நீ என் முதல் காதல் -17
அத்தியாயம்-17 ம்ருத்யு ஸ்ரீநிதி அருகருகேயிருக்க "ம்ருத்யு இரண்டு நாளா ஜீவியை காணோம் டா. என்னப்பண்ணறதுனு தெரியலை." என்று கண்ணீர் வடித்து நின்றவளிடம் "அவன் உன்னை கழட்டிவிட்டுட்டான் ஸ்ரீ. உனக்கு புரியலையா?" என்று மணக்கும் வாசனை திரவியத்தை தன் சட்டையில் தெளித்து சுவாசித்தான். ஸ்ரீநிதி அங்கிருந்த மெத்தையில் தொப்பென அமரவும், நிதானமாக "அவன் அத்தையோட தொழில்முறை எதிரியோட பையன். இதுல அத்தையவே சைட் அடிச்சிருக்கான். உன்னிடம் வாலாட்ட காதல் என்ற அழகான விளையாட்டை தொடுத்து மனசுல புகுந்திருக்கான். இப்ப நாலு நாளா போன் கான்டெக் இல்லை. இரண்டு நாளா ஆளையே காணோம். நீ பதறுற அளவுக்கு கூட அவங்க அப்பா தேடலை. அவர் கம்பெனிக்கு இப்பவும் வந்திருப்பதா நீ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஆபிஸ்ல புதுகம்பெனி என்று பேசி சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கற மாதிரி கேட்டதுக்கு அவரும் வந்ததா சொல்லற. அப்ப பையன் மட்டும் எங்கப்போவான்? லுக் ஸ்ரீ, உன்னை வச்சி அத்தையோட சாம்ராஜியத்தை அழிக்க முயற்சிப் பண்ணிருப்பான். அது முடியலை. அட்லீஸ்ட் உன்னை அசைத்து பார்த்துட்டான். நீயும் முட்டாளா கண்ணுல