இலைகளை உதிர்த்தி...இலைகளை உதிர்த்தி மரங்கள் சொல்கின்றது
இனியெல்லாம் இங்கு வசிக்க இயலாதென்று
கனிந்த பார்வையில் கவிதை படித்திட
காலங்கள் எல்லாம் மாறுகின்றதென்று
உணர்வில் லயித்திட்ட உயிர்கள் இரண்டு
உன்னத அன்பில் சொல்வதொன்று
மனிதா அன்பை நாடி மரங்களை நடு
இலைகள் இல்லா கிளைகள்
சுவைகள் இல்லா கனிகள்
நிலவை அள்ளி பருக மட்டும்
ஜோடி குருவி நாங்கள் உண்டு

  -பிரவீணா தங்கராஜ்.

முதல் முதலாய் ஒரு மெல்லிய (how to paper book buy it ?)

முதல் முதலாய் ஒரு மெல்லிய
 
 
   

 முதல் முதலாய் ஒரு மெல்லிய-1  

முதல் முதலாய் ஒரு மெல்லிய-2 

முதல் முதலாய் ஒரு மெல்லிய -3 

முதல் முதலாய் ஒரு மெல்லிய-4  

முதல் முதலாய் ஒரு மெல்லிய-5

முதல் முதலாய் ஒரு மெல்லிய-6 

முதல் முதலாய் ஒரு மெல்லிய-7 

முதல் முதலாய் ஒரு மெல்லிய-8 

முதல் முதலாய் ஒரு மெல்லிய-9 

முதல் முதலாய் ஒரு மெல்லிய-10 

முதல் முதலாய் ஒரு மெல்லிய-11

முதல் முதலாய் ஒரு மெல்லிய-12

முதல் முதலாய் ஒரு மெல்லிய-13

முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 & 15

முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17

முதல் முதலாய் ஒரு மெல்லிய- 18

முதல் முதலாய் ஒரு மெல்லிய-19

முதல் முதலாய் ஒரு மெல்லிய-20

முதல் முதலாய் ஒரு மெல்லிய-21

முதல் முதலாய் ஒரு மெல்லிய-22

முதல் முதலாய் ஒரு மெல்லிய-23

முதல் முதலாய் ஒரு மெல்லிய-24

முதல் முதலாய் ஒரு மெல்லிய-25

முதல் முதலாய் ஒரு மெல்லிய-26

முதல் முதலாய் ஒரு மெல்லிய-27

முதல் முதலாய் ஒரு மெல்லிய-28

முதல் முதலாய் ஒரு மெல்லிய-29

முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31🌹 உலகமே உதயம் எதனில் 🌹

பட்ட மரத்தின் வேருக்கு
பூக்கள் பூக்க செய்ய
பயோதரம் விடும் கண்ணீர்
திவலை யெதற்கு....?!
தன் கூட்டின் மேல
தான் இடா முட்டைக்கும் 
தாயாய் அடைகாக்கும்
காகம் எதனால்...?!
முட்டி மோதி கொள்ளும் உறவுகள்
பந்தமெனும் கூடும் விழாவில்
ஒன்றுபட்டு புன்னகைப்பெதனால்...?!
பிடியள்ளி உண்ணும் சாதம்
பிள்ளை வந்து முன்னிற்க
பாசமாய் உணவளிப்பதும் எதனால்...?!
எங்கோ கேட்கும் திரிவூர்தி ஓசையது
எங்கோ மூலையில் ஒரு மனம்
வேண்டிடுவதும் எதனால்...?!
எதனால்... எதனால்...
உலகமே உதயம் எதனில் தேடிட...
அன்பே நீ கரைந்திடு  தாய் தந்தைக்காய்...!
பாசமே நிறைந்திடு சகோதரத்துவமாய்...!
நேசமே விதைத்திடு உறவும் நட்புமாய்...!
காதலே கலந்திடு காவியமாய்...!
உலகமே உதயம் அன்பில் - அதை
உணர்த்தியே சொல் உன்னில்.
                              -- பிரவீணா தங்கராஜ்.
பயோதரம்--மேகம்
திவலை-----மழைத்துளி
திரிவூர்தி---ஆம்புலன்ஸ்


பாலுமில்லை சீனியுமில்லை

பாலுமில்லை சீனியுமில்லை
இல்லாத குழவித் தூளில்
சூடுப் பறக்க ஆற்றி
எதிரிலும் யாருமில்லாத யிடத்தில்
நீட்டியப்படி குழவியை
தேனீர் என்கின்றாள்
சிரிப்புடன் குட்டிமகள்
வாங்கிப் பருகியவாறு
 
திருப்பி தருகின்றனர்
உங்கள் கண்களுக்கு
தெரியாத கடவுள்கள்.
-- பிரவீணா தங்கராஜ்.

மழலையின் மொழி...

எண்களை அழுத்திவிட்டு
இறைவனின் குறைகளை
கேட்டு முடிக்கின்றாள்
ஆறுதலாக மழலையின்
மொழியால்...
-- பிரவீணா தங்கராஜ்.


நாள்காட்டி அட்டை

நாட்களை விழுங்கியவன்
மெலிந்து கிடக்கின்றான்
நாள்காட்டி அட்டை.
          -- பிரவீணா தங்கராஜ்.
                 

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...