பஞ்ச தந்திரம்-8

பஞ்ச தந்திரம்-8

   சற்று நேரம் பிடித்தது. திரிஷ்யா தனுஜா அணைத்து அழ ஆரம்பித்து மஞ்சரியும் ரஞ்சனாவும் கூட கலங்கி போனார்கள். 

  நைனிகாவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவளாக இருந்தாள்.  மீண்டும் போன் நோட்டிபிகேஷன் வந்தது. அதில் ஏதோ வீடியோ காட்சி வரவும் "எக்ஸ்கியூஸ் மீ" என்று தனியாக பாத்ரூம் சென்று காணொளியை கண்டாள். 
   
     இதயவோட்டம் தாருமாறாக இயங்கியது. அரைகுறை ஆடையோடு நைனிகாவும் தருணும் இருக்கும் நெருக்க காட்சிகள் ஓடியது. சற்று செல்ல செல்ல, அந்தரங்க மீறல்கள் நடந்தேறியது. "நோ" என்று கத்தி அழுதாள். 

     வெளியே நால்வரும் இருக்க, நைனிகா கத்தி அழவும், ரஞ்சனா தான் முதலில் கதவை தட்டினாள். 

    "நைனிகா.. நைனிகா.. கதவை திற. என்னாச்சு." என்று தட்டினாள். 

    திரிஷ்யா தனுஜாவை அணைத்து ஏறிட, ரஞ்சனா மஞ்சரி இருவரும் கதவை தட்டியபடி இருந்தார்கள். 

   "கதவை திற நைனிகா" என்று ரஞ்சனா கத்தவும், "எல்லாரும் போங்க என்னை விட்டு. ஐ நீட் அலோன். நான் சாகணும்" என்று கத்தினாள்.

    "அறிவுக்கெட்டவளே... இப்படி கத்தினா உங்க வார்டன் அம்மா வரப்போறாங்க கதவை திறடி." என்று கடிந்தாள் ரஞ்சனா. 

   "செத்தப்பிறகு எவ வந்தா எனக்கென்ன" என்று மீண்டும் கத்தினாள் நைனிகா. 
    "ஓகே.. செத்து தொலை... பட் நாங்க நாலு பேர் உன்னோட ஹாஸ்டல்ல இருக்கோம். உன்னால நாங்க மாட்டணுமா. மரியாதையா நாங்க போனதும் செத்துப்போ." என்று கூறினாள் ரஞ்சனா. 

   நைனிகாவோ கோபம் உருவெடுக்க, கதவை திறந்து, "வாங்க... என்ன ஆனாலும் ஹாஸ்டல்ல இருந்து வெளியே அனுப்பிட்டு நான் பாட்டுக்கு சாகறேன்." என்று கதவை திறந்தாள். 

   ரஞ்சனா கதவை திறந்த அடுத்த நொடி, பளாரென நைனிகா கன்னத்தில் அடித்தாள். 

    வெடுக்கென போனை பிடுங்கி வேகமாய் கடைசியாக அவள் பார்த்தது என்ன என்று ஆராய்ந்தாள். 

   "என் போனை கொடு." என்று அரற்றி எழவும் திரிஷ்யா தனுஜாவை விடுத்து நைனிகாவை பிடித்து "முதல்ல உட்காரு." என்று பிடித்தாள். மஞ்சரியும் உட்காருடா. என்னாச்சு?" என்று ஆசுவசப்படுத்தினார். 

  ரஞ்சனா 'தருண்' என்றவன் அனுப்பிய காணொளியை கண்டு நைனிகாவை ஏறிட்டாள். 

    பாதி பார்க்கும் போதே அது எப்படி பட்டதென புரிந்துவிட்டது. 

  திரிஷ்யா எட்டி பார்க்க, "நீ..நீயா?" என்று கேட்டாள். நைனிகா முகம் பொத்தி அழுதாள். மஞ்சரியோ என்னவென்று போனை வாங்கி பார்க்கும் நேரம் நைனிகா மற்றும் தருண் இருக்கும் காட்சிகள் காட்சிபடமாய் ஓடியது. 
   
     மஞ்சரிக்கு இதயத்தை பிடித்து நின்றார். 

    நைனிகா குலுங்கி குலுங்கி அழுது, முடித்தாள். 

      இரண்டு மூன்று முறை தன்னை கட்டுப்படுத்தி "உன் பாய்பிரெண்டா?" என்று கேட்டாள் ரஞ்சனா. 

    "நோ... மை லவ்வர். என்னோட ஒன் அண்ட் ஒன்லி லவ்வர். பட் நான் அவனுக்கு நூற்றுல ஒன்னு." என்று கூறவும் மஞ்சரி மெதுவாய் நைனிகா முதுகை தீண்டினார். 

    "சேர்ந்து செய்த தப்பா டா.? என்ன பிரச்சனைனு சொல்லுடா." என்று கேட்டார். 
   
   கண்ணை துடைத்து தனுஜாவை பார்த்தாள். ரஞ்சனாவோ தனது போனை எடுத்து "தனுஜா ரைம்ஸ் பிடிக்கும்ல.. போன்ல ரைம்ஸ் பார்த்துட்டு இரு" என்று துணி காயப்போடும் பால்கனி பக்கம் அனுப்பினாள். 

  தனுஜா அவ்விடம் நகரவும், இப்ப சொல்லு." என்று ரஞ்சனா கேட்டாள். அவள் முகத்தில் தீவிரம் இருந்ததது. இதுவரை சண்டையிட்ட பெண்ணாக இல்லாமல் ஒரு அக்காவாக குடும்பத்தின் உறுப்பினராக முடிவெடுத்தாள் எனலாம். 

    நைனிகாவோ ரஞ்சனாவை புதிராக பார்த்து பேச ஆரம்பித்தாள். 

    "நானும் நல்ல வசதியான வீட்டு பொண்ணு. இங்க மஞ்சரி பாட்டி எப்படி அன்பா அரவணைப்பா இருந்து குழந்தையை வளர்த்ததா சொன்னாங்க. பட் என் அம்மா அப்பா...  அப்படியில்லை. டிவோர்ஸ் பண்ணிட்டு ஆளுக்கு ஒருத்தங்களை கல்யாணம் பண்ணிட்டு ஹாப்பியா இருக்காங்க. நான் படிச்சதே ரொம்ப டிபரெண்ட். ஒரு வருஷம் அப்பாவோட இருக்கறப்ப டெல்லில படிப்பேன். அம்மாவோட இருக்கறப்ப சென்னையில படிச்சேன். இப்படி தான் மாறி மாறி என் ஸ்கூல் டேஸ் இருந்தது. அம்மாவோட இருந்துட்டு அப்பாவை தேடி போகறப்ப உனக்கு  தான் அம்மாவை பிடிக்கும் என்று அப்பா முகத்தை காட்டுவார். பணம் நகை உடை தனி அறை, கேட்கறது வாங்கிக்கலாம். பட் அன்பை.. அம்மாவும் இப்படி தான். உங்கப்பா என்னை பத்தி என்ன சொன்னார். நீ என்னிடம் பார்க்கறதே தெரியுது. எனிவே உன்னை வளர்ப்பது என் கடமை என்று போனா போகுதுனு வளர்ப்பாங்க. காலேஜ் மட்டும் தான் அப்பாவும் வேண்டாம் அம்மாவும் வேண்டாம்னு இந்த ஹுமன்ஸ் ஹாஸ்டல்ல வந்துட்டேன். 

    பிரெண்ட்ஸ் அன்பானவங்க.. பட் உயிரை தரும் நட்பானு கேட்டா... மை பேட் லக் அப்படி யாரையும் நான் சேர்த்து வைக்கலை.

    தருண்... தருணை என்னை லவ் பண்ணினான். சீரியஸ்லி.. ரொம்ப நல்லா கேரிங்கா பார்த்துக்கறவன். பட்... அவனும்.. அவனுமே இப்படி பண்ணுவான்னு சத்தியமா நினைக்கலை. 

   லாஸ்ட் டைம் டிரிங் பண்ணிட்டு நீ வேண்டும்னு கேட்டான். லவ் பண்ணறவன் தானேனு கம்பெனி கொடுத்தேன்." என்றதும் ரஞ்சனா பத்ரகாளியாக முறைக்க, "தப்பு தான் இடம் கொடுத்திருக்க கூடாது. ஆனா அன்பா பேசவும்... என்னோட தருண்னு தப்பு பண்ணிட்டேன்.

   இப்ப அதையே காட்டி என்னை அடைய பயன்படுத்தறான். லாஸ்ட்டைம் கன்சீவ் ஆன மாதிரி இருந்தது. அவனிடம் சொன்னேன். பட் அவன் பெரிசா எடுத்துக்கலை. அன்னிக்கு முழுக்க சுத்திட்டு வீட்டுக்கு போனதும், இன்னிக்கு பீரியட்ஸ் வந்துடும். வரலைனா யோசிப்போம் பேபினு சொன்னான். 

   என்னவோ அவன் சொன்ன அடுத்த நாளே பீரியட்ஸ் வந்துடுச்சு. சோ பெரிசா எடுத்துக்கலை. பட் இப்ப திரும்ப திரும்ப என்னை அடைய முயற்சி பண்ணறான். ஆல்ரெடி பேபி மாதிரி இருந்துடுச்சேனு பயந்தேன் டா. வேண்டாம்னு சொல்லவும் ஏய் அதான் டேபிளடை ஜூஸ்ல போட்டேன். சரியாகிடுச்சே. திரும்பவும் பார்ம் ஆனா டேப்ளட் நான் வாங்கி தர்றேன்னு சொன்னான். 

  எனக்கே தெரியாம என்னை டேப்ளட் சாப்பிட வச்சிருக்கான்னு தெரிந்தது. அதுக்கு பிறகு அடிக்கடி சண்டை. ரீசெண்டா என்னை அவாய்ட் பண்ணினான். நானும் ஓகேனு வீம்பா இருந்தேன். பட் உன்னோட ஷேரிங் பண்ணணும். என்னோட வானு கூப்பிடறான். மறுத்ததுக்கு.. நான் உன்னோட இருந்ததை வீடியோவா எடுத்து வச்சிருக்கேன். நீ வரலை அதை சோஷியல் மீடியால விட்டுடுவேன்னு மிரட்டுறான். 
   
