தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-10
சம்யு வரும் பொழுதே ஜார்ஜ் சுபாஷும் வழி மறித்தனர்.
"ஏம்மா தங்கச்சி அன்னிக்கு ரிப்ளை பண்ணலை சொன்ன. இப்ப சீனியர் ஆரவ் காதலி சொல்லறியாமே. பையன் நிஜமாவே விரும்பறானா." என்று கேட்க சம்யுவோ
"நீங்க நம்பினா ஆமா அண்ணா. நம்பலைனா இல்லைண்ணா." என்று சிரிக்க,
"நல்லா இருந்தா சரி." என்று கிளம்பினார்கள்.
யோகிதா தான் "ம்ம்... சம்யு காலேஜ்ல வந்து ஆறு மாதத்தில் இந்தளவு பாப்புலர் ஆகிட்ட. என்ன ஒரு குறை நீயும் அண்ணாவும் நேரில் பேசியோ அறிமுகப்படுத்தியோ செய்யாமா எஸ்கேப் ஆகற" என்று கிண்டல் செய்ய புன்னகை பூத்தவள் அப்படியே உறைந்து போனாள்.
ஆரவ் கண்கள் ரௌவுத்திரமாக திவேஷ் சட்டையை உலுக்கி கொண்டுயிருந்த காட்சியை கண்டு.
ஆரவ் இருந்த இடம் நோக்கி ஓடிட, "யாரிடம் காதல் டயலாக் விட்ட..." என்று ஒரு குத்து விட்டான். ஓட்டு மொத்த சினத்தை காட்டி விட, தடுக்க கூட அஞ்சி நின்றாள் சம்யுக்தா.
சம்யுக்தாவை பார்த்த பின் திரும்பியவன், "இதோட உன் வேலையை நிறுத்திடு... இந்த சிண்டு முடித்து சண்டையை மூட்டற வேலையை பார்த்த, முகத்தில் மார்க் தான் விழும்" என்று தள்ளி செல்ல "ஆரு..." என்று சத்தமின்றி அழைக்க, யுக்தாவை புருவம் சுருக்கி பார்த்த ஆரவ் தன் சினத்தை தணிக்க இயலாது அவளை பார்க்காது விலகி போனான்.
யோகிதா ஆரவை கண்டு, " என்ன சம்யு இது அண்ணா இப்படி கோபமா இருக்கார். அவரை கண்ட்ரோல் பண்ண மாட்டியா." என்று கேட்க
"யோகி.. நாங்க பிராப்பரா ஐ லவ் யூ கூட சொல்லிக்கலை. பட் ஐ லவ் ஆரவ். ஆரவும் என்னை விரும்பறார்.
ஆனா அவரோட இயல்பை விமர்சனம் பண்ணற அளவுக்கு நான் பேசியதில்லை. இப்ப கோபத்தை பார்த்தா எனக்கும் பயமா இருக்கு." என்று கூறவும் பின்னால் இருந்த சந்துரு,
"பயப்படாதே சம்யு. ஆரவும் விரும்பறான். அதோட பாதிப்பு தான் இது. அந்த திவேஷ் உன்னை விரும்புவதா சொன்னானா... அதான் அது ஆரவுக்கு தெரிஞ்சது. இவனிடம் கேட்காம அவன் பாட்டுக்கு இருந்தான். திவேஷ் சும்மா இல்லாம நீ சீனியரை விரும்பற அவன் விரும்பலை. நீ சீன் போடற... இதே விரும்பிய பெண்ணிடம் காதலை சொன்னேன். சுரனையே இல்லாம இருக்கான்னு காது பட பேசிட்டான். இவன் சும்மாவே கை நீட்டுவான். அதிலும் நீ என்னவோ விநோதமா விசித்திரமோ விடுவானா. அதான் துவைச்சிட்டான். நீ வேற திவேஷ் உன்னிடம் பிரப்போஸ் பண்ணியதை சொல்லலையா? இரட்டிப்பு கோபமா இருந்தா இப்படி தான் பார்வையில் பொசுக்கிடுவான்." என்று நண்பன் புகழை விரிவுரையாற்ற,
