பிரவீணா தங்கராஜ் நாவல்கள் (1-25)
(குடும்பம், காதல், நட்பு, உறவு, சமுகம், மர்மம், திகில், ஃபேண்டஸி, நகைச்சுவை உணர்வுகளின் உள்ளடக்கிய நாவல்கள்)
1.முதல் முதலாய் ஒரு மெல்லிய
நாயகன்-நாயகி : அஸ்வின்- பவித்ரா
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கதை இருக்கும். அது போலவே நம் நாயகி பவித்ராவுக்கும் ஒரு கதை உண்டு. இருபது வருடம் பெற்று வளர்த்த தாய்(கயல்விழி) தந்தை(நந்த கோபாலன்) இருவரும் ஓர் உண்மையை மறைக்க, அது கல்லூரி வயதில் பவித்ராவுக்கு தெரிய வர, கலங்கி போகின்றாள். கூடவே ரகுவால் கசப்பான நிகழ்வுகள் மறக்க எண்ணி, தன் வீட்டில் இருந்து இடம் பெயருகின்றாள்.
அங்கே நம் நாயகன் அஸ்வினை சந்திக்கின்றாள். தன் தந்தை நண்பனான விஸ்வநாதன் பையன் அஸ்வின் முதல் முதலாக மெல்லிய உணர்வாக பவித்ராவிடம் தோன்றிய காதலை கூற துவங்க, அவர்களுக்குள் நடைபெறும் அழகான உணர்வே இக்கதை.
அஸ்வின்- பவித்ரா இவர்களுடன் சேர்ந்து ராதை, ஸ்ரீ ராம், தன்யா, ஆகாஷ், சுவாதி, சஞ்சனா ரம்யா என்றே பலரும் கதையில் கரம் கோர்கின்றனர்.
இக்கதையின் அடுத்த தொடர்ச்சி அதாவது ராமின் காதல் கதை விழிகளில் ஒரு வானவில் என்ற கதையாக பதிவு தொடரும்.
Amazon link : முதல் முதலாய் ஒரு மெல்லிய - amazon link
Pratilipi link : முதல் முதலாய் ஒரு மெல்லிய
4.விழிகளில் ஒரு வானவில்
நாயகன்-நாயகி : ஸ்ரீ ராம்-தன்யா
விழிகளில் ஒரு வானவில் நாவல் முதல் முதலாய் ஒரு மெல்லிய நாவலின் தொடர்ச்சி. நட்பிற்கும் காதலுக்கும் மாட்டிக் கொண்டு விழிக்கும் மென்மையான நாயகன் ஸ்ரீ ராமின் கதை. ராமின் அக்கா நிஷாந்தினி அவர் கணவன் சித்திக் வாழ்வும், ராமின் மென்மையான காதலும் வானவில்லாய் மலர்வதே கதை.
நாயகி தன்யா, அஸ்வின்-பவித்ரா, ஆகாஷ்-சுவாதி ராதை-விஸ்வநாதன் என்று இதிலும் மலர்ந்து உள்ளனர்.
Amazon link : விழிகளில் ஒரு வானவில்- amazon link
Pratilipi link : விழிகளில் ஒரு வானவில்
2.புன்னகை பூக்கட்டுமே
புத்தகமாக வெளியான நாவல்
நாயகன்-நாயகி : அர்ஜூன்- சிந்தியா
நாயகி சிந்தியா துடுக்குத்தனதுடன் கல்லூரி பறவையாக வலம் வர, எதிர்பாரா வரனாக அரவிந்த் பெண் பார்க்க வருகின்றான். முதலில் மறுத்தாலும் அரவிந்த் சாதாரணமாக வந்து சென்ற நாளை எண்ணி திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கின்றாள். பெண் பார்க்கும் நேரம் அதிர்ந்து போகின்றாள். அரவிந்த் தம்பி அர்ஜுனை கண்டு அது ஏன் எதற்கு என்று கதை வாசித்து அறிந்து கொள்ளுங்கள். வலி கொண்ட காதல், பெண்ணின் மனதை போராடி ஜெயித்த நாயகன் அர்ஜுனின் கதை.
