பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)
பஞ்ச தந்திரம்-18 திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள். மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகாசம் தந்ததாக கூட காட்டிக்கவில்லை. நைனிகாவுமே ஹாய் பாய் என்று கல்லூரிக்கு ஓடுவதில் இருந்தாள். ருத்ரன் மட்டும் தினமும் அவள் பணிப்புரியும் இடத்திற்கு வரும் நேரம் சற்று தொலைவில் நின்று பார்ப்பான். தனுஜாவை பள்ளிக்கூடத்தில் விடும் சமயமும் ஏறிடுவான். ஒளிந்து ஒளிந்து பார்ப்பதை விட நேரிடையாக தான் வந்து நிற்பான். திரிஷ்யா முதலில் சங்கடம் அடைந்து நின்றாலும் இந்த இரண்டு மாதம் பார்த்ததில் சங்கடமின்றி கடந்து வந்தாள். தனுஜாவுக்கு சாக்லேட் வழங்குவதும் தினமும் நடைப்பெற்றது. வேதாந்தை மணந்தப்போது உலகம் அறியாதவள். யார் எது சொல்லி வழிநடத்தினாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மடந்தை. இன்றோ உலகம் அறியப்பட்டாள். முன்பு மணமான வாழ்வு சரிக்கியது போல இரண்டாம் முறையும் சரிக்கிடுமா? என்ற கோணத்தில் யோசித்தவள், 'இழக்க இங்கே ஒன்றுமில்லை. வாழ்ந்து ...