இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

முதல் முதலாய் ஒரு மெல்லிய அத்தியாயம்-1

படம்
  முதல் முதலாய் ஒரு மெல்லிய  💘  1          பஸ்சில் அதிகக் கூட்டம் இல்லை. ஜன்னலோரச் சீட், தோழிகளுடன் செல்லும் போது கிடைத்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும். தனிமையில் செல்ல நேர்ந்தால் ரசித்துக் கொண்டும், வேடிக்கைப் பார்த்து கொண்டும் வரலாம் . ஆனால் பவித்ராவிற்கு இது இரண்டும் இல்லாது சோகங்களால் நெஞ்சம் முழுவதும் ஏற்றி, கணத்த இதயமாக மாறி நெஞ்சுப் பிசைந்தது. அவளையும் அறியாது உறங்க, உறக்கத்திலும் அவள் அழுத தடயம் போகவில்லை. நேரம் வேகமாக ஓட இதோ அவளது இறங்கும் இடம் சென்னையும் வந்து விட்டது.            அவளை அழைக்க அவளது தந்தையின் நண்பர், விஸ்வநாதன் அங்கிள் காத்திருந்தார். இறங்கிய உடனே தனதுச் சிறு புன்னகையை சிந்திட,     ''வெல்கம் டு சென்னை மா''     ''தேங்க்ஸ் அங்கிள் ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேன் . பஸ் அரை மணி நேரம் லேட் அங்கிள் அதான்''     ''பரவாயில்லை மா நான் இப்ப தான் வந்து பத்து நிமிடம் ஆகுது. கார் வையிட்டிங்ல இருக்கு போகலாமா?''     ''ம்...ஓகே அங்கிள்''           நாகரீகம் கருதி ஏதும் பேசாது வந்தனர் . வீட்டிற்கு வர ஐந்து மணி ஆய

வெற்றி எளிதல்ல

படம்
வெற்றி எளிதல்ல   காற்றுக்கு ஒலி சுமையானால்  இசை கிடைப்பதில்லை    கல்லுக்கு உளி சுமையானால்  சிற்பம் கிடைப்பதில்லை  மண்ணுக்கு ஏர் சுமையானால்  விளைச்சல் கிடைப்பதில்லை  மண்ணிற்கு மழைத்துளி சுமையானால்  நீர்துளி கிடைப்பதில்லை  தாளுக்கு மை சுமையானால்  கவிகள் பிறப்பதில்லை  தாய்க்கு சேய் சுமையானால்  தாய்மைக்கு அழகு இல்லை  வாழ்க்கைக்கு தோல்வி சுமையானால்  வெற்றி கிடைப்பதில்லை. --  பிரவீணா  தங்கராஜ் . *2008-இல் பாரதி மகளிர் கல்லூரி ஆண்டு மலரில் பிரசுரிக்கப்பட்டவை . *செப் 2008-இல்  "மங்கையர் மலரில் "  "பூஞ்சரல் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டவை .