Posts

சிரமமில்லாமல் சில கொலைகள்-14

Image
      🩸-14      மூச்சு முட்டுவது போன்ற உணர்வோடு சர்வேஷ் மற்றும் மெர்லினாவை அந்தப் படகுக்காரர்கள் காப்பாற்ற இருவரும் நிழலில் தங்களைப் பார்த்துக் கொண்டனர். சற்றுநேரம் எல்லோரும் கூடி அவர்களுக்கு ஆபத்து இல்லையென்று ஊர்ஜிதமாகக் கூடியிருந்தவர்கள் கலைந்தனர். சர்வேஷ் வேன் டிரைவரிடம் மற்ற பயணியர்களை அனுப்பி வைத்து மெர்லின் அருகே நின்றான். "அபரஞ்சி..." என்று அழைக்க, மெர்லினோ அவன் நெஞ்சில் சாய்நது அழத்துவங்கினாள். கருப்புருவம் நீரை சுரக்காத தன் கண்களில் ஆசைத்தீர கண்டு மகிழ்ந்தது. "என் காதலால் தானடி உனக்குப் பிரச்சனை வரும்னு இருந்தேன். நீ எதுக்குத் தண்ணீரில் மூழ்க பார்த்த?" என்றதும் "சர்வேஷ் நான் ஒன்றும் தேவையேயில்லாம தண்ணீரில் மூழ்கலை." என்று நடந்தவையைச் சொல்லி முடித்தாள். கடைசியாக, "ப்ளிஸ்.... இத்தனை பேரை எதிர்த்து நம்ம சேரணும்னு அவசியமேயில்லை. தயவு செய்து விடுங்க. நான் திரும்ப நியூயார்க்கே போறேன். இந்தப் பூமியில் வரவே மாட்டேன்." என்று அவனிடமிருந்து விலக முயன்றாள். "எப்படி முடியும்? ஒர் ஜென்மம் இல்லை இரண்டு ஜென்மம். என்ன பார்க்கற... நீ தண

சிரமமில்லாமல் சில கொலைகள்-13

Image
🩸-13     இரவு தாய் தந்தை உறங்கியப்பின் தன் ஆடையில் முழுங்கையை மடக்கி வளையலை எடுத்துத் தடவி பார்த்தாள்.      சர்வேஷ் உரிமையாகத் தன் கையில் மாட்டிய வளையலை தடவி பார்த்து இரசித்தாள்.     சர்வேஷ் அவளுக்குள் மெல்ல மெல்ல நுழைந்திருந்தான். யாருக்கு தான் பிடிக்காது. உறவில் தனக்குப் பிடித்தவையை அறிந்து நடந்து, தனக்குத் தேவையுணர்ந்து, பரிசும் காதலும் கொண்டு வந்து, அழகனொருவன் தன்னை அன்பால் ஆட்டிபடைக்க ஏங்க செய்யாதோ உள்ளம்.       இன்று சர்வேஷ் தன் கையைப் பிடித்து மாட்டிய நிகழ்வை பலமுறை மனக்கண்ணில் ஓடவிட்டு உறங்கினாள் அபரஞ்சி.      அபரஞ்சி இல்லாத பொழுதும் அதே போலத் தனக்குப் பிரசாதம் வந்திருந்தது ஜன்னல் வழியாக. இம்முறை ஆடலரசன் அது அபரஞ்சி அல்ல என்பதை அறிந்துவிட்டான். முட்டாள்தனமாக இந்நாள் வரை அவள் தான் தன்னை விரும்புகின்றாளென எண்ணி அவளிடம் பேசியதை நினைவுப்படுத்தித் தன்மீதே எரிச்சலானான்.      சர்வேஷ் வீட்டில் தினமும் ஊர் பஞ்சாயத்துக் கூடியது. அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்தது. இதில் மனிஷா அபரஞ்சியினை விடத் தான் எந்தவிதத்தில் இறங்கிபோனோம் என்ற எண்ணம் மேலோங்கியது.        இப்படியாகப் பிரச்சனை

சிரமமில்லாமல் சில கொலைகள்-12

Image
🩸-12       தாங்கள் விரைவில் அபரஞ்சி கல்லூரி இருக்குமிடம் வீடு மாற்றம் செய்வதாக கூறி இனிப்பை வழங்கவும், நிர்மலாவோ "வீடு தானே மாற போறிங்க. பெருசா வீடு வாங்கிட்டு போறதா இனிப்பை தர்றிங்க." என்று ஏளனமாக கேட்கவும் அம்புஜம் கவலை கொண்டாள்.      அபரஞ்சி சும்மா இருக்காமல், "வீடு தானே அத்தை வாங்கிடுவோம். அப்பா அவரோட ஊர்ல இருக்கற பூர்வீக வீட்டை நிலத்தை யாராவது விலைக்கு வாங்கிட்டா இங்க சீக்கிரம் வாங்கிடுவோம்." என்று பேசவும் நிர்மலாவுக்கு இப்பேச்சே கசந்தது.       "அம்மா... எனக்கு காலேஜில் டெஸ்ட் வருது வா... படிக்க போகணும்" என்று இழுக்க, அம்புஜம் நிர்மலாவிடம் விடைப்பெற்றார்.      ஆடலரசன் வியேர்வை பூத்து நின்றிருந்தான். எங்கே இந்த அம்மா தான்  விளையாட்டுக்கு செய்தவையை அத்தையிடம் மாட்டி விடுவார்களோயென அஞ்சினான்.       அப்படி நடக்கவில்லையென்றதும் நிம்மதி கொண்டான்.      அம்புஜம் சென்றதும் அபரஞ்சியை வழிமறைத்தான் சர்வேஷ்.        "நான் எழுதணும் வழிவிடுங்கோ" என்று சத்தமின்றி கூறியவளை முதல் முறையாக தனது சுட்டு விரலால் தாடை நிமிர்த்தினான்.        "காலேஜ்

