பஞ்ச தந்திரம்-18
திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.
மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகாசம் தந்ததாக கூட காட்டிக்கவில்லை.
நைனிகாவுமே ஹாய் பாய் என்று கல்லூரிக்கு ஓடுவதில் இருந்தாள்.
ருத்ரன் மட்டும் தினமும் அவள் பணிப்புரியும் இடத்திற்கு வரும் நேரம் சற்று தொலைவில் நின்று பார்ப்பான். தனுஜாவை பள்ளிக்கூடத்தில் விடும் சமயமும் ஏறிடுவான்.
ஒளிந்து ஒளிந்து பார்ப்பதை விட நேரிடையாக தான் வந்து நிற்பான்.
திரிஷ்யா முதலில் சங்கடம் அடைந்து நின்றாலும் இந்த இரண்டு மாதம் பார்த்ததில் சங்கடமின்றி கடந்து வந்தாள்.
தனுஜாவுக்கு சாக்லேட் வழங்குவதும் தினமும் நடைப்பெற்றது.
வேதாந்தை மணந்தப்போது உலகம் அறியாதவள். யார் எது சொல்லி வழிநடத்தினாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மடந்தை.
இன்றோ உலகம் அறியப்பட்டாள். முன்பு மணமான வாழ்வு சரிக்கியது போல இரண்டாம் முறையும் சரிக்கிடுமா? என்ற கோணத்தில் யோசித்தவள், 'இழக்க இங்கே ஒன்றுமில்லை. வாழ்ந்து தான் பார். உன் தாய்மையை கூட வேதாந்த் பிடுங்கி உதயை அழைத்து கொண்டான்.
தானாக கிடைத்த தாய்மையும், தாலி பாக்கியமும் அமையட்டுமே. யார் கண்டால் இதுவே தனக்கான வாழ்வாக மாறவும் வாய்ப்புண்டு.
ருத்ரன் பற்றி அவள் அறிந்தவை பெரிதாக பயத்தை தரவில்லை. அவன் சீட் பெல்ட் அணிந்திருக்க மனைவி குழந்தைகள் அஜாக்கிரதையாக இருந்ததால் இருந்திருப்பதாக கூறினார் மஞ்சரி.
தன்னை வெகுநாளாக பின் தொடர்ந்தவன், தனக்கு நல்லதென மஞ்சரி அம்மா முடிவெடுக்கலாம். அது சரியோ தவறோ? ஆனால் தனுஜாவிற்கு நல்லதாக அமைந்தால்? அந்த ஒன்று ருத்ரனை ஏற்றுக்கும் முடிவுற்கு தள்ளியது.
அவளாகவே ஒரு நாள் ருத்ரன் தனுஜாவிற்கு இனிப்பு வழங்கிவிட்டு செல்லும் நேரம் தொண்டையை செருமினாள்.
"உங்களுக்கும் சாக்லேட் வேண்டுமா?" என்று தான் ருத்ரன் இனிப்பை நீட்டியபடி கேட்டான்.
போலி முறைப்பை வழங்கி, "உங்களிடம் பேசணும்" என்று இனிப்பை வாங்காமல் எங்கோ பார்த்து பேசினாள்.
"ஏதுனாலும் சாக்லேட் வாங்கிட்டு பேசலாமே?! இது உங்களுக்குனு வாங்கின சாக்லேட் தான். எப்பவும் கொடுக்க பயந்துட்டு நானே எடுத்துட்டு போய் சாப்பிடுவேன்." என்று இன்னமும் இனிப்பை நீட்டவும், "நான் பேசணும்" என்று பிடிவாதமாய் உரைத்தாள்.
தனுஜாவை தூக்கி கொண்டு, "சப்போஸ் நீங்க மேரேஜிக்கு ஓகே சொல்லி, நமக்கு மணமானப்பின்னால, தனுஜாவை எந்த காரணத்தாலும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. நான் இவளுக்கு அப்பாவா, உனக்கு கணவனா தான் வர்றேன். மத்தபடி கணவன் பொறுப்பை மட்டும் சுமக்க வருவதா தப்பா எடுத்துக்காதிங்க எனக்கு தனுஜாவை ரொம்ப பிடிக்கும்." என்று கூற, அவன் கன்னத்தில் தனுஜா முத்தமிட்டாள்.
