தித்திக்கும் நினைவுகள்-11

 


அத்தியாயம்-11

ஜோதி பரீட்சை முடியவும் வேதவள்ளி உடல் நிலை சற்று தேறியதும் இருவரையும் கௌதமே காரில் அழைத்து ஊருக்கு சென்றான்.

சியாமளா முதலில் பயந்தாலும் பின்னர் ஜோதி வேதவள்ளி பேச்சில் வேதவள்ளிக்கு எவ்வித கோவமும் இல்லை என்று தோன்றி பேச முனைந்தார்.

சிவா வந்தவுடன் அறிமுகம் செய்து பேச வேதவள்ளி கண்டு தயக்கத்துடன் ''வாங்க அத்தை'' என்றான்.

''நீ ஒன்னும் என்னை அத்தை என்று கூப்பிடாதே'' என்றதும் சியாமளா சிவா இருவருமே கொஞ்சம் பயப்பட ஜோதி சற்றே சிரிப்புடன் சிவாவை நோக்க அடுத்த நொடி,

''நீயும் என்னை ஆச்சி என்று கூப்பிடு. நீயும் என்னை மதினி என்று எல்லாம் கூப்பிடாதே அம்மா என்று கூப்பிடு'' என்றதும் சியாமளவிற்கு அழுகையே வந்து விட்டது. அப்படி என்றால் என்னை மேகலை அக்கா போல தன்னை மகள் ஸ்தானத்தில் அல்லவா இப்பொழுது பார்க்கின்றார்கள் என்று மகிழ்ந்தாள்.

வேதவள்ளிக்கு மாடி படி வசதியாக போக வர இயலாத காரணத்தால் கீழே அறையிலே தங்கிட எப்பொழுதும் போல மாடியில் கௌதம் தனி ஆட்சி புரிந்தான்.

அடுத்த நாள் சாதனா மட்டும் வந்து இருக்க ஜோதிக்கு அளவில்லா ஆனந்தம் வந்தது. கல்லூரி கதை முழுதும் பகிர்ந்தாள். அதை சிவா கூட பக்கத்தில் இருந்தே கேட்டுக் கொண்டான். தனது தங்கை பேச்சிலும் சற்று மாறுபாடு இருக்கின்றது. முன்பு இருந்த அச்சம் இல்லை. தெளிவாக தனக்கு தேவைகளை கேட்டு பெறுகின்றாள். முன்பு போல உங்க இஷ்டம் என்று விழி பிதுங்கி அறியாத மடமை போல இல்லை.

சாப்பிட அமரும் போது தான் சனா கௌதமை பார்த்ததே. உன்ன பார்க்க தான் டா வந்தேன் என்ற காதலோடு இருந்தாள். அவனும் சாப்பிடும் பொழுது அவளை கவனிக்கவே செய்தான். வேதா அதனை கவனிக்கவே செய்தார்.

கௌதம் ஒரு பெண்ணை பார்க்கின்றான் அதுவும் சாதாரணமான பார்வை அல்ல காதல் பொதிந்து இருப்பதாக பட பிறகு அவனிடம் கேட்க வேண்டும் என்று இருக்க, சாப்பிட்டு முடித்த கையேடு சிவா வந்து சாதனா காதில் ஏதோ கூற ''அப்பறம் போகலாம் டா'' என்றாள். அவனோ கையை பிடித்து இழுத்து சென்றான்.

இதுவரை அவளை காதலோடு பார்த்து இருந்தவன் ஏதோ பெரும் தவறை செய்தவன் போல விதிர்த்தான். சாதனா ஒவ்வொரு முறையும் சிவாவோடு பழகும் போதும் அவனுள் பெரும் வலியும் உண்டானது. சே சிவா சாதனா இருவரின் நெருக்கம் மறந்து இவ்வளவு நாள் இருந்துவிட்டேன். சாதனா சிவாவை மணக்க இருக்கும் போது நான் அவளை.... சே முதலில் அவளிடம் என்னை அறியாமல் பழகுவதை குறைக்கணும் அதற்கு முதலில் அவள் என் கண் அருகே இருக்க கூடாது.

