தித்திக்கும் நினைவுகள்-18 (முடிவுற்றது)
அத்தியாயம்-18
ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு
இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு
ஓட்டினான்.
வீட்டில் நுழைந்ததும் ''என்னம்மா மண்டபம் பிடிக்கலயா?'' என்றான்.
''இல்லை கௌதம் அவங்க வீட்ல இன்னும் சில நெருங்கிய உறவுக்காரர்கள்
முறிக்கிட்டு இருக்காங்களாம் அதனால் சிம்பிளா இருக்கட்டும் என்று வீட்டில்
வச்சிகிட்டோம்''
என்றாள் சியாமளா.
''எத்தனை மணிக்கு விழா?''
''பதினோரு மணிக்கு இப்பதானே மணி எட்டு ஆகுது'' என்றதும் மாடிக்கு சென்றான். சனா வந்துவிட்டாளா? இல்லையா? என்று பரிதவித்தான். ஒரு வேலை தாமரை அத்தை நான் கண்டிப்பா
வருவேன்னு சனாவை வராமல் செய்து விட்டார்களா?
''எனக்கு ஒரு கைக்கு மருதாணி போதும் ஜோதி'' என்ற சனா குரல் கேட்க வேகமாக ஜன்னலில் சென்று எட்டி பார்க்க
அவனுக்கு முகம் தெரியவில்லை ஆனால் அது தனது சனா என்று புரிந்தது.
''ஐயோ அண்ணி இரண்டு கைலயும் மருதாணி வைத்தால் தான் நல்லா
இருக்கும்''
என்று வற்புறுத்தி மற்றொரு கையிலும்
மருதாணி வைத்து விட்டாள். ஜோதி வந்து இருக்கும் போதே கௌதமும் வந்து இருக்கின்றான்
என்று யூகித்தாள் சனா.
ஆனால் போன முறை போல அவன் முன் நிற்க அவன் எங்கே உடனே சென்று
விடுவானோ என்று பயந்தாள்.
சாதனா குரல் கேட்டு கௌதமே மாடிக்கு சென்று விட்டதை அறிந்த
தாமரைக்கு இப்பொழுது மகிழ்ச்சி இல்லை. ஏற்கனவே மகளின் மெலிவு கண்டு பயந்தே
போய்விட்டாள்.
தன்னால் மட்டுமே கௌதம் சாதனாவை விலகி இருக்கின்றான். அவனாக
வந்து மீறமாட்டான் என்று இப்பொழுது வருந்தினாள். தானாக சென்று கௌதமுடன் பேச
வேண்டும் ஆனால் எப்படி அவன் மறுத்து விட்டால்? என்று கலங்க செய்தாள்.
சியாமளவிற்கு சாதனா இப்படி இருப்பது வருத்தம் தர செய்தது. சிவா
காரணமா?
இருக்காது சிவா திருமணத்திற்கு அவளே
அல்லவா மகிழ்ந்து கொண்டு இருந்தாள். வேறு என்ன பிரச்சனை என்று சாதனாவிடம் கேட்க
வேண்டும் என்று குறித்து கொண்டாள்.
சிவாவிற்கு மனதில் உறுத்தலாக இருந்தது. சாதனா அவனுக்கு பிடித்த
தோழி, கௌதம் இப்பொழுது கிடைத்த பாசமிகு அண்ணா இருவரும் ஒன்றாக இணைய அவனுக்கும்
விருப்பமே. இதில் கௌதம் தான் ஏதோ காரணத்திற்காக சாதனாவை விலகுகின்றான்.
இப்பொழுது சுமுகமாக பேசும் கௌதம் சாதனவை பற்றி பேச்சு எடுத்து
அது உறவை பிரித்து விட்டாள் என்று பயந்து அமைதியாக இருந்தான்.
வேதாவிற்கு சனாவை கண்டதும் சிவா திருமணத்தில் எப்படி புதிதாக
பூத்த பூவை போல இருந்தவள் இப்படி நாராக இருப்பதை கண்டு வருத்தமே...