Audio novel link : புன்னகை பூக்கட்டுமே
Amazon link : புன்னகை பூக்கட்டுமே- amazon link
3.கனவில் வந்தவளே
நாயகன்-நாயகி : நகுலன்-மிருதுளா
கனவில் பார்த்த நங்கைக்கும் நிஜத்தில் வந்த மிருதுளாவுக்கும் உருவம் மட்டுமே ஒற்றுமை இருக்க, எண்ணங்கள் மாறுபட்டு இருக்கும் அவளை தன் எண்ணங்களோடு கலந்து கைத்தலம் பற்றிடும் நாயகன் நகுலனின் கதையே கனவில் வந்தவளே.
தோழி நளினி-சதீஷ், காவ்யா-நரேன், அபிராமி பாட்டி, கோகுல்நாத்-மாயா, சிவநேசன்-அமுதவள்ளி, மகதி என்றே வந்து நிறைத்து கடக்கின்றனர்.
Amazon link : கனவில் வந்தவளே - amazon link
Prathilipi link : கனவில் வந்தவளே
5. உன்னோடு தான் என் பயணம்
நாயகன்-நாயகி : வம்சி கண்ணன்-மதிவதனி
பயம் என்பதை அறியாதவன் வம்சி கண்ணன். இவளோ பயத்தினை குத்தகை எடுத்து முழிக்கும் நாயகி மதிவதனி. தந்தை இறப்பில் நாயகனை கரம் பற்றிடும் நிலை, இருவரின் வாழ்வு நேர்கோட்டில் சந்திக்க ஏற்படும் மாற்றங்களே உன்னோடு தான் என் பயணம். கதையில் டெய்ஸி, தேனு -முத்து, ரதி-கார்த்திக் மற்றும் வில்லன் மலைச்சாமி -மாதங்கி, கேசவன்- சுகந்தி.
உறவுகள் தீக்குணத்தால் ஒதுங்கி சென்ற மதியிடம், நாயகனின் பணியால் ஆபத்து வந்து சேர, நாயகியை காத்து நிற்கின்றானா? உறவின் சூழ்ச்சி அறிந்தும் நாயகி எடுக்கும் முடிவு என்ன? கதையை அறிவோம்.
6.உன்னில் தொலைந்தேன்
நாயகன் நாயகி : ப்ரஜன்-லத்திகா
டாம் அண்ட் ஜெர்ரி கதை. கொஞ்சம் குறும்பு, நிறைய திமிர் அதை விட அதிக பாசம், சுட்டிகை என்று இருக்கும் நாயகன் ப்ரஜன் நாயகி லத்திகா.
குட்டி குட்டி பிரெண்ட்ஸ், கியூட்டானா சண்டைகள் என்றே நகரும் கதை. ஜெயராஜன்-பவானி, ஜீவா-சகுந்தலா புவனா-சந்தீப், ரெஜினா கதை மாந்தருடன் நாமும் தொலைவோம் கதையில்.
7.இதயத்தினுள் எங்கோ
நாயகன் நாயகி : வினோ-ஓவியா
நிதர்சனமான கதை மயிலிறகாய் வருடும் சின்ன வலி கொண்ட காதல் கதை. வினோத்-ஓவியா இருவரின் மன எண்ணங்களின் கோர்வைகள். லவ் ஃபெய்லியர் கதை.
இரண்டு முடிவு கொடுத்து எழுதியது.
8.தித்திக்கும் நினைவுகள்
நாயகன் நாயகி : கௌதம்-சாதனா
சிறுவயது நினைவு சுவடுகள். தித்திக்கும் நிகழ்வில் நாயகன் கௌதமனின் செயலில் தன் மனதை தொலைக்கும் நாயகி சாதனா. காலம் கடந்து சந்தித்தும் தொலையாத நேசத்தை காதலாய் மீட்டெடுத்து உறவுகள் மதிக்கும் அழகான மென்னுணர்வுகள் கொண்டது.
9.காலமும் கடந்து போவோம் வா
நாயகன் நாயகி : அதர்வா-சமந்தா
Time Travel கதை. உடனே அறிவியல் இருக்குமோ அப்படினு தேடக் கூடாது. என் அறிவுக்கு யோசித்து எழுதி இருக்கேன். (இது "நேற்று இன்று நாளை" படம் போன்று கதைக்காக எழுதியது அறிவியல் ஃபார்முலா எல்லாம் இருக்காது)
எதையும் யோசிக்காமல் செய்யும் நாயகன் அதர்வா என்று இருக்க, இல்லை இல்லை அவன் எதையும் யோசித்து தான் செய்கின்றான் என்று உணருகின்றாள் நாயகி சமந்தா. எப்பவா அவனோடு டைம் டிராவல் பண்ணும் பொழுது. கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் தான்.