   நேத்து காதலும் பொய் காதலனும் பொய்யானு வேதனைபட்டேன். அதான் யாரும் வேண்டாம்னு சாக முடிவெடுத்தேன். இப்ப தருண் எனக்கு இந்த வீடியோவை அனுப்பியிருக்கான். என்னை ஈவினிங் எப்பவும் சந்திக்கற காபி ஷாப்ல வந்து மீட் பண்ணி பீச் ரெசார்டுக்கு கூப்பிட்டு இருக்கான். போகலைனா சோஷியல் மீடியால விடுவேன்னு டைம் கொடுக்கறான்." என்று அழுதாள். 

    ஆளாளுக்கு ஒரு மூலையில் இடிந்து போய் அமர்ந்தனர். 

   ரஞ்சனாவோ, "அம்மா... முதல்ல இவங்க இரண்டு பேரோட வாழ்க்கையை பார்த்து ஒரு முடிவெடுப்போம். அப்பறம் என் தரப்பு கதையை உங்களோட ஷேர் பண்ணறேன். முதல்ல திரிஷ்யா பிரச்சனையை தீர்ப்போமா? இல்லை நைனிகா பிரச்சனையை பேஸ் பண்ணலாமா?" என்று கேட்டாள். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 

பஞ்ச தந்திரம்-7

பஞ்ச தந்திரம்-7

        அப்பாடி நான் தப்பிச்சேன் என்ற உணர்வில் ரஞ்சனா இருக்க, நைனிகாவோ, "பச் இப்ப பிரஷ் பண்ணி குளிச்சி காபி குடிக்க போகணும். சாப்பாடும் அங்க தான். நான் போய் சாப்பிடுவேன்... நீங்க  எப்படி?" என்று நைனிகா சிரித்தாள். 

     "நேத்தே செத்திருந்தா ஆவியா அலைய வேண்டியவ. இன்னிக்கு திங்க அலையுற. 

   உன்னையெல்லாம் சாக போடினு விட்டு தொலைச்சிருக்கணும்." என்று ரஞ்சனா பேசவும் நைனிகாவோ பேஸ்ட் பிரஷ் என்று பல் தேய்க்க ஆரம்பித்தாள். 

   மடமடவென குளித்து முடித்து தலைவாறி ஹேண்ட் பேக்கை எடுத்து, யாரும் கத்தி பேசாதிங்க. நான் வெளியே லாக் பண்ணிட்டு ப்யூ மினிட்ஸ்ல வந்துடுவேன்." என்று நைனிகா அவள் பாட்டிற்கு வெளியேறினாள். 

   கடலில் தொடைவரை உவர்ப்பு நீர் மூழ்கும் ஆழம் வரை சென்று திரும்பியதால் லேசாய் கசகசப்பு உணரவும் "ஒரு மாதிரி பிசுபிசுனு இருக்கு. நானும் டூ செகண்ட்ல குளிச்சிட்டு வந்துடறேன்." என்று ரஞ்சனா குளிக்க தயாராக கூறினாள். 

    "குளிச்சிட்டு எதை போட்டுக்கறதாம்" என்று திரிஷ்யா கேட்கவும் "அதெல்லாம் அந்த பிசாசோட டிரஸ் ஏதாவது பத்தும். இல்லைனா கூட டைட்டா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்." என்று குளிக்க சென்றாள். 
  
   திரிஷ்யாவோ உறங்கும் தனுஜாவை வருடியபடி கண்டாள். 

   "சின்ன பொண்ணு.. இந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனை இருக்கும் அம்மா. அம்மா அப்பா இல்லையோ?" என்று மஞ்சரியிடம் கேட்டாள். 

    மஞ்சரியோ, "தெரியலைமா இப்ப எல்லாம் மொபைல் தரலைனு கூட குழந்தைங்க தற்கொலைக்கு முயற்சி பண்ணறாங்க. தூங்கி எழட்டும் பொறுமையா கேட்டு என்ன பிரச்சனைனு தெரிந்துக்கலாம்." என்றார் மஞ்சரி. 

திரிஷ்யாவுக்குள் உதய் கூட போன் தரவில்லை என்றால் காட்டு கத்தல் கத்துவான். அவனுக்கும் இதே வயது தான் என்ற தாய்மை தவித்திட துடித்தாள். 

   நைனிகாவோ வுமன்ஸ் ஹாஸ்டலில் உள்ள கேன்டீன் பக்கம் வந்து, "கலாம்மா... பசிக்குது... காபி ப்ளிஸ்.." என்று கூறினாள். 

   கலாம்மாவோ "நேத்து ஏதோ உம்முனு இருந்த... கூப்பிட கூப்பிட சாப்பிடாம போன. இன்னிக்கு காலையில எல்லாரும் போனதும் வந்து நிற்கற." என்று கண்டிப்பாய் கேள்வி எழுப்பினர். 

   நைனிகா எப்படி கூறுவாள்? தருணால் நேற்று ஏற்பட்ட மனகசப்பிற்கு துளி உணவும் இறங்கியிருக்கிது. இறந்திட தான் துடித்தது மனம். 

   ஆனால் தன் வலியை விட பிறர் வலியை கேட்டால் தன் வலியெல்லாம் பெரிய வலியே இல்லையென்று தோன்றிடுமாம். அப்படி தான் நைனிகா தவறாய் எண்ணிக் கொண்டாள். 

   "அக்கா அக்கா... கலாக்கா இந்த பிளாஸ்க்குல டீ ஊத்தி கொடேன். உனக்கு ட்வென்ட்டி ரூப்பீஸ் தர்றேன்." என்று பணத்தை நீட்டினாள். 

   "ஏன்... டீயை குடிச்சே உயிர் வாழப்போறியா?" என்று கேட்டாள். 

    "இல்லைக்கா.. நேத்து சாப்பிடலையா... பயங்கற பசி. அதான் எக்ஸ்ட்ராவா காலேஜ் கிளம்பறதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வயிற்றுக்கு நிரப்பிடலாமேனு" என்று பிளாஸ்கை தந்தாள். 
  
   கலா மறுபுறம் சென்று டீ ஊற்றவும் அக்கம் பக்கம் பார்த்து யாருமில்லையென்றதும் சப்பாத்தியை மொத்தமாய் எடுத்து கைப்பையில் திணித்து கொண்டாள்.

    கலா டீயை தரவும் அதனை வாங்கிக் கொண்டு, "தேங்க்ஸ் அக்கா." என்று சப்பாத்தியை கேட்க அவளுக்கு எடுத்து தட்டில் வைத்து குழம்பை தரவும் மடமடவென சாப்பிட ஆரம்பித்தாள். தன்னை போல அங்கே நால்வர் பசியோடு இருப்பார்களே என்ற நல்லெண்ணம்.

   நேத்து நைட் தானே சாப்பிடலை. இந்த பொண்ணு என்ன பேய் மாதிரி சாப்பிடுது என்பது போல கலாம்மா பார்க்க, அசட்டுதனமாய் சிரித்து வேகமாய் சாப்பிட்டு நழுவினாள். 

      வேகமாய் தங்கள் அறைக்கு வந்து சாவி போட்டு திறக்க ஆரம்பித்தாள். 

    கதவை திறந்ததும் ரஞ்சனா கண்ணாடியில் அப்படியிப்படி தன்னை அலங்கரித்து இருப்பதை காணவும், வேகமாய் கதவை தாழிட்டாள் நைனிகா. 
   
   "ஹௌ தேர் யூ. இது என்னோட டிரஸ். என் பர்மிஷன் இல்லாம யூஸ் பண்ணிருக்க?" என்று நைனிகா வந்தாள். 

    "ஹலோ... நீ குளிச்சிட்டு நீட்டா டிரஸ் பண்ணிட்டு இருக்க. நாங்க குளிக்க வேண்டாமா? நீட்டா இருக்க வேண்டாமா?" என்றதும் மஞ்சரியோ "இப்படி கத்தினா வெளியே கேட்கும்." என்றதும் "எனக்குமே இந்த சேரி இரிட்டேட்டா இருக்கு." என்றாள் திரிஷ்யா. 

    "உங்களுக்கு இல்லாததா அக்கா. இந்தாங்க... எல்லாமே மாடர்ன் டிரஸ் ட்ரை பண்ணுங்க." என்று கப்போர்டை திறந்தாள். 

  "அவ அக்காவா.. அவயென்ன விட சின்ன பொண்ணு. அவளுக்கு 27 தெரியுமா?" என்று ரஞ்சனா பொரிந்தாள். 

  "நீ அப்போ ஆன்ட்டியா... இட்ஸ் ஓகே. சின்ன பொண்ணோ பெரிய பொண்ணோ அவங்க அக்கா. நீ ஆன்ட்டி. அவங்களுக்கு ரெஸ்பெக்ட் பண்ணுவேன்  பட் உன்னை.. சான்ஸேயில்லை." என்று தோளைக் குலுக்கினாள். 

    "உன்னை..." என்று ரஞ்சனா கத்த, தனுஜா "மம்மி" என்று எழுந்தாள். 

   அனைவரும் திரும்பி தனுஜாவை பார்க்க, "யார் உன்னோட மம்மி? எங்கயிருக்காங்க?" என்று நைனிகா கேட்டாள். 

   "அது வந்து.. மம்மி.. மம்மி நினைவு வந்துடுச்சு." என்று தேம்பினாள். 

    "ஹே... நீ ஏன் சாக போன?" என்று நைனிகா அதட்டவும் தனுஜா பயந்து போனாள். 

  மஞ்சரியோ, "எடுத்ததும் சத்தமா பேசாதே மா. குழந்தை பயந்திடுது." என்று பக்குவமாய் பேசினார். 

   "இவளுக்கு இதே வேலை அம்மா." என்று கூறவும், ரஞ்சனாவோ முதல்ல பல் விளக்கட்டும்" என்றாள். 

   "ஆமா யாரெல்லாம் பிரஷ் பண்ணிட்டிங்க. காபி குடிக்க வாங்க" என்று பிளாஸ்கை எடுத்து டம்ளரில் ஊற்றினாள். 

   ரஞ்சனா மேம்போக்காய் பார்க்க, முதலில் மஞ்சரி திரிஷ்யா குடித்தனர். 

   பிறகு பல் விளக்கி முடித்து வந்த தனுஜாவுக்கும் ஊற்றி குடித்து முடிக்கவும், குடித்து முடிக்க ரஞ்சனாவோ எட்டி எட்டி பார்த்தாள். 