தான் பேச வருவதை முன்கூட்டியே பதிலாக தருபவனிடம் மீதி என்ன பேசுவது? அப்படியே தவிப்பாய் நின்று கண்களை உருட்டியவளிடம், "எனக்கு இந்த பாஸ்ட் பத்தி பேச வேண்டாமேனு மனசுக்குபடுது. ஆனா நான் பாஸ்ட் பத்தி பேசுவேன். நீங்க கணவரை விவாகரத்து பண்ணிட்டிங்க. பட் குழந்தை உதய்? சப்போஸ் உதய் பிற்காலத்துல உங்களோட வர ஆசைப்பட்டா அவனையும் நம்ம குடும்பத்தோட இணைச்சிக்க நான் தயங்கமாட்டேன்." என்று பேசினான் ருத்ரன்.
திரிஷ்யாவோ "நான் மேரேஜிக்கு ஓகே சொல்லவேயில்லை. நீங்க என்னென்னவோ பேசறிங்க?" என்று கேட்டாள்.
"ஏங்க பிடிக்கலைனா நீங்க பாட்டுக்கு எப்பவும் போல கிளம்பியிருப்பிங்க. மஞ்சரி ஆன்ட்டியிடம் எனக்கு மறுகல்யாணமே வேண்டாம்னு சொல்லிருப்பிங்க. இரண்டும் இல்லையே. இப்ப என்னிடம் பேசணும் என்றால் பாஸிடிவ் பதில் தான் கிடைக்கும்னு புரிஞ்சுக்க முடியாதவனா?" என்று அறிவாக பேசியவனிடம் குழந்தையை வாங்கினாள்.
"ஓஹோ" என்று தனுஜாவை உடன் அழைத்து செல்ல, "ஏங்க பதில்?" என்று ருத்ரன் அவள் முன்வந்தான்.
"அதான் உங்களுக்கே தெரியுதே." என்று கூறியவளை பார்த்து, "உங்க திருவாய் மலர்ந்து வார்த்தை சொல்லலாமே?" என்று வேண்டி நின்றதும், "மஞ்சரிஅம்மாவிடம் பேசுங்க" என்று பதிலுரைத்து அவன் கையில் வைத்த இனிப்பை பெற்றுக்கொண்டாள்.
ருத்ரன் மனம் குளிர "கார்லயே வரலாமே." என்று கூப்பிட, "இல்லைங்க வேண்டாம். ஊரறிய முடிவானப்பிறகு வர்றேன்" என்று மறுத்துவிட்டாள்.
மஞ்சரி அம்மாவிடம் நன்றியுரைக்க மாலை வரவேண்டியதால் திரிஷ்யாவை பின் தொடர்ந்து வந்தான்.
வீட்டுக்கு வந்து அடியெடுத்து மஞ்சரிம்மாயிடம் நன்றிகூறி, திருமண திகதியை பெற்றுக்கொண்டே சென்றான்.
திரிஷ்யாவுக்கு தான் லேசான பயம் இருந்தது.
சூடுபட்ட பூனை வெளியே தைரியசாலியாக காட்டிக்கொண்டாலும் பிறவி குணம் மாறாதல்லவா? கைகள் பிசைந்து ருத்ரன் இருக்குமிடம் பாராது மஞ்சரி அருகே நின்றாள்.
"அம்மா நீங்க கொடுத்த அவகாசத்துல யோசித்தேன். தனுஜாவுக்கு அம்மா மட்டும் இல்லாம அப்பாவும் இருந்தா நல்லதுனு தோனுச்சு." என்று கூறவும் நைனிகாவோ "வரேவாவ்." என்று கட்டிப்பிடிக்க, "என்னப்பண்ணற அணைக்காம பேசு." என்று கூச்சத்தில் நெளிந்தாள்.
"கட்டிபிடிக்க ஆள் வந்தாச்சு. இனி கூச்சம் காணாம போகும் திரிஷ்யாக்கா." என்று இடையில் கிச்சுகிச்சு மூட்ட, "சும்மாயிருடி" என்று சேலையை இழுத்து போர்த்தினாள்.