விழா முடியட்டும் கௌதம்மிடம் இம்முறை நானே கேட்டு விடுகின்றேன்
என்றெண்ணி கொண்டார்.
வளரின் கையில் வளையலை அணிவிக்க நேரம் வர உள்ளே எல்லா பெண்கள்
சூழ இருக்க சியாமளா வேதா இருவரும் கௌதம்மிடம் வளையல் இருப்பதை நினைத்து சியாமளா
சாதனாவிடம் ''வெளிய கௌதம் கிட்ட வளையல் வாங்கி கொண்டு வா'' என்றதும் திருதிருவென முழித்தாள்.
''ஜோதி நீ போ'' என்ற சாதனா சொல்லிற்கு
''நான் போகலை நீங்களே போய் அண்ணாகிட்ட கேளுங்க அண்ணி'' என்று வளரின் அருகே அமர்ந்து வளையலை அடுக்கினாள்.
''நேரமாகுது போம்மா'' என்று வளரின் தாய் வடிவு சொல்லிட வேறு வழியின்றி கௌதம்மிடம்
நெருங்கினாள்.
''கௌதம் மாமா அத்தை ஏதோ வளையல் கேட்டாங்க'' என்ற குரலில் சனா தன் அருகே இருக்கின்றாள் என்று பாண்டில்
கைவிட்டு வளையல் பெட்டியினை நீட்டி அவளை பார்க்க அவளின் தோற்றம் கண்டு
அதிர்ந்தான்.
தானாக பெட்டியினை பெற்று கொண்டு அவனை பார்க்காமல் உள்ளே வந்து
கொடுத்து விட்டாள்.
கௌதமிற்கு தாங்க முடியா வலி இதயத்தில். இது சனா வா என் சனா
குண்டு குண்டு கன்னம் வைத்து துள்ளி திரியும் பட்டாம் பூச்சி ஏன் இப்படி ஒளி மங்கி
திகழ்கின்றாள்?
தாமரை அத்தை அவளை ஏன் இப்படி இருக்க வைத்தார்கள் என்று அவன்
தாமரையை பார்க்க அவர்கள் முறைப்பார்கள் என்று இருக்க தாமரையோ கண்ணில் இருக்கும்
நீரை யாரும் அறியாமல் துடைக்க அவனுக்கு புரிந்தது.
சனா இவ்வளவு தூரம் தன்னை வருத்தி கொள்கின்றாள் என புரிய
இருந்தும் தாமரை செய்த சத்தியத்திற்காக மீண்டும் அமைதியாக ஆனான் வலியோடு.
ஒரு வழியாக எல்லோரும் வளையல் அணிவித்து கிளம்ப வளரும்
கிளம்பும் நேரம் வந்தது. பூஜை அறையில் சியாமளா கணவர் ரவீந்தர் மற்றும் மேகலை
புகைப்படத்தில் மீண்டும் ஒரு முறை விழுந்து ஆசி பெற்றே கிளம்பும் நேரம் சியாமளா வளர்
இருவர் மட்டுமே இருந்தனர்.
''அத்தை உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்'' என்று வளர் யாரேனும் வந்து விட்டனரா என எட்டி பார்த்து கூற
தயாரானாள்.
''சொல்லும்மா ...''
''அத்தை சாதனா பெரிய மாமா ரெண்டு பேரும் விரும்பறாங்க. ஏன் என்று
தெரியலை பெரிய மாமா வந்து சனாவை விட்டு விலகறாங்க.
எங்களுக்கு வாழ்க்கை இந்த அளவு கொடுத்ததே அவங்க ரெண்டு பேரும்
தான் அதனால அவங்களை நீங்க தான் சேர்த்து வைக்கணும். உங்ககிட்ட யாரும் சொல்லை தவிர
இது எல்லோருக்கும் தெரியும். சிவா கூட இவங்க ரெண்டு பேர் கல்யாணம் பற்றி பேசலாம்
என்றால் அவர் பிரிந்த குடும்பம் இப்போ தான் பேசுது நான் எப்படி மறுபடியும் பேசி
ஏதாவது பிரச்சனை ஆரம்பிச்சுடுமோ என்று பயப்படறார்'' என்று கூறினாள்.