    "அதெல்லாம் மீதி இருக்கு. வந்து குடிங்க ஆன்ட்டி" என்று வம்பிழுத்தாள். 

    ரஞ்சனாவோ பிடுங்கி குடித்தாள். தனுஜா பழக்கமில்லாத டீயை குடித்து திரிஷ்யாவையும், ரஞ்சனாவையும் ஏறிட்டாள். 

     கஷ்டப்பட்டு குடிச்சிடு பசிக்கும்ல" என்று ரஞ்சனா கூற, திரிஷ்யாவும் "ஆமாடா.. சாப்பிடுடா செல்லம்" என்று கொஞ்சினாள்.

   "செல்லக்குட்டி டீயை குடிச்சிட்டு இதை சாப்பிடுங்க" என்று சப்பாத்தியை மொத்தமாய் எடுத்து வைத்தாள். 

   சப்பாத்திக்கு ஜாம் தடவி வைக்க, மற்றவர்களும் அப்பொழுதே ஒவ்வொன்றாய் எடுத்து சுவைத்தனர். 

  சப்பாத்தி காலியாகவும், "கல்லு மாதிரி இருக்கு ஆனாலும் பசில தெரியலைல. இதே மத்த நாளா இருந்தா இதை தொட்டு கூட பார்க்க மாட்டேன். சரி அடுத்த இரண்டு பேர் சொல்லுங்க." என்று அவசரப்படுத்தினாள்.

     மஞ்சரியோ "குழந்தை சாப்பிடட்டும் மா." என்றார்.

     "அதுக்குள்ள நான் குளிச்சிட்டு வந்துடலாம் ஆனா எனக்கு டிரஸ் இருக்காது." என்று கவலைப்பட்டார். 

    "பாட்டி... உங்க வசதிக்கு பட்டு புடவை இருக்காதே... பட் சுடிதார் போடுவீங்களா சொல்லுங்க. பிகாஸ் இங்க இருக்கறவள் கொஞ்சம் பேட்..(fat) ம்ம்.. நீங்க அப்படியொன்னும் குண்டு கிடையாது. அவளோட சுடி வசதியா இருக்கும்" என்று ஸெல்பை கலைத்து எடுத்து கொடுக்க, குளிச்சிட்டு வந்துடறேன் டா." என்று புகுந்தார். 

   மஞ்சரி குளித்து முடித்து வரவும் கடைசி சப்பாத்தியை தனுஜா விழுங்கினாள்.

   "சொல்லு... உங்க அம்மா அப்பா எங்க? ஏன் சாக வந்த? இந்த வயசுல என்ன எண்ணம்?" என்று மஞ்சரி தன்மையாக கேட்டார். 

   திரிஷ்யா ரஞ்சனா நைனிகா என்று வரிசையாய் கண்களை உருட்டி பார்த்தாள். "எங்கப்பா நான் பிறக்கறப்பவே இறந்துட்டதா அம்மா சொல்வாங்க. அதனால அம்மா மட்டும் தான். நானும் அம்மாவும் ரொம்ப அட்டாச். பட் இப்ப அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை... இல்லை இல்லை.. அம்மாவும் செத்துட்டாங்க. ஆஹ் செத்துட்டாங்க. எனக்கு என்ன பண்ணறதுனு தெரியலை. இனி எனக்கு அம்மாவா யார் இருப்பா? என்று அழுதுக்கொண்டு கேட்டாள். 

   "இதுக்கு தான் சாகப்போனியா?" என்று மஞ்சரி கேட்டதும், எனக்குனு யார் இருக்கா?" என்று தேம்பினாள். 

  திரிஷ்யா தனுஜாவை அணைத்து கொண்டு, "அழக்கூடாது... இதுக்கெல்லாமா அழறது. இங்கப்பாரு.. யாருமில்லைனா என்ன? இந்த நிமிஷம் இங்க மஞ்சரி பாட்டி இருக்காங்க. நைனிகா அக்கா இருக்கா. அம்..அம்மாவா... நா..நான் இருக்கேன். திரிஷ்யா அம்மா." என்று அணைத்து கொண்டாள். 

   நைனிகாவோ நிகழ்வதை கண்டு உதடு வளைத்து அதிசயமாக கண்டாள். ரஞ்சனாவோ மஞ்சரிம்மா தோளில் முகம் புதைத்து தனுஜாவை  நோக்கினாள். 

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ்.
  

    
    

பஞ்ச தந்திரம்-6

பஞ்ச தந்திரம்-6 
  
     "நீங்க சொல்லுங்க அம்மா... நான் என்ன செய்யறது. அவரோட திரும்பி வாழணுமா? எனக்கு என் மகன் வேண்டும். அவன் இல்லைனா நான் செத்துடுவேன்" என்று முகம் பொத்தி அழுதாள். 

     மஞ்சரியோ "முதல்ல தண்ணி குடி." என்றார். 

   ரஞ்சனாவோ "பைத்தியமா நீ... சாகணும்னு முடிவெடுக்கற... உன் குழந்தையை யோசித்து பார்த்தியா. எத்தனை பேர் இருந்தாலும் அம்மாவுக்கு நிகரா இருக்க முடியுமா. நீ செத்துட்டா உன் பையனுக்கு மொத்தமா அம்மா இல்லாத நிலை ஏற்படும். அதே நீ தனியா வாழ்ந்து இருந்தாலாவது அடிக்கடி அவனை பார்த்து அவன் நிலையை கவனிக்கலாம். யார் கண்டா... ப்யூச்சர்ல அவன் உன்னை தேடிவரலாம். அப்படியில்லைனா கூட போர்டிங் ஸ்கூல்ல ஒரு வாரம் இருந்துட்டு அம்மா வேண்டும்னு அழது உன்னை கேட்கலாம். உன் கணவர் உன்னை தேடிவரலாம். திங்க் பாஸிடிவ்." என்றாள். 

     திரிஷ்யா வேதனை சுமந்தவளாக, "அவனுக்கு ஒரு போன் வீடியோ கேம்ஸ் டாய்ஸ் இதெல்லாம் கிடைச்சாளே என்னை மறந்துடுவான் ரஞ்சனா. அந்தளவு இந்த இடைப்பட்ட நாள்ல என்னை தள்ளி வச்சே பழகிட்டாங்க." என்றாள். 

   எது சொன்னாலும் இப்படி பேசுகின்றாளே என்று மஞ்சரியிடம் திரும்பி "என்னம்மா இப்படி பேசறா? நீங்க ஏதும் பேசலை" என்று கூறினாள். 
  
     மஞ்சரியோ "வேதனையும் வலியும் அனுபவிக்கறவங்களுக்கு தான் தெரியும் மா. நாம என்ன சொல்லறது." என்று ரஞ்சனாவிடம் பேசியவர். திரிஷ்யாவிடம் "எதுக்கோ நாங்க ஒருமுறை வந்து பேசட்டுமா? இது மாதிரி சாகறதுக்கு வந்தா அடிச்சி இழுத்துட்டு வந்து பேசி புரியவச்சி கூட்டிட்டு வந்திருக்கோம். நீங்களும் கொஞ்சம் புரிந்து நடங்கனு. 
   சாகற வரை போனதால அவங்களும் கொஞ்சம் பயந்து யோசிக்கலாம் இல்லையா." என்றதும் திரிஷ்யா மௌவுனமானாள். 

   எதற்கும் கடைசி முயற்சி இருக்கட்டுமே என்று தலையாட்டினாள். 
   நைனிகாவோ "பிச்சையெடுத்து அன்பை பெறுவதுக்கு நாம தனித்து நிற்கலாம். இது என்னோட அட்வைஸ். நான் வயசுல சின்னவ. அதோட என் தாட்ஸ் இப்படி தான். உங்களுக்கு போரடிக்கலாம்." என்று தோளைக் குலுக்கினாள். 

     ரஞ்சனாவோ "ஓ... மாடர்ன் தாட்ஸ் யுவதியே... நீங்க ஏன் சாகப் போனிங்க. எல்லாத்தையும் தூக்கி தூறப்போட்டு வாழ வேண்டியது தானே." என்று நைனிகாவிடம் வம்பு ஆரம்பித்தாள். 

     "ஏ.. உன்கிட்ட பேச விரும்பலை. என் பிராப்ளத்தை நான் கடைசியா சொல்லறேன். உன்னோடது சொல்லு இல்லை பாட்டி நீங்க சொல்லுங்க." என்று தனது பக்கம் வரும் திருப்பத்தை திருப்பி விட்டாள்.

     ரஞ்சனாவோ "எனக்கு நீ கேட்டு சொல்ல விருப்பமில்லை. அம்மா நீங்க சொல்லுங்க. அடுத்து நான் சொல்லறேன்." என்றாள். 

     மஞ்சரியோ தூக்கம் கண்ணை சுழற்றினாலும் மனதில் பாரம் இருக்க உறங்க மனமில்லை. அதனால் கூற ஆரம்பித்தார். 

       "நான் நல்லா வசதியா குடும்பத்துல பிறந்தவள். என்னை கல்யாணம் செய்தவரும் நல்ல வசதி." என்று உரைத்தார். 

  நைனிகாவோ "நீங்க பட்டு சேரி கட்டிட்டு இருக்கறதுலயே தெரியுது. ஏதாவது கல்யாண வீட்ல இருந்து வந்துட்டிங்களா?" என்று கேட்டாள்.

    "இல்லைம்மா... தினமுமே இப்படி சின்ன பார்டர் கொண்ட பட்டு சேலையே வீட்ல கட்டிக்கிறது தான் என் வழக்கம். கல்யாணமானதுலயிருந்தே இப்படி தான். சரிகையில்லாத சேலையை என் கணவர் கட்டவிட்டதில்லை. எங்கப்போனாலும் அந்த ஊர்ல ஒரு சேலை வாங்கிடுவார். அதுவும் பட்டு தான் வாங்குவார். ஆயிரம் இரண்டாயிரத்துக்கு பருத்தி பட்டு கட்டறது எனக்கும் பிடிக்கும். அவரோட ஆசைப்படி அவர் இறந்தப்பிறகும் என்னை இப்படி தான் கட்டணும்னு சொன்னார்  என்னிடம் பூ பொட்டை கூட தவிர்க்காதேனு சொன்னவர். அவருக்கு என்னை மங்களகரமா பார்க்க தான் பிடிக்கும். பொட்டு இல்லாம இருக்காதே மஞ்சரினு சொன்னவர். 

