தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -4

தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 -4




    மயக்கம் கொண்ட சம்யுக்தாவை பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான் ஆரவ்.

      உடனே அவசரமாக சிகிச்சை துவங்க அரைமணி நேரத்தில் மருத்துவர், "பெரிதா எதுவும் ஆகலை. மோதிய வேகத்துக்கு தலையில் மட்டும் இடித்து இரத்தம் வந்து இருக்கு அவ்ளோ தான். மயக்கம் தெளிந்ததும் கூட்டிட்டு போங்க" என்று சொல்லும் வரை அவன் கை விரல் நகங்கள் எல்லாம் பற்களால் வதைக்கப் பட்டுவிட்டது.

      ஜனனிக்கு போன் செய்து அவளுக்கு விஷயம் சொல்லி இவளின் வீட்டில் இருந்து யாரெனும் வந்துவிட்டால் ஆரவ் செல்லலாம் என்று எண்ணி ஜனனிக்கு அழைக்க எடுத்தவன் கை கால் பதிவுக்கு போவதற்கு பதில் புலனத்தின்(வாட்ஸப்) பதிவில் சென்றிட, அது நேற்று அவன் பார்த்த எண்ணினை ஓபன் ஆகி காட்டியது. உச்சு கொட்டி வெளியே வரும் சமயம் அந்த கள்ளிச்செடி ஆன்லைன் காட்டியது. 
   
    மீண்டும் அதே எண்ணை பார்த்து இருக்க கள்ளிசெடி ஆன்லைன் என்றே இருந்தது.

      யோசனைகள் வெவ்வெறு பாதையில் பயணிக்க, தன் தலையை உலுக்கி ரிசப்ஷன் நோக்கி சென்றான்.

    அங்கே பணத்தொகையை கேட்டு கட்டி முடித்தவன். "எனக்கு வேலை இருக்கு. இந்த போன் அந்த பெண்ணோடையது. அதில் யாராவது நம்பரில் இருக்கறவங்களுக்கு கால் செய்தா வந்து பார்த்துப்பாங்க. அதுவரை மயக்கத்தில் இருக்கறவங்களை நீங்க பார்த்துக்கோங்க. பணம் யார் கட்டினா என்று கேட்டா மட்டும் இந்த கார்டு காட்டுங்க." என்று தன் வாலெட்டில் இருந்த தனது ஆரவ் என்ற பெயரை தாங்கிய அட்ரஸை நீட்டினான்.

    மருத்துவருக்கு பணம் வந்து விட்டது. இனி தங்கள் பார்த்து கொள்வதாக கூறி சரி என்றனர்.

     ஒரு முறை அவளின் அறைக்கு சென்று பார்க்க நினைத்த கால்களை மனதால் கட்டுப்படுத்தி யாரோ ஒருத்திக்காக மனம் தளராதே... இவள் திமிர்பிடித்தவள் என்று நகர்ந்தான்.

      ரிசப்ஷன் பெண் சம்யுக்தா போனில் இருந்த "அப்பா" என்ற எண்ணிற்கு அழைத்து விஷயம் சொல்ல அவர் அடுத்த நிமிடமே தனது காரில் பறந்து வந்தார்.

     முதலில் மகளை பார்க்க தான் ஓடினார் சுவாமிநாதன். 

     சம்யுக்தாவும் அதே நேரம் விழிதிறக்க தந்தை வந்து இருக்கார் என்பதை தாண்டி தன்னை காப்பாற்றிய ஆரவை தேடினாள். அறை மயக்கத்தில் அவன் பிம்பம் தானே தெரிந்தது என்ற எண்ணம் மேலோங்க தந்தைக்கு பார்த்து  வெளியே நிற்கின்றானா என்றே எட்டி எட்டி பார்த்தாள்.

     "என்னடா சம்யு குட்டி பார்த்து வண்டி ஓட்டக் கூடாதா. ஒரு நிமிஷத்துல பயந்துட்டேன் தெரியுமா." என்றவர் பேச்சை அவள் செவியில் சேரவில்லை.

    தற்போது அந்த ஆரவ் இருக்கின்றானா இல்லையா? என்ற எண்ணம் அதிகமானது.

     "இப்ப எப்படி இருக்கு சம்யு?" என்று தந்தை கேட்க பரவாயில்லை பா" என்றாள்.

