Posts

Showing posts from July, 2020

வளைய வித்தைகள்

வளையத்துனுள் நுழைந்து வித்தைகள் பல காட்டி ரயில் பெட்டிகளில் தட்டை ஏந்தியே யாசித்து நிற்கின்றாள் அச்சிறுமி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயத்தை இச்சிறுவித்தைக்கு வழங்குவானேனென சில நாணயமானவர்கள் நாணயம் கொடுக்க மனம்மின்றி முகத்தை அச்சிறுமி வரும்திசைக்கு எதிர் திசையில் கண்களை நகர்த்துகின்றனர் . வயிற்று பிழைப்பு  தட்டை போன்றே காலியாக...                            -- பிரவீணா தங்கராஜ்