ருத்ரனோ "அம்மா கல்யாணத்தை கோவில்ல முடிச்சிடலாம்." என்று ஆர்வமாக பேசினான்.
மஞ்சரியோ "சரிப்பா. திரிஷ்யா ஒரு வார்த்தை ரஞ்சனாவிடமும் சொல்லிட்டு அவளை கல்யாணத்துக்கு கூப்பிடலாம்? நாளைக்கு சேலை எடுக்க போகலாமா" என்று மஞ்சரி கேட்டதும் ருத்ரனோ "அம்மா அது வந்து" என்றவன் தனுஜாவை பாடம் படிக்க கூறினான். அவளை அனுப்பிவிட்டு மஞ்சரியிடம் "அவங்க இப்ப இல்லை. இ...இறந்துட்டாங்க. கடைசியா இருபது நாளுக்கு முன்ன நடந்தது. அதுக்கு முன்ன ஒரு நாள் என்னை கூப்பிட்டு பேசினாங்க." என்று ஒரு வீடியோவை காட்டினான்.
அதில் ரஞ்சனா உடல் தளர்ந்து சோர்ந்து இருந்தாள்.
"ஹாய் பிரெண்ட்ஸ்.. எப்படியிருக்கிங்க? இப்ப வாழ்க்கையை கொஞ்சமா புரியறப்ப, சாகப் போனது எல்லாம் முட்டாள் தனமா தெரியுதா? நிச்சயம் முட்டாள்தனமா தெரிந்தா நீங்க பக்குவப்பட்டுட்டிங்கன்னு அர்த்தம். எல்லா பிரச்சனைக்கும் இறப்பு தீர்வாகாது.
கடந்து வரும் நிலை தான் வாழ்க்கையை கஷ்டப்பட்டு ஜீரணிக்க ஆரம்பிச்சா, பிரச்சனை எல்லாம் 'ப்வூ' இவ்ளோ தானா அப்படின்னு நினைப்பிங்க.
ரியலி இப்ப இரும்பையே மென்னு முழுங்கி ஜீரணிச்சு, வாழ்க்கையை லேசா கடக்கறிங்க தானே? இதான் வாழ்க்கை. இறப்பு எல்லாம் பிறப்பு போல அதுவா உருவாகற மாதிரி இறப்பும் அதுவா இயற்கையா நடக்கணும். அதை விட்டு எதுக்காகவும் தற்கொலை முறற்சியை கையில எடுக்காதிங்க." என்று மூச்சிரைக்க பேசினாள்.
லேசாய் அந்த நிலையிலும் சிறு சன்னமான சிரிப்பை உதிர்த்து, "இந்த நிலையிலும் என் குழந்தையை வச்சிட்டு இருக்கற உங்களை கூப்பிடாம ருத்ரனை கூப்பிட்டுயிருக்கேன்னு பார்க்கறிங்களா? மஞ்சரிம்மா நைனிகாவை கூப்பிட்டா அது ஆட்டோமெடிக்கா உனக்கும் தனுஜாவுக்கும் தெரிய வரலாம் திரிஷ்யா. உங்களுக்கு தெரிந்தா என் நிலையை கண்டு அழுவிங்க. கவலைப்படுவிங்க, என் பொண்ணு கலங்குவா.
அதெல்லாம் கூடாது. ருத்ரன் என் மகளை வளர்க்க கேட்டப்ப திரிஷ்யாவிடம் பொறுப்பை தந்திருக்கேன். நான் தாய்மையை கொடுத்துட்டு திரும்ப வாங்கமாட்டேன்னு சொன்னேன். அவர் திரிஷ்யாவையும் மணக்கறேன்னு கேட்டப்ப வேதாந்தை மறந்து நீ ஒகே சொன்னா தாராளமா தனுஜாவுக்கு நல்ல அப்பாவா இருங்கன்னு சொன்னேன். அவரும் உன்னிடம் சம்மதம் வாங்க போராடிட்டு இருக்கார். நிச்சயம் இந்த ருத்ரன் என்ற எறும்பு ஊற ஊற திரிஷ்யா என்ற கல்லு கரையும்னு வேண்டிக்கறேன்.
