நீ என் முதல் காதல் -10

அத்தியாயம்-10 

    இரண்டாம் முறையாக தன் தொண்டையில் வோட்காவை இறக்கிவிட்டு, "எங்கம்மாவை பார்த்து ஏன் ஓடின? இது தொழில்முறை வளர்ச்சியை அடியோட உடைக்கறதுக்காக என்னை லவ் பண்ணறதா நாடகமாடியிருக்கியா?" என்று ஆக்ரோஷமாய் ஸ்ரீநிதி கேட்டிருந்தாள். 
  
ஜீவியோ தலையை தாங்கி, "ஏன் ஸ்ரீ தப்பா நினைக்கிற? தொழில்ல உங்கம்மாவை டவுன் செய்யணும்னா, எங்கப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துவார். நீ என் மனைவியா ஆனதும் உன்னை வச்சி ஷண்மதி அத்தைக்கு குடைச்சல் தருவார். அவருக்கு நம்ம லவ் விவகாரம் தெரியாது.
  நீயேன் பொசுக்குன்னு என் இதயத்தை உடைக்கிற?
  
     நான் உன்னை விரும்பியது உனக்கு நாடகமா தெரியுதா ஸ்ரீநிதி?
   உன்னை செண்டிமெண்ட் வச்சி அடிமைப்படுத்த முடியாதுனு எனக்கு தெரியும். 

  நான் ஏமாத்தறேன்னா அடுத்த நிமிஷம் போடானு இதோ குடிக்கிற வோட்கா பாட்டிலை என் தலைறில போட்டு உடைச்சிட்டு போயிட்டே இருப்ப நீ. காதலாவது மண்ணாவது. 
அப்படியிருக்க நாடகம்னு சொல்லற? என் கம்பியூட்டர் லேப்டாப் போன் பேட்டர்ன், பாஸ்வோர்ட் பெயரே ஸ்ரீநிதி தான்." என்று அடுக்கடுக்காய் கூறவும், ஸ்ரீநிதி கையை வைத்து தடுத்தாள். 

  "எங்கம்மாவை பார்த்து ஏன் ஓடின?" என்று கேட்டாள். எனக்கான பதில் தெரியாமல் நான் உனது எந்த தேன் பேச்சிலும் மயங்கமாட்டேனென தீர்க்கமாய் இருந்தாள். 

    ஜீவியோ தலையை தாங்கி அங்கே வெயிட்டர் வைத்த பாட்டிலை பாதி பருகி வைத்தான். 

    "சொன்னா என்னை திட்டவோ அடிக்கவோ கூடாது. என்னை அசிங்கமா லுக் விடக்கூடாது. முக்கியமா தப்பா நினைக்க கூடாது" என்று அடுக்கினான். 

   "முதல்ல சொல்லு" என்று தாடையிறுக கூறினாள். 

   உன்னை பார்க்கறதுக்கு முன்னவே  ஒரு அவார்ட் பாங்ஷனில் ஆறு மாசத்துக்கு முன்ன ஷண்மதி அத்தையை பார்த்தேன். ஆனா அப்ப அவங்க மேரீட் வுமன் என்று தெரியாது. 
  
    அவார்ட் வாங்கிட்டு ஸ்டையிலா ஒரு வாக் பண்ணி கீழே வந்தாங்க. அவங்க ஆட்டிடியூட் பிடிச்சிருந்தது. நிறைய பேர் கைகுலுக்கி அவங்களை வாழ்த்தினாங்க. 

   உன்னிடம் பேச ஆசைப்பட்டு வந்தது போல அப்பாவை தனியா கழட்டிவிட்டு ஆன்ட்டியிடம் பேச வந்தேன். 

   முதல்ல விஷ் பண்ணினேன். அவங்களும் எல்லாரிடமும் கையை குலுக்கி தேங்க் பண்ணியது போல எனக்கு தேங்க் பண்ணினாங்க. 

   அவங்க தனியா உட்காரவும் நானா போய் அவங்க பிளேஸ்ல உட்கார்ந்தேன். அவங்க நான் ஒருத்தன் உட்கார்ந்ததை கண்டுக்கலை. 'இந்த பார்ட்டிலயே இவ்ளோ அழகான பொண்ணு அவார்ட் வாங்கறதை முதல் முறை பார்க்கறேன். மத்தவங்க எல்லாம் வயசானவங்க. அப்படியிப்படினு பேச ஆரம்பிச்சேன். 