சிரமமில்லாமல் சில கொலைகள்-11

Image
  🩸-11      அபரஞ்சி அடுத்த நாளில் கல்லூரி சென்று வந்து யோசனையில் சிக்கினாள்.    எதிர் வீட்டிலிருந்து மல்லிகா ஒடிவந்து கல்லூரி வாழ்வை பற்றி ஆவலோடு கேட்க, சர்வேஷ் அத்தனின் யோசனையை ஒதுக்கி வைத்து கல்லூரி கதைப் பற்றிப் பேசினாள்.     மாடியிலிருந்ததால் அடிக்கடி அபரஞ்சி பக்கத்து வீட்டினை எட்டிபார்க்க, மல்லிகா அதனைக் கண்டு விட்டாள்.       "ஏய் என்னப்பா... அடிக்கடி கண்ணு பக்கத்துவீட்ல அலைமோதுது." என்று விளையாட்டாய் கேட்க, "காதல் பற்றி உன் அபிப்ராயம் என்ன மல்லி?" என்றாள்.      "அடி ஆத்தி..." என்று சுற்றிமுற்றி பார்த்தாள். "யார் காதுலயாவது விழுந்தது தோலையுரிச்சி மாவடு பண்ணிடுவாங்க. என்ன நீ இப்படிக் கேட்கற..." என்றாள்.    அபரஞ்சி மல்லியை பார்த்து தலைகுனிந்தாள். கேள்வியே தவறோ... இந்த வயதில் பேசக் கூடாதவொன்று தான். கல்லூரியில் அடியெடுத்து அடுத்த நாளே கேட்டால் மல்லி தன்னைத் தவறாக எண்ண போகின்றாள். போச்சு... இனி பேச மறுப்பாளென எண்ணி பரிதவித்தாள்.    மல்லியோ அபரஞ்சியின் அத்தை வீட்டை எட்டிப் பார்த்து, "இதெல்லாம் இப்ப பேசலாமானு தெரியலை ரஞ்சி. ஆனா காதல்னா அன்பு

சிரமமில்லாமல் சில கொலைகள்-10

Image
   🩸-10 அபரஞ்சி-சர்வேஷ்வரன் காலம்.              "ரஞ்சி... ஏய் ரஞ்சி...  இந்தா... நீ கேட்ட செம்பருத்தி பூ" என்று ஆடலரசன் அபரஞ்சியிடம் நீட்டினான்.     "அச்சோ... இப்ப தான் (சர்வேஷ்வரன்)பெரியத்தான் கொடுத்துட்டுப் போனார். நீங்க இதை மல்லிகாவிடம் கொடுக்கறிங்களா...? அவளும் கேட்டுட்டு இருந்தா..." என்று பதில் தர ஆடலரசனுக்குக் கவலையாய்ப் போனது.      "அப்படியா.... சரி நீயே கொடுத்துடு." என்று அவளிடமே நீட்ட, எதிர் வீட்டு மல்லிகா ஒடி வந்தாள். "செம்பருத்தி எனக்கா... தேங்க்ஸ் டி ரஞ்சி." என்று பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டு வாசலில் மார்கழி மாதத்தை வரவேற்ற வண்ண கோலங்களை மேலும் அழகுப்படுத்த சாணத்தை உருட்டி நடுநயமாக வைத்து அதில் பூசணிப்பூவை வைத்துவிட்டு மஞ்சள் பிள்ளையாரை வைத்து அதன் மேலே செம்பருத்தி சொருகி முடித்தாள்.      எல்லாம் முடித்து எட்டி நின்று அழகு பார்த்தாள் அபரஞ்சி. அவளின் மஞ்சள் முகமும், ஜிமிக்கி கம்பலும், சின்னதாய் கீறிட்டு வைத்த விபூதியும் அவளை மார்கழி மாதத்தில் ஆண்டாளாகவே தோற்றுவித்தது  சர்வேஷ்வரனுக்கு.    பக்கத்து வீட்டு மாடியில் சூரியனை வ

தீவிகை அவள் வரையனல் அவன்-30

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

தீவிகை அவள் வரையனல் அவன்-29

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.          

தீவிகை அவள் வரையனல் அவன் -28

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.     

தீவிகை அவள் வரையனல் அவன்-27

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

தீவிகை அவள் வரையனல் அவன்-26

Image
தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.