வலி உன்னை செதுக்கும் உளி

வலி மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான். சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை துடைத்து கொண்டு, "என்னங்க பொண்ணுக்கு வாட்டர்பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு. காசு வச்சிட்டு போ. வாட்டர் பாட்டில் வாங்கணும். இப்படியே டியூசனுக்கு போய் பிள்ளையை அழைச்சிட்டு வர்றப்ப இந்த பீடி ஹான்ஸு எதுவும் போட்டுட்டு வரக்கூடாதுனு டியூசன் பொண்ணு கண்டிப்பா சொல்லுச்சு. தயவு செய்து அதை துப்பிட்டு மகளை அழைச்சிட்டு வா. இப்படியே போனா அந்த டியூசன் எடுக்குற நந்தினி பொண்ணு இனி உன்னை வரவேண்டாம் என்னை வந்து அழைச்சிட்டு போக சொல்லுது." என்று சாவித்ரி கூறவும் சட்டை பொத்தானை மாற்றியபடி இருந்த மருதுவோ மனைவியை ஏறயிறங்க பார்த்தான். "நான் பீடி புடிக்கிறேன், ஹான்ஸ் போடறேன். அதனால என் பிள்ளையை கூட்டிட்டு வரக்கூடாதா. என்னடி நியாயம். நான் என்ன...