''இதை ஏன் நீ முன்னாடி சொல்லலை'' என்று சியாமளா கேட்டார்.
''எனக்கும் பயம் தான் ஆனா சனாவை பார்க்க கஷ்டமா இருக்கு அதான்
உங்ககிட்ட சொல்லிட்டேன் திரும்ப வரும் பொழுது எனக்கு நீங்க நல்ல செய்தி சொல்லுங்க
அத்தை''
''வளர் நல்ல நேரம் முடியறதுக்குள்ள போகணும் வாம்மா'' என்றே அனிதா வடிவு கூப்பிட்டனர்.
''போயிட்டு வர்றேன் அத்தை'' என்று வளர் கிளம்பினாள்.
கௌதம் கிளம்புவதற்குள் தானே கிளம்பி சென்றிட வேண்டும் என்று
பையை எடுத்தாள்.
''அம்மா நானும் கிளம்பறேன் எனக்கு வேலை இருக்கு'' என்று கௌதம் பேச்சில் அப்படியே பையை கீழே போட்டாள்.
''கௌதம் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்'' என்று சியாமளா நிறுத்தினாள்.
''போனில் சொல்லுங்க இப்போ எனக்கு அவசரம்'' என்று சாவியை தேடினான்.
''ஏன்ப்பா எப்ப பாரு போகறதிலேயே குறியா இருக்க?'' என்று சனாவை பார்த்து பேச ஆரம்பித்தார்.
''அதெல்லாம் இல்லை ம்மா வேலை தான்'' என்றவன் செல்வதில் தவித்தான்.
''உட்கார் கொஞ்ச நேரம் பேசணும்... நீ என்னை அம்மாவா நினைக்கறயா?'' என்று கேட்டாள்.
''ஆமா கொஞ்ச காலமா.. இதுல என்ன சந்தேகம்'' என்றான்.
''சரி அப்போ நான் ஒன்னு கேட்கறேன். ஊரில் இன்னிக்கு வந்த
உறவுகளில் சிலர் உன்னை விட்டு சிவாவுக்கு கல்யாணம் முடிச்சதை சொல்லி பேசறாங்க.
அதனால் உனக்கு திருமணம் செய்யலாம் என்று நினைக்கறேன்'' என்று துவங்க ஆரம்பித்தார்.
''ஊரில் சொல்லறத்துக்காக கல்யாணம் செய்ய முடியாது'' என்று கௌதம் முகம் இறுகினான்.
''உன்னை நினைச்சு ஒருத்தி இருக்காளே அவளுக்காக செய்யலாமே'' என்று சியாமளா கேட்டு விட்டார்.
''அம்மா....''
''சாதனா உன்னை விரும்பறது எனக்கு தெரியும்''
''நான் யாரையும் விரும்பலை விரும்பலை விரும்பலை.'' என்றான் கௌதம் படபடப்பாய் ஏதோ பிரச்சனை நிகழுமோ என்று அஞ்சினான்.
சிவா முன் வந்து ''அம்மா அண்ணா பொய் சொல்றார். என் லவ் அவருக்கு எப்படி தெரியும்
சாதனா சொல்லாமல். என் கல்யாணத்துக்கு முன்னாலே சாதனா அண்ணா விரும்பறாங்க.
அன்னிக்கு ரெண்டு பேரும் ஒரே கலர் ட்ரெஸ்'' என்று அண்ணாவிற்காகவும் சாதனாவிற்காகவும் பேசினான்.
''சிவா அவ உன் திருமணத்துக்கு ஒப்பீனியன் கேட்டா... ஒரே டிரஸ்
கலர் போடுறதால லவ் என்று கிடையாது'' என்று சொல்லியவனை வேதா முன்னே வந்து நின்று,
''எங்க என்னை பார்த்து சொல்லு அவளை நீ விரும்பலை என்று'' என்றதும் வேதாவிடம் அப்படி சொல்ல முடியாமல் திணறி கீழே
பார்த்தான்.