அப்ப தான் என் மக தனுஜாவுக்கு அப்பா அம்மா இரண்டு பேரும் கிடைப்பாங்க.
அப்படி, திரிஷ்யா நீ ருத்ரனை மணந்தா சந்தோஷமா வாழுங்க. எப்பவாது குழந்தை பாரம் என்று தோன்றினா ஆசிரமத்துல முறையா சேர்த்திடுங்க." என்று பேசவும் திரிஷ்யா மறுப்பாய் தலையாட்டி முடிக்க, வீடியோவில் "ஏங்க இப்படி பேசறிங்க.?" என்று ருத்ரன் குரலும் அதில் கேட்டது.
"எதுக்கும் சொல்லி வைக்கிறது தான் ருத்ரன் சார். அதை திரிஷ்யா செய்ய மாட்டான்னு எனக்கு தெரியும்.
அதனால தானே பொறுப்பா அவளிடம் குழந்தையை ஒப்படைச்சது." என்று ருத்ரன் பக்கம் பார்த்து பேசிய ரஞ்சனா கேமிரா பக்கம் திரும்பினாள்.
"திரிஷ்யா அப்படி ருத்ரனை மணக்க முடிவெடுத்து இரண்டு பேரும் சேர்ந்து குழந்தை வளர்க்க ஆரம்பிச்சா. உங்களுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்." என்று கூறவும் திரிஷ்யாவோ கண்ணீரை உகுத்தினாள்.
அப்பறம் மஞ்சரிம்மா நீங்க தான் தலைமை தாங்கி பார்த்துக்கணும். நைனிகா, எனக்கு குட்டி தங்கையில்லை. என்னோட சண்டைப்போடறப்ப நீ என்னோட தங்கையா இருந்திருக்கலாம்னு தோணும்.
இப்ப என் உயிர் ஊசலாடிட்டு இருக்கு. அப்படி எனக்கு நீண்ட ஆயுள் இருந்திருந்தா அக்காவா உன்னை வழிநடத்தியிருப்பேன். நீ புத்திசாலி குழந்தை. உன் மானத்தை பற்றி யோசிக்காம போல்டா மேனேஜ் பண்ணினவ.
நான் அக்காவா இருக்க முடியாது. ஆனா நீ என் குழந்தைக்கு சம்டைம் அக்கா இருந்து வழிநடத்து. நான் சொல்ல வேண்டியது இல்லை. இருந்தாலும் தனுஜாவை அம்மா அப்பாவோட மட்டும் விட்டுட்டு போகலை. பாட்டி அக்கா என்று நீங்களும் அடிக்கடி அன்பு செலுத்துங்க.
என்னால அதிகமா பேச முடியலை. பார்த்திங்கள்ல ரொம்ப ஒல்லியா மாறிட்டேன். மூச்சு வாங்குது அடிக்கடி இரும்மல் ஒரு வேளை நான் உலகத்தை விட்டு போகப்போறேனோ என்னவோ. அப்படி நான் போனாலும் உங்களிடம் சொல்ல வேண்டாம்னு தான் ரெக்வஸ்ட் பண்ணிருக்கு. இறந்தப்பின்னும் எங்கயாவது உயிரோட இருக்கேன்னு நம்புவிங்கன்னு. தனுஜாவுக்கு அந்த நம்பிக்கையை தாங்க" என்று இரும்பியபடி பேசி முடித்தாள்.
திரிஷ்யாவுக்கு இதயம் பதறியது. தனுஜா வந்துவிடுவாளோ என்று பயந்து அறையை பார்த்தாள். அந்த குழந்தை படிப்பு புத்தகத்தை வைத்து புகைப்படம் வரைந்தபடி இருந்தாள்.
திரிஷ்யா ருத்ரனிடம் திரும்பி "ஒரு வார்த்தை முன்னாடியே சொல்ல என்னவாம்." என்று சண்டைப்பிடித்தாள்.
"ஏங்க அவங்க சொன்னதால தான் உங்களிடம் தெரிவிக்கலை. இப்பவும் சொல்லலைனா தப்புனு தான் வீடியோ காட்டினேன்." என்றதும் திரிஷ்யா முகம் பொத்தி அழுதாள்.
