Posts

பஞ்ச தந்திரம்-8

பஞ்ச தந்திரம்-8    சற்று நேரம் பிடித்தது. திரிஷ்யா தனுஜா அணைத்து அழ ஆரம்பித்து மஞ்சரியும் ரஞ்சனாவும் கூட கலங்கி போனார்கள்.    நைனிகாவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவளாக இருந்தாள்.  மீண்டும் போன் நோட்டிபிகேஷன் வந்தது. அதில் ஏதோ வீடியோ காட்சி வரவும் "எக்ஸ்கியூஸ் மீ" என்று தனியாக பாத்ரூம் சென்று காணொளியை கண்டாள்.           இதயவோட்டம் தாருமாறாக இயங்கியது. அரைகுறை ஆடையோடு நைனிகாவும் தருணும் இருக்கும் நெருக்க காட்சிகள் ஓடியது. சற்று செல்ல செல்ல, அந்தரங்க மீறல்கள் நடந்தேறியது. "நோ" என்று கத்தி அழுதாள்.       வெளியே நால்வரும் இருக்க, நைனிகா கத்தி அழவும், ரஞ்சனா தான் முதலில் கதவை தட்டினாள்.      "நைனிகா.. நைனிகா.. கதவை திற. என்னாச்சு." என்று தட்டினாள்.      திரிஷ்யா தனுஜாவை அணைத்து ஏறிட, ரஞ்சனா மஞ்சரி இருவரும் கதவை தட்டியபடி இருந்தார்கள்.     "கதவை திற நைனிகா" என்று ரஞ்சனா கத்தவும், "எல்லாரும் போங்க என்னை விட்டு. ஐ நீட் அலோன். நான் சாகணும்" என்று கத்தினாள்.     "அறிவுக்கெட்டவளே... இப்படி கத்தினா உங்க வார்டன் அம்மா வரப்போறாங்க கதவை திறடி.&

பஞ்ச தந்திரம்-7

பஞ்ச தந்திரம்-7         அப்பாடி நான் தப்பிச்சேன் என்ற உணர்வில் ரஞ்சனா இருக்க, நைனிகாவோ, "பச் இப்ப பிரஷ் பண்ணி குளிச்சி காபி குடிக்க போகணும். சாப்பாடும் அங்க தான். நான் போய் சாப்பிடுவேன்... நீங்க  எப்படி?" என்று நைனிகா சிரித்தாள்.       "நேத்தே செத்திருந்தா ஆவியா அலைய வேண்டியவ. இன்னிக்கு திங்க அலையுற.     உன்னையெல்லாம் சாக போடினு விட்டு தொலைச்சிருக்கணும்." என்று ரஞ்சனா பேசவும் நைனிகாவோ பேஸ்ட் பிரஷ் என்று பல் தேய்க்க ஆரம்பித்தாள்.     மடமடவென குளித்து முடித்து தலைவாறி ஹேண்ட் பேக்கை எடுத்து, யாரும் கத்தி பேசாதிங்க. நான் வெளியே லாக் பண்ணிட்டு ப்யூ மினிட்ஸ்ல வந்துடுவேன்." என்று நைனிகா அவள் பாட்டிற்கு வெளியேறினாள்.     கடலில் தொடைவரை உவர்ப்பு நீர் மூழ்கும் ஆழம் வரை சென்று திரும்பியதால் லேசாய் கசகசப்பு உணரவும் "ஒரு மாதிரி பிசுபிசுனு இருக்கு. நானும் டூ செகண்ட்ல குளிச்சிட்டு வந்துடறேன்." என்று ரஞ்சனா குளிக்க தயாராக கூறினாள்.      "குளிச்சிட்டு எதை போட்டுக்கறதாம்" என்று திரிஷ்யா கேட்கவும் "அதெல்லாம் அந்த பிசாசோட டிரஸ் ஏதாவது பத்தும். இல்லைனா கூட