    "உங்களுக்கு வேறெங்கும் பெயின் இருந்தா சொல்லுங்க. அப்படியில்லை என்றால் யூ கேன் கோ" என்று டாக்டர் சொல்லவும்

    "பில்... தாங்க கட்டிட்டு கிளம்பறேன். அப்பா நீங்க"  என்றாள் சம்யுக்தா தந்தையை கட்ட சொல்லும் பொருட்டு.

     "மேம் உங்களை கூட்டிட்டு வந்தவரே பில் பே பண்ணிட்டார். அவருக்கு வேலை இருந்ததால் கிளம்பிட்டார். இது அவர் கார்டு" என்று நீட்ட,

     "பரவாயில்லையே கூட்டிட்டு வந்ததும் இல்லாம பில் பே பண்ணி சொல்லிட்டு போய் இருக்கார். நல்ல மனிதன்" என்று மகள் வெறித்து பார்க்கும் அட்ரஸ் கார்டை வாங்கி பார்த்தார்.

     "சம்யுக்தா.. கிளம்பு போகலாம். இந்த ஊரில் ஆபத்துல சேர்த்துட்டு அப்படியே ஓடி போற காலம். அதை எல்லாம் மனதில் ஏற்றிக்காதே" என்று அட்ரஸை கிழித்து குப்பையில் போட்டு விறுவிறுவென கிளம்பினார். பின்னால் வந்த சம்யுக்தா குப்பை கூடையை பார்த்து அந்த அறையையிலிருந்து  விடைபெற்றாள். 

    தனது தலை விண்ணென்று வலி தர சுணக்கத்தோடு புறப்பட்டாள்.

      சுவாமிநாதன் சினத்தோடும், சம்யுக்தா மருத்துவமனையின் வெளிபுறம் யாரையோ தேடியபடியும் கண்களை நாலப்புறம் துழாவி தந்தை காரில் அமர்ந்தாள்.

     ஆரவ் வீட்டுக்கு வந்து குறுக்கும் நெடுக்கும் அலைந்தவன் கள்ளிச்செடியை கண்டான்.

    அதில் டைப் செய்து கொண்டு இருக்கும் பச்சை நிறம் தென்பட்டு பிறகு காணாமல் போனது.

    எழுதி எழுதி அழித்துக் கொண்டு இருந்த அந்த எண்.

   ஒரு கட்டத்தில் டைப் நடந்தவையை அனுப்ப இயலாது சுவிட்ச் ஆப் செய்து விட்டது. ஆனாலைனில் இருந்து போனதும் ஆரவ் உதடு ஏளனமாக வளைந்தது.

     இதுவரை இறுக்கம் கொண்ட மனம் தளர்ந்து நிம்மதியானது.

   இரண்டு நாள் ஆரவ் தன் பணியில் கவனம் செலுத்தி ஆட்களை பிரித்து புது டீம் போட்டு தயாரானார்கள்.

        அப்பொழுது ஒரு செக் வந்தது. அது "என் மகளுக்கு ஆபத்தில்  மருத்துவமனைக்கு சேர்த்து கட்டிய தொகை" என்று லெட்டரும் செக்கும் வர, அதில் இருந்த தொகை ஆரவ் கண்களுக்கு பிளாங் செக்காக காட்சியளித்தது.

    சிறிது நேரம் அதனை வெறித்தவன். செக்கை கிழித்து குப்பையில் வீசினான்.

     பணியின் மீது கவனம் சிதற ஜனனிக்கு போன் செய்தான்.

    ஜனனியோ "ஆரவ் பத்து நிமிடம் கழித்து பேசறேன் எங்க சார் முசுடு கொஞ்சம் ப்ளிஸ்" என்று கெஞ்ச ஆரவ் சரியென்று அணைத்தான்.

       சார்ரா... அப்ப அவள் இல்லை... ரெஸ்ட் எடுக்க வராமல் இருக்கலாம் என்றவனின் மனம் ஜனனியை காண மாலை பிரேக் நேரம் வந்தான்.

    ரிசப்ஷன் வந்தவன் பிரெண்ட்ஸ்கு கொடுக்க இன்விடேஷன் நாம சேர்ந்து சூஸ் பண்ணலாமா? என்று கேட்டு கொண்டுயிருந்தான்.

    சுவாமிநாதன் சம்யுக்தாவை போலவே வெளியே வந்து, "என்ன பிரச்சனை ஜனனி?" என்று கேட்டதும் திரும்பியவன்.

