இடுகைகள்

நவம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)

படம்
  அத்தியாயம்-11     ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று "நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்" என்றான்.       "நான் கோவிலுக்கு போகணும். குழந்தை பிறந்த நாள் நல்லபடியா முடிந்தா அங்க இன்னிக்கு கேசரி பிரசாதம் கொடுக்கலாம்னு." என்று கூறவும் "ஓ... அப்ப நானும் வர்றேன்" என்றான்.      "மாமா உங்களுக்கு கோவில் பிடிக்காதுனு சொல்லிருந்தாரே. சந்தனாவை மேரேஜ் பண்ணியது கூட ரிஜிஸ்டர் ஆபிஸ் தானாமே. பிறகெப்படி?" என்று தயங்கினாள்.      "இதுவும் சுயநலம் தான். மனிதனுக்கு கஷ்டமில்லாதப்ப வேண்டுதல் இல்லாதப்பவும் கடவுளை தேடமாட்டான். ஆனா இப்ப மனசுல வேண்டுதல் நிறைய இருக்கு." என்றான்.         யஷ்தவி இதற்கு மேல் தோண்டிதுருவாமல் கோவிலுக்கு தயாரானாள்.      ஆத்விக் பாவனாவிற்கு உடைமாற்றி தலலவாறினான். அதற்குள் யஷ்தவி கிளம்பி ஒரு தூக்குவாளியில் கேசரியை எடுத்து கொண்டு வநதாள்.      "இந்த வெயிட்டை வச்சிட்டு பாப்பாவை வேற தூக்கிட்டு கோவிலுக்கு சேலையில் போனா ஸ்லிப்பாகவா? உனக்கு

பிரம்மனின் கிறுக்கல்கள்-10

படம்
  அத்தியாயம்-10     "ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே கடவுள் இக்கட்டுல தள்ளி நம்மை குறையா படைத்தா நாமளே இப்படி ஒரு நிலையில ஏற்றுப்போம்ல" என்று பேசிய அன்பாளனை புரியாமல் பார்த்தான் ஆத்விக்.       "புரியுற மாதிரி சொல்லறேன். என்  குணயதிசயத்துக்கு சந்தனாவை நீ திருமணம் செய்வதற்கு முன்ன ஒரு கணவனை இழந்தவளையோ, யாரோ ஒரு குழந்தையையோ தத்தெடுக்கவோ விருப்பப்படுவேனா? இல்லை... அதே மாதிரி வருணை திருமணம் முடிக்கறதுக்கு முன்ன பாலகுமார் உன்னை மாதிரி மனைவியை இழந்தவனையோ, இல்லை தத்தெடுக்கவோ விடுவாரா?        எங்களை விடு. நீ சந்தனா சேர்ந்து குழந்தையை தத்தெடுத்திருப்பியா? உண்மையை சொல்லு. ஏதோ ஒரு இழப்பை நீ உணர்ந்து அதோட தாக்கத்துல இப்படி முடிவெடுத்து அதுல நிதானமா விடாபிடியா இருக்க. மற்றபடி சும்மா ஒரு குழந்தையை உன் வாரிசா ஏற்றுப்பியா?" என்றதும் ஆத்விக் உடனடியாக பதில் தரவில்லை. அதே நிலையில் தான் யஷ்தவியும் யோசித்தாள்.      ஆத்விக் பதில் தராமல் இருக்க, "நிதர்சனம் மு

பிரம்மனின் கிறுக்கல்கள்-9

படம்
  அத்தியாயம்-9           பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள்.       "என்னாச்சு யஷ்தவி பாவனா அழுவறா?" என்றவன் கை பட்டனை போட்டவாறு வந்தான்.      "அனீசியா இருக்கும் போல. புது டிரஸ் இல்லையா." என்று வாடியிருந்தாள்.     அவள் முகமே கூறியது தான் வாங்கிய உடை குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ 'நைநை'யென அழுகின்றதே என்று கவலை தோய்ந்து இருந்தாள் யஷ்தவி.    ஆத்விக்கோ "செல்லக்குட்டிஇங்க பாருங்க இங்க பாருங்க" என்று எப்பொழுதும் விளையாடும் கண்ணாடி அலமாரி முன் அவளை நிறுத்தி விட்டு "பாவனா குட்டி எப்படி அழகா இருக்கு. வாவ் இந்த டிரஸ் சின்ட்ரெல்லா மாதிரி இருக்கா ஸ்லீபிங் பியூட்டி மாதிரி இருக்கா?" என்று கேட்டான்.       குழந்தை தினசரி அவன் போனில் இந்த இரு கதையை மொழி அறியாவிட்டாலும் பார்த்து ரசித்ததால் தற்போது ஆத்விக் கூறியதை கேட்டு பார்த்தது.    கண்கள் உருட்டி தன் அழகை கண்ணாடியில் கண்டு களித்தாள் பாவனா. கண்ணாடி முன் வந்து தொட்டு தொட்டு பார்த்து சிரிக்க