  அவங்க வாயே திறக்கலை. 'யார்டா நீ' என்ற ரியாக்ஷன்ல என்னை பார்த்தாங்க. நான் ரொம்ப பேசறது புரியவும், என்னை நானே கஷ்டப்பட்டு அடக்கிட்டு 'உங்கப்பாவை கூட்டிட்டு வரலையா ஷண்மதி'னு கேட்டேன். 

   'அப்பா இறந்து பல வருடமாகுது. காலேஜ் முடிச்சதுலயிருந்து இந்த கம்பெனியை நான் தான் 25 இயர்ஸா ரன் பண்ணறேன்'னு சொல்லிட்டு ஸ்டேஜை தான் கவனிச்சாங்க.

   25 இயர்ஸா என்றதும் தான் எனக்கு லேசா பொறிதட்டியது. கல்யாணம் ஆனவங்களானு கேட்க தயக்கம். கழுத்துல தாலி போடலை. கால்லயும் கட்ஷூ டைப்ல கவர் பண்ணின ஹை-ஹீல்ஸா மேரீட் ஆனவங்களா இல்லையானு ஒரே குழப்பம். அதோட வயசும் தெரியலை.

  பட் என்னோட பேச்சுல நான் என்ன மோட்டில்ல ஜோள்ளு விடறேன்னு தெரிந்துக்கிட்டாங்க. அவங்களா 'எனக்கு இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. உன் வயசுல ஒரு பொண்ணுயிருக்கா' என்று சொல்லிட்டு, ஸ்டேஜை கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 

   நான் போனை எடுத்துட்டு பேசற மாதிரி தனியா வந்து டேடியிடம் அவங்களை விசாரிச்சேன். 
   அப்ப தான் டேடி 'இவ தான்டா அவ. நம்ம போட்டி தொழிற்சாலை. ஷண்மதி யுகேந்திரன் என்று சொன்னாங்க. அப்பா இத்தனை நாளா போட்டியா நினைச்சி ஒரு லேடியை திட்டுவாங்க. அது எனக்கு தெரியும். அவங்க மேரீட் ஆனவங்கனு. பட் அவங்க தான் நான் பார்த்து ரசித்த ஷண்மதி அத்தைனு தெரிந்திடவும் அசிங்கமா போச்சு." என்று பேசவும் ஸ்ரீநிதி பற்களை கடித்து ஜீவியை முறைத்திருந்தாள். 

  "சத்தியமா அவங்க கல்யாணமான பொண்ணு மாதிரியா தெரியறாங்க? உன்னோட நிற்க வச்சா உனக்கு அக்காவா தெரிவாங்க. அதுக்கு பிறகு திரும்ப ஒரு அவார்ட் பங்ஷன்ல உன்னை பார்த்தேன். அவார்ட் பங்ஷன் என்றதுமே ஆன்ட்டி நினைவு வந்தது. 

   அவங்களை மாதிரியே நீ ஜாடையில தெரிந்த. மிஸ்.ஸ்ரீநிதி என்று அனவுன்ஸ் கேட்டேன். நானா உன்னிடம் வந்து பேசினேன். உன்ன பார்த்ததும் எனக்குள்ள 'லவ் அட் பஸ்ட் சைட்' தோண்றுச்சு, அதனால லவ் பண்ணற மோட்டிவோட உன் பின்னால சுத்தினேன்.

  நீயும் லிமிட்டா பேசின. கிட்டதட்ட ஷண்மதி அத்தை மாதிரியே. கூடுதலா நீ என்னிடம் பேசிட்டே எக்ஸ்கியூஸ் கேட்டு அந்த இடத்துலயிருந்து நைஸா மூவ் ஆன் ஆகிட்ட. நான் தனியா வந்து உன்னை ரசித்து கவனிக்கறப்ப தான் ஷண்மதி ஆன்ட்டினோட போய் நின்று பேசின.

  அதுக்கு பிறகு தான் எனக்கு ஷாக்கே. நீ அந்த ஷண்மதி அவங்களோட பொண்ணுனு தெரியவந்தது. 
   
   என் பீலிங்கை எப்படி எக்ஸ்போஸ் பண்ணறதுனு சத்தியமா தெரியலை.

   அவங்க அப்படியே ரவுண்ட் கட்டி ஒரு பார்வை பார்த்தப்ப அப்ப ஓடி ஒளிஞ்சேன். கடவுளே என்னை பார்த்து ஏதாவது தப்பா நினைச்சிடக்கூடாதுனு. 
  