இவர்களோடு அனன்யா-தேவ்ஆனந்த், ப்ரீத்தி-கௌஷிக், இந்த இளய ஜோடியோடு தமிழ்அன்பன்-நந்திதா, வெங்கடம் மற்றும் தணிகாசலம் என்றே காலசக்கர கதையில் கலந்து உள்ளனர்.
Pocket FM Link : Pocket fm link காலமும் கடந்து போவோம் வா
10. ஸ்டாபெர்ரி பெண்ணே
நாயகன் நாயகி : வெற்றி செல்வன்-ஆராதனா
தான் விரும்பும் பெண் ஆராதனா வேறொருவனான உதய் என்பவனை விரும்ப, அதனை ஏற்று ஒதுங்கி செல்ல எண்ணி இருந்தான் நாயகன் வெற்றி செல்வன். ஆனால் விதியோ நாயகி ஆராதானாவுக்கு சதி செய்து சிலரின் கடத்தல் செயலால் கசப்பான சம்பவத்தினுல் தள்ளபட, நாயகனின் வீட்டில் மறதி நோயால் வந்து சேர்க்கின்றாள். நாயகன் அவள் நோயை அறிந்தும் அவளுக்கு ஏற்பட்டிற்கும் அனைத்து கசப்பான உண்மை அறிந்தும் ஏற்கின்றானா?
அந்த உண்மை அவன் நாயகிக்கு சொல்லாமல் மறைக்கின்றானா இல்லை ஆராதனாவிடம் உண்மை சொல்லி வாழ்கின்றானா?
உதய்-மகேஸ்வரி ஜெகதீஷ் என்றே வந்து சுவாரசியம் கூட்டுகின்றனர்.
11.வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன
நாயகன் நாயகி : அகரன்-பவதாரிணி
antiheroகதை(அப்படி தான் சொல்லிக்கறாங்க). தங்கைக்காக தமையன் செய்த தவறு. அதனை திருத்த முயல சந்திக்கும் நிகழ்வு. நாயகன் அகரன் தங்கையை ஏமாற்றியவனின் திருமணம் செய்ய போகும் பெண்ணிடம் திருமணத்தை நிறுத்த சொல்ல நாயகி பவதாரணி அதனை மறுக்க அவளை தவறான முறையில் அடைகின்றான். அதன் பலன் நாயகி திருமணம் நின்றதா? அல்லது நாயகி நிலை என்ன? நாயகனின் தங்கை நிலை என்ன? என்பதை படித்து அறியுங்கள்.
நிறைமதி- சரத்யாதவ், ஹரிணி-பிரதாப் மற்றும் அவர்களின் பெற்றோருடன் வாசித்து சேரலாம்.
12.உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...
நாயகன் நாயகி : மித்திரன்- ருத்திரா
செந்தமிழில் ஒரு ராஜா ராணி கதை. எனக்கு தெரிந்த தமிழை கொண்டு ஏதோ எழுதி இருக்கேன்.
அக்காலத்தில் இருக்கும் பலியீட்டால், பெண்கள் காணாமல் போக கண்டு பிடிக்க வருகின்றனர் நாயகி ருத்ரா நாயகன் மித்திரன். இவர்களிடம் இருக்கும் சிறப்பு சக்திகள் கொண்டு பலியிடும் அந்த காயவனை கண்டறிந்து வீழ்த்துவதே கதை.
சமுத்ரா, மேகவித்தகன்-மஞ்சரி, துர்வசந்திரன் மற்றும் சிலரின் மாய உலகில் வாருங்கள் பயணிக்க.
( fantacy story)
Blog link: உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...