   எங்க இல்லறத்தோட இனிமைக்கு பிறந்தவங்க மூன்று ஆம்பளை பசங்க இரண்டு பெண்கள். எல்லாரையும் நிறைவா கல்யாணம் பண்ணி கொடுத்தோம். மனசு முழுக்க பேரன் பேத்தி என்று பார்த்து கண் நிறைவா இறந்தார். 
   நானுமே அதே நிறைவோட இறந்து போயிருக்கலாம். ஆனா இந்த பணம் என்ற மாயாவி இருக்கானே... அவனை பகிர்ந்து கொடுக்க ஆரம்பிச்சதுல முளைச்சது பிரச்சனை. 

  என்னதான் பணம் வீட்ல நிரம்பி வழிந்தாலும் போதும்னு மறுக்க இங்க யாருக்கும் மனசு வரலை. அதுக்கு பதிலா எனக்கு குறைவா கொடுத்துட்டிங்க, அவங்களுக்கு அதிகமா கொடுத்துட்டிங்க. எனக்கு வைர ஒட்டியாணம் வரலை, எனக்கு வைரமாலை வரலைனு குற்றம் சுமத்தி சண்டை வலுத்துச்சு. 

   என் கணவர் மகேந்திரன் இருந்தப்பவே சமமா பகிர்ந்துட்டு தான் போனார். ஆனா நிலமும் நகையும் காலத்துக்கு ஏற்ப மாறுதே. ஒரு ஏரியாவுக்கு இன்னொரு ஏரியாவோட வீட்டு மதிப்பு கூட குறைய வருதே. அதுல தான் பிரச்சனை முளைத்தது. 

    அதுக்கூட என்னவோ போங்கனு என் பேர்ல இருப்பதை மொத்தமா எழுதிட்டேன். 

   பணத்தை நகையை வீட்டுல வச்சிக்க ஆர்வமா இருந்த என் பொண்ணு பசங்களுக்கு இந்த கிழவி தேவைப்படலை. ஆளாளுக்கு அம்மாவை நீ வச்சிக்கோ நான் வச்சிக்கோனு பந்து மாதிரி உதைக்கறாங்க. 
   
     மருமகளோட குத்தல் வார்த்தையை வாங்கிட்டு ஒரு வாய் பருக்கை சாப்பிட முடியலை. சரி பசங்க மட்டுமா பெத்திருக்கோம். நம்ம மனசை புரிந்துக்கற இரண்டு பொண்ணுங்களையும் பெத்திருக்கோம். மாப்பிள்ளைகளுக்கும் சீர்வரிசை பாகப்பிரிவினையில ஒரு மகனா தானே பார்த்தோம்னு அங்க போய் நின்றா..... அங்கயும் மதிப்பில்லை. 
   
    எப்பவும் கொடுக்கற வரை தான் பெருமை. ஒன்னும் இல்லைனா அதுக்கு மரியாதையில்லைனு ரொம்ப தாமதமா புரிந்தது. 

    பேரன் பேத்திங்க எல்லாம் பக்கத்துல போனாலே 'ஒல்ட் லேடி' 'கிழம்' 'கிரானி கழுத்தருக்கும்' என் தலையை கண்டாளே ஒடறாங்க. 

    ஊட்டிவிட ஆசைப்பட்டு பேசினா பச் இதை சாப்பிடாதே அதை சாப்பிடாதேனு டென்ஷன் பண்ணாதிங்க பாட்டினு கத்தறாங்க. இதோ இந்த பிள்ளை சொன்ன மாதிரி அவங்க தாட்ஸ் என் தாட்ஸ் ஒத்துவரலை.

   தனியா வீட்ல இருக்கறது என்னவோ சுடுகாட்டை விட மோசமா இருக்கு. வேலைக்காரங்க கூட வாழவா இந்த வீடு. அப்படியும் மனதை சாந்தப்படுத்தி இருந்தேன். இரவு எல்லாரும் போனதும் வெறுமை வருது. தனிமை இளமையில இனிமையா இருக்கலாம். ஆனா முதுமையில தனிமை ரொம்ப கொடூரம். யாராவது பேச்சு துணைக்கு இருக்கணும். வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சி பார்க்கவோ பகிர்வோ, ஏன் நடக்கற காலத்தை பகிர்ந்து பேச கூட யாராவது வேண்டும். ஒரு மனிதராவது இருந்தா நமக்கு இவங்க இருக்காங்கனு ஒரு இதம் உணரும். பையன் இல்லை... பொண்ணு இல்லை... பேரன் பேத்திகள் அவங்கவங்க வேலையில பிசி...
    
     என்னை அநாத ஆசிரமத்துல விடலாம்னு முடிவு பண்ணி கூடி பேசினாங்க. நானும் அப்படியாவது போய் நாலு மனுஷங்களை பார்க்க நினைச்சேன். ஆனா இத்தனை பேர் இருந்தும் எனக்கு ஆசிரமம் போகணுமானு ஒரு பக்க வேதனை. ஒரு குழந்தைகளை கூட பாசத்தோட வளர்க்கலையானு கவலை. எழுபது வயசு பிறக்க போகுது. இதுக்கு மேல வாழணுமா? இன்னமும் இருந்து என்ன பண்ணறது? என்ற வெறுமை. 
   
    ஒரு வேளை இதெல்லாம் பழகி ஏற்கற மனபக்குவம் இருந்திருந்தா நான் சாக முடிவெடுத்திருக்க மாட்டேன். எனக்கு இந்த தனிமை புதுசு. ஒதுக்கல் புதுசு. மனபக்குவம் இல்லை." என்றதும் நைனிகா சிரித்தாள். 
  
  ரஞ்சனா முறைத்து பார்த்து திரும்பினாள். திரிஷ்யாவும் இவளிடத்தில் இருக்கின்றோம்  என்பதால் அதிக நக்கல் புரிகின்றாளே என்ற பார்வையை வீசினாள்.
  
   நைனிகாவோ "சாரி.. சாரி.. எழுபது ஆகப்போகுது உங்களுக்கு பக்குவம் இல்லைனு சொல்லறிங்க. வாழ்க்கையில எத்தனை இன்பதுன்பம் பார்த்திருப்பிங்க. அனுபவமும் பக்குவமும் வரலையா?" என்றாள். 

    "எல்லாருக்கும் எல்லா பக்குவமும் அனுபவமும் கிடைக்காதுமா. ஒவ்வொருத்தருக்கு சில அனுபவங்கள் வராமலே இருக்கலாம். அது திடீரென நேரும் போது தடுமாற்றம் வரும். 

  அதுவும் என்னை மாதிரி கிடைச்சதை வாங்கி நல்லா வழ்ந்தவங்களுக்கு சின்ன சின்ன வருத்தங்கள் கூட பெரிய விஷயம் தான். அனுபவங்கள் வலி எல்லாம் குறைவான பக்குவத்துல தான் அனுபவிச்சியிருப்போம். 
  
    எதையும் இலகுவா எடுத்துக்க இப்ப மாதிரி எங்களுக்கு மனசுவரலை. ஒருவேளை இனி தான் அந்த பக்குவத்தை நான் உணர்ந்து கடைப்பிடிக்க இந்த கஷ்டத்தை கடவுள் தந்தாரோ என்னவோ. ஆனா மனசு சட்டுனு கஷ்டத்தை ஏற்க முடியலை. இப்படியே செத்தா என்னனு தோணவும் கடலை நோக்கி வந்துட்டேன்." என்று கூறினார். 

  மஞ்சரி பாட்டி அழவில்லை. மாறாக திடமாக கூறிமுடிக்க, பக்கத்தில் ஏதோவொரு அறையில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது.

   "ஓமை காட்... விடிஞ்சிடுச்சா." என்று நைனிகா பதறினாள். 
   
   ரஞ்சனா கையில் கட்டிய கடிகாரத்தை பார்க்க, மணி ஐந்தரை என்று காட்டியது. 

    "விடிஞ்சுது." என்று ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்தனர். 

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 

   




      

பஞ்ச தந்திரம்-5

பஞ்ச தந்திரம்-5 

     எப்பவும் ஆண் பெண் ரசனை வித்தியாசமானது. 

   கல்யாணத்துக்கு முன்னயும் சரி, கல்யாணத்துக்கு பின்னயும் சரி ஆண் எப்பவும் வேற பொண்ணுங்களை பார்த்து சைட் அடிப்பாங்க. மற்ற பெண்ணோட கண், காது, மூக்கு, வாய், செஸ்ட், கழுத்து, இடுப்பு, பின்னழகு, தொடை கால், கால் விரல் நகம் வரை  முழு உடலை ரசிப்பாங்க.

  முடி கர்லிங்கா இருந்தாலும் ஸ்ரெயிட்டிங் பண்ணினாலும் ஏன் எதிர்வீட்டுக்காரி கொண்டை குத்தி அழுக்கு நைட்டி போட்டுட்டு வந்தாலும் ரசிப்பாங்க சபலப்படுவாங்க.

    இதே பெண் கல்யாணத்துக்கு முன்ன சைட் அடிச்சிருக்கலாம். ஆனா கல்யாணத்துக்கு பிறகு எவனையும் ஏறெடுத்து பார்க்க மாட்டா.  பையன் அழகாவே இருந்தாலும் கண்ணு இந்த பக்கம் அந்த பக்கம் போகக்கூடாது. பிகாஸ் அவ கல்யாணம் ஆனவ. இன்னொருத்தனை பார்த்தா பத்தினியா இருக்க முடியாது. 

   புராணமே இதை தானே சொல்லுது. ரேணுகாதேவிம்மா மண்ணை குழைத்து பானை செய்து தண்ணி பிடிச்சி வர சொல்வார் ஜமதக்கினி. ரேணுகா தேவியும் மண்ணை பானையா செய்து, பாம்பை சும்மாட்டியா வச்சி எப்பவும் நீர் எடுத்துட்டு வர்றவங்க. ஒரு முறை நீரில் தெரிந்த காந்தர்வனோட அழகுல மயங்கி ரசித்ததுக்கே கற்பு தவறிட்டானு பேசின உலகம் தானே. 