     "என்ன ஜனனி நீ. நமக்கு மேரேஜ் பற்றி இங்க யாரிடமும் சொல்லையா பார்க்கறவங்க எல்லாரும் தப்பா எடுத்துக்கறாங்க பாரு. 
    
     ஹாய் சார் நான் ஆரவ். ஜனனியை திருமணம் செய்ய போறவன். இன்விடேஷன் கடைக்கு எப்ப போகலாமென்று கேட்க வந்தேன். நீங்களும் உங்க மகள் மாதிரியே எங்களை பார்த்து தப்பா எடுத்துக்கிட்டிங்க. நான் இந்த கம்பெனியோட டீலுக்கு ஒர்க் வேற கமிட் ஆகியிருக்கேன் சார்" என்றான்.

    சுவாமிநாதனுக்கு இவன் அடிக்கடி வருகின்றானா? மகள் பார்த்து இருக்கின்றாளா? என்ற எண்ணம் போக வேகமாக பதில் பேசாமல் போனார். 

    "ஜனனி நான் இந்த கடைக்கு போறேன். அங்க இருந்து இன்விடேஷன் சிலதை போட்டோ அனுப்பறேன் எது பிடிக்கின்றதோ சொல்லு அதை ஆர்டர் கொடுத்திடுவேன்" என்று கிளம்பினான். 

   சுவாமிநாதனுக்கு ஓர்க் கமிட் வேறு என்றானே என்று ஜனனியிடம் கேட்க, ஆமா சார் நம்ம நெக்ஸ்ட் புராஜக்ட் ஆரவ் தான் பண்ணறார்." என்று பதில் தந்து நின்றாள்.

    "ஜனனி காதல் திருமணமா?" என்ற கேட்கவும்
  
    "இல்லை சார் பெற்றோர் பார்த்த வரன் தான்" என்று சொல்லவும் மகள் முகம் சில நாட்களாக இயல்பாக இல்லாமல் போனதற்கு இது தான் காரணமா? என்று யோசனைக்கு போனார்.

         சம்யுக்தா தலையில் சின்ன வலியோடு அடிக்கடி சுணங்க, தந்தை வீட்டுக்கு வந்ததும் அக்கேள்வியை கேட்டழுப்பினார்.

     "அவன் கூட ஏன் மா ஓர்க் டீல் பண்ண சம்மதிச்ச?"

     "அப்பா... பெர்ஸனல் வேற அலுவலக விஷயம் வேற. அவரோடது என்று தெரியாது நேரில் வந்த அன்று தான் தெரியும். அதுவும் கையொப்பம் பண்ணிட்ட பிறகு என்ன செய்ய அதான் விட்டுட்டேன். ஜனனியை மணக்க போறவர். அவ்ளோ தான். நீங்க ஏன் வேற யோசிக்கறீங்க." என்றாள் சம்யுக்தா.

    "என்னயிருந்தாலும்.. அவன்..."
  
    "அப்பா... முடிஞ்சி நாலு வருடம் ஆகுது. அதுக்கு திறப்பு விழா எப்பவும் ஏற்படாது." என்று அறைக்கு போனாள்.

    தலையணையை தன் நெஞ்சோடு அணைத்தவள், 'ஆரவ் திருமணம் செய்ய தலையாட்டி இருக்கார் என்றால் எல்லாத்தையும் கடந்துட்டார். அவருக்கு முடிந்துப்போன விஷயம் பேச பிடிக்காது. இந்த திருமணம் நிச்சயம் நடக்கும் அது எனக்கு தெளிவாக தெரியுது.' என்றவள் கண்ணயர்ந்தாள்.

இப்படியாக நாட்கள் செல்ல... ஆரவ் ஜனனியை பார்க்க அவள் பணியிடம் வருவது குறைவானது. ஜனனி ஆசைப்பட்டால் வேறொரு இடம் சொல்லி அங்கே காண செய்தனர்.

     ஆரவ் அதற்கேற்றது போல ஜனனி  வீட்டோடு உடையை தேர்ந்தெடுக்க சென்று வந்தான்.

   சுபாங்கினிக்கு ஜனனி ஆரவ் பேசிக் கொள்வதை கண்டு தற்போதே திருமண வைபோகம் முடிந்து நிறைவு கண்டார்.

