பிள்ளை யார்? பிள்ளையார் ஆனா கதை.
பிள்ளை யார் பிள்ளையார் ஆனா கதை. ஒருமுறை பார்வதி தேவி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குளிக்கச் சென்றார். அப்போது காவலுக்கு யாருமில்லை என்பதால், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே, தன்னுடைய கையில் இருந்த மஞ்சளை உருட்டி உருட்டி கூம்பு வடிவில் ஒரு உருவத்தைச் செய்துவிட்டார். அதை ஒரு சிறுவனைப் போல், உயிருள்ளது போல் பாவித்தாள். அதை வாசலில் நிறுத்தினார். "நீ இங்கேயே இரு. நான் குளிக்கப் போகிறேன். யாராவது வீட்டுக்குள் வந்தால் உள்ளே விடாதே" என்று சொல்லிச் சென்றார் பார்வதி குளிக்கச் சென்ற கொஞ்ச நேரத்திலேயே சிவபெருமான் வீட்டுக்கு வந்தார். ஆனால் மஞ்சளால் வடிக்கப்பட்ட அந்த சிறுவன் சிவனை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினான். என்னுடைய வீட்டுக்குள் என்னையே போக விடாமல் ஒரு பொடிப்பையன் தடுப்பதா என்று கடும் கோபமுற்ற சிவன், அந்த சிறுவனின் தலையை அப்படியே கிள்ளி எறிந்து விட்டார். குளித்துவிட்டு திரும்பி வந்த பார்வதி, தான் காவலுக்கு வைத்த சிறுவன் தலை கொய்யப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விட்டார். பார்வதியின் க...