''என்ன தாண்டா பிரச்சனை அவ உன்னை விரும்பறா. நீயும் விரும்பற.
உன்னை சுற்றி இருக்கற எல்லோருக்கு இதுல சந்தோஷம் பின்ன என்ன தான் பிரச்சனை?'' என்று வேதா கேட்டார்.
''ஆச்சி ப்ளீஸ் என்னை கேட்காதீங்க என்னால எதையும் சொல்ல முடியாது'' என்றவனின் காலினை தாமரை ஓடி வந்து பிடித்து அழுதார்.
''என்னை மன்னிச்சுடு கௌதம். என்னால தான் பிரச்சனை'' என்று கதற ''ஐயோ அத்தை திரும்பவுமா ப்ளீஸ்'' என்று தூக்கி நிமிர்த்தினான்.
''என்னால தானே நீ உன் காதலை மறைக்கற. நான் வந்து சாதனவை மறக்க
சொல்லி உன் காலை பிடித்து கேட்டதால் நீ இப்படி செய்த....
ஐயோ என் மகளின் வாழ்க்கையை நானே பாழாகிட்டேனே...'' என்று தலையில் அடித்து அழுதவளை திருப்பி 'பளார்' என அறையை விட்டார் காந்தன்.
''அடிப்பாவி என் மகள் இப்படி மெலிஞ்சு சந்தோஷத்தை இழந்ததுக்கு நீ
தானா காரணம்''
என்று அடுத்த அறையை அடிக்க ஓங்கியவரை, கௌதம் தடுத்தான்.
''ப்ளீஸ் யாரையும் காயப்படுத்தாதீங்க'' என சொல்லிவிட்டு அரசமரத்தடிக்கு வேகமாக நடையை போட்டான். அங்கு
தான் தனக்கு பாரம் களைவதாக எண்ணி சென்றான்.
''ஏன் தாமரை கௌதமும் எனக்கு பிள்ளை தானே ஏன் இப்படி செய்த?'' என்ற சியாமளா கேள்விக்கு
''சியாமளா நான் ரவீந்தர் மாதிரி கௌதமும் என் மகளுக்கு துரோகம்
செய்துடுவாரோ என்று பயந்து அப்படி செய்தேன். ஆனா கௌதம் மனதில் என் மகள்
ஒருத்திக்கு தான் சொந்தம் என்று நிரூபித்து விட்டார்''
''ரவீந்தர் கூட சந்தோஷமா தானே வாழ்ந்தேன் மேகலை அக்கா தானே
பாவம்'' என்று சியாமளா உடைந்தார்.
''ஐயோ மன்னிச்சுடு சியாமளா என் மகளை சேர்த்து வை'' என்று அழுதாள் தாமரை.
வேதாவோ, "என் தம்பியிடம் மேகலையை கல்யாணம் பண்ண வற்புருத்தியது நான்
தான்.
ஒரு வார்த்தை கூட விருப்பமானு ரவீந்தரிடம் கேட்கலை. தப்பு என்
தம்பி மேல இல்லை. என் மேல தான். ஒரு வார்த்தை அவன் விருப்பம் கேட்டா அவன்
மறுத்திருப்பான்.
அதோட சியாமளாவை திருமணம் செய்திருப்பான். இந்த இரண்டு திருமணம்
என்று அவப்பெயர் வாங்கியிருக்க மாட்டான்." என்று கூறினார்.
காலம் கடந்து மாற்றயியலுமா? தற்போது கௌதம் நிலையை பார்ப்போம் என்று சூழ்நிலை இறுக்கியது.
''ஏன்ம்மா கௌதம் மாமா போட்டோ கிழிச்சப்பவே தெளிவா தானே சொன்னேன்.
அப்பறம் ஏன் அம்மா இப்படி பண்ணின?'' என்று சாதனா கண்ணீர் திவலையோடு நின்று கேட்டாள்.
