பஞ்ச தந்திரம்-17
பஞ்ச தந்திரம்-17
நைனிகாவுக்கு இரண்டாம் வருடம் துவங்கியது.
முதல் வருடம் பயின்ற போது மூன்றாம் வருட மாணவர்களும் இரண்டாம் வருட மாணவர்களும் அதிகபட்சமாக கேலி கிண்டல் செய்து ஓய்ந்திருக்க, தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்றவளை யாரும் அதிகமாக சீண்டுவதில்லை.
ஏற்கனவே காதலனிடம் தான் கற்பை கொடுத்ததால் காதலித்து ஏமாந்தவளென்று சற்று நிலவரம் மாறியிருந்தது.
என்ன பெண் தோழிகள் சுத்தமாக இல்லை. உண்மையில் தோழமை என்று இல்லாமல் தனித்து இருந்தாள்.
நேரத்திற்கு கல்லூரி வருவதும், வகுப்பில் நுழைவதும், பாடத்தை கவனிப்பதும் என்று இருக்க சின்ன சின்ன பிரச்சனைகளை சந்தித்தாள்.
திரிஷ்யாவுமே விவாகரத்து ஆனவளென்ற அடைமொழியை சுமந்து, ஒரு பெண் குழந்தைக்கு தாயென்ற பதவியும் பெற்றாள்.
நைனிகா போல தோழமை இல்லாமல் இல்லை. சேல்ஸ் கேர்ள் என்பதால் பலரிடமும் பேசி பழகிட வேண்டிய கட்டாயம். திரிஷ்யாவும் பழக அஞ்சவில்லை. யாராக இருந்தாலும் எடைப்போட்டு பழகினாள்.
எல்லோரிடமும் கூடிய சீக்கிரத்தில் திரிஷ்யா நல்ல அறிமுகமானாள்.
கடையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தனுஜாவை கூட அழைத்து வந்தாள்.
தனுஜாவையும் நன்றாக மற்றவரிடம் பழகவிட்டு கூடவேயிருந்தாள்.
தனுஜா யாரிடமும் அறிமுகமானாலும் அம்மா பெயர் திரிஷ்யா என்பாள். அப்பா பெயரை கேட்டால் மட்டும் திரிஷ்யாவை ஏறிட்டாள்.
அப்படி யாராது கேட்டால் விவாகரத்து வாங்கியாச்சு. இனி பெயர் எதுக்கு?" என்று மழுப்பினாள்.
தற்போது எல்லாம் ரஞ்சனா வீடியோ காலில் வருவதில்லை. வாய்ஸ் காலில் இப்படி தான் அழைப்பாள்.
லேசாக தேகமெங்கும் மாறிக்கொண்டு வரவும், 'என்னை ஆரோக்கியமா பார்த்ததாவே உங்க மனசுல பதியட்டும். இப்படி கட்டெறும்பு தேய்ந்து ஓட மாறிய உருவம் வேண்டாம் என்று அந்த நேரத்திலும் வியாக்கானம் பேசினாள்.
தனுஜா ஓரளவு தேடாத வகையில் திரிஷ்யா பார்த்துக் கொள்ளவும் மனதார நன்றியுரைத்தாள்.
இப்படி சலசலத்து ஓடிக் கொண்டிருந்தவர்களின் வாழ்வில் அமைதியாக ஓடியது.
மஞ்சரி பாட்டியின் அவுட் ஹவுஸில் தான் திரிஷ்யா-தனுஜா வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள். எப்படி அழைத்தும் அவுட் ஹவுஸே போதுமென்றாள்.
நைனிகாவும் மஞ்சரியும் பெரிய வீட்டில் உலாவந்தார்கள்.
தருண் சில நேரம் பாட்டியிடம் உரிமையாக பேச வருவான். ஆனால் சட்டைசெய்யாது இருப்பார். நைனிகா மட்டும் எங்கே பேரன் பாசத்தில் விழுந்திடுவாரோயென யோசித்தது உண்டு. ஆனால் பேசினாலும் பேசாவிட்டாலும் அவளுக்கு அதில் எவ்வித கருத்தும் குறுக்கே வந்ததில்லை. அப்படி மஞ்சரி கண்ணும் கருத்தாய் பாச மழை பொழிவார். சில நேரம் ஏன் லேட்? எதுக்கு லேட்? என்று அதிகாரமாகவும் அன்பாகவும் அக்கறைகளும் தென்பட காரணங்களை அடுக்குவாள்.