பஞ்ச தந்திரம்-6

பஞ்ச தந்திரம்-6          "நீங்க சொல்லுங்க அம்மா... நான் என்ன செய்யறது. அவரோட திரும்பி வாழணுமா? எனக்கு என் மகன் வேண்டும். அவன் இல்லைனா நான் செத்துடுவேன்" என்று முகம் பொத்தி அழுதாள்.       மஞ்சரியோ "முதல்ல தண்ணி குடி." என்றார்.     ரஞ்சனாவோ "பைத்தியமா நீ... சாகணும்னு முடிவெடுக்கற... உன் குழந்தையை யோசித்து பார்த்தியா. எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவுக்கு நிகரா இருக்க முடியுமா. நீ செத்துட்டா உன் பையனுக்கு மொத்தமா அம்மா இல்லாத நிலை ஏற்படும். அதே நீ தனியா வாழ்ந்து இருந்தாலாவது அடிக்கடி அவனை பார்த்து அவன் நிலையை கவனிக்கலாம். யார் கண்டா... ப்யூச்சர்ல அவன் உன்னை தேடிவரலாம். அப்படியில்லைனா கூட போர்டிங் ஸ்கூல்ல ஒரு வாரம் இருந்துட்டு அம்மா வேண்டும்னு அழது உன்னை கேட்கலாம். உன் கணவர் உன்னை தேடிவரலாம். திங்க் பாஸிடிவ்." என்றாள்.       திரிஷ்யா வேதனை சுமந்தவளாக, "அவனுக்கு ஒரு போன் வீடியோ கேம்ஸ் டாய்ஸ் இதெல்லாம் கிடைச்சாளே என்னை மறந்துடுவான் ரஞ்சனா. அந்தளவு இந்த இடைப்பட்ட நாள்ல என்னை தள்ளி வச்சே பழகிட்டாங்க." என்றாள்.     எது சொன்னாலும் இப்படி பேசுகின்றாளே என்று ம

பஞ்ச தந்திரம்-5

பஞ்ச தந்திரம்-5       எப்பவும் ஆண் பெண் ரசனை வித்தியாசமானது.     கல்யாணத்துக்கு முன்னயும் சரி, கல்யாணத்துக்கு பின்னயும் சரி ஆண் எப்பவும் வேற பொண்ணுங்களை பார்த்து சைட் அடிப்பாங்க. மற்ற பெண்ணோட கண், காது, மூக்கு, வாய், செஸ்ட், கழுத்து, இடுப்பு, பின்னழகு, தொடை கால், கால் விரல் நகம் வரை  முழு உடலை ரசிப்பாங்க.   முடி கர்லிங்கா இருந்தாலும் ஸ்ரெயிட்டிங் பண்ணினாலும் ஏன் எதிர்வீட்டுக்காரி கொண்டை குத்தி அழுக்கு நைட்டி போட்டுட்டு வந்தாலும் ரசிப்பாங்க சபலப்படுவாங்க.     இதே பெண் கல்யாணத்துக்கு முன்ன சைட் அடிச்சிருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு பிறகு எவனையும் ஏறெடுத்து பார்க்க மாட்டா.  பையன் அழகாவே இருந்தாலும் கண்ணு இந்த பக்கம் அந்த பக்கம் போகக்கூடாது. பிகாஸ் அவ கல்யாணம் ஆனவ. இன்னொருத்தனை பார்த்தா பத்தினியா இருக்க முடியாது.     புராணமே இதை தானே சொல்லுது. ரேணுகாதேவிம்மா மண்ணை குழைத்து பானை செய்து தண்ணி பிடிச்சி வர சொல்வார் ஜமதக்கினி. ரேணுகா தேவியும் மண்ணை பானையா செய்து, பாம்பை சும்மாட்டியா வச்சி எப்பவும் நீர் எடுத்துட்டு வர்றவங்க. ஒரு முறை நீரில் தெரிந்த காந்தர்வனோட அழகுல மயங்கி ரசித்ததுக்கே கற்பு தவறி