Amazon link : உன் விழியும் என் வாளும் சந்தித்தால்... -amazon link
13. காதலாழி
நாயகன் நாயகி : தர்ஷன்-அஸ்வதி, சஞ்சய்-நேத்ரா, விஷ்ணு-தபஸ்யா, அர்ஷித்-ஹாஷினி
கொஞ்சம் பெரிய கதை. ஆனா நேரம் எடுத்து படித்தால் நல்ல குடும்ப கதை மற்றும் திரில்லர் அழுத்தமான காதல் எல்லாம் உணரலாம்.101 அத்தியாயம். 60 அத்தியாயம் கடந்து 61 அத்தியாயம் முதல் மீண்டும் புது கதையாக அதுவும் போலீஸ் கதையாக உருவமெடுக்கும். அதிக கதை மாந்தர்கள் உள்ளார்கள். கீழே இருக்கும் கதை படித்து இருப்பின் கதை மாந்தர்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இல்லையேல் கொஞ்சம் சிரமம் இருக்கலாம். கொஞ்சமே.. ஃபேமிலி ட்ரீ தெரியணும் அவளோ தான்
முதல் முதலாய் ஒரு மெல்லிய (அஸ்வின்-பவித்ரா)
விழிகளில் ஒரு வானவில் (ஸ்ரீராம்-தன்யா)
புன்னகை பூக்கட்டுமே (அர்ஜூன்-சிந்தியா)
கனவில் வந்தவளே (நகுலன் -மிருதுளா) நான்கு நாவல்களில் நாயகர்களின் மைந்தர்கள் வைத்து எழுதியது.
4 ஹீரோ 4 ஹீரோயின்.. யாருக்கு யார் ஜோடி என்ற கண்ணாமூச்சி ஆட்டம், தர்ஷனின் கியூட் முறைப்பும் ரசிக்கலாம்.
தர்ஷன்-அஸ்வதி, சஞ்சய்-நேத்ரா, விஷ்ணு-தபஸ்யா, அர்ஷித்-ஹாஷினி என்றே நான்கு ஜோடிகள்.(ஐயோ ஜோடியை சொல்லிட்டேன். ஓகே அப்பவும் ரசிக்கிற மாதிரி தான் எழுதி
இருப்பேன்.
14.கள்வனின் காதலி நானே
நாயகன் நாயகி : ரூபன்பிரகாஷ் -தங்கநிலா
போலீஸ் ரூபன் பிரகாஷ், செவிலி தங்கநிலா இருவருக்கும் தரகர் பார்த்து முடிவடைய போகும் திருமணம் , நாயகன் நாயகியின் கிண்டலில் ஈகோ முளைக்க, திருமணம் வேண்டாம் என்றே இருவரும் மறுத்து செல்கின்றனர்.
நாயகன் பணியின் இடமாற்றலில் சென்று வர அதற்குள் நாயகி தனிமரமாக நிற்கின்றாள். விபத்தின் மாற்றதால்... தாய் தந்தையை இழந்து
விபத்தில் என்ன நேர்ந்தது? தங்கநிலா குடும்பதிற்கு என்ன ஆனது என்றும் தன்னால் ஒரு உயிர் சென்றதில் ஏற்படும் மனநிலை அறிந்து நாயகன் எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே கதை.
15.தாரமே தாரமே வா
நாயகன் நாயகி : ரித்தீஷ்-ரியா
தன்னை மதிக்காத அக்கா மகள் ஐஸ்வரியா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளை மணம் புரிய நேரிட ஆட்டோக்காரனான நாயகன் ரித்திஷ்வரன். திருமணம் முடித்து காதலை உணரும் தம்பதியர்கள். மிகைப்படுத்தப்படாத இயல்பான கதை. இடையே நாயகியின் சிறுவயது வாழ்வியலை யுகேன் அறிந்து கூற நாயகி எப்படி எடுத்து கொள்கின்றாள்.
தன்னம்பிக்கை கொண்ட சுயகௌரவம் கொண்ட நாயகனும், சேட்டை பிடித்த நாயகியும் கதையில் காணலாம்.
16. அபியும் நானும்
அம்மா மகள் பற்றிய கதை. நாயகி கீர்த்தனா மகள் அபிநயா நாயகன் அபிமன்யு. சற்றே மாறுபட்டு எழுதிய கதைக்களம்.
17. நிலவோடு கதை பேசும் தென்றல்
நாயகன் நாயகி :கவியரசன்-தன்ஷிகா
படிப்பு முடித்து வந்த தன்ஷிகா கழுத்தில் தாலி கட்டுகின்றான் கவியரசன். அக்கா அவந்திகா வாழ்வு கெடுகின்றது. காரணம்... கதையினை படித்து அறியவும்.