"அண்ணா கோபமா இருக்கார் ஆனா நான் அவரிடம் இதுவரை ஒரு முறை கூட விரிவா பேசியதில்லை. போனிலும் கூட. நாலைந்து முறை மெஸேஜ் பண்ணியிருக்கேன். அவர் விரும்பறார் என்றதே என்னால இன்னமும் நம்ப முடியலை. நான் தான் வந்த நாள்ல இருந்து விரும்பறேன். பேசினா தானே அவரின் குணத்தை புரிந்து அவரிடம் பக்குவமா திவேஷ் விஷயத்தை சொல்வேன். பேசாம இருக்க திவேஷ் பிரச்சனையை சொல்ல பயந்து நானே மறைத்தேன்." என்று பேச சந்துரு தான்
"எப்படிமா பேசுவான். நீ இப்ப தான் பஸ்ட் இயர் ஏதாவது பேசி மனதில் படிப்பில் ஆர்வம் குறைந்தா அவனோட மனசு குத்துமே. படிக்கற வயது படிப்பில் தானே முதல்ல ஆர்வம் இருக்கணும். அதுவும் இல்லாம அவன் தான் அவனோட குடும்பத்தை தாங்கணும். தங்கைக்கு திருமணம் பண்ணணும். ஆன்டி வேலை இப்ப தற்காலிகமா போயிடுச்சு. இன்னும் இரண்டு வருடம் படிப்பில் கவனம் இருந்தா தானே நல்ல வேலை கிடைக்கும். உன்னை மாதிரி ஒரு பெண் விரும்பும் போது நல்ல வேலை வேண்டுமே." என்று கூறவும்
"ஏன் அண்ணா அவருக்கு அப்பா இல்லையா? தங்கை இருக்காங்களா?" என்று கேட்க சந்துரு சிரித்து
"என்னமா நீ... அவன் உன்னை பற்றி எல்லாம் தெரிந்து இருக்கான். நீ என்னடா என்றால் அவனுக்கு அப்பா இல்லையா கேட்கற? அவனை பற்றி என்ன தான் தெரியும்?" என்று கேட்டதும் சம்யுக்தா தலை குனிந்தாள்.
"சம்யு... அவனிடம் பேசு." என்று நகர நேரம் போனதும் யோகிதா கூப்பிட்டும் அசையாது அதே இடத்தில் இருந்தாள்.
ஒரு மணி நேரம் போக அவ்விடம் நோக்கி வந்த ஆரவ் சுற்றிமுற்றி பார்த்து, "பைத்தியமா டி உனக்கு... ஒரு மணி நேரமா நின்றுட்டு இருக்க. என்ன பிரச்சனை?" என்றான்.
"நான் ஒரு மணி நேரம் இருக்கேனு தெரியுது ஆனா என்ன ஏதுன்னு மெஸேஜ்ல கேட்டிங்களா....? ஒரு போன்...? நான் நிற்பது பீல் பண்ணறது எல்லாம் தெரியுது. ஆனா உங்களை பற்றி ஒன்றும் தெரியலை. பேசாம இருந்தா என்ன அர்த்தம். படிப்பு எல்லாம் ஒழுங்கா படிப்பேன். என்னிடம் பேசுங்க ஆரு" என்று கத்த போன் மணி கலைத்தது.
அலைப்பேசியை பார்க்க அதில் ஆரு என்று இருக்க, தன் பக்கத்தில் எல்லாம் சுற்றிமுற்றி பார்த்தாள். கனவாக தோன்ற போனை வேகமாக எடுத்து காதில் வைத்தாள்.
"நின்றுட்டே தூங்கற? கிளாஸ்கு போற வழியை பாரு" என்று ஆரவ் அதட்ட, "ஆரு" என்றவாறு அவனின் வகுப்பறை பார்க்க போனை கத்தரித்தான்.
கையில் வகுப்பை காட்டி போயென்று சொல்ல பயத்தில் தலை தானாக இசைந்து அகன்றாள்.