மஞ்சரி கூட சில நேரம் "ரொம்ப அதட்டிட்டேனா?" என்று கேட்கவும் "இப்படி அக்கறை வைக்கணும் பாட்டி" என்று கொஞ்சுவாள்.
தருணிற்கே பாட்டி தன்னை ஏற்றாலும் முன்பு பாசத்தில் நெகிழ்ந்தது போல பழகுவதில்லையென்று தாய் தந்தையிடம் கூறுவான். ஓரளவு சொத்தெல்லாம் எடுத்ததால் செத்தால் பார்ப்போம் என்று கடந்துவிட்டார்கள் உறவுகளுமே.
அன்று திரிஷ்யா வீட்டுக்கு வரும் நேரம் மஞ்சரியிடம் ஒரு ஆண் பேசிக் கொண்டிருந்தான்.
திரிஷ்யா வரவும் எழுந்தவன், "வர்றேன் அம்மா. நீங்க அவங்களிடம் பேசிட்டு சொல்லுங்க" என்றவன் வெளியே செல்லும் நேரம் தனுஜாவின் முன் மண்டியிட்டு சாக்லேட் வழங்கினான்.
தனுஜாவோ வாங்கலாமா வேண்டாமா என்று திரிஷ்யாவை ஏறிட்டு முடித்தாள்.
திரிஷ்யாவோ யாரோ மஞ்சரி அம்மாவின் உறவினர் சாக்லேட் வாங்கி வந்து பார்த்து விட்டு தனுஜாவிடம் வழங்குவதாக எண்ணிக்கொண்டாள்.
அதனாலே ''வாங்கிக்கோ
ஆச்சி சொந்தக்காரங்க" என்று கூற தயக்கமின்றி வாங்கினாள்.
வீட்டு சாவியை பெற்று திரிஷ்யா செல்ல வந்தாள். மஞ்சரி சாவியை கொடுத்துவிட்டு, "இன்னிக்கு நீயும் தனுஜாவும் நைட்டுக்கு சாப்பிட வந்துடுங்க" என்று கோரிக்கை வைத்தார்.
சில நேரம் இப்படி அழைப்பு விடுப்பார்கள் அதனால் திரிஷ்யாவும் சம்மதமாய் தலையாட்டி மகளை தங்கிருக்கும் அவுட்அவுஸிற்கு அழைத்து சென்றாள்.
தனுஜாவிற்கு பால் ஆற்றி கொடுத்து விட்டு வீட்டுபாடத்தை சொல்லி கொடுத்தாள் திரிஷ்யா.
திரிஷ்யா வெகுவாய் மாறியிருந்தாள். உதய் என்ற மைந்தனை எண்ணி எண்ணி தனுஜாவை வளர்ப்பதில் குறையொன்றும் வைத்திடக்கூடாதென்று முடிவோடு இருந்ததால், உதயை மறந்தாள் தனுஜாவை மட்டும் மகளென்று பதியவைத்து கொண்டாள். அப்படியிருந்தும் உதய் சில நேரம் மனதை ஆட்டிபடைப்பான்.
தனுஜா எல்லாம் சமத்தாக பாடம் படித்து பொறுப்பாய் உணவை விழுங்கி தமது பொருளை சீராக எடுத்து வைத்து சமத்துக்குட்டியாக இருந்தாள்.
உதய் அப்படியேதும் கிடையாது. அங்கு என்ன செய்வானோ? வேதாந்த் மணந்தப்பெண் எப்படி நடத்துகின்றாளோ? இதே பதபதப்பு சில நேரம் நெஞ்சை அழுத்தும். அப்பொழுது எல்லாம் கடவுளை வேண்டிக்கொள்வாள். வேறென்ன பிரச்சினை சரிச்செய்ய முடியுமா?