    ஆனானப்பட்ட வேள்வில பிறந்த பெண்களுக்கே இந்த நிலை. நான் எல்லாம் எந்த மூலைக்கு? 

     என் சுடிதாரை கொடுத்துட்டாரேனு கோபத்துல இருந்த நான். ஒரு வாரம் அவரிடம் பேசலை. என் கணவரும் பெருசா அதுக்காக கவலைப்படலை. 

    அன்னைக்கு உதயோட ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங். சனிக்கிழமை என்றதால இரண்டு பேரும் போகவேண்டிய கட்டாயம் இருந்தது.

    ரொம்ப நீட்டா.. டீக்கா... ஜீன் டீஷர்ட்னு பயங்கர ஹாண்ட்ஸம்மா டிரஸ் பண்ணிட்டு வந்தார். நான் எப்பவும் போல ஒரு சேலையை சுத்திட்டு வந்தேன். பாதிக்கு மேல சுடிதார்ஸ் ஜீன்ஸ்னு கேர்ள்ஸ் வந்தாங்க. உதய் பிரெண்ட்ஸோட பேரண்ட்ஸ் இருக்கவும் நாங்க பேசிட்டு இருந்தோம். 

   அவரும் பேசிட்டு இருந்தார். என்னை சுடிதார் போடாதேனு சொன்னவர் ஜீன்ஸ் போட்ட ஒருத்தவங்களிடம் சிரிச்சு சிரிச்சு பேசினார். 

    நானும் மனுஷியில்லையா. என் கணவர் வேற பெண்ணிடம் பேசறதுல பொறாமை வந்துச்சு. பிகாஸ் அவர் சாதாரணமா பேசலை. ரொம்ப ரசித்து பேசினார். என்னிடம் அது மாதிரி பேசி பல வருஷம் ஆச்சு. 

   ரொம்ப வெறுப்பா இருக்கவும் தள்ளி வந்தேன். இவரை மாதிரி இன்னொருத்தர் இருப்பார் தானே. அதாவது மனைவியை உதாசினப்படுத்தி வேற பெண்ணிடம் சிரிச்சி பேசற ஆட்கள். அப்படி தான் ஒருத்தன் வந்தான். 

    நீங்க சேலையில அழகாயிருக்கிங்க. உங்க முடி நல்லா லென்தியா இருக்கு. சீயக்காயா?  ஷாம்பூவா? வழிஞ்சான். 

    எனக்கு அப்ப கணவரோட கோபத்தை அதிகப்படுத்த தோணுச்சு. நானும் சிரிச்சிட்டே என்னிடம் வழிந்தவரோட பேசினேன். 

   என் கணவர் பார்த்துட்டு வந்து என்னை கையோட கூட்டிட்டு வந்தார்.  பேரண்ட்ஸ் மீட்டிங் முடியவும் அவசரமா போகலாம்னு சொன்னார்.
   ஸ்கூல்ல கேட்க முடியாத கேள்வி எல்லாம் வீட்ல வந்து ஆரம்பித்தார். 

   'அவனிடம் என்னடி பேச்சு... சிரிச்சு சிரிச்சு பேசறனு அவன் என்ன பேசினான். நீ என்ன பதில் சொன்னனு கேட்டார்." என்று திரிஷ்யா பேசவும், "சந்தேகப்பட்டாரா?" என்று ரஞ்சனா இடைப்புகுந்து கேட்டாள். 

    விரக்தியாய் சிரித்த திரிஷ்யா "ஆமா.. சந்தேகம்.. அது ஒன்னு தான் குறைச்சல்." என்றாள் சலித்தபடி. 

  "நீ சும்மா இருக்கியா.. இவங்க முதல்ல கண்டினியூவா சொல்லட்டும். சும்மா.. குறுக்க குறுக்க வந்துட்டு." என்று நைனிகா சிலுசிலுத்தாள். 

   "அட முதல்ல உன் போன் தான் டிஸ்டர்ப் பண்ணிச்சு. நீ தான் புல் ஷிட்னு பேசி இடைப்புகுந்த. இப்ப நான் கேட்டதும் குறுக்க குறுக்க வர்றேன்னு சொல்லற" என்று ரஞ்சனா சிலுப்பினாள். 

    "ஏன் இரண்டு பேரும் இப்படி சண்டை போடறிங்க. நமக்கே ஆயிரம் பிரச்சனை. கிடைச்ச நேரத்திலும் முட்டிக்கிட்டே இருக்கணுமா?" என்று மஞ்சரி பாட்டி கூறவும் நைனிகா அங்கிருந்த ஆப்பிளை கடித்து கோபத்தை குறைத்தாள். ரஞ்சனாவோ "சாரி நீங்க கண்டினியூவா சொல்லுங்க" என்று சுவரோடு சாய்ந்தாள். 
   
    "சந்தேகப்படலை... ஆனா ஓவரா  பேசினார். ஆனா நானும் சும்மா இல்லாம பேசிட்டேன். நீங்க கூட தான் ஒரு பொண்ணோட  பேசினிங்க. நான் அவர் பேசியதுக்கு பதில் சொன்னேன் என்ன தப்புனு. 

    'அவன் என்ன பேசினான்.' என்று கேட்டார். 

   நான் கட்டியிருந்த சேலை அழகாயிருந்ததுனு சொன்னார். அதுக்கு பதில் தேங்க்ஸ் சொன்னேன் என் வீட்டுக்காரரிடம் சொன்னதும் அவ்ளோ தான் மூஞ்சி இஞ்சி திண்ண குரங்கு மாதிரி ஆகிடுச்சு. 

    எவனோ ஒருத்தன் சொன்னா பல் இளிப்பியானு திட்டினார். 
    நீங்க சுடிதார் போட்டாலோ சேலை கட்டினாலோ ஒன்னும் சொல்லப்போறதில்லை. அவர் ஜஸ்ட் புகழ்ந்தார் அதுக்கு தேங்க்ஸ் சொல்லி சிரிச்சா என்ன தப்புனு கேட்டேன்." என்றதும் நைனிகா ஆர்வமாய் முன்னே வந்து, "உங்க கணவரோட ரியாக்ஷன் என்ன?" என்று கேட்டாள்.  

   "நீ சின்ன பொண்ணு... அங்க போய் நில்லு." என்று திரிஷ்யா கூறிவிட்டு மஞ்சரியிடம் திரும்பி, "நான் பேசியது தப்பாம்மா?" என்று பாவமாய் கேட்டாள். 

  மஞ்சரியோ "முதலும் முடிவும் சொல்லு.. யார் மேல தப்புனு சொல்லறேன். இப்படி பாதில யாரையும் எடைப்போட முடியாது." என்று பதமாய் அனுபவம் கண்டவராய் கூறினார். 

     "நான் சிரிச்சா என்ன தப்புனு கேட்டேன். அவர் கோபமா என்ன தப்பா... அவன் உன்னை ரசித்து பார்த்திருக்கான். நீ வெட்கமேயில்லாம பேசியிருக்க" என்று குற்றம் சுமத்தினார். 

   ஏன்மா.. என்னிடம் பேசாம யாரோ ஒருத்தியிடம் ஸ்கூல்ல அவர் பேசறார். போன்ல எவளோ ஒருத்தி கவர்ச்சியா டிரஸ் போட்டிருக்க அதை ரசித்து ரிலாகஸுக்கோ எண்டர்டெயிண்மெண்ட் எதுக்கோ பார்க்கறார் கேட்ட அவ கூட என்ன படுத்தேனா இல்லையேனு சொன்னார். நானும் அதையே சொன்னேன். பேசதானே செய்தேன்... நீங்க சொன்ன மாதிரி ஒரே பெட்ல உருளலையேனு.. நான் ரொம்ப பேசிட்டேன்... அவர் அடிச்சிட்டார்." என்றதும் அழத்துவங்கினாள்.

    "இதுக்கு தான் வீட்டை விட்டு வந்தியா திரிஷ்யா?" எர்று கேட்டார் மஞ்சரி. 

    அழுகையை துடைத்து மூக்குறிந்து "இல்லைம்மா... அவர் அடிச்சிட்டு போயிட்டார். அதோட என்னிடம் மறுபடியும் இரண்டு வாரம் பேசலை. எங்க அம்மா அப்பா தான் போன் பண்ணி மாப்பிள்ளையை எதிர்த்து பேசினியா? வீட்டுச்செலவுக்கு கொடுத்த காசை தேவையில்லாத துணி வாங்கினியாமேனு ஒரே அட்வைஸ். போதாதுக்கு அத்தைமாமா ஏதோ அவங்களை மதிக்கலைனு ஒரே புகார். 
   அம்மா என்னடானா உனக்கு அப்பறம் ஒரு தங்கச்சி இருக்கா. அக்கா பொண்ணு வயசுக்கு வர்ற மாதிரி இருக்கா. எதுனாலும் சம்பந்தி வீட்ல பிரச்சனை பண்ணி இங்க வராதேனு சொன்னாங்க. 

   நான் என் பக்கம் என்ன நடந்ததுனு சொல்ல வந்தேன். ஆனா அதை காது கொடுத்து கேட்கலை. நானும் என் தரப்பு கேளும்மானு சொன்னேன். என்ன பெருசா உன் தரப்பு. மூனு வேளை சோறுபோட்டு உன்னை அந்த வீட்ல நல்லபடியா பார்த்துக்கறாங்க. மத்த வீட்ல மாதிரி நகை வாங்கிட்டு வா. அது இதுனு இம்சை தரலைனு சொல்லிட்டாங்க. ஒரு பேச்சுக்கு கூட என் மனக்கஷ்டத்தை கேட்கலை." என்று அழுதாள் திரிஷ்யா.

    சில பெற்றவர்கள் திருமணம் முடித்து விட்டால் போதுமென்று இருக்க மகளின் கஷ்டம் உணர்வதில்லை. அவர்கள் பார்வைக்கு நல்ல வீடு உடை பகட்டா வாழ்க்கை இதுவே மகளுக்கு போதும். மாப்பிள்ளை அனுசரித்து போகவாமே என்ற எண்ணம். 

   ஆனால் பெற்றடுத்த பெண்ணுக்கு ஆசை கனவு இருக்கும். சின்ன சின்ன அன்பை காதலை பெற துடிக்கும். ஒரு உடைக்கே புகுந்த வீட்டில் எத்தனை இடிபாட்டை வாங்கி அணிவாள் என்று யோசிப்பதில்லை. 