   கொஞ்ச நாள்ல மறக்கட்டும். சேம் இதே மாதிரி சிட்டுவேஷன்ல சந்திக்க வேண்டாம்னு ஒதுங்கினேன். 

    இப்பவரை அவங்களை கண்டா அந்த நெர்வஸ் ஆகுது. எங்க மறக்காம நினைவு வச்சி, நீ என்னிடமே ஜோள்ளுவிட்டவன் தானேனு தப்பா திங்க் செய்தா. அதான் ஒவ்வொர் தடவையும் ஒரு ஓட்டம். 

  சீரியஸ்லி நான் அந்த நேரம் ம்ருத்யுவை அட்மிட் பண்ணிட்டு உன்னோட இருந்திருக்கணும். என்னால முடியலை." என்றான் ஜீவி. 
    
   ஸ்ரீநிதி அங்கிருந்த மூன்று குப்பியிலிருந்த வோட்காவை மடமடவென தொண்டையில் இறக்கினாள். 

  "யூ இடியட் வாயில அசிங்க அசிங்கமா வந்துடப் போகுது. ஏன்டா இப்படி இருக்க? எங்கம்மா மட்டும் தானா? இல்லை என் தங்கச்சியையும் சைட் அடிச்சிருக்கியா?" என்று கோபமாக கேட்டாள். 

   "ஸ்ரீநிதி தப்பா பேசற பார்த்தியா? உங்கம்மா யங்கா இருக்காங்க. என் தப்பா? உன்னையும் அவங்களையும் பக்கத்துல பக்கத்துல நிற்க வச்சி யோசி. என் பார்வை தப்பில்லைனு புரியும்." என்றவன் இக்கட்டான நிலையில் தவித்தான். 

   "நான் யோசிக்கறது இருக்கட்டும். நீ மரியாதையா கல்யாணத்தை நிறுத்த யோசி. கல்யாண மேடை வரை கூட ம்ருத்யுவோட நான் சமாளிப்பேன். அதுவரை உனக்கு டைம் இருக்கு. அதுக்கு மேல சொதப்பின.. மகனே கொண்ணுடுவேன்" என்று எழுந்தாள். 

  ஜீவியோ ஷண்மதியை தவிர்ப்பதற்கான காரணத்தை உரைத்த நிம்மதியில் "ஷ்யூரா அப்பாவிடம் பேசறேன்." என்று வாக்கு தந்தான். 

   மனதிலோ கம்பெனி கைக்கு வந்துட்டா நானா முடிவெடுப்பேன்.' என்றான்.

ஸ்ரீநிதி எழுந்து நடக்கயியலாது தள்ளாடினாள். 
   "ஏ கார் எடுத்துட்டு வரலை?" என்று கேட்டான் ஜீவி.

    "இல்லை கால் டாக்ஸி புக் பண்ணு" என்று தள்ளாட்டதுடன் பேசவும், "இந்த நிலையில தனியா எப்படி அனுப்ப? குடிக்காதனு சொன்னா கேட்கறியா? டேஸ்ட் பார்க்கறேன்னு சொல்லி சொல்லியே எந்த நிலையில வந்து விட்டிருக்கு பாரு." என்று கடிந்தான் ஜீவி. 

   "நீ தான்டா எங்கம்மாவை சைட் அடிச்சிட்டு என்னை காண்டாக்கிட்ட" என்று குழறியது.

    "என் கார்ல வந்துடறியா?" என்று ஜீவி கேட்க, "கல்யாணத்துக்கு ஓகே வாங்க துப்பில்லை. டிராப் மட்டும் பண்ண கூப்பிடறியா போடா." என்றவள் போனை எடுத்து பேட்டர்ன் போட்டு, "ம்ருத்யு நம்பருக்கு கால் பண்ணி நான் வரச்சொன்னேன்னு சொல்லு" என்று அவனது காரில் அமர்ந்து கொண்டாள். 

  கார் கதவு திறந்தபடி வெளிகாற்று மோத தலையை தாங்கி பிடித்திருந்தாள்.

   ஜீவிக்கு ம்ருத்யு என்றதும் அவனிடம் சாரி கேட்க வேண்டுமென்று நினைத்தான். 

  அதனால் ம்ருத்யுவிற்கு அழைத்தான். "சொல்லு ஸ்ரீ" என்று மென்மையான குரலில் கேட்டான். 
  