  பொன்னை உருக்கி தாலி செய்ய கொடுத்து விடவும் செய்தனர். வைஷ்ணவி கணவன் சந்துரு கூட ஆரவ் செய்கையை கண்டு இந்தளவு மாற்றம் இவனிடமா என்று ஆச்சரியம் கொண்டான்.

   சந்துரு மற்றும் ஆரவ் நாளை மறுநாள்  நடக்கும் திருமணத்துக்கு பொன் தாலியை வாங்க சேர்ந்து வந்தனர். தங்கை கணவன் மச்சான் என்ற முறையை தாண்டி சந்துருவிடம் ஆரவ் பேசவில்லை. ஆரவும் அதை பெரிது படுத்தவில்லை. இவன் வெறுத்தால் அடியோடு வெறுக்கும் ஆள் தான் என்று நண்பனாக அறிந்தவன் ஆயிற்றே.

   தாலி வாங்கி வரும் சமயம் எதிரே ஜனனி மறுக்க மறுக்க, சம்யுக்தா அவள் கையில் அதை கொடுக்க சந்துருவிற்கு இவ எங்க இங்க. இவளை பார்த்தா கல்யாணம் நடந்த மாதிரி தான் என்று ஆரவை வேறு பக்கம் திசை திருப்ப முயல,

    அவனோ சந்துருவை பார்த்து ஜனனியை நோக்கி நடந்தான்.

      "ஆரவ் நீங்களா... மேம் கிட்ட சொல்லுங்க. இப்பவே கல்யாண பரிசா செயின் பிரசண்ட் பண்ணறாங்க. திருமணத்துக்கு வந்து தாங்க என்று சொன்னா மறுக்கறாங்க" என்றாள்.

     "ஒரு வேளை திருமணத்துக்கு வரவேண்டாம் என்று எண்ணியிருக்கலாம். வாங்கிக்கோ." என்றான் ஆரவ்.

    சம்யுக்தா சந்துருவை கண்டு அண்ணா என்று அழைக்க செல்லும் நேரம் அவன் பார்வை திருப்ப சம்யுக்தா அழைக்காமல் நிறுத்தினாள்.

    " சரி ஜனனி நான் கிளம்பறேன். இதை அப்பறமா தர்றேன்." என்று கிளம்பகனாள்.

  சந்துருவிற்கு 'இதுங்க ஏற்கனவே பார்த்து இருக்குதுங்களா. கடவுளே... இந்த திருமணம் நடந்த மாதிரி தான்'. என்று மனதோடு புலம்பினான்.

    ஜனனியோ இன்னிக்கு பிறகு வெளியே விட மாட்டாங்க சொன்னேன் மேம் நகை வாங்க கூட்டிட்டு வந்தாங்க.  திடீரென மூன்று சவரன் நெக்லஸ் எடுத்து பரிசு என்று நீட்டினாங்க. மறுத்ததும் செயின் வாங்க சொல்லி வற்புறுத்தி செலக்ட் பண்ண வைத்துவிட்டார்கள் ஆரவ். ரொம்ப நல்ல மனசு." என்றாள் ஜனனி.

    "பணம் அதிகம் இருக்கு. செலவு பண்ணறா சரி நான் வர்றேன் " என்று சந்துருவை அழைத்து சென்றான். 

    "அவளை எப்ப பார்த்த? என்னிடம் சொல்லலை டா. அவ்ளோ வேண்டாதவன் ஆகிட்டேன் அப்படி யானே டா" என்றான் சந்துரு.

    "யாரோ ஒருத்திய பார்த்தேன்... வைத்தேன்.... உன்னிடம் எதுக்கு சொல்லணும். முடிஞ்சதை பேசி... ஜனனி வேலை பார்க்கற எம்டி அவ. திருமணத்துக்கு பிறகு ஜனனியை அங்க வேலை பார்க்க விட மாட்டேன்." என்று ஆரவ் காரில் ஏறினான். சந்துருவால் காதை நம்ப இயலாது மற்றவை பேசாது அமைதியாக இருந்தான்.

   முடிந்ததை நினைவு படுத்தினால் நிகழ்வுகள் மாறலாம் யாரெனும் பாதிக்கலாம் எதற்கு வம்பு என்று மட்டுமே அமைதியாக மாறினான்.

வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

- பிரவீணா தங்கராஜ்

     இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். 

இனி திங்கள் வெள்ளி பதிவு தவறாது வரும் என்பதை அறிவிக்கிறேன்.

 ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி 😊🙏

   



 

Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1