வேதவள்ளியிடம் தனக்கு ஆபிஸ் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு நீங்கள் திரும்ப வருவதற்கு முன் கால் செய்யுங்கள் வந்து அழைத்து செல்கின்றேன் என்று நொடியும் தாமதிக்காமல் கிளம்பிவிட்டான். வேதாவிற்கு என்ன இவன் வந்ததும் இப்பொழுது செல்கின்றான். அப்படி என்றால் அந்த பெண் மீது சாதாரணமாக தான் பார்த்திருப்பானோ?! தேவையில்லாமல் மனக்கோட்டை அல்லவா கட்டிவிட்டேன் என்று நினைத்தார்.

சாதனா சிவா வீட்டுக்கு வந்து சேரும்போது அங்கு கௌதம் இல்லை என்பதை அறிந்து சாதனா தவித்தாள். உன்னை பார்க்க தானடா வந்தேன் இப்படி ஓடிவிட்டாயே?! என்று மனதோடு புலம்பினாள்.

அவனுக்கு குறுந்செய்தி அனுப்பி ஏன் கிளம்பிடீங்க? என்றாள் அதற்கு பதிலில்லை ஏதாவது பிரச்சனையா? என்றாள் அதற்கும் பதில்இல்லை. அவன் பார்க்கவில்லை போல என்று இருக்க வாட்சாப்பிலே பார்த்துவிட்டதாக இரு ப்ளூ டிக் காட்டியது. வேலை டென்ஷன் இருக்குமோ என்று போனில் கேட்டுவிடலாம் என்று அழைக்க அவன் எடுக்கவில்லை.

மீண்டும் மீண்டும் முயன்றாள். அவன் அதை கட் செய்தான். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் அழைக்க இம்முறை அட்டன் செய்தான்.

''எதுக்கு இப்போ தொடர்ந்து கால் செய்யற?'' என்றான் அதில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிந்தது.

''என்னாச்சு உடம்புக்கு சரியில்லையா? உடனே கிளம்பிடீங்க'' என்றாள்.

''உங்கிட்ட சொல்லிட்டு போகணும் என்று இல்லையே. அது என் விருப்பம், நீ என்ன எல்லாம் சொல்லிட்டே வா செய்யற?'' என்று கடுமையுடன் பேசினான்.

''ஏன் இப்படி...'' என்று பேசும் போதே அணைத்து இருந்தான். மீண்டும் அழைத்தால் சுவிட்ச் ஆப் செய்ய எண்ணினான். ஆனால் அவளோ குழப்பத்துடன் இப்போ கௌதம்மை தொந்தரவு பண்ண வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

அவனுக்கோ இனி இது தான் சரி அவள் பேச முயன்றால் கடினமாக பேசிட வேண்டும். மெசேஜ் அனுப்பினால் திரும்ப பதில் அனுப்ப க்கூடாது. அது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே என்று நினைத்தான். அது எவ்வளவு பெரிய வலி கொடுக்கும் என்று ஒரு முறை அவனே அறியும் வரை...

வேதவள்ளி ஜோதி விடுமுறை முடிந்து கிளம்பும் அன்றும் கௌதம் வர முடியலை சிவாவோடு வர சொல்லிவிட்டான். சிவா இருவரையும் அழைத்து வந்து வாசலிலே விட்டுவிட்டு சென்றான். போகும் போது ஜோதியிடம் நல்லா படி... நல்ல பேர் எடு'' என்று சொல்லி பணமும் கொடுத்துவிட்டு கிளம்பினான். ஜோதி மிகவும் மகிழ்ந்தாள்.

இப்பொழுது எல்லாம் சாதனா மெசேஜ் செய்தால் கௌதம் ரிப்ளை பண்ணுவதில்லை. ஆனால் சாதனா போடும் ஸ்டேடஸ் தினமும் பார்ப்பான் அவளும் அதனாலே நாய்க்குட்டியோடு எடுக்கும் புகைப்படம் முதல் ப்ரெண்ட்ஸ் கூட எடுக்கும் புகைப்படம் வரை எல்லாம் தினமும் ஒன்றாக வைப்பாள்.

அன்று கௌதம் ஜோதியோடு வெளியே ஆடை வாங்க சென்ற போது முன்பு போலவே சாதனாவை கண்டு அவனை அறியாமலே முகத்தில் புன்முறுவல் வந்தது.

