முதல் முதலாய் ஒரு மெல்லிய 💘 1 பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. ஜன்னலோர இருக்கை பவித்ராவுக்கு கிடைத்தது. இதே தோழிகளுடன் செல்லும் போது கிடைத்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும். இதே மற்ற நேரமாக இருந்தால் தனிமையில் செல்ல ரசித்துக் கொண்டும் , வேடிக்கைப் பார்த்து கொண்டும் வருவாள். ஆனால் பவித்ராவிற்கு இது இரண்டும் இல்லாது போனது. தற்போது நெஞ்சம் முழுவதும் சோகங்கள் ஏற்றி கணத்த இதயமாக நெஞ்சுப் பிசைந்தது அவளுக்கு. அவளையும் அறியாது உறங்க , உறக்கத்திலும் அவள் அழுத தடயம் தென்பட்டது. நேரம் வேகமாக ஓட இதோ அவளது இறங்கும் இடம் சென்னையும் வந்து விட்டது. அவளை அழைக்க அவளது தந்தையின் நண்பர் , விஸ்வநாதன் அங்கிள் காத்திருந்தார். இறங்கிய உடனே தனதுச் சிறு புன்னகையை சிந்தினாள். '' வெல்கம் டு சென்னை மா. '' என்று ஆசையாக வரவேற்றார். '' தேங்க்ஸ் அங்கிள் ரொம்ப நேரம் காத்திருக்க வச்சி...
Very nice starting and intresting
ReplyDeleteThanks for Reading & supporting
Delete