மஞ்சரியோ ''கடவுள் என்னை போன்ற கிழவிக்கு ஆயுசை குறைச்சிட்டு வயசு பிள்ளைகளுக்கு ஆயுசை நீட்டிருக்கலாம். ஆனா கடவுளுக்கு எப்பவும் பொறுக்காது." என்று ஆறுதலுரைத்தார்.
நைனிகாவோ திரிஷ்யாவின் தோளில் கைவைத்தாள்.
தனுஜாவோ "என்னாச்சு திரிஷ்யாம்மா ஏன் அழவறிங்க?" என்று ஓடிவந்தாள்.
நைனிகாவோ "ஒன்னும் இல்லைடா குட்டி. ருத்ரன் அப்பாவை கல்யாணம் செய்தா அவர் வீட்டுக்கு நீங்க போகணுமே. எங்களை பிரிஞ்சிடுவிங்கன்னு அம்மா அதனால அழுவறாங்க" என்று சமாளித்தாள்.
"நாம அடிக்கடி மஞ்சரிப்பாட்டியை நைனிகா அக்காவை வந்து பார்க்கலாம் அம்மா. அழாத" என்று பிஞ்சு கையால் துடைத்தெடுத்தாள்.
ருத்ரனோ திரிஷ்யாவை நெருங்கி வந்து நைனிகாவை அணைத்து கொள்ள, திரிஷ்யா ருத்ரனை நிமிர்ந்து பார்த்தாள்.
அதற்கடுத்த வாரம் கோவிலில் தலைகுனிந்து அவன் பொற்கரங்களால் மாலையிட்டு தாலி ஏற்றுக்கொண்டாள்.
திரிஷ்யா-ருத்ரன் திருமணமான கையோடு மஞ்சரி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, "திரிஷ்யாவோட அம்மா ஸ்தானத்துலயிருந்து மனசார ஆதிர்வதிக்கறேன். நீங்க இரண்டு பேரும் நல்ல கணவன் மனைவியா, நல்ல அப்பா அம்மாவா இருக்கணும்.
அதோட அவளுக்கு அம்மா வீடுன்னா அது என்னோடது. அடிக்கடி வாங்க. தனுஜாவை கண்ணுல காட்டுங்க. எக்காரணம் கொண்டும் பழைய வாழ்க்கையை முடிச்சிப்போட்டு சிக்கலாக்கிடாதிங்க." என்று கூறினார்.
திரிஷ்யாவை நைனிகா அணைத்து ''ஹாப்பி மேரீட் லைப்'' என்று கட்டிபிடிக்க, தனுஜாவோ நைனிகாவோடு சேர்ந்து கொண்டாள்.
திரிஷ்யா ருத்ரன் வாழ்வு நல்விதமாக சென்றால் வேதாந்த்திடம் உயர்த்தி கொள்ள போவதில்லை. அதே போல தாழ்வாக தன்னை நோக்குவானென்று ஓடுங்கப்போவதுமில்லை. தானாக தங்கள் பெற்றோர் காலம் கடந்து தன் வாழ்வை ஏற்பார் என்ற நம்பிக்கை, ருத்ரன் தன்னை மனைவியாக மனுஷியாக நடத்தி தனுஜாவிற்கு நற்தந்தையாக இருப்பானென்ற தீர்க்கத்தோடு அவன் கைபுஜத்தை பற்றி நடந்தாள்.
தனுஜா தான் ருத்ரன் தன்னோடு தூக்கி கொண்டானே.
மஞ்சரி நைனிகா மூவரையும் கோவிலிலிருந்து விட்டுக்கு செல்ல நிறைவாய் கண்ணுற்று பின் தொடர்ந்தார்கள்.
வாழ்க்கை என்பது யாரோ யாரோடவோ ஒருவரை ஒருவர் சார்ந்து அன்பை பகிர்ந்து கொள்வதல்லவா வாழ்க்கை.
-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்
வாசித்து உங்க கருத்தை வழங்கலாம். ரெவியூ போட்ட இன்னும் ஹேப்பி.