''அதை இப்போ உணரறேன் சாதனா'' என்று மகளை கட்டி தழுவினார்.,
''போதும் அழுதது....'' என்று வேதா சொல்லி முடித்து''சாதனா நீ போய் அவனை சமாதானம் பண்ணு போ'' என்று கூறினார்.
''பாட்டி அவர் என்னை....'' என்று தயங்கினாள்.
''அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான். அப்படியே இருந்தா நான்
எதுக்கு இருக்கேன் போ டா'' என்று சொல்லிட சனா தனது தந்தை காந்தனை பார்த்தாள்.
''மாப்பிள்ளையை போய் பேசி கூப்பிட்டு வாடா எல்லாம் நல்லதா
முடியும்''
என்றதும் மகிழ்ச்சியோடு அரச மரத்தை தேடி
ஓடினாள்.
கருமேகங்கள் சூழ்ந்து சில்லென்ற காற்றில் வீச 'கௌதம்மிடம் போ' என்று அதுவும் சொல்லிட, அவனிடம் நெருங்கினாள்.
மரத்தின் மீது சாய்ந்து கண் மூடி இருந்தவன் சனாவின்
கொலுசொலியில் மெல்ல அவளை ஏறிட்டான்
தழைய தழைய பட்டு புடவையில் அவளின்
குண்டு கன்னம் மட்டும் இல்லாமல் சற்றே மெலிந்து இருந்தவள். சனாவின் ஒளியிழந்த
கண்கள் மின்னலாய் மாறி சிரிப்பதை கண்டு புன்னகைக்க முயன்றான்.
''உங்களுக்குனு ஒருத்தி உருகுறாளே என்று யோசிக்காம என் அம்மா
காலில் விழுந்து கேட்டதும் சார் காதலை தியாகம் பண்றீங்களா?'' என்றாள் சினத்தோடு.
''சனா அத்தை அப்படி கேட்டா என்ன செய்வேன் அவங்க...'' தயக்கத்தோடு நிறுத்தினான்.
''ஆமா என்கிட்ட வீராப்பு காட்ட முடியலை. உங்ககிட்ட எமோஷனல்
பிளாக் மெயில் பண்ணி இருக்காங்க. அதுக்காக காலில் விழுந்தா என் காதலை
நிராகரிச்சுடுவீங்களா? என்னை பற்றி கொஞ்சமாவது யோசிச்சிங்களா?'' என்றாள் முறைப்போடு
''இல்லை டி என்னால முடியலை தினம் தினம் செத்துகிட்டு தான்
இருந்தேன்''
என்றான் கவலையோடு.
''பொய் உங்களுக்கு என் நினைப்பு இருந்துருக்காது'' போலி கோவத்தோடு நகர்ந்தாள்.
''இல்லை சனா. எனக்கு தெரியும் நீ எப்படியும் மாறமாட்ட எனக்காக
காத்திருப்ப என்று ஆனால் உன்னை வருத்திப்ப என்று நினைச்சு கூட பார்க்கலை'' என்றான் வலிமிகுந்து.
''நான் ஒன்னும் வருத்திக்கலை. என் கௌதம் மாமா என் மேல வெறுப்பை
காட்டினா நான் எதுக்கு வாழனும் என்று தான் சரியாய் சாப்பிடலை'' என்றாள்.
''சனா கொல்லாதடி.... எனக்கு கல்யாணம் என்றாலே பெரியவங்க சம்மதம்
வேண்டும் என்று தீர்மானமா இருந்தேன்.
உனக்கே தெரியும் யாருக்கும் தெரியாம இருக்க கூடாது என்
அப்பா...''
என்று ஆரம்பித்தவனை
''ப்ளீஸ் நீங்க அப்படி கிடையாது. நீ என் கௌதம் மாமா'' என்று அவனை கட்டி பிடித்தாள்.
காற்றுக்கும் கொஞ்சம் அவர்களின் இறுக்கத்தால் மூச்சு முட்டி
இருக்கும்.
அவர்கள் உலகம் தனியாக உருவாக சட்டென கௌதம் ''எதுக்கு அத்தைகிட்ட அப்படி பேசின...?'' என்றான் கோபமாக நிமிர்த்தி.
