இடுகைகள்

நவம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

மழைக்கு ஒதுங்கிய வானம்

படம்
சிறுதூறலில் என்னை குழந்தையாக்கி பெருசாரலில் நாசியை வருடும் மண்வாசம் கிளறியே... ஒரு கோப்பை தேனீரில் கசந்ததோ சுகந்ததோ மனதின் மூளையில் தேங்கிய நிகழ்வை முன்னிறுத்தி நாழிகளை நகர்ந்திடாது மயிலிறகாய் வருடுகின்றாய்... சோனையில் கப்பல் விட அடம்பிடிக்கும் குழந்தையாய் துள்ளுகின்றது என் மனம் ஆசாரம் அளித்திடுமே... கவிஞனுக்கு கவிகளாய்...காதலுக்கு தோழனாய்... வான் மழையே... வா மழையே...! சிறு தூறலோ... பெரும் திவலையோ... பச்சை நெற்பயிரில் பட்டு தெறிக்க வைரத்தை மூடிய தங்க பஸ்பமாக நெல்மணி கண்ணு(திரு)ம் வளர்ந்திடவே! உழவனின் நேசத்தின் வரவேற்பின் மழைக்கு ஒதுங்கிய வானம் வழிவிட மண்ணிற்கு அழுத்த முத்தமிட்டே சுவடுபதி ஆலியே... !                    -- பிரவீணா தங்கராஜ் .

எங்கள் அன்பு ஐய்யாமை...

                                         எங்கள் அன்பு ஐய்யாமை ,                          எப்பொழுதும் மாத்திரை பெட்டியை எடுத்துக் காலை மாலை இரவு என பிரித்து ஒரு தண்ணீர் பாட்டிலை அருகே வைத்துக் கொண்டும்  ஒரு துணியை எடுத்து தண்ணிர் பாட்டில் மாத்திரை பெட்டி கட்டில் என அதை கொண்டு துடைத்து சுத்தமாக வைத்தபடி இருக்கும் இடம் மட்டுமல்ல தன்னையும் முகமலர்ச்சியோடு இருப்பது அவர்களின் வழக்கம் . கூடவே ஒரு கைபேசி வேறு . இதுவே எங்கள் ஐய்யாமை .               ஐய்யாமை அப்பாவின் அம்மா . எங்களுக்கு பாட்டி . அப்பாவின் அம்மாவை ஐய்யாமை என்றும் அப்பாவின் அப்பாவை ஐய்யப்பா என்றும் அழைப்பது வழக்கம் .              எல்லோருக்கும் தாத்தா பாட்டி என்றாலே கொள்ள பிரியம் உண்டு . எங்களுக்கு தாத்தாவின் அன்பு மழையில் நனையும் பாக்கியம் கிட்டவில்லை . ஐய்யாமை அன்பு கிட்டியது அதுவும் தெவிட்டாத அன்பு .                          உங்களுக்கு பிடித்த பெண்மணி யார் என்று கேட்டால் எல்லோரும் சமுதாயத்தில் இருக்கும் சிறந்த நபரை கண்டிப்பாக கூறுவார்கள் . எங்களுக்கு ஐய்யாமை அப்படிப் பட்டவரே . மனதைரியம் படைத்த , ஆளுமை திறம் கொண்ட , ரசனைக்கு

புது விடியலைப் படைத்திடு

எழுதுக்கோல் பற்றியிருக்கும் விரல்களுக்கு கூட எழுதும் விதி இதுயென அறிந்திட வாய்ப்பில்லை எண்ணங்களின் வண்ணங்கள் மட்டுமே ஏற்றயிறக்கங்களை உண்டென உணர்ந்திடு  வறுமையை மாற்ற உழைப்பை விதைத்திடு இருமைக் கொண்டு நடந்திடும் நிகழ்வுகள் இன்பத் துன்பத்தை இனிதே செப்பிடும்  கண்ணீரை கணமும் நிறுத்திப் பிறருக்கும் புன்னகை நாளும் பரிசாய் பூரித்திடு பகைமை யெனும் பண்பை ஒழித்து தகமை நாடும் உள்ளத்தில் ஒளிர்விடு எனக்கு மட்டுமே இப்படியா என்று எக்களிக்கும் நிகழ்வுகளை மதியால் மாற்றிடு எண்ணியெண்ணி சிரத்தையாய் செப்பிடும் கனவுகளை வர்ணங்களைக் கலந்தே விதிக்கு மாற்றி வாழ்வுக்குப் புது சாயம் மெருகேற்றிடு புது விடியலைப்  படைத்திடு                            -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -42

முரண்பாட்டான கள்வன் நீ உன் இதயத்தை எனக்குள் பத்திரப்படுத்தி செல்கின்றாயே...!            -- பிரவீணா தங்கராஜ் . 

சற்றே விலகிக் கொள் - காதல் பிதற்றல் 41

இறுகப் பற்றிய நம் அணைப்பால் காற்றுக்கு மூச்சு அடைகின்றது சற்றே விலகிக் கொள் காற்று சுவாசித்துக்  கொள்ளட்டுமே...                  -- பிரவீணா தங்கராஜ் .  

மீச்சிறு அருவி

மீச்சிறு அருவியாய் பொழிகின்றது உன் கண்கள் எனக்கு தான் வெள்ளமென என் இதயத்தை தத்தளிக்க செய்து உயிர் கசியும் வேதனை அளிக்கின்றது                  -- பிரவீணா தங்கராஜ் .

இசை மெட்டுக்கள்

படம்
இசை மெட்டுக்கள் எழும்புகின்றன  தொடர் மழையால் வீட்டுக்குள் கொடிகளில் துணிகளை உலர்த்துவதில்...      பிரவீணா தங்கராஜ் .