பிரம்மனின் கிறுக்கல்கள்-8

படம்
  அத்தியாயம்-8      பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான்.     அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில் பயணி போன்றவன் அல்ல என்று புரிந்தது முதல் பேச துவங்கினான்.      ஏங்க டிரஸ் நீங்க வாங்கிட்டிங்க. கேக்காவது நான் வாங்கறேன்" என்றதற்கு யஷ்தவியோ "நானே என் கையால கேக் செய்யலாம்னு இருந்தேன்" என்று தலை தாழ்த்தி நின்றாள்.      "அப்பாவா நானும் ஏதாவது பண்ண ஆசையாயிருக்கு. இதுவரை யாரிடமும் பகிரலை. உங்களை மாதிரி தான் சந்தனாவும் இரண்டு மாதம் கருவை சுமந்திருந்தா. பட் அவ போனதும் அவளோடவே என் குழந்தையும் போயிடுச்சு.     அப்பாவிடம் சொல்லலை மேபீ சொல்லிருந்தா கவலைப்படுவார். எனக்கும் சந்தனாவுக்கும் மட்டும் தெரிந்த சந்தோஷ செய்தி. சந்தனாவோட அந்த குழந்தையும் இறந்ததால அந்த இழப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.      உங்களை மாதிரி தான் பாவனாவை என் குழந்தையா பார்க்க ஆரம்பிச்சேன். அதனால தான் பாவனாவை விட்டு தர சொன்னப்ப என்னால விட்டு கொடுக்க முடியலை." என்றான் ஆத்விக்.      யஷ்தவி மெதுவாய் ஆத்விக் இழந்தது இரு உயிராக எண்ணினாள். அவள்

பிரம்மனின் கிறுக்கல்கள்-7

படம்
  அத்தியாயம்-7 தந்தை கண் விழித்தாரென ஆத்விக்கை அறைக்குள் விட கண்கள் கலங்கி தந்தை கையை பற்றியபடி அமர்ந்தான். "என்னடா செத்துட்டா வீட்ல இருக்கிற என் மருமகளை துரத்திட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா உயிர் பிழைச்சிட்டேனா" என்று மூச்சு குழாயை கழட்டி மெதுவாய் பேசினார். "ஏன்பா இப்படி பேசற. காலேஜ் படிக்கிறப்ப அம்மா என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நான் நேசித்து கல்யாணம் செய்தவளும் என்னை விட்டு போயிட்டா. நீயாவது கூடவே இருக்க என்ற சந்தோஷப்பட்டா இப்படி பயமுறுத்தறியே. சந்தனா போட்டோ ஹால்ல இருந்தது குத்தமா." என்று வருந்தினான். "அடேய்... என் வயசு ஐம்பத்தி ஆறு. நான் சாகிற நிலையில வந்து மருத்துவமனையில கிடக்கவும் இப்படி பதறுற. இத்தனைக்கும் உன் காதலை ஏற்றுக்காம சந்தனாவோட கல்யாண கோலத்துல வீட்டுக்கு வந்தப்ப கோபத்துல விரட்டி அனுப்பினேன். அப்படிபட்ட எனக்கு உடம்பு சரியில்லைன்னதும் நீ துடிக்கிற. அதே பாசம் தானே டா எனக்கு உன் மேல. நீ பிறந்து வளர்ந்து ஒத்த பிள்ளையா ஆளாகி வந்து திருமணத்தையும் எனக்கு தெரியாம பண்ணிட்டு வந்த, சந்தோஷமா வாழ்ந்தியா. இதோ அந்த பொண்ணை கொரானாவுக்கு தூக்கி கொடுத்துட்ட