''எப்படி?''
''நான் இந்த நிமிஷம் தாலி கட்டினாலும் அதை ஏற்று கொள்வாய்
என்றும் அப்படி இல்லை என்றால் வெப்...'' என நிறுத்தினான். மேலே பேச்சு வரவில்லை
''என்ன பேச்சு சனா...?'' என்றான் கோவதோடு
''எனக்கு அவங்க உன் போட்டோவை கிழித்ததால் என்ன பேசறேன் என்று
தெரியாமல் பேசினேன். நல்ல வேளை உங்க சட்டையை பார்க்கலை'' என்றவள் அவன் சட்டை பொத்தனை நோண்டிக் கொண்டிருந்தாள்.
''எந்த போட்டோ? எந்த சட்டை?'' என்று யோசித்தான்.
''நீங்க மாமா டெத்க்கு காரில் இருந்து இறங்கி என்னிடம் கழட்டி
கொடுத்தீங்களே அந்த சட்டை. அப்பறம் புக்ல பேட்டிக்கு அசோக் எடுத்தது அந்த புக்'' என்று விளக்கினாள்.
''ஓஹ் அந்த சட்டை உன்கிட்டயா இருக்கு. ஆமா நானும் நீயும்
தங்கியதை ஏன் டி அப்படி சொல்வேன்னு சொன்ன'' என்றான்.
''இதை யாரு சொன்னது?'' என்று சனா முழித்தாள்.
''அசோக் தான். அதுவும் அவன் என் சனாகிட்ட ப்ரொபோஸ் செய்ததையும்
சொன்னான்'' என்று கூறும் நேரம் பொறாமை வழிந்தது.
''ஆனா...''
''தெரியும் அவனுக்கு நீ என் சனா என்று புரிந்து என்னை சீண்டினான்'' என நொடியில் தெளிவுப்பெற்றவனாய் பேசினான்.
''ஊருக்கே தெரியுது நான் உங்க சனா என்று என்கிட்ட மட்டும் யார்
நீ என்று கேட்கறீங்க'' என்று பொய் கோபம் காட்டினாள்
''சனா ப்ளீஸ் டி கொல்லாதே இனி உன்னை அப்படி கஷ்டப்படுத்த
மாட்டேன். ஆள் ரெடி நாம லேட் தெரியுமா?'' என்று அருகே நெருக்கமாய் வந்தான்.
''எதுக்கு லேட்?'' என்று விழித்தாள்.
''சிவா வளர்மதிக்கு குழந்தையே பிறக்க போகுது. நான் அவனுக்கு
அண்ணா.. நாம இன்னும் கல்யாணமே பண்ணலை... அப்பறம் பர்ஸ்ட் நைட் நடந்து குழந்...''
''கௌதம் நிறுத்து என்ன நீ இப்படி எல்லாம் பேசுவியா?'' என்று இதயத்தின் தாளம் அதிகரிக்க மூச்சு வாங்க கேட்டாள்.
''ம்'' என தலையை சாய்த்து சிரிக்க மண்டியிட்டு பேசியவளின் கையை
பிடித்து தன் மேலயே சாய்த்து கொண்டு,
''சனா உனக்கு இந்த மரத்துல எழுதினப்ப நடந்தது நினைவு இருக்கா?'' என்றான் கிசுகிசுப்பான குரலில்.
''இருக்கு...ஆ... இல்லை'' என்றாள் மாற்றி மாற்றி
''ஏய் உண்மையை சொல்லு'' என்றான்.
''கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. நீங்க சனா எழுதி பிறகு...மு'' என்று முழுமையற்று நிறுத்திவிட்டாள்.
''நான் என்ன பண்ணினேனு தெரியுமா?'' என்று வினவினான்.
''கௌதம் மாமா வீட்ல தேடுவாங்க போகலாம்'' என நெளிய துவங்கினாள்
''பச்... அதெல்லாம் தேடமாட்டாங்க சொல்லிட்டு போ'' என்றான் சில்மிஷமாய்.