பஞ்ச தந்திரம்-4

பஞ்ச தந்திரம்-4      திரிஷ்யா பலகனவை மனதில் தேக்கி வைத்து சுடிதார் அணிந்து கணவன் முன் நிற்க அவனும் கட்டி பிடித்து தட்டாமாலை சுற்றுவதாக கனவு கண்டாள்.    கல்லூரியில் படிக்கும் போது சுடிதார் அணிந்திருக்கின்றாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு முற்றிலும் சேலை தான் கட்டவேண்டும் என்பது நாகேஸ்வரியின் விதி.      அதனாலே சுடிதாரை என்றோ மூட்டை கட்டியிருந்தாள்.      கணவரின் விருப்பம்மாடர்ன் உடை என்று அறிந்தப்பின் சுடிதார் அணிவதில் தயக்கமின்றி வாங்கிவிட்டாள்.    குளித்து முடித்து உடையணிந்து கணவர் எழுந்திடும் முன் டீ போட சென்றிருந்தாள். லோகநாதனோ மருமகளின் உடையை கண்டு ஜாகிங் போகாமல் மனைவியிடம் கிசுகிசுக்க வந்தார்.       நாகேஸ்வரியோ ரயில் வண்டி போல அதிவேகமாய் வந்து, "என்னடி  இது?" என்று கேட்டார்.     "சுடிதார் அத்தை. அவருக்கு பிடிக்கும்னு போட்டேன்" என்று நடுங்கினாள்.     "இந்த டிரஸை என் மகன் வாங்கி தந்தானா? எங்க அவன்?" என்று கத்தினார்.      "இல்லை அத்தை... அவர் வாங்கி தரலை. இது நான் தான் வீட்டு செலவுக்கு கொடுத்ததுல வாங்கினேன். அவருக்கு சுடிதார் பிடிக்கும்னு" என்று க

பஞ்சதந்திரம்-3

பஞ்சதந்திரம்-3 முதலில் யாரை பற்றி அறிவதென மீண்டும் தலையாய பிரச்சனை எழும்பியது. நைனிகா தான் கடைசியாக கூறுவதாக தோளைக் குலுக்கினாள். ரஞ்சனாவோ "அப்போ நான் இவளுக்கு முன்ன சொல்லிக்கறேன்." என்று அவளை போலவே தோளைக் குலுக்கவும் நைனிகா எரிச்சலடைந்தாள். "என் பேரண்ட்ஸே பரவாயில்லை." என்று சலித்தபடி நைனிகா மெத்தையில் படுத்து காலாட்டி, "யார் சொல்லறிங்களோ சொல்லுங்க. விருப்பமில்லையா விடுங்க. ஐ டோண்ட் கேர். பட் தூங்கிட்டு காலையில எழுந்துப்போம். அதான் இறப்பை தள்ளி போட வச்சிட்டிங்களே." என்று ஆதங்கப்பட்டாள். "நீ வேண்டுமின்னா உன் ரூம்ல இங்கயே தூக்கு போட்டுக்கோ" என்று ரஞ்சனா ஐடியா தர, "என்ன நீ என்னை நோண்டிட்டே இருக்க?" என்று எகிற, "கொஞ்சம் நிறுத்துங்க" என்றார் மஞ்சரி பாட்டி. வயதில் பெரியவர் என்பதால் சற்று அமைதியாக இருந்தார்கள். "மூச்சு வாங்குதுடா... என்னைலையும் இப்ப பகிர முடியலை. குழந்தையும் தூங்கறா. திரிஷ்யா உன்னை பத்தி சொல்லலாமே. குழந்தை இருக்குனு சொன்ன. குழந்தை தேடாது. அப்படியென்னமா ஆச்சு." என்று மஞ்சரி கேட்டதும் திரிஷ்யா அழுதாள்.

விநோத கணக்கு

Image
                                                      விநோத கணக்கு        எத்தனை முறை தான் வீட்டு வாசலில் வந்து நின்று விட்டாயிற்று.      துளியும் உள்ளே அழைக்காமல் அம்மா இவ்வளவு வைராக்கியம் காட்டுவது ஜெனிபருக்கு கவலையை தந்தது.         இன்னும் பத்து நிமிடம் காத்திருக்க மனம் உந்தியது. அப்பொழுது ராம் போன் வரவும் எடுத்தாள்.     "ஹாய் பொண்டாட்டி... என்ன உங்க வீட்டு ராஜ கவனிப்பில் புருஷனுக்கு கால் பண்ணணும் என்றதே மறந்திட்டியா?" என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான் ராம்.    ஜெனிபரோ தாய் தந்தை வீட்டுக்குள் அழைக்காத கோபத்தை தன் காதல் கணவனிடம் காட்டினாள்.     "என்ன நக்கலா ராம். எங்க வீட்ல சேர்த்துக்கலை அதனால குத்தி காட்டறியா. இதெல்லாம் உன்னால ராம்" என்று எகிறினாள்.     "ஏ... எங்க வீட்லயும் தான் சேர்த்துக்கலை. அப்பறம் எப்படி குத்தி காட்டறதா கணக்கு வரும்.      நீ எப்பவும் ரோட்ல இருக்கறப்ப போன் பண்ணுவியே இன்னிக்கு காணோமேனு கேட்டேன். ஒரு வேளை உங்க வீட்ல உன்னை அழைச்சி விருந்து உபசரிப்பு பண்ணறாங்களோனு. அதென்ன எல்லாம் என்னால? நீ ஒன்னும் பண்ணலை.?" என்று தங்கள் காதல் களவாணியில்