ஜோதி தான் ''ஹாய் அண்ணி வாங்க எனக்கு டிரஸ் எடுக்க வந்தேன் ப்ளீஸ் நீங்க செலக்ட் பண்ணுங்க'' என்றாள்.

''ஜோதி நீயே செலக்ட் பண்ணு இல்லைனா உன் அண்ணன் தான் பக்கத்துல இருக்காறே அவர் பண்ணட்டும்'' என்றதும்

''அண்ணி சுடி என்றால் ஓகே ஆச்சி எனக்கு சேலை எடுத்து தர சொல்லி இருக்காங்க அதனால் கொஞ்சம் கண்பியூஸ் ப்ளீஸ்'' என்று சொல்லிட வேறு வழியின்றி கொஞ்ச நேரம் கௌதம் அருகே இருப்பதே வரமாக இருக்க அவளும் சரி என ஒப்புக்கொண்டாள்.

கடையிலே கொஞ்ச நேரம் அது இது என்று எடுத்து போட்டு களைத்து பின்னர் சிவப்பு நிற சேலை ஒன்றை கல் பதித்து இருக்க தேர்வு செய்தாள்.

கௌதமிற்கு சிவப்பு எப்பொழுதும் பிடித்தம் என்பதால் அவனை பார்க்க அவனோ அதே அமைதியாக இருந்தான்.

''அண்ணி இது உங்க கலருக்கு தான் எடுப்பாக இருக்கும் எனக்கு டல்லா காட்டும் என்று சொல்லிட மீண்டும் தேடுதல் படலம் ஆனது. சாண்டல் நிற ஜரிகை புடவை தேர்ந்து எடுத்தாள்.

''அண்ணி இது சூப்பர் என்று சொன்னதும் பில் போட வந்தார்கள். பில் போடும் போது தான் கவனித்தாள். அந்த சிவப்பு நிற சேலையை யாரோ வாங்கி விட்டார்கள் என்று.

சே நான் இன்னிக்கு கார்டு எடுத்துட்டு வரலை இல்லை என்றால் நானே வாங்கி இருப்பேன் என்று ஏக்கத்தோடு சிவப்பை பார்த்து வெளியில் இருக்கும் ஐஸ் க்ரீம் இருக்கும் பக்கம் ஜோதி சாதனா வந்து விட கௌதம் சிவப்பு சாண்டல் இரண்டும் பில் போட்டு வந்து ஜோதியிடம் கொடுத்து காதில் பேசினான்.

''வாவ் அண்ணா சூப்பர்'' என்று கூறிவிட்டு சாதனாவிடம்

''அண்ணி இது உங்களுக்கு'' என்று நீட்டிட, என்ன என்று பார்க்க அதே சிவப்பு நிற புடவை

''ஜோதி எனக்கு இதெல்லாம் வேண்டாம் ஜஸ்ட் உன் கூட இருந்தேன் அதுக்காக எதுக்கு?'' என்று தவிர்த்தாள்.

கௌதமோ ''விடு குட்டிம்மா அவங்க சேலை கட்டுற பழக்கம் இல்லை போல'' என்று அவளின் குர்தா மீது பார்வை பதித்து சொன்னான்,

''ஜோதி நான் சேலை கட்டி உங்க அண்ணா பார்க்கலை ... அதுக்காக என்னவேண்டும் என்றாலும் பேசுவாறா? நீ பார்த்து இருக்கல'' என்றே நொடித்துக் கொள்ளவும்

''அப்போ வாங்கிக்க சொல்லு குட்டிம்மா'' என்று கௌதம் சொல்லிட, அவன் வாங்கி தரும் முதல் பரிசு என்றதாலே அவளும் வேறு பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

அன்று போனதும் மெசேஜ் செய்து பார்த்தாள் அவன் பதில் அனுப்பவில்லை. 'ஹ்ம் போடா நீ பதில் அணுப்பலனா என்ன என்று இருந்தும் அவனின் போட்டோ எடுத்து திட்டியபடி கொஞ்சிக் கொண்டாள்.