''நீங்களே சொல்லிடுங்க'' என்று போலியாய் கோபம் கொண்டாள்.
''கன்னத்தில முத்தமிட்டேன்" என்ற அந்நொடி அவளின்
கன்னத்திலும் இதழ் ஒற்றினான்.
''ஐயோ விடுங்க நான் போறேன்'' என்று எழுந்தாள்.
''சனா ஒரு கன்னத்தில தானே கொடுத்து இருக்கேன் இன்னொரு கன்னம்''
''நோ நோ'' என கன்னத்தை இருபக்கமும் பிடித்து கொள்ள செய்தாள்.
''ஏய் அப்போ அன்னிக்கு நீ தானே இன்னோரு முத்தம் கேட்டு வாங்கின'' என்று தித்திக்கும் நினைவை மீட்டினான்.
''அது அப்போ. என்னை விடுங்க நான் போறேன் யாராவது வர போறாங்க'' என்று நடந்தாள்
''நாமளா போகிற வரைக்கு யாரும் இங்க வர மாட்டாங்க. நீ கன்னத்தை
கொடுக்க விட்டா தான் நான் வருவேன்'' என்று எழாது சண்டிதனம் செய்தான்.
ஐயோ விட மாட்டான் போலயே என்று திரும்பி வந்தாள். கண்களை இறுக
மூடி கன்னத்தை காட்டி 'ஹ்ம்' என்றாள். அவளுக்கும் இந்த இடைப்பட்ட நாளின் கலக்கத்திற்கு மருந்தாக.
அவனோ அவளின் முகம் நோக்கி சென்று கன்னத்திலிருந்து இடம்
பெயர்ந்து,
அவளின் இதழை முத்தமிட்டான்.
ஒரு கணம் கண்களை அதிர்ச்சியாக நோக்கி மீண்டும் அவனின்
முத்தத்தில் நெகிழ்ந்து கரைய துவங்கினாள் சனா.
நேரம் கூட மழையும் அவர்களின் முகமெங்கும் முத்தமிட சாரலிட்டது.
சற்று நேரத்தில் சனா நிகழ்வை உணர்ந்து "கௌதம் மாமா" என தள்ளி விட்டாள்.
''என்ன பண்ணிட்டீங்க கன்னம் என்று சொல்லிட்டு லிப்ல'' என்று குழந்தை போல பயந்தாள்.
''ஒய்... நீ அப்போ குழந்தை.
நானும் சின்ன பையன்
கன்னம் ஓகே. இப்போ நீ குழந்தையும் இல்லை நான் சின்ன பையனுமில்லை அப்போ லிப்ல தானே
தரணும்'' என்று குறும்பாய் கண் சிமிட்டினான்.
''போங்க நான் போறேன் நீங்க இங்க இருந்தா என்ன என்னமோ செய்யறிங்க'' என்று சென்றவளை கரம் பற்றி அவனும் அவளோடு நடந்தான்.
''உனக்கு ஜோதி முதல் வேதா வரை எல்லாரும் சப்போர்ட் லவ்வுக்கு....'' என்று நடந்தபடி பேசினான்.
''கௌதம் மாமா நானாவது அன்னிக்கு ஹோட்டலில் உங்களை விரும்பறதை
சொன்னேன்... நீங்க இப்போ வரை சொல்லவே இல்லை'' என்றாள் கவலையாய்.
அவனோ அவளை அணைத்து ''லவ் யூ சனா." என்றான். கௌதம் அணைப்பு மன்னிப்பாய் அவளை
படுத்தி எடுத்து இறுக்கம் கூடுதலானது. அவனை விட்டு பிரிக்க இயலாத வகையில்
அதிகமாவதை எண்ணி ''ஐயோ மாமா வீட்டுக்கு போகணும்" என்று அறிவுறுத்தினாள்.
''நீங்க முதல் முதலில் சனா என்று கூப்பிட்டப்பவே நீங்க இதை
எல்லாம் நினைவு வச்சி இருப்பிங்க என்று தோணுச்சு'' என்று கையை பிணைத்திருந்தனர்.
