இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

பிரம்மனின் கிறுக்கல்கள்

படம்
                    பிரம்மனின் கிறுக்கல்கள்    ராணி முத்து நாளிதழில் வெளியான எனது பிரம்மனின் கிறுக்கல்கள் நாவல். பிரம்மனின் கிறுக்கல்கள் -1 பிரம்மனின் கிறுக்கல்கள் -2 பிரம்மனின் கிறுக்கல்கள்-3 பிரம்மனின் கிறுக்கல்கள்-4 பிரம்மனின் கிறுக்கல்கள்-5 பிரம்மனின் கிறுக்கல்கள்-6 பிரம்மனின் கிறுக்கல்கள்-7 பிரம்மனின் கிறுக்கல்கள்-8 பிரம்மனின் கிறுக்கல்கள்-9 பிரம்மனின் கிறுக்கல்கள்-10 பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)                         கதை வாசித்து உங்கள் கருத்துக்களை முன் மொழியுங்கள். நன்றி 

பிரம்மனின் கிறுக்கல்கள்-1

படம்
 ஹாய் நட்புக்களே வணக்கம்.     பிரம்மனின் கிறுக்கல்கள் கதை ராணி புக்ல வந்தும் எங்க ஏரியால வாங்க மிஸ் பண்ணிட்டோம்னு சொன்ன ரீடர்ஸ்காக இங்கே பதிவிடறேன்.      உங்க கருத்தும் ஆதரவும் வேண்டுகின்றேன். முதல் அத்தியாயம் இதோ. 👇       அத்தியாயம் -1     யஷ்தவி கற்சிலை போல இறுகி மணமேடையில் அமர்ந்திருந்தாள். ஆத்விக் ஐயர் கூறிய மந்திரத்தை சிவனேனென திரும்ப கூறிக் கொண்டிருந்தான். அவன் உதடுகள் தான் வார்த்தையை உதிர்த்தது. ஆனால் நினைவுகள் எங்கேங்கோ அலைப் பாய்ந்தது.      மாங்கல்யத்தை அணிவியுங்கள் என்று கூறி ஐயர் எடுத்து கொடுத்து 'கெட்டி மேளம் கெட்டி மேளம்' என்ற வார்த்தையை மொழிந்த அடுத்த நொடி நாதஸ்வர சப்தம் கேட்டது.     அதில் எல்லாம் கவனத்தில் பதியாமல் மாங்கல்யம் ஏந்தி ஆத்விக் அமர்ந்திருக்க, யஷ்தவியும் அதே மாங்கல்யம் கண்டு விதிர்த்து இமைக்காது பார்த்தாள். ஆத்விக் யஷ்தவி இருவரும் ஒரே நேர்க்கோட்டில் அந்த திருமண மேடையிலிருந்து எழுந்திடலாமா என்று ஒத்த சிந்தனையோடு பார்வையில் தழுவிய நேரம் வீல்லென்ற மழலை குரல் நாதஸ்வர ஓசையை தாண்டி இருவரின் காதிலும் சென்றடைய, அந்த மழலை குரல் வந்த திக்கில் இருவரின் பார்வையும