முரண்

Image
                                       முரண்       மாதத்தின் முதல் நாளே மளிகை பொருட்கள் வாங்க சுபாவும் வனிதாவும் புறப்பட்டார்கள். வனிதா சுபா இருவருமே 'க்ரீன் லீவ்ஸ் அப்பார்ட்மெண்ட்' வாசிகள்.     பெரும்பாலும் இருவரும் இங்கு குடிப்புகுந்து ஆறுமாதமாகின்றது. இருவருக்கும் எதிரெதிர் வீடு என்பதாலும் ஒரே வயது கொண்ட மங்கைகள் அதிலும் இருவரும் கேரம்போர்டு சாம்பியன் என்று நல்ல சிநேகிதம் உருவாகியது.    இருவரின் கணவர்களும் சென்றப்பின், தனியாக இருப்பதால் இருவரின் பொழுது போக்கில் பாதி நேரம் கேரம்போர்டு தான் ஆக்கிரமித்து இருக்கும்.    இப்படி சில நேரம் மளிகை கடைக்கு, காய்கறி கடை, டிரஸ் வாங்குவது என்பதற்கு சேர்ந்து போகவும் இவர்களின் கணவர்மார்களுக்கு பாதி டென்ஷன் அகன்றது.      சுபா போகும் போதே மளிகை கடைக்கு சென்று அண்ணாச்சி கடையில் லிஸ்டு கொடுத்து விட்டு போட்டு வையுங்க அண்ணா" என்று கூறி நகர்ந்தாள்.    வனிதாவோ சூப்பர் மார்க்கெட் போகவும் துணைக்கு சுபா வந்து சேர்ந்தாள்.    "எத்தனை முறை சொல்லறது சுபா. என்னோட நீங்களும் இந்த சூப்பர் மார்க்கெட்லயே புரோவிஷனல் வாங்கலாம். அதை விட்டு அந்த குட்டி கட

பார்வை போதுமடி பெண்ணே

Image
                                பார்வை போதுமடி பெண்ணே          காலையிலிருந்து வாட்சப்பை நிரம்பி வழித்தது மகளிர் தின வாழ்த்து.     நித்தம் நித்தம் ஆண் வாரிசாக பிறக்கவில்லையென்ற வசவு சொல்லை கேட்டு வளர்ந்த தாரிகாவுக்கு இந்த வாழ்த்து எல்லாம் அசட்டுதனமாய் தோன்றியது.        வருடத்திற்கு ஒருமுறை தேரை குளிப்பாட்டி சாமியை வைத்து ஊர்த்திருவிழாவில் வீதிவீதியாய் வலம் வரும் போது அந்த தேரை தோட்டு கும்பிட கூட அத்தனை பேர் தள்ளுமுள்ளில் சிக்கி தொட்டு கண்ணில் ஒத்திக்கொள்வார்கள். ஆனால் விழா முடிந்ததும் அந்த தேர் தூசி படிந்து ஒட்டடை அடைந்து கிடக்க கோவிலில் அதை கேட்பாரற்று கிடக்கும். அது போல தான் இந்த மகளிர் தின வாழ்த்தும்.    ஒரு நாளில் ஆஹா ஒஹோ என்று பெண்ணின் பெருமையையும் புனிதத்தையும் பேசி கிழித்து பார்வார்ட் செய்து பீற்றி கொள்ளலாம். மற்ற நாட்களில் பாதுகாப்புக்கும் பஞ்சம். பெண் என்றால் இழிவு.    அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும். தந்தை ஆண்வாரிசு இல்லையென்று கூறும் போதெல்லாம், குழந்தை என்றாலே வாரிசு தானே. இதில் ஆண் என்ன பெண் என்ன? என்று கேட்க வேண்டும் போலிருக்கும்.    இதோ இப்பொழுது கூட அவர் நண்பரிடம் போனில்