''ரியலி'' என்றவன் மகிழ்ந்தான்.
''மாமா வீட்ல இப்போ என்ன சொல்ல?''
''ஒரே வாரத்துல கல்யாணம் தான்''
''என்னது ஒரே வாரத்துலயா?''
''எனக்கு கிராண்ட்டா வேண்டாம் சோ... சிம்பிள்ளா ரிஜிஸ்ட்டர்
மேரேஜ் அன்னிக்கு மாதிரியே ஹோம்க்கு சாப்பாடு அடுத்த நாள் ஒரு வரவேற்பு உன்
ப்ரெண்ட்ஸ் என் ப்ரெண்ட்ஸ் அப்பறம் ரிலேட்டிவ் ஓகே வா?'' என்றான் வரிசையாய்.
''ஒரு வாரதுக்குள்ளயே வா?'' என்று ஆச்சரியமாக கேட்டாள்.
''என்னால இனியும் உன்னை விட்டு இருக்க முடியாது சனா உன்னை என்
வீட்டுக்கு கூட்டிட்டு போய் என் கையாள சமைச்சு ஊட்டி விடணும்... நானே உனக்கு
சமையல் கற்று தரணும் கூடவே உன்னை சில்மிஷம் செய்யனும்'' என்றான்.
அதற்குள் வீடு வந்திட தாமரை இருவரையும் பார்த்து இருக்க, கௌதம் அவளின் கையை விடுவிக்கவா... இல்லை என்ன செய்ய என
தவித்தான்.
''சியாமளா அண்ணி மாப்பிள்ளை பொண்ணு வந்துட்டாங்க ஸ்வீட்
செய்தாச்சா?''
என்றதும் கௌதம் சனாவின் கையை மேலும்
இறுக்கி பிடித்து அழைத்து வந்தான்.
''அண்ணிக்கு நான் தான் முதலில் ஸ்வீட் கொடுப்பேன்'' என்று ஜோதி வர அடுத்து சிவா வந்து கௌதமிற்கு ஊட்டி விட்டான்.
அடுத்து வேதா இருவருக்கும் ஊட்டி விட அடுத்து வந்த தாமரையை சனா
முறைத்து ''நீ ஒன்னும் தர வேண்டாம் போ என்கிட்ட பேசாதே'' என்றதும் வேதா சனாவின் காதை திருகினார்.
''என்ன உனக்கு வாய் நீளமா? ஏதோ பெத்தவா அப்படி தான் இருப்பாங்க. அதுக்கு என்ன பேச்சு
பேசற... என் பேரனை கட்டிக்கிட்டு இப்படியே இருந்த...'' என்று காதை வலிக்காமல் திருகினார்.
அதற்கே ''ஸ்..ஆ...'' என சனா முனங்கினாள்.
''வேதா.. வேதா... என் சனாவை விடு ப்ளீஸ்... ப்ளீஸ்... என்
சனாவுக்கு வலிக்கும்'' என்று கௌதம் வர, அவன் காதையும் திருகினார்.
''இங்க கொஞ்ச நேரத்துக்கு முன்ன நான் சனாவை விரும்பலை விரும்பலை
விரும்பலை என்று சொல்லிட்டு வார்த்தைக்கு வார்த்தை என் சனாவாம்'' என்று சிரிக்க, அங்கே எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
விரைவில் கௌதம்
சொன்னது போல திருமணம் நடைப்பெற்று இல்லறம் நல்லறமாய் கௌதம்-சாதனா தம்பதிகள்
சுபமாய் வாழ்வார்களென வாழ்த்தி மகிழ்வோம்.
----சுபம் -----
--பிரவீணா தங்கராஜ்
Short and sweet story ma. Good finishing. 👍👍👍👍
ReplyDeleteThank u so much.
Deleteவெரி வெரி நைஷ்மா சூப்பர் மா💐💐 இறுதியில் சுபமாக முடிந்தது.
ReplyDeleteThanks a lot
Delete