ஒளியும் ஒலியும்

இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று பாடல் அதிர மகள் உதடு தானாக பாடல் கூடவே இணைந்தது. வித்யுத் வருகையில் ரிமோட் கை மாற அடுத்து 'இசையருவி'யில் மெல்லிய கீதமாக பாடல் ஒலிக்க அதில் அதிதி வித்யுத் பார்வை பரிமாற்றம் இதழோரத்தில் புன்னகை அரும்ப அவர்களின் 90 கிட்ஸ் வரிசையில் இதுவும் ஒன்று. மறக்க இயலாத நிலை. சினிமாவின் பாடல் இசையில் அந்நாளை எண்ணி பார்த்தது. இப்பொழுது போல பாடல் ஒளிபரப்பி கொண்டு இருக்க மாட்டார்கள். வாரம் ஒரு முறை அரை மணி நேரம் பாடல். வித்யுத் எட்டு வயதில் ஒளியும் ஒலியும் பார்க்க ஆர்வமாக அமர ஆறு வயது அதிதி அவனோடு விளையாட கூப்பிட்டபடி அழுதாள். சின்னசிறு அழுகை கொண்ட அந்த தளிரான அதிதியின் அழுகையில் பெரியவர்கள் "வித்யுத் பாப்பா அழறா வேடிக்கை பார்க்கற என்ன?" என்று வித்யுத் கேட்டதும் ...