Posts

Showing posts from October, 2018

வண்ண நிலவுகள்

வண்ண நிலவுகள் இருக்கின்றதா என்கின்றாள் குட்டி மகள் அவள் கைகளில் பத்து விரலின் நகங்களுக்கு பத்து வண்ணங்களை  பூசியதை அறியாமல்                     - பிரவீணா தங்கராஜ் .

உனக்குள் ஓராயிரம் கவிதை -காதல் பிதற்றல் 40

உன்னை பற்றி என்னும் தலைப்பில் ஒரு கவிதை தானே எழுது என்கிறாய் உனக்குள் ஓராயிரம் கவிதை தலைப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதை அறியாமல்...              -- பிரவீணா தங்கராஜ் .

நிலவு

Image
காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே ! கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்... நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்... மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம் உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி  பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே ! பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே ! பசலை நோயில் மெலிந்து தேய்பவளே...  கற்கண்டு நட்சத்திரம் உண்ணாமல் வாடுவது ஏனோ ?! தனியே தன்னந்தனியே தாரகை திங்களே ! தலைவனை தேடியே தவிக்கின்றாயோ... களங்கமில்லா மேனிக்  கொண்ட நிறைமதியே மாதத்தில் ஒரு நாள் வீட்டுக்கு தூரமோ ?!  தங்கநிலவாய் ஜொலிக்கின்றாய் நீரில் உன்னை அள்ளி பருகும் ஆடவன் யாரோ ... கவிஞனுக்கும் காதலுக்கும் நீயொரு காட்சி நிலா எனக்கு மட்டும் தோள்கொடுக்கும் நட்பிலா .                                           -- பிரவீணா தங்கராஜ் .  

என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே

என்னை விட்டுப் பிரிந்துவிடு என்னுயிரே என்று சொல்வதும் நானே தான் உன்னில் உயிராய் கலந்து உந்தன் சுவாசத்தை சுவாசித்து உனக்காக வாழும் பேதையே தான் விழிகளில் மோதி வானத்தில் பறந்து விரக்தியில் தவிப்பதும் நானே தான் வானவில்லின் வர்ணமாய் வந்தவனே வசந்தத்தை எனக்காய் தந்தவனே வாஞ்சையோடு சொல்வதும் நானே தான் உன் அன்பை சிறுகச் சிறுக சேர்த்து நம் காதலை பருகியவளும் நானே தான் எங்கோ கேட்கும் பாடலுக்கு என் இதயத்தில் வாசம் கொள்ளும் உன்னை எண்ணி மருகுவதும் நானே தான் உப்பில்லா உணவும் ருசிக்க செய்யும் உன் நினைவு கோப்பைகளை எனக்குள்ளே தேக்கி வைப்பதும் நானே தான் நித்திரையில் கள்வனாய் நீ புகுந்திட நித்தமும் அக்கனவு வேண்டுவதும் நானே தான் என்னை விட்டுப் பிரிந்துவிடு என்று சொல்கின்றேன் நம் காதல் வேரூன்றி இருக்கும் ஆழம் உணர்ந்தே ஏனெனில் நம் உண்மை காதல் அழியாதே...                             -- பிரவீணா தங்கராஜ் .