நாட்கள் வெகுவாக ஓடின. உங்களை நேரில் பார்த்துப் பேசணும்'' என்று அனுப்பினாள். பதில் இன்றி போக கால் செய்தாள். இவனும் அவளின் குரல் கேட்க ஆசை கொண்டு அட்டன் செய்தான்.

''என்ன? என்ன பேசணும்'' என்று கோபமாகவே கேட்டான்.

''போனில் வேண்டாம் நேர்ல...'' என்றே இழுத்தாள்.,

''போனில் சொல்லு எனக்கு நேரமில்லை'' என்று அவளை தவிர்க்க பார்த்தான்.

''ப்ளீஸ் நேர்ல தான் சொல்ல முடியும் ரொம்ப நேரம் எடுத்துக்க மாட்டேன். ஜஸ்ட் 15 மினிட்ஸ்'' அவனுக்கும் அவளை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டு ''சரி'' என்றான்.

குறிப்பிட்ட காபி ஷாப்பில் வர சொல்லி துண்டித்தான். அவள் வருவதற்கு முன்னே வந்துக் காத்திருந்தான்.

தூரத்தில் ஸுகூட்டி விட்டுவிட்டு துப்பட்டாவை சரி செய்தவாறு ஷாப்பில் நுழையும் சாதனாவை ரசிக்கவே செய்தான். அடுத்த நொடி ஓஹ் காட் அவளிடம் இந்த மனம் ஏன் அலை பாய்கின்றதோ என்று அவனே நினைத்து கட்டுப்படுத்தினான். சிவா விரும்பியிருந்தால்....

''சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்றிங்களா இந்த ட்ராபிக்...'' என்று பேச்சை துவங்கினாள்.

''இட்ஸ் ஓகே என்ன சொல்லணும் சொல்லிடு எனக்கு வேலை இருக்கு'' என்ற போதே ஆர்டர் கேட்க, இருவருமே கூல் காபி ஆர்டர் தந்துவிட்டு அமைதியானார்கள்.

அவளாகவே பேசட்டும் என்று காத்திருந்தான். ''என்ன விஷயமா இருக்கும் என்று கேட்க மாட்டிங்களா?'' என்றாள்.

''அத சொல்ல தானே கூப்பிட்டு இருக்க சொல்லு'' என்றான். அவள் தனது இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டு,

''சிவா இப்பவே கல்யாணம் செய்யணும் என்று சொல்லறான்'' கௌதம் முதலில் அதிர்ச்சியாய் இருந்தான் பின் சுதாரித்து மனதை இரும்பாக வைத்து கொண்டு,

''அதுக்கு நான் என்ன செய்யணும் அவங்க அம்மாகிட்டயும் உன் வீட்லயும் பேச சொல்லு'' என்றான்.

வருத்தமும் கோவமும் கலந்து, முதலில் அதற்கு அர்த்தம் புரியாது குழம்பி பின்னர் அதன் அர்த்தம் புரிந்து மனதினுள் 'ஒஹ் அதான் சார் இஞ்சி தின்ன மங்கி மாதிரி இருக்கியா?' என தனக்குள் சிரித்துக் கொண்டு,

''கொஞ்சம் என்னை பார்த்து பேசறீங்களா?'' என்று துடுக்காக கூற கௌதம் அவளை பார்த்து முறைத்தான்

''நான் நேரிடையா விஷயத்தை சொல்றேன். அவன் ஒரு பெண்ணை விரும்பறான்'' காதலை பற்றி என்ன நினைக்கறானோ ஏற்று கொள்வானா?

''இப்ப என்ன அந்த பெண்ணை விட்டுட்டு உன்னை கல்யாணம் பண்ண சொல்லனுமா?''

''அய்யோ அய்யோ'' என்று தலையில் அடித்து கொண்டு ''நான் சிவாவை விரும்பலை. அவனும் என்னை விரும்பலை. அவன் ஒரு பொண்ணை விரும்பறான். பேரு வளர்மதி அதே ஊர் தான். அவளும் இந்த சிவாவை விரும்பறா. அவளுக்கு தீவிரமா மாப்பிள்ளை பார்க்கறாங்க. சிவா என்கிட்ட ஹெல்ப் கேட்டான். ஊருக்கு வந்தப்ப என்னை அவகிட்ட போய் காட்டினான். நல்ல பொண்ணு அழகா இருக்கா'' வேகமாக சொல்லி முடித்தாள்.