எட்டு மணி ஆகவும் தனுஜாவை அழைத்து கொண்டு மஞ்சரி வீட்டிற்கு வந்தாள். நைனிகாவோ "ஹாய் குட்டி... வாங்க வாங்க... கிச்சடி உப்புமா" என்று தட்டை திறக்கவும் முந்திரி திராட்சையோடு தட்டில் நெய்மனம் இழுக்க அமர்ந்தனர்.
திரிஷ்யா மஞ்சரி அருகருகே அமரந்து சாப்பிட, "திரிஷ்யா... வேதாந்த் மேரேஜ் பண்ணியது போல நீயும் பண்ணிக்கலாம்ல" என்று கேட்டதும் தான் தாமதம்.
"என்னம்மா ஜோக் பண்ணறிங்க." என்று சிரித்தாள்.
"ஏன் ஆண்கள் மட்டும் மேரேஜ் பண்ணிக்கணும். நீ மேரேஜ் பண்ணிக்க மாட்டியா?" என்று மஞ்சரி கேட்டதும் திரிஷ்யா யோசித்தாள்.
"அப்படின்னு இல்லைம்மா.. வேதாந்த் மேரேஜ் பண்ணிருக்கான்னா அவனுக்கு அவங்க அப்பா அம்மா சப்போர்ட். எனக்கு.... எங்கப்பா அம்மா சப்போர்ட் இல்லை. அதோட வேதாந்த் கையில இருக்கறது அவர் குழந்தை. கல்யாணம் பண்ணிக்கறவ பொண்ணு. உதயை ஏற்றுக்கலாம். சப்போஸ் ஏற்றுக்கலைனாலும் வேதாந்த் பேரண்ட்ஸ் தயவில் இருப்பான்.
நான் கல்யாணம் செய்தா யார் சப்பெர்ட் பண்ணுவா? என்னை முதல்ல யார் கல்யாணம் செய்துக்க தயாரா இருப்பா, அதோட நான் என் குழந்தையா நினைக்கிற தனுவை யாரும் ஏத்துக்காம போனா?
எந்த உறவும் எனக்கு தேவையில்லை. நான் யோசிக்கப் போறதும் இல்லை. எனக்கு தனு மட்டும் போதும். என் வாழ்க்கையில ஒரு பிடிப்பை உண்டுப்பண்ண" என்று பேசவும் அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தார் மஞ்சரி.
"சரி உன்னையும் தனுஜாவையும் ஏற்றுக்கற ஒருத்தர் வந்தா என்ன செய்வ?" என்று கேட்கவும், "திரும்ப ஜோக் பண்ணாதிங்கம்மா." என்று சாப்பிட்டவள் இன்று மஞ்சரி பேசுவதும், மாலை ஒருவன் வந்து சென்றதையும் யோசித்து பார்த்தாள்.
"அம்மா." என்று அர்த்தமாய் பார்வையிட, "சொல்லு." என்றதும் நைனிகா தனுஜாவை அழைத்து கொண்டு விளையாட அழைத்து சென்றாள்.
திரிஷ்யா சாப்பாட்டதும் கை கழுவி எழுந்தாள்.
மஞ்சரி சோபாவை காட்டி அமர கூறினார்.
"முடியாதும்மா" என்று இத்தனை நாட்கள் வீரமான பெண்ணாக மாறியவள் எல்லாம் நடிப்பாக மாறி கலங்கினாள்.
"ஏன் முடியாது?" என்று மஞ்சரி கேள்விக்கேட்க, "அம்மா ஒரு தடவை பட்ட அவஸ்தையை திரும்ப நடக்கணுமா? வேண்டாம் அம்மா" என்று மறுத்தவள் எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.
"ஒரு நிமிஷம்... அந்த பையன் பேரு ருத்ரன். கார் விபத்துல மனைவி குழந்தையை இழுந்துட்டார். ஒரு வருஷமா மனைவி குழந்தை இல்லாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்குனு சொன்னார். இரண்டு முறை சூசைட் பண்ண முயற்சி செய்து வீட்ல வேலைக்காரங்க காப்பாற்றிட்டாங்களாம்.
நம்ம முதல் முறை சந்திச்சோமே அன்னைக்கு அவரும் கடல்ல முழ்கி சூசைட் பண்ண வந்திருக்கார். நம்ம ஐந்து பேரும் பேசியதை தூரத்துல இருந்து பார்த்திருக்கார். அதோட நம்மளை பின் தொடர்ந்து வந்திருக்கார்.