18.ஒரு நம்பரின் தவறிய அழைப்பில் - குறுநாவல்
நாயகன் நாயகி : யஷ்வந்த்-ஸ்வேதா
சமுதாயத்தில் போன் மூலம் ஏற்படும் விபரீதம் பற்றிய கதை.
Amazon link : ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்... amazon link
Blog link : குறுநாவல்-ஒரு நம்பரின் தவறிய அழைப்பில்
19.நுண்ணோவியமானவளே -குறுநாவல்
நாயகன் நாயகி : அர்ஷித்-ஹாஷினி
பேய் கதையினு எழுத முயற்சி செய்தது. ஆனா சுத்தமா பேய் வராம என்னவோ எழுதி கிறுக்கி வைத்து இருக்கேன். கீழே இருக்கும் லிங்க் பாருங்க காமடி புரியும்.
amazon link: நுண்ணோவியமானவளே(short novel)
blog link : குறுநாவல்-நுண்ணோவியமானவளே
20. மையல் விழியால் கொல்லாதே
நாயகன் நாயகி : 5 ஹீரோ 5 ஹீரோயின் சித்தார்த்-ஷண்மதி மற்றும் சுனைனா, ஷியாம்-ஓவியா, அரவிந்த்-இளந்தளிர், விக்ராந்த்-பிரக்யா, அருண் -விந்தியா,
காதலாழியின் தொடர்ச்சி கதை. அக்கதை படிக்கவிட்டாலும் புரியும். அதிக மாந்தர்கள் கொண்ட கதை. சற்றே நினைவு வைத்து படித்தால் குடும்ப கதை, திரில்லர் கதை என்றே அழகாக புனைய பட்டு இருக்கும்.
தன்னை கொல்ல வந்த காதலியை, அவளை காதலிக்கும் தனது உயிர் தோழமை இருவரையும் புறக்கணித்து தாலி அணிவித்து ஏற்கின்றான் சித்தார்த். திடீரென ஒரு நாள் மனைவி இறக்க காரணம் தேடி அலைகின்றான் . அவனை கொல்ல அனுப்பியது யார்? என்ன பகை என்று தோழமையோடு கண்டறிந்து தண்டனையை அவன் பாணியில் அளிப்பதே கதை.
இதற்கிடையே காதல் மனைவியை இழந்தவனை மறுமணம் செய்து வைக்க முயல்கின்றனர் உறவுகள்.
5 ஹீரோ 5 ஹீரோயின் சித்தார்த்-ஷண்மதி மற்றும் சுனைனா, ஷியாம்-ஓவியா, அரவிந்த்-இளந்தளிர், விக்ராந்த்-பிரக்யா, அருண் -விந்தியா, மற்றும் காதலாழி குடும்பத்தினர். (நட்புக்காக முள்ளும் உண்டு மலரிடம் விஜயேந்திரன்)
Amazon link : மையல் விழியால் கொல்லாதே -amazon link
Pratilipi link : மையல் விழியால் கொல்லாதே
21.முள்ளும் உண்டு மலரிடம்
நாயகன் நாயகி :விஜயேந்தர்-கமழினியாள்
சமுதாயத்தின் சின்ன சின்ன தவறையும் ஏற்க முடியாது முகத்தில் அடிக்கும் படி பேசும் நாயகி கமழினியாள். காதலே பிடிக்காமல் இருக்க அவளின் வாழ்வில் நுழைக்கின்றான் நாயகன் விஜயேந்தர். இந்தர்-இனியா வாழ்வில் இனியாவின் அக்கா மரணம் பற்றி விடை கிடைக்கின்றது. அது விபத்து அல்ல, கொலை என்றே.. யார் கொலைக்கு காரணம் என்றே துப்புறிவாளன் இந்தரின் இன்வேஸ்டிகேஷன் சொல்லும்.
Amazon link : முள்ளும் உண்டு மலரிடம் amazon link
22 பனிக்கூழ் பா(ர்)வையன்றோ
நாயகன் நாயகி: பிரஷாந்த்-ஜெஷிதா
ஜாதி, மதம் தாண்டி சேரும் இயல்பான கதை. நடைமுறை உணர்வுகள், நிழலாட ஒரு காதல் கதை.
23. மடவரல் மனவோலை
நாயகி :நித்திலா
கணவன் மனைவி பிரியலாம் அம்மா அப்பா பிரியலாமா? ஒரு மடவரலின்(பெண்ணின்) மனவோலை(எண்ணத்தின் எழுத்து குவியல்).