  "ஹாய் நான் ஜீவி பேசறேன். நேத்து அப்படியே விட்டுட்டு போனதுக்கு சாரி." என்று ஆரம்பித்தான். 
   
    "இட்ஸ் ஓகே ஜீவி." என்று கூறினான். 

  "ம்ம் இப்ப பரவாயில்லையா?" என்று நலம் விசாரிக்க, ம்ருத்யுவிற்கு எரிச்சலானது. தனக்கென்னவோ ஏதோ நோய் போல அவனின் நலன் விசாரிப்பு இருக்க, "யா பைன்" என்றான். 

"நேத்து உங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு ஸ்ரீநிதியை அப்படியே விட்டுட்டு தனியா போனதுல ஸ்ரீநிதி கோவிச்சிக்கிட்டா. இன்னிக்கு அதற்கான எக்ஸ்பிளைன் சொல்லிட்டேன். பட் ஸ்ரீநிதி ஓவரா ட்ரிங் பண்ணிட்டா. கொஞ்சம் நீங்க வந்து கூட்டிட்டு போக முடியுமா?" என்று கூறவும், "எந்தயிடம்னு லொகேஷன் அனுப்புங்க வர்றேன்." என்று நறுக்கு தெரிந்தது போல பேசினான் ம்ருத்யு. 

  ஜீவி லொகேஷன் அனுப்பியதும் இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தான். 
ஸ்ரீநிதி அதற்குள் குட்டி தூக்கம் தூங்கியிருந்தாள். 

   ம்ருத்யு அவளை கைதாங்கலாக அழைத்து தன் காரில் ஏற்றிக்கொண்டான். 
  
    ஜீவியிடம் "தனியா சந்தித்து பேச எத்தனையோ காபி கேப், ஐஸ்க்ரீம் பார், மோட்டல்ஸ், ரெஸார்ட் இருக்கு. எதுக்கு பப்ல சந்திக்கறிங்க? அவ குடிக்கறது அத்தைக்கு தெரிந்தது அவ்ளோ தான். பஸ்ட் இம்ரஸ்லயே நீங்க டவுனாகிடுவிங்க. சோ ப்ளிஸ் அவாய்ட் தி பார் பப்." என்றான் ம்ருத்யு. 
   ஜீவியோ ''இட்ஸ் நாட் மை மிஸ்டேக். உங்க ஸ்ரீநிதிக்கு டான்ஸ் பிடிக்கும். பப்புக்கு அழைச்சிட்டு போக சொல்லி முதல்ல என்னை போர்ஸ் பண்ணியதே அவ தான்  
   இங்க வந்தப்பிறகு டேஸ்ட் பண்ண ட்ரை பண்ணினா. பட் இன்னிக்கு என் மேல கோபத்துல இப்படி லிமிட் தாண்டிட்டா. இதுக்கு நான் காரணமில்லை." என்றான். 
   ம்ருத்யு பார்வையும் பேச்சும் தன்னை குற்றம் சுமத்த அவ்வாறு பேசினான். 

   ம்ருத்யுவோ எதுவும் பேசாமல் கடக்க, ''எனிவே இனி இந்த மாதிரி இடத்துல சந்திக்க மாட்டோம்." என்றான்.

   ம்ருத்யுவும் தலையாட்டி நடக்க, "கல்யாணம் வரை கொஞ்சம் உதவிப்பண்ணுங்க. நான் அதுக்குள்ள அப்பாவோட கம்பெனில பொறுப்பேற்றுட்டு வந்து மாமா அத்தையிடம் பேசறேன். ஸ்ரீநிதியை பார்த்துக்கோங்க." என்றான்.

   ம்ருத்யு சரியென்று எதுவும் கூறாது வண்டியை இயக்க ஆரம்பித்தான். 
  ஜீவி அதன் பின்னே தன் காரில் ஏறி சென்றான். 

  ம்ருத்யுவோ 'மாமா அத்தையாம், இடியட். என் மாமா என் அத்தை. என் ஸ்ரீநிதி. என் ஸ்ரீநிதியை என்னிடமே பார்த்துக்க சொல்லறான்.' என்று கோபமாய் வண்டியை வேகமாய் ஓட்டினான். 

  ஸ்ரீநிதியோ அரை போதையில் உறங்கிவழிய, 'இப்ப இவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு போகணும். அத்தை மாமா என்னனு கேட்டா என்ன சொல்லறது?' என்று தவித்தவனாய் யோசித்தான். 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ் 
  
    

  

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1