
🪔🔥-21    தன்னை வார்த்தையில் அறைந்து சென்ற உணர்வில் நின்றான் ஆரவ். யுக்தா பேசியது அத்தனையும் உண்மை. அவளை காயப்படுத்தி நான் மகிழும் அளவிற்கு குணம் கெட்டவன் அல்ல. ஆனாலும் ஏன் இப்படி பணத்தை அவள் மேல் வீசி அப்படி நடந்துக் கொண்டேன்.      சுவாமிநாதன் சம்யுக்தா மேல் எனக்கு கோபம் இருக்கு. அதற்காக சம்யுவிடம் நான் நடக்கும் முறை என்ன? அவளை நேற்று அடைந்து என் மனதின் வலியை மறைக்க அவளிடமே தஞ்சமானேன். காலையில் அவளிடம் காயப்படுத்தும் விதமாக நடக்கின்றேன். இது நான் அல்ல... நான் நிதானமாக யோசிப்பவன் ஆயிற்றே. நான் ஜனனியை மணக்க இருந்த நேரத்திலும் தெளிவாக நின்றேன். ஆனால் தற்போது  முரணாக நடப்பது என்றால் நான் இன்னமும் தெளிவாகாத கட்டத்தில் நிற்கின்றேன்.      யோசித்தவனின் நினைவு கலப்பதற்காகவே குளித்து முடித்து வந்திருந்தாள் யுக்தா. டவலை தன் உடலால் மூடி இருந்தாலும், அவளின் தோள்வளைவில் ஆரவின் பற்தடம் கண்டு தானாக அவனுமே குளித்து அலுவலகம் கிளம்பினான்.        யுக்தா சுபாங்கினியிடம் வந்து மகள் போல உறவாட, சுபாங்கினி அவளை சாப்பிட்டு முடித்த பின், "ஆரவ் உன்னை காயப்படுத்தறானா மா?"     "அதெ

சிரமமில்லாமல் சில கொலைகள்-5

Image
  🩸-5    ஆரோல் தன் தாய் மேரி தந்தை ஜார்ஜிடம் ''மெர்லினா சுத்தி ஏதோ அசம்பாவிதம் நடக்குது டாட். புரியுதா இல்லையா? அன்னிக்கு எனக்கு இன்னிக்கு லிசா அப்பாவுக்கு ஏற்பட்டு இருக்கு'' என்று ஆங்கிலத்தில் புலம்ப,         ''அன்னிக்கு உனக்கு என்றால் அப்போ இதுக்கு முன்ன உனக்கு ஏதாவது விபரீதமா ஏதாவது நடந்து இருக்கா ?'' என்று மேரி கேட்க ஆரோல் தயங்கினான்.    ஆம் லிசாவிடம் தவறாக நடக்க சென்றேன் அப்போ இப்படி விபரிதமாக ஒரு குரல் கேட்டது. அதுவும் என்னை கொல்ல செய்வதாக என்று உலர முடியுமா தன் தாயிடம்.          ''நோ மாம். அது அது சாகறதுக்கு முன்ன லிசா இப்படி தான் நிழல் தூரத்துது, கருப்பு புகை வாள் வச்சி மிரட்டுறதா சொல்வா'' என்றே சொல்லவும்,           மேரி ஜார்ஜிடம், ''அன்னிக்கு லிசா அம்மா புதைக்கிறப்பா நமக்கு கண்ணில் தோன்றியதே அந்த நிகழ்ச்சி அது ஏன் நமக்கு தோன்றனும். நமக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு? ஆனா அன்னிக்கு நாம இருவரும் சேர்ந்து புதைகிற மாதிரி காட்சி வந்துச்சு. எனக்கு தான் அப்படி தோணுச்சு என்று உங்களிடம் சொன்னா உங்களுக்கும்