Amazon link : மடவரல் மனவோலை
24. காதல் மந்திரம் சொல்வாயோ
(புத்தகமாக வந்த நாவல்)
நாயகன் நாயகி : அருள்மொழிவர்மா- யாழினிவெண்பா 💞
தன்னை ஒரே நாளில் செய்கையால் மனதையும், அழகால், பெயரால்
என்று வீழ்த்தும் மூன்று பெண்களை எண்ணி வயதின் ஏற்றமென்றே எண்ணிக் கொள்கின்றான்
நாயகன் அருள்மொழி வர்மா. ஆனால் அவனுக்கு கீழ் பணிபுரியும் தோழன் முகில்
வீட்டிற்கு செல்ல அங்கே தன்னை அசைத்த மூன்று பெண்ணும் ஒருவளே என்று
அறிகிறான்.
நாயகி யாழினிவெண்பா சில சில்லறை காரணங்களுக்கு நாயகன் மேல் பிடித்தம் வராது இருக்க, அந்நேரம் காதலை சொல்லியதால் பார்த்த கொஞ்ச நாட்களில் காதலென்று நிற்பவனை சுத்தமாக பிடிக்காமல் போகின்றது.
நாயகன்
நாயகி அதை மீறி ஒன்று சேர்க்க விதி சில விளையாட்டை ஆரம்பித்து வைக்கிறது.
அதே போல முகில் தனது பக்கத்து வீட்டு பெண் சாருலதா மீது காதல் கொள்கின்றான். ஆனால் கூற தயங்குகின்றான். காரணம் அவனுக்கு இருக்கும் வியாதி.
அதிரடியாக ஜோடியாக வர்மா-வெண்பாவும், மென்மையான ஜோடியாக முகில்-சாரு இருவரின் காதலை வாழ்வை புரட்டி போடவே வருகின்றது ஒரு விபத்து. ராகவ் என்னும் தனியொருவனின் செயல் மூலமாக விபத்து.
விபத்துக்குப் பின் நடக்கும் மந்திர விளையாட்டில் நடப்பது என்ன? என்பதை காண காதல் மந்திரம் சொல்வாயோ படித்தறியலாம்.
Amazon link :
25. என்னிரு உள்ளங்கை தாங்கும்
நாயகன் நாயகி : நிறைநிலவன்-பிரநிதி
முதல் முதலில் புத்தக வடிவில் கையில் தவழ்ந்த நாவல்.
தன்னை பார்க்க வரும் வரன் எல்லாம் நிறத்தை வைத்து நிராகரிக்க, சிலரோ
கூடுதல் நகை, பணம் என்றே வியாபாரம் பேச திருமணம் என்றாலே சலிப்பு தட்ட அதனை
வெறுக்கின்றாள் நாயகி பிரநிதி. அன்னை பார்க்கும் பெண்ணின் போட்டோ வைத்தே
மணக்க சம்மதித்து டெல்லியில் இருந்து சென்னை வருகின்றான் பத்திரிகை துறை
சார்ந்த நாயகன் நிறைநிலவன்.
நிறத்தை வைத்து திருமணம்
தடைப்படுமா? அல்லது புரிதலான காதல் பூக்குமா? கூடவே இப்படி ஒரு மாமியார்
வேண்டும் என்றே ஏங்க வைக்கும் ரோகிணி, கொஞ்சம்
நேரம் வந்தாலும் இவன் காதலும் மேன்மை தான் என்றே உணரவைக்கும் அவினாஷ். இது
போக, நாயகன் நிலவனின் தோழி கங்கனா வீட்டின் அருகே சிறுமி ஷிவானி காணாமல்
போக, கங்கனா-ரவிஷ் காதல் இதில் ஷிவானி நிலையால் இவர்கள் காதல் என்னிலை
அடைகின்றதோ என்ற திருப்பம்? நிலவன் பணியில் விலைமாது சாத்விகா வாழ்வு மலர
மாற்றம் பெற என்ன நிகழ்ந்தது? என்பதை எல்லாம் அறிய *என்னிரு உள்ளங்கை
தாங்கும்* நாவலில் விடை கிடைக்கும்.
-to be continue.... பிரவீணா தங்கராஜ் நாவல்கள் 26-50
கருத்துகள்
கருத்துரையிடுக