    திரிஷ்யாவே கன்னத்தை துடைத்து, இதெல்லாம் கூட ஓகே தான் ரஞ்சனா. ஆனா பார்ன் சைட் பார்ப்பார். அதுல வர்ற உடல்வாகு பொசிஷன் இப்படி ஆசைப்படுவார். நானும் அவர் ஆசைக்கு இணங்கினாலும் அவருக்கு என்னிடம் சாட்டிஸ்பேக்ஷன் வராது. நீ குண்டாயிட்ட உன் ஸ்கின் கழுத்துல கருப்பா இருக்கு. அதுயிதுனு ஆரம்பிப்பார். 

     குழந்தை பெத்த உடம்பு சிக்குனு இருக்காதே." என்று கூறவும் நைனிகா மெதுவாக வந்து திரிஷ்யாவை வலது இடதென திருப்பி "உங்களுக்கு என்ன குறைச்சல் சுடிதார் போட்டா இன்னும் ஐந்து வயசு கம்மியாகிடுவிங்க. ஜீன் டாப் போடுங்க பத்து வயசு குறைந்திடும். உங்க கணவரோட பார்வை தான் தப்பாயிருக்கும்." என்று கூறினாள். 

    "டிரஸ் பத்தி எனக்கு ஓபினியன் இல்லை. எனக்கு அவர் ரசிக்கலை என்றது கூட பிரச்சனையில்லை. என்னை தவிர எல்லாரையும் ரசிக்கிறார். நான் அலுத்து போயிட்டேன். வீட்ல ஏடாகூடமான வீடியோ பார்க்கறார். என் கவலை எல்லாம் உதய் அதை பார்த்துடக்கூடாதுனு தான். நான் இரண்டு மூன்று தடவை சொன்னேன். எனக்கு தெரியும் உன் வேலையை பாரு என்று எரிந்து விழுந்தார். 
அடிக்கடி சண்டை நடக்கும். பொதுவா ஹால்ல கேட்கற அளவுக்கு சண்டையிட மாட்டார். ஆனா அதை மீறி உதய் அத்தை மாமாவிடம் அம்மா அப்பா சண்டை போடறாங்கனு சொல்லிடுவான். 

  என் மாமியார் மாமனார் கேட்கவும் மழுப்பிடுவார். ஆனா ஒரு முறை பெரிசா சண்டைவந்துடுச்சு.

     உதய் ஏதோ கேம் விளையாட அதுல விளம்பரமா ஆபாசமா வந்துச்சு. அத்தை உடனே 'என்னடி இது உன் பையன் போன்ல இப்படி இருக்குனு' பிடிங்கி என்னிடம் அதட்டினாங்க. அத்தையிடம் உங்க பையன் தான் இப்படிப்பட்ட வீடியோ பார்க்கறார்னு சொன்னேன். அவரோட ஐடி போட்டு வச்சிருக்கார். அதனால வீடியோ இப்படி வந்துயிருக்கும்னு டிவி பார்க்குறப்ப சொன்னேன். 
   அவங்க அப்பவும் என்னவோ ஆம்பளைங்க அப்படி தான். நீ கண்டுக்காதேனு எரிந்து விழுந்தாங்க. போதாதுக்கு உதயிடம் போனை பிடுங்கி அவனை திட்டினாங்க. என்னவோ போனை நான் தான் அவனுக்கு பிரசண்ட் பண்ணியது போல பயங்கர திட்டு. ஒரு நல்ல அம்மாவாடி நீ என்று. 

     அதுக்கு நான் உங்கப் பையனை முதல்ல திருத்துங்க. என் பையனை இவர் தான் கெடுத்து வச்சிருக்கார். படிக்கிற பிள்ளைக்கு போன் எதுக்கு?உங்க பையன் போன்ல கண்ட கருமத்தையும் ஆபாச வீடியோவும் பார்க்க, உதய் டிஸ்டர்ப் பண்ணறதால தான் உதயுக்கு தனி போன் வாங்கி தந்திருக்கார். அவரால என் பையன் உதய் இதை கவனிச்சு கெட்டுப்போனா என்ன பண்ணறது. நீங்க முதல்ல நல்ல அம்மாவா இருங்கனு பேசினேன். 

    என் உடலை ரசிக்க தெரியாதவர், அடுத்தவங்க உடல்வாகை பார்த்து ரசிக்கறார். முதல்ல என்னை பெண்ணா மதிக்க கத்து கொடுங்கனு கத்தினேன். 
   
   மாமனாரோ உடனே போனை போட்டு எங்கப்பாவை வரவழைச்சிட்டார். உங்க பொண்ணு அதிகம் பேசுது. அதட்டிட்டு போங்க. இல்லை வீட்டுக்கு அனுப்பிடுவோம்னு சொன்னாங்க. அப்பாவும் அடங்கியிரும்மானு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டு போனார். 

  ஆனா வேதாந்த் அதுக்கு பிறகு ரொம்ப மாறிட்டார். 
  என்னிடம் மொத்தமா பேசறதில்லை. ஏதோ எவனோடவோ நான் பேசி ஓடிப்போறதா முகத்தை திருப்பிக்கறார். 

     சுயமரியாதை எனக்கு சுத்தமா இல்லை. நான் சாப்பிட்டேனா தூங்கினேனா, நான் அந்த வீட்ல இருக்கேனாயென்ற அளவுக்கு என்னை வீட்ல ஒதுக்கினாங்க. அவரோட கேரக்டரை நான் வெளிச்சம் போட்டுட்டேனாம்.

   இதையெல்லாம் கூட தாங்கினேன். ஆனா என் மகன் உதயை என்னிடம் பழகவிடலை. உன் அம்மா திமிர் பிடிச்சவ, அவ கெட்டவ அவ ஒன்னுத்துக்கும் உதவாதவ. அப்படியிப்படினு நிறைய பேசி அவனை என்கிட்டவே வரவிடாம பண்ண முயற்சி பண்ணறாங்க. 

   நான் இல்லாம இருக்கமாட்டான். ஆனா இந்த இரண்டு மாசம் என்னை அவனோட பேசவே விடலை. அவன் முகத்துக்காக தான் இத்தனை நாளா சகிச்சிட்டு இருந்தேன். இப்ப அவனை ஏதோ போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பறாங்க. 

  இனியும் அங்க ஒரு வேலைக்காரியா இருக்கறதுக்கு என்னால முடியாது. நான் எங்க வீட்டுக்கு போனாலும் எங்கப்பா அம்மா திரும்ப திரும்ப எனக்கு புத்திமதி சொல்லி அனுப்புவாங்களே தவிர என்னை அன்பா அரவணைக்க அங்க ஆளில்லை என்பதை புரிஞ்சுக்க மாட்டாங்க. 
        
    நான் உயிரோட இருக்கறதுக்கு சாகலாம்னு தான் பீச்சுக்கு வந்தேன்." என்று மொத்தமாய் கூறினாள். 

    சற்று நேரம் அமைதியாக இருக்க, நைனிகாவோ, பச் டிவோர்ஸ் வாங்கிட்டு தனியா வாழலாமே. அதுக்கு... சாகணுமா. உங்களுக்காக வாழ ஒரு ரீசனுமா இல்லை. பையன் இப்ப பேசலை பார்க்க முடியலலனா என்ன. ப்யூச்சர்ல அம்மாவை தேடி ஓடிவருவான். இதுக்கெல்லாம் சாக துணிவாங்களா?" என்று கேலி இழைத்தாள். 

திரிஷ்யாவோ மஞ்சரி பாட்டி ரஞ்சனா என்ன கூறுவார்கள் என்று அவர்கள் பக்கம் திரும்பினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
  
    
   

பஞ்ச தந்திரம்-4

பஞ்ச தந்திரம்-4 

    திரிஷ்யா பலகனவை மனதில் தேக்கி வைத்து சுடிதார் அணிந்து கணவன் முன் நிற்க அவனும் கட்டி பிடித்து தட்டாமாலை சுற்றுவதாக கனவு கண்டாள். 

  கல்லூரியில் படிக்கும் போது சுடிதார் அணிந்திருக்கின்றாள். ஆனால் திருமணத்திற்கு பிறகு முற்றிலும் சேலை தான் கட்டவேண்டும் என்பது நாகேஸ்வரியின் விதி. 

    அதனாலே சுடிதாரை என்றோ மூட்டை கட்டியிருந்தாள். 
    கணவரின் விருப்பம்மாடர்ன் உடை என்று அறிந்தப்பின் சுடிதார் அணிவதில் தயக்கமின்றி வாங்கிவிட்டாள். 

  குளித்து முடித்து உடையணிந்து கணவர் எழுந்திடும் முன் டீ போட சென்றிருந்தாள். லோகநாதனோ மருமகளின் உடையை கண்டு ஜாகிங் போகாமல் மனைவியிடம் கிசுகிசுக்க வந்தார். 

     நாகேஸ்வரியோ ரயில் வண்டி போல அதிவேகமாய் வந்து, "என்னடி  இது?" என்று கேட்டார். 

   "சுடிதார் அத்தை. அவருக்கு பிடிக்கும்னு போட்டேன்" என்று நடுங்கினாள். 

   "இந்த டிரஸை என் மகன் வாங்கி தந்தானா? எங்க அவன்?" என்று கத்தினார். 

    "இல்லை அத்தை... அவர் வாங்கி தரலை. இது நான் தான் வீட்டு செலவுக்கு கொடுத்ததுல வாங்கினேன். அவருக்கு சுடிதார் பிடிக்கும்னு" என்று கூற தயங்கி நாணினாள். 

    கணவரின் அறையை எட்டி பார்த்தால், 'இப்ப எதுக்கு கத்தறிங்க, சுடிதார் அவளுக்கு நல்லாயிருக்கு விடுங்க' என்று கணவன் வந்து குரல் கொடுப்பானென ஆசைக்கொண்டாள். 

    அவளின் எண்ண கடலலையில் விஷத்தை கலந்தவனாய் வேதாந்த் வந்தான். 

   "என்ன சத்தம்?" என்றவன் மனைவியின் சுடிதாரை கண்டு ஒரு நொடி ரசித்தான். அடுத்த நொடி "இது நீ வாங்கிக்க சொன்னியா டா. ஏதோ உனக்கு மாடர்ன் டிரஸ் பிடிக்கும்னு சொல்லறா?" என்று நாகேஸ்வரி கேட்டதும் மனைவி தன்னை நேற்று போனில் பார்த்த பெண்ணை வைத்து இன்று அதை தந்தை தாயிடம் கூறுகின்றாளோ என்ற பயத்தில் மிதந்தான். 