நாம எல்லாரும் ஹுமன்ஸ் ஹாஸ்டல்ல ஏறியிறங்கி போகறவரை பார்த்திருக்கார்.
அதோட நைனிகா பிரச்சனை கேள்விப்பட்டிருக்கார். நம்ம தனியா வந்ததில் க்ளோஸா வாட்ச் பண்ணி தனி தனியா நம்ம பிரச்சனையை தெரிந்திருக்கார்.
தனுஜாவை நீ வளர்க்க முடிவெடுத்தப்பிறகு தான் அவருக்கு ஒரு க்ரிப் வந்திருக்கு. நாலு பொண்ணுங்க சேர்ந்து போல்டா முடிவெடுத்திருக்கறப்ப, தான் ஏன் திரும்ப ஒரு வாழ்வை வாழக்கூடாதுனு முடிவெடுத்து இருப்பார் போல. அவருக்கு தனுஜாவை பார்க்கறப்ப அவரோட குழந்தையை நினைவுப்படுத்தியிருக்கு.
அதனால அடிக்கடி தனுஜாவை பார்க்க வந்திருக்கார். உன்னையும் பார்த்திருக்கார்.
நீ அவளை நல்ல அம்மாவா நடந்துக்கறதை பார்த்து பெறாத குழந்தையை அன்பா வளர்ப்பதை புரிந்து கொண்டார்.
வாழணும்னு ஆசைவந்திருக்கு. தனுஜாவுக்கு அப்பாவா. உனக்கு கணவனா வர ஆசைப்படறார்.
உன்னிடம் நேரிடையா பேச இரண்டு மூன்று முறை கடைக்கு வந்திருக்கார். ஆனா தயக்கமா இருந்திருக்கு. அதனால உன்னோட கார்டியனான என்னை சந்திக்க வந்துட்டார்.
முடிவு உன்னிடம் தான். இரண்டு நாள் நேரம் எடுத்துக்கோ." என்று கூறவும் நைனிகா தனுஜாவை அழைத்து வர திரிஷ்யா அவுட்ஹவுஸிற்கு கிளம்பினாள்.
"என்னடி இது... தப்பு செய்தவன் எல்லாம் மறுகல்யாணம் செய்துக்க தயங்கவே மாட்டறாங்க. ஆனா உண்மை நியாயம், பண்புனு ஒழைக்கமா வாழறவங்க தான் ஏகப்பட்ட கஷ்டத்தை சுமக்கணும்?
ஏன்டி... நீயாவது காலேஜ் முடிச்சி கல்யாணம் பத்தி யோசிப்பியா. இல்லை வருண் செய்ததை மனசுல நினைச்சிட்டு வாழ்க்கையை தியாகம் செய்ய போறியா?" என்று மஞ்சரி நக்கல் செய்து கேட்டதும், "பாட்டி... நான் திரிஷ்யா அக்கா மாதிரி யோசிக்க மாட்டேன். வருணை எல்லாம் ஓவர் டேக் பண்ணற மாதிரி தருணோ அருணோ வந்தா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி குழர்தை பெத்து காட்டுவேன். ஆனா இந்த முறை அவசரப்பட மாட்டேன். காதல் உணர்வோட மனதோட என்னை புரிந்துக்கறவனா வரணும். வருவான்." என்று கூறவும் மஞ்சரி நிம்மதி அடைந்தார்.
எங்கே தன் பேரனை எண்ணி இவள் வாழ்க்கையை கருகி கொள்வாளோயென பயந்தார். இன்று அது முற்றிலும் நீங்கியது.
இங்கே மஞ்சரி நைனிகா தெளிவாக பேசி முடிக்க திரிஷ்யா மிகுந்த குழப்பத்தில் தவித்தாள்.
பெயரை யோசிக்க 'ருத்ரன்' என்றதும் அவனு தன்னை கடந்தப்போது தனுஜாவிற்கு சாக்லேட் வழங்கி ஏறிட்ட பார்வையை நினைவேட்டில் மீட்டெடுத்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Arumai sis. Adutha epi seekkiram podunga
ReplyDeleteSis epo nxt epi varum
ReplyDelete