அவரிடம் பேசணும் அவரை பற்றி தெரிந்துக்கணும். வெறும் அதிர்வலையில் சிக்கி தவித்து இருக்கேன். ஆரவிடம் பேசாம என்னால எப்படி அவரின் பேச்சுக்கு கட்டுப்படறேன். மனதிலே சுழன்றவளாக வகுப்பறையை நோக்கி சென்றாள்.
மாலை ஆரவிடம் பேச பைக் எடுக்கும் இடம் வந்து நிற்க, ஆரவோ பைக்கை எடுத்தவன் அவளை காணாதது போல செல்ல, சந்துரு காதருகே "டேய் சம்யு நிற்கறா டா" என்றதற்கு அவளருகே வந்தான்.
"இங்க உன் கார் வருமா. காலேஜ் முடிஞ்சது தானே வீட்டுக்கு போ" என்று கூறி செல்லவும் சம்யு பேச வந்தவள் அப்படியே திரும்பி திரும்பி சென்றாள்.
இரவு எட்டு மணிக்கு ஆரவ் போன் செய்தான்.
எடுக்கவா வேண்டாமா என்றே யோசனையில் இருந்தவள் அவன் அழைப்பு மணி முடியவும் துடித்து போனாள்.
மீண்டும் அவளாக முயற்சி எடுக்க முனைய அவனாகவே மீண்டும் அழைத்தான்.
போனுக்கு வலிக்குமோ என்று எடுக்க அந்தப்பக்கம் "என்ன பற்றி எதுவும் சொல்லலை. எதுக்கு பேசணும்னு போனை எடுக்கலையா. சொல்லு யுக்தா" என்று கேட்க
"ஆரு அப்படியில்லை... சந்துரு அண்ணா சொன்ன பிறகு தான் உனக்கு அப்பா இல்லை என்பதே தெரியும். உன்னோட இன்பம் துன்பம் கூட தெரியாது இருக்கேன். எனக்கு ஒரு மாதிரி இருக்கு" என்று கண்ணீர் உகுத்திட,
"யுக்தா... ஏய்... அழுவுறியா...? இங்க பாரு டி. எதுவும் சொல்லாதது நான். நான் சொன்னா தானே உனக்கு என்னை பற்றி தெரியும். நான் தான் உன் படிப்பை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு இருந்தேன். எங்கப்பா நான் பிளஸ் டூ படிக்கிறச்ச இறந்துட்டார். அம்மா நர்ஸ் சூப்பர் சேலரினு பொய் சொல்ல மாட்டேன். நான் தங்கை இரண்டு பேரை வளர்க்க அது போதுமானதா இருந்தது. வாடகை மளிகை அது இது என்று மாத சம்பளம் எதிர்பார்த்து தான் வாழ்ந்தோம். இப்ப என்னோட பங்கு நான் உழைக்கிறேன்.
உன்னை மாதிரி பார்ன் வித் சில்வர் ஸ்பூன் இல்லை. ஆனா நமக்கு வரபோகின்ற குழந்தையை உன் அளவுக்கு பார்த்துக்கணும் என்ற வேகம் இருக்கு. அதுக்கு தான் சிரத்தையோட படிக்கிறேன். சாதரணமா காதலித்தவளை ராணியா வைத்துக்கணும்னு பேச்சுக்கு சொல்வாங்க. நான் விரும்பறவ நிஜமாவே இளவரசி. அவளை ராணியா தங்கதட்டில் தாங்கலைனாலும் வெள்ளி தட்டில் தாங்கணுமே" என்று பேச பேச
"ஆரு நீ ஒன்றும் தங்கம் வெள்ளி தட்டில் தாங்க வேண்டாம். உன் திண்ம தோளில் சாய்ந்து என்னை உறங்க வை. அது போதும்... நான் உன்னோட வாழ்ந்தாலே போதும். பணம் பொருள் பகட்டு நான் எதிர்பார்க்கலை." என்றவள் பேச
"யுக்தா... நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்க மாட்ட மா. ஆனா நான் செய்யணும். அப்ப தான் எனக்கு திருப்தி." என்றான் ஆரவ்.