    "நான் எதையும் வாங்கிக்க சொல்லலைம்மா." என்றவன் "என்னடி என்ன மாட்டி விடபார்க்கறியா?" என்று காதில் வந்து கர்ஜித்தான். 

     "இல்லைங்க நீ விருப்பப்படுவிங்கனு" என்று கையை பிசைந்தாள். 

   "ஏன்டிம்மா... இந்த வீட்டுக்கு வரவு செவுக்கு காசு கொடுத்தா நீ உன் இஷ்டத்துக்கு மினுக்கறதுக்கு செலவு பண்ணிருக்கியே. என் பையன் சம்பாரிச்சு அதை நீ இப்படி தான் செலவழிக்கறியா?" என்னு நாகேஸ்வரி கேட்டு முடித்தார். 

   "அய்யோ அத்தை... இதுல என்ன மினுக்கறதுக்கு இருக்கு. சாதாரண சுடிதார்." என்று மறுத்து பேச ஆரம்பிக்க, "டேய் வேதாந்த்... இனி சம்பள பணத்தை அவளிடம் தராதே." என்று எதற்கோ சென்று எதிலோ முட்டிய கதையாக மாறியது. 

   "முதல்ல இந்த கண்றாவியை மாத்து. மாமனார் எதிர்ல துப்பட்டா இல்லாம சுத்தறது." என்றதும் திரிஷ்யாவுக்கு ஒரு மாதிரி அசிங்கமாய் போனது. மெதுவாக தனதறைக்கு சென்று விட்டாள். 
  
    அங்கே முகம் பொத்தி அழவும், வேதாந்த் வந்து சமாதானப்படுத்த எதிர்பார்த்தாள். ஆனால் உடனே வரவில்லை. 

  உதய் எழுந்து பல் விளக்கி வெளியே சென்றான். கூடுதலாக அம்மா அழுதுட்டு இருக்காங்க" என்று தகவலை கூறியும் யாரும் கண்டுக்கவில்லை. 

    ஆற அமர டீ குடித்து வந்த வேதாந்த் "இன்னும் இந்த டிரஸை நீ மாத்தலையா" என்று கதவை தாழிட்டான். 

   "உங்களுக்கு இந்த டிரஸ் பிடிக்கலையா? இதுல ஆபாசமா இல்லையே." என்று கூறினாள். 

    "இதப்பார்... எங்கம்மாவுக்கு எது பிடிக்குதோ அதை போடு. இதை கழட்டு" என்று தன்னவள் மனதை வதைத்து கூறினான். 
   
   "நான் என்ன போடணும்னு என்னிஷ்டம் இல்லையா. அத்தை ஏன் என்னிடம் திணிக்கணும். உங்களுக்கு பிடிச்சா போதுமே" என்று கேட்டு பதிலை எதிர்பார்த்தாள். 

   "எனக்கு பிடிக்கும்னு எப்ப சொன்னேன்?" என்று பாய்ந்தான். 
   
  "நீங்க... போன்." என்று பேச தயங்கினாள். 
    
  "ஓ... போன்ல பார்த்ததும் நீயா முடிவு பண்ணிட்டியா. அதை ஜஸ்ட் எண்டர்டெயிண்மெண்ட். சீ... சினிமா நடிகை வித்தியாசமா டிரஸ் போட்டா பார்க்கறதில்லை. அது போல தான். பட் அதை நீ தப்பா மீன் பண்ணிட்ட." என்று கூறினான். 

   "ஆனா நீங்க பார்த்ததும் நடிகையை இல்லையே... மாடர்னா கவர்ச்சியா இருந்த பெண்ணை தானே" என்றதும் வேதாந்த் தலையை கோதி, "ஹேய்.. ஏதோ ரிலாக்ஸுக்கு அந்த டைம் பார்த்தேன்.  என்னடி தப்பு. ஜஸ்ட் போட்டோ.. எவளோடவே குடும்பம் நடத்தலையே.  இதை இதோட விட்டுட்டு டிரஸ் மாத்திட்டு போய் வேலையை கவனி." என்று எரிந்து விழுந்தான். 

   திரிஷ்யா பல்லை கடித்து கொண்டு சுடிதாரை அகற்றி சேலை உடையை மாற்றி ஹாலுக்கு வந்தாள். 

    நாகேஸ்வரி நாகத்தின் சீற்றத்தோடு ஒரு பார்வை வீச, சிவனேயென்று திரிஷ்யா சமையலறையில் நுழைந்தாள். 

     இட்லி அவித்து குருமா செய்து கண்ணீரோடு வேர்வை வழிய வெளியே வந்தவள் கண்டது தான் ஆசையாய் வாங்கிய சுடிதாரை வேதாந்த் வெளியே எடுத்து வர அதை குப்பை வண்டியை இழுத்து வரும் பெண்ணிடம் நீட்டினார். 

   லேசாய் புது துணி என்ற வலி திரிஷ்யாவுக்கு இருந்தது. 
  ஆனால் என்ன செய்ய தானாக முடிவெடுக்க இயலாது. கணவன் துணையிருந்தால் ஒரு பெண்ணுக்கு பலம். இங்கு கணவன் தன்னை ஒரு வேலைக்காரியாக நடத்தினால் என்ன செய்வது.

     வேதாந்த் உதய் இருவரும் பள்ளி அலுவலகம் சென்றதும், திரிஷ்யா சாப்பிடும் போது நாகேஸ்வரி திரிஷ்யாவின் தாயாருக்கு போன் போட்டு திரிஷ்யா ஏதோ பெரிய தவறை செய்தவளாக எட்டுக்கட்ட இடிந்து போனாள். 
  
    இனி அம்மா வேறு தனியாக போன் போட்டு திட்டு திட்டுவார்கள். திரிஷ்யா நிலை கவலைக்கிடமாக மாறியது.

   திரிஷ்யா கதையை தொடர, அதே நேரம் நைனிகா போனில் நோட்டிபிகேஷன் வரவும் அதனை எடுத்து பார்த்தாள்.

    "புல் ஷிட்." என்றவள் மனதில் அவள் காதலன் தருணை திட்டினாள். 
   
   "அம்மா போன் போட்டு என்னை தான் அன்னிக்கு திட்டினாங்க." என்று திரிஷ்யா அழுதவள் நைனிகா புல்ஷிட் என்றதும் நிமிர்ந்து அவளை ஏறிட்டாள். 

   "சாரி.. டிரஸ் போட்டதுக்கு தப்பு சொன்னாங்களே அதுக்கு திட்டினேன்." என்று சமாளித்தாள். 

   மஞ்சரியோ நைனிகாவை விடுத்து திரிஷ்யாவை கண்டு தோளில் கை வைத்து, "இதுக்காம வீட்டை விட்டு வந்த?" என்று கேட்டார். 

    "என்னம்மா இது... இதுக்கு எல்லாம் வீட்டை விட்டு வருவேனா. எத்தனையோ வீட்ல மாமியார் மாமானார் சண்டை பெரிய தலைவலியா இருக்கு. எத்தனை சீரியல் பார்த்திருக்கேன். இந்த விஷயம் எல்லாம் என்னை இரண்டு வாரம் மனசுல கஷ்டப்பட்டு பீல் பண்ணிட்டு திரும்ப நடைமுறைக்கு வந்திடுவேன். நான் வந்ததுக்கு காரணமே வேற. பிரச்சனை இது கிடையாது. இது பெரிய அலைக்கு முன்ன வர்ற சின்ன சின்ன அலைகள்." என்று கூறினாள். 

    ரஞ்சனாவோ "பெரிய பிரச்சனைனா?" என்று கேட்டு திரிஷ்யாவை பார்க்க அவளோ மீண்டும் தன் வாழ்வியலை கூற துவங்கினாள். 

-தொடரும். 
பிரவீணா தங்கராஜ்.

  

  

    

பஞ்சதந்திரம்-3

பஞ்சதந்திரம்-3

முதலில் யாரை பற்றி அறிவதென மீண்டும் தலையாய பிரச்சனை எழும்பியது.

நைனிகா தான் கடைசியாக கூறுவதாக தோளைக் குலுக்கினாள்.

ரஞ்சனாவோ "அப்போ நான் இவளுக்கு முன்ன சொல்லிக்கறேன்." என்று அவளை போலவே தோளைக் குலுக்கவும் நைனிகா எரிச்சலடைந்தாள்.

"என் பேரண்ட்ஸே பரவாயில்லை." என்று சலித்தபடி நைனிகா மெத்தையில் படுத்து காலாட்டி, "யார் சொல்லறிங்களோ சொல்லுங்க. விருப்பமில்லையா விடுங்க. ஐ டோண்ட் கேர். பட் தூங்கிட்டு காலையில எழுந்துப்போம். அதான் இறப்பை தள்ளி போட வச்சிட்டிங்களே." என்று ஆதங்கப்பட்டாள்.

"நீ வேண்டுமின்னா உன் ரூம்ல இங்கயே தூக்கு போட்டுக்கோ" என்று ரஞ்சனா ஐடியா தர, "என்ன நீ என்னை நோண்டிட்டே இருக்க?" என்று எகிற, "கொஞ்சம் நிறுத்துங்க" என்றார் மஞ்சரி பாட்டி.

வயதில் பெரியவர் என்பதால் சற்று அமைதியாக இருந்தார்கள்.

"மூச்சு வாங்குதுடா... என்னைலையும் இப்ப பகிர முடியலை. குழந்தையும் தூங்கறா. திரிஷ்யா உன்னை பத்தி சொல்லலாமே. குழந்தை இருக்குனு சொன்ன. குழந்தை தேடாது. அப்படியென்னமா ஆச்சு." என்று மஞ்சரி கேட்டதும் திரிஷ்யா அழுதாள்.

சிறிது நேரம் அழவிட்டு, மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, அவளாகவே சமாதானம் செய்து கொண்டு, "என் ஹஸ்பெண்ட் பெயர் வேதாந்த். எனக்கு ஒரு பையன் உதய்.