''ஏன் அவங்க அம்மா அப்பாகிட்ட பொண்ணு கேட்டு போக வேண்டியது தானே''

''சான்ஸ்சே இல்லை அவங்களுக்கும் இவனுக்கும் ஏற்கனவே நிலதகராறு இருந்துச்சு. அப்பறம் அவங்க வேற ஜாதி... கட்டி கொடுக்க மாட்டாங்க'' என்றாள்.

''நான் என்ன பண்ணனும்''

''ஏற்கனவே உங்ககிட்ட நான் எதுவும் சொல்லலை என்று கோவம். பேச வேற மாற்றிங்க'' கௌதம் கோவம் எங்கோ மாயமாய் போனது.

அவள் சிவாவை விரும்பலை என்றதுமே போனது தான் ஆனாலும் அவள் பேச மாற்றிங்க என்று வருந்த செய்வது அவனுக்கு சாரலை அள்ளி தெளித்தது போல இருந்தது.

''நீங்களும் சேர்ந்து அவனுக்கு ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும். அவன் கேட்கலை... மாமா இறந்து கொஞ்ச நாளில் பண்றதால ஒரு வருத்தமும் இருக்கு அவனுக்கு. அதனாலயும் யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண போறதா சொல்லிட்டு இருக்கான். நீங்க அண்ணா முறைக்கு... அவ''

''அவனுக்கு என்னை பிடிக்காது'' என்று அமைதியாக இருந்தவன்.

''ஆனாலும் யாருக்கும் தெரியாம பண்ணறது... ஓகே நீ அவன் சொன்னது மாதிரியே செய். எனக்கு தெரிந்தது என்று காட்டிக்காதே. நான் வருவேன்'' என்று கூறினான்.

''தேங்க்ஸ்...''

''எப்போ மேரேஜ் தேதி சொல்லி இருக்கான்''

''18 இல்லை 27 சொல்லிட்டு இருந்தான்''

''27 ஓகே அதுவே சொல்லிடு''

''சரி நான் சிவாகிட்ட சொல்லிடறேன் அவனை வளரயும் இங்க வர சொல்லிடறேன்''

''ஓகே அப்பறம்'' என்றான்.

''உங்களுக்கு வேலை இருக்கறதா சொன்னிங்க அதனால வேற எதுவும் இல்லை'' என்று சாதனா அவன் நிலையை கருத்தில் கொண்டு கூறினாள்.

''அது அப்பறம் பார்த்துக்கறேன்'' என்று சிரித்து ''இப்ப வேலை இல்லை'' என்று வந்த கூல் காபியை மெல்லவே பருகி முடித்து குடித்தனர்.

   'அட லூசு பயலே சிவா என்னை விருப்பறான் இந்நாள் வரை என்கிட்ட பேசாம இருந்தியா... விளக்கெண்ணெய் விளக்கெண்ணெய்... ஒரு பொண்ணு உன்கூட தனியா தங்கி இருக்கேன் அப்போவே புரிலை...' என்று சனா மனதில் சொல்ல அவளின் மனசாட்சியே 'ஒய் நீயே அப்போ லவ் இல்லை அது இது என்று சொல்லிட்டு என்னை ஏமாற்றின... இப்போ கெளதம் மாமா மேல திட்டற.' என்றே அவளை சாட்டியது.

''இனிமே பேசுவீங்களா? மெசேஜ் பண்ணுவீங்களா?'' என்று ஆசையாய் கேட்க, மென்னகையை கொண்டே ''ஹ்ம்'' என்றான். அதில் வசீகரப்பட்டாள்..... பின்னர் பேசாமலே கால் மணி நேரம் பார்வையால் பேச வெய்ட்டர் வந்து பில் சொல்லி கிளம்பும் சூழ்நிலையில் கிளம்பினார்கள்.

அவள் ஒரு பக்கம் செல்ல அவனும் ஒரு பக்கம் என்று விடை பெற்றார்கள்.

*இருவரும் ஒரே பாதையில் செல்லும் நாள் விரைவில் ஏற்படுமா?

-நினைவுகள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ்

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1