"அத்தை எங்க வேலை பார்க்கறாங்க? என் நாத்தனார் பெயர் என்ன? அதை சொல்லுங்க" என்று சம்யு சிணுங்க ஆரவ் சிரித்தவன்
"நந்தவனம் ஹாஸ்பிடல்ல நர்ஸ். தங்கை பெயர் வைஷ்ணவி. அவள் பிளஸ் டூ முடித்து நர்ஸ் படிப்புக்கு போறா. ஒரு வருட கோர்ஸ்." என்றான்.
"ஆரு நம்ம வீடு எங்க இருக்கு?" என்றதும்,
"வீடு பார்த்துட்டு இருக்கேன் மா. என்னனு தெரியலை. ஓனர் வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்க. சரியான காரணம் சொல்லலை. அம்மா வேலை பார்க்கிற இடத்துலயும் என்னவோ புகார் வந்து கொஞ்ச நாள் வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லியிருக்காங்க. நான் ஈவினிங் நின்று பேசாததற்கு காரணம் நான் பார்ட் டைம் ஜாப் போறேன் யுக்தா. அதான் நேரம் தாமதமாக கூடாதுனு கிளம்பினேன். உன்னிடம் நின்று பேசிடலை."
"நீங்க மற்ற நேரத்திலும் பேச மாட்டிங்க. " என்று வாடிய பதிலாய் தரவும்.
"நான் பேசிட்டு தான் இருக்கேன். மனதோடு... உனக்கு தான் என் இதயப்பேச்சு புரியுதே இதுல தனியா வேற பேசணுமா? யுக்தா... வேற எதுவும் தெரியணுமா... பேசணுமா?" என்று கேட்டதும்
"பேசிட்டே இருக்கணும் ஆரு உன்னிடம்"
"யாரு நீ யா. நான் ஒரு அடி முன்ன எடுத்து வந்தா. இரண்டடி பின்னாடி நகருற. அப்படி என்ன பயம்." என்றான்.
"அது..." என்று இழுக்க,
"நோ பிராப்ளம்... சாப்பிட்டியா தூங்கு." என்று வைக்க "ஆரு... அது" என்று ஆரம்பிக்க அதற்குள் சுவாமிநாதன் வரவும் போனை வைத்தாள்.
சுவாமிநாதன் உள்ளே வந்தவர் மகளின் திருட்டு தனம் அறியாமல் இல்லை. இருந்தும் மகள் செல்லும் தூரம் எதுவரை என்ற எண்ணத்தில் விட்டு பிடித்தார்.
"சாப்பிட்டியா சம்யு" என்று கேட்கவும்
"சாப்பிட்டேன் பா" என்று சிரிக்க
"படிப்பு எல்லாம் எப்படி போகுது மா"
"மச் பெட்டர் பா. பா தூக்கம் வருது" என்று சிணுங்க சுவாமிநாதன் மகள் உறங்க போர்வை போற்றி விட்டார்.
சுவாமிநாதன் நகர்ந்ததும் போர்வை விளக்கி ஆரவ் வாட்சப் புகைப்படத்தை கேலரியில் டவுன்லோட்டை பார்த்து வெட்கம் கொள்ள சுவாமிநாதனுக்கு வயிறு பற்றி கொண்டது.
ஆரவை இன்னமும் வேறு விதமாக சூழ்நிலை கைதியாக மாற்றி பிரிக்க யோசிக்க ஆரம்பித்தார்.
ஆரவ் தன்னவளோடு பேசிவிட்டு மூச்சை ஆழ்ந்து இழுத்து விட்டவன். யுக்தா உன்னோட எப்படி எல்லாம் வாழணும்னு ஆசைப்படறேன் தெரியுமா...? என்றவன் மனம் இதமாக உணர யுக்தாவின் எண்ணங்கள் வர அதே நேரம் அந்த அலைப்பேசியின் அழைப்பு மணியும் வந்தது.
-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.
-பிரவீணா தங்கராஜ்