எனக்கு அப்பா அம்மா, ஒரு அக்கா, ஒரு தங்கச்சி இருக்காங்க.
அக்காவுக்கு கல்யாணமாகி பத்து வயசுல பொண்ணு இருக்கா.

மூனும் பொம்பள பிள்ளைங்கனு எங்கப்பா என்னையும் படிச்சதும் 21 வயசுல கட்டி கொடுத்துட்டார்.

தனுஜா வயசு தான் உதயுக்கும். என் கணவர் வீட்ல நல்ல வசதி. உதயுக்கு கூட தனி ரூம் தான். அதனால தான் என்னை தேடலையோ என்னவோ" என்று அழவும், ரஞ்சனா தோளில் கை வைத்தாள். அதில் ஆறுதலடைந்த திரிஷ்யா "எனக்கு பிரச்சனையே என் கணவர் மட்டும் தான்" என்றவள் தன் வாழ்க்கையை கூறத்துவங்கினாள்.

வேதாந்த் என்னை திருமணம் செய்தப்ப ரொம்பவே ஆசையா எதிர்பார்ப்போட மணந்தார். நானும் பேராசையோட இவர் தான் இனி எல்லாம் என்ற பெரிய நம்பிக்கையில மணந்தேன்.

என்னை தாங்கு தாங்குனு தாங்கினார். கேட்டதை வாங்கி கொடுத்தார். ஏன் நான் பார்ப்பதை கூட வேண்டுமானு வாங்கி முன்ன வைச்சார்.

எல்லாம் உதய் பிறக்கற வரை. அதுக்கு பிறகு ரொம்பவே மாறிட்டார். சரியா முகம் கொடுத்து பேசறதில்லை. நான் ரூமுக்கு வந்தாலே ஏதோ வேற்று மனுஷி உள்ள வர்றது மாதிரி கதவு தட்டிட்டு வரமாட்டியானு திட்டுவார்.

நானும் வேலையை பத்தி நமக்கென்ன தெரியும்னு திட்டு வாங்கிப்பேன்.

திரிஷ்யா -வேதாந்த் வாழ்க்கை

"அம்மா அம்மா" என்று உதய் ஒடிவர, "செல்லமே இங்க இருக்கேன் டா" என்று பால்கனியிலிருந்து குரல் கொடுக்க வேகமாய் வந்தவன் "டேடி எனக்கு டேப்(tab) வாங்கிட்டார்" என்று துள்ளி குதித்தான்.

"என்னங்க இது விலை அதிகமா. இந்த வயசுல எதுக்குங்க?" என்று திரிஷ்யா ஆரம்பிக்கும் முன் கையை நீட்டி நிறுத்துமாறு கூறினான் வேதாந்த்.

"குழந்தைக்கு என்ன வாங்கி தரணும் ஏது வாங்கி தரணும்னு எனக்கு தெரியும்." என்று எரிந்து விழுந்தான்.

"இல்லிங்க ஏன் சொல்லறேன்னா?" என்று கூறும் முன் நிறுத்தறியா என்பது போல சலித்து திரும்பினான்.

"உன்னை விட டேப்(tab) பத்தி எனக்கு நல்லாவே தெரியும். எது எதுக்கு உபயோகமா இருக்கும்னு. என் பையன் டெக்னாலஜி தெரிந்து வளர்றவன். உன்னை மாதிரி கிடையாது." என்றதும் மௌவுனமானாள்.

வேதாந்த் தாய் நாகேஸ்வரி மற்றும் தந்தை லோகநாதன் இருவரும் மகனின் பேச்சை சட்டை செய்யாமல் பேரனின் விளையாட்டில் மூழ்கினார்கள்.

திரிஷ்யா எப்பொழுதும் போல அவமானமாய் உணர்ந்து அறைக்குள் அடைந்தாள்.
 
     தன்னை ஏன் கணவருக்கு பிடிக்கவில்லை? எதனால் என்று ஆராய்ந்து பார்த்து திரிஷ்யா சோர்வடைந்தது தான் மிச்சம்.

     அன்று எதச்சயமாக கட்டிஐஇல் போன் பார்த்துக் கொண்டிருந்தான் வேதாந்த். மாலை சிற்றுண்டியான டீ மற்றும் குக்கீஸ் எடுத்து வந்து தட்டை முன் வைத்தாள். வேதாந்தோ தீவிரமாய் ளோனில் எதையோ பார்க்க அது பின்னால் இருக்கும் கண்ணாடியில் பிம்பம் தெரிந்தது.

    கவர்ச்சியான ஆடையணிந்த பெண்களை வேதாந்த் போன் மூலமாக சுவாரசியமாக திரிஷ்யா வந்தது கூட அறியாது இமைக்க மறந்து ரசித்தான்.

   தன்னவன் வேறொரு பெண்களின் புகைப்படத்தை காண்பதை கண்டாள் தர்மபத்தினி.
    அதுவும் கவர்ச்சியான உடையென்பதால் திரிஷ்யா சங்கடப்பட்டாள். இதே தன்னை போல மகன் வந்து இங்கே நின்றால் கணவர் காணும் யாவும் தான் பார்த்தது போல மகனும் கண்டிட நேருமே என்று தவித்தாள்.

இப்படியா இருப்பது என்று குரலை செருமி "என்னங்க... என்னங்க டீ" என்று கூறவும் அவசரமாய் போனை மூடிவைத்து, வச்திட்டு போகலாமே. ஏன் டிஸ்டர்ப் பண்ணற?" என்று எரிந்து விழுந்தான்.

    "இல்லிங்க அது வந்து" என்று ஆரம்பிக்கும் நேரம் "திரிஷ்யா அங்க என்ன பண்ணற? உதய் பூஸ்ட் கேட்கறான் பாரு" என்று நாகேஸ்வரி கூப்பிடவும் அவசரமாய் கிச்சனுக்கு சென்றாள்.
 
   பாத்திரம் விளக்கியவள் வேதாந்திடம் இரவு பேசிட வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

     பேசிட முடிவெடுப்பது எளிது. ஆனால் எதிரில் இருப்பவரும் எளிதாக புரிந்திடும் ஆற்றல் வகுத்தவராக இருக்க வேண்டுமே.

    வேதாந்த் அப்படிப்பட்டவன் இல்லை.

    இரவு நேரம் உதய் உறங்கவும் திரிஷ்யாவை அணைத்து மோகமழையை பொழிந்தவனிடம், மெதுவாய் மாலை தான் கண்ட காட்சியை விளக்கினாள்.

    "ஏன் கண்டவங்க போட்டோஸை பார்க்கறிங்க. திடீரென பையன் வந்து போனை பிடிங்கினா உங்க நிலை என்னாகறது" என்று இதுவரை இல்லறத்தில் இனிக்க இனிக்க செயல்புரிந்தவனின் வேகத்தில் உரிமையாய் கேட்டாள்.
  
   அவளை தன்னிடமிருந்து பிரிந்து, ஏய் நீயும் பார்த்து என்னை கேள்விக் கேட்கறியா? அசிங்கமா இருந்தா நீ பார்க்க கூடாது. என்னவோ பார்க்கறேன்னு தெரியுதுல சட்டுனு போகக்கூடாது. நீ ஏன்டி அங்கயே இருந்த. என்ன வாட்ச் பண்ணற மாதிரி நீயும் ரசித்து பார்த்தியா?" என்று கேட்டான். வேதாந்த் கேட்ட தோரணையே ஏதோ திரிஷ்யா தவறான செயலை செய்தது போல எண்ணிட செய்தான்.
  இங்கப்பாரு மாடர்ன் டிரஸ் போட்டா என்ன ஏதென பார்க்க தான் செய்வேன். நீ எட்டு மொழம் புடவை சுத்திட்டு இருக்கறது. எப்பவும் அழுக்கு நைட்டியும் போட்டுட்டு சுத்தினா உன்னை எப்படி பார்க்கறது.

    வலலத்தளத்துல இரண்டு மூன்று பொண்ணுங்க போட்டோ பார்க்கறது தான். சோ வாட்... பார்க்க தானே செய்யறேன். எவளோடவும் படுத்து எழுந்துக்கலையே.?" என்று கத்தவும் உதய் எழுந்துக்கபோகின்றானோ என்று பயந்தாள்.

    "கத்தாதிங்க உதய் சண்டை போடறோம்னு பயந்துட போறான். நான் பார்த்த மாதிரி உதய் பார்த்திட கூடாதேனு பயந்தேன்." என்று விளக்கமளித்தாள்.

   அவள் விளக்கம் எல்லாம் புல்லுக்கு போகும் நீராக விரைந்தது.

    ஏதோ விஷயத்தை கூறியதால் கணவர் இனி கவனமாய் மகன் இருக்க நடந்துக்கொள்வரென முடிவு கட்டி துயில் கொண்டாள்.

    அடுத்த நாள் காலையிலேயே திரிஷ்யா மீது சிடுசிடுவென முகத்தை காட்டினான் வேதாந்த்.
   தன் குட்டை மனைவி மீண்டும் பேசிடக் கூடாதேயென்ற காரணத்தில் அவ்வாறு நடந்தான்.

    வேலைக்கு செல்லும் நேரம் ஷூ பாலிஸ் போட்டு நீட்டினாள்.
வேதாந்த் முகம் திருப்பவும் தன் கையை நைட்டியில் துடைத்திட வேதாந்த் சென்றதும் நைட்டியை உற்று நோக்கினாள்.

   மாதுளை உறித்திடும் நேரம் பட்ட கரை போகவில்லை. சாதம் கிளரும் போது நைட்டியில் தெளித்த சாம்பார், தோசை சுடும் நேரம் பக்கவாட்டில் துடைத்த மாவு கை என்று கரித்துணியை கட்டியது போல நைட்டி காட்சியளித்தது.

    மன்னவன் முகம் காண மறுத்தது இதெல்லாம் காரணமாக இருக்குமென, வேலையெல்லாம் முடித்து மதியம் எப்ரன் வாங்க சென்றாள்.
  ஏனோ கூடுதலாக மாடர்ன் உடைகள் பக்கம் கவனம் சென்றது. எப்பொழுதும் சேலை அணிந்ததால் சுடிதார் செட் மூன்று வாங்கினாள்.

    வீட்டுக்கு வந்து ஆல்டர் செய்து நாளை போட்டு அசத்த வேண்டுமென்று திரிஷ்யா பல கனவோடு இருந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

   

   

  
    

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...