நீ என் முதல் காதல் -4

 அத்தியாயம்-4


    ஸ்ரீவினிதா முதலில் மகனிடம் கூட உரைக்காமல் ஷண்மதியிடம் தாரிகா-பைரவ் பேசி சென்றதை கூறவும் ஷண்மதி உடனே சம்மதிக்கவில்லை. 


   அங்கும் இங்கும் நடக்கவும் லலிதாவோ "என்னடி இந்தளவு யோசிக்கற? சட்டுபுட்டுனு ஆகவேண்டியதை பாருங்க அத்தைனு அக்காவிடம் சொல்வனு பார்த்தா மௌவுனமா நடைப்போடற" என்று ஆதங்கமாய் கேட்டார்.


  ஸ்ரீவினிதா மருமகளிடம் தயங்கலாம். சிறுவயதிலிருந்து ஷண்மதியை வளர்த்த லலிதா ஏன் தயக்கம் கொள்ள போகின்றார்? 

   

   அதனால் இலகுவாய் கேட்டு நின்றதும் "யோசிக்கணும் அத்தை. ம்ருத்யுவுக்கு பிடிக்குதானு கேட்கணும். ஏன்னா நான் தான் கட்டாயப்படுத்தி யுகனை மணந்தேன். என் பொண்ணுக்கு வர்ற மாப்பிள்ளையையும் கட்டாயப்படுத்த கூடாது பாருங்க. நமக்கு பிடிக்குதுனு ம்ருத்யுவுக்கு பிடிக்காம ஸ்ரீநிதியை அவன் தலையில கட்டி வைக்க முடியாதுயில்லையா? 


  ம்ருத்யு படிப்பு முடிஞ்சி வரட்டும் பேசலாம். எனக்கு ம்ருத்யு விருப்பம் முக்கியம்" என்றவள் யுகேந்திரனை காணவும் யுகேந்திரனோ கழுத்தை இறுக்கிய டையை தளரவிட்டு வந்தான். 


"அதுக்கு அவசியமேயிருக்காது. பாவனா கன்பார்ம்மா சொல்லறா ம்ருத்யு ஸ்ரீநிதி லவ் பண்ணறாங்கனு. இதுல ம்ருத்யு அடுத்த வாரம் வரப்போறான்." என்று சந்தோஷமாக உரைத்தான். 


   பைரவ் எதற்கும் இருக்கட்டுமென்று யுகேந்திரனிடம் கேட்டுவிட்டார். 

  ஷண்மதி மறுத்தாலும் யுகேந்திரன் தான் கேட்டால் சம்மதிப்பானென்ற எண்ணம். 

  

     "இரண்டு பேர் மட்டும் கூடிகூடி பேசறாங்க என்பதால காதல் இல்லை யுகி." என்றதும் யுகேந்திரன் முகம் மாறியது. 


   "உனக்கு ஸ்ரீநிதியை ம்ருத்யுவுக்கு கொடுக்க இஷ்டமில்லை அப்படி தானே?" என்று கேட்டுவிட்டான். மனைவிக்கு தன்னை விட தன் குடும்பத்தை பற்றியும், ம்ருத்யு பற்றி அறிந்ததால் அவ்வாறு கேட்டு நின்றான். 


   "எனக்கு இஷ்டமில்லை என்றால் எதையும் நடத்த விடமாட்டேன் யுகி. ஏன் ஒரு உயிரை கூட இதயத்துடிப்போட மூச்சுவிட விடமாட்டேன். 


நான் யோசித்தது என் மகளோடு நிலையிலயிருந்து." என்று பூடகமாக கூறவும் அவசரமாய் தன் போனை எடுத்தார் யுகேந்திரன்.


   "பாரு இது ம்ருத்யு தங்கிருக்கறயிடம். சுத்தி சுத்தி யார் போட்டோவா வச்சிருக்கான். அவன் கப்போர்ட்ல யார் வாங்கி தந்த டிரஸா தொங்க விட்டிருக்கான்னு பாரு." என்று யுகேந்திரன் ம்ருத்யுவை அறிந்தவனாக வியாக்கானம் பேசினான். 


      "யுகி ம்ருத்யு, ஸ்ரீநிதி, ரிதன்யா என்று மூன்று பேரும் இருக்கற புகைப்படங்கள். இதுல என்னயிருக்கு. சரி அப்படியேனாலும் நான் அதுக்கு சொல்லலை." என்று கூறவந்தவளிடம், "என் பொண்ணுக்கு நான் ம்ருத்யுவை மணமகனா பார்த்திருக்கேன். என் மனைவியா நீயும் சம்மதிப்பேனு நம்பறேன். இல்லை பிசினஸ் வுமனா தனியாளா என் மகளுக்கும் நான் தான் மணமகன் டிசைட் பண்ணுவேன் ஒத்த கால்ல குதிச்சா சொல்லிடு ஒதுங்கிக்கறேன். ஏற்கனவே ஸ்ரீநிதி பிறந்தப்ப ஒதுக்கி வச்சவ தானே?" என்று ஆவேசமாய் மொழிந்துவிட்டு நடையை கட்டினான். 


  ஸ்ரீநிதியை வயிற்றில் சுமந்த கணம் யுகேந்திரன் ஷண்மதி பிரிந்து பின்னர் சேர்ந்தார்கள். அதுவொரு தனிகதை.


    ஸ்ரீவினிதாவும் மகன் பேசிவிட்டதால் மௌவுனமாக அறைக்குள் முடங்கினார். 


  ஒரு கட்டத்தில் ம்ருத்யு கட்டி கொடுக்க என்ன தடையென்று கேட்க நாவறவில்லை. அவரறியாததா? ம்ருத்யு பிறப்பு ரகசியம். 


    லலிதா தான் வழமை போல ஷண்மதியிடம் "நீ எப்பவும் எதிர்வாதம் செய்தே பழகிட்ட ஷண்மதி. யுகேந்திரன் சொல்லறதை கேளு" என்று புரியவைக்க, ஷண்மதியோ எனக்கு யுகியோட எதிர்வாதம் செய்யறது பிடிக்கும் அத்தை. முதல்ல அவரை ஸ்ரீநிதியிடம் மேரேஜ் பத்தி டிஸ்கஸ் பண்ண சொல்லுங்க. அதுக்கு பிறகு கேட்போம்" என்று எழுந்து கொண்டாள். 


      யுகேந்திரன் மாடியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவன் வேகமாய் எதிரேயிருந்த ஸ்ரீநிதி அறையை தட்டினான். 

   

   "என்ன டேடி?" என்று தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கி நின்றவளிடம், "அப்பாவை பிடிக்குமா அம்மாவை பிடிக்குமா?" என்று கேட்டதும் "உங்களை தான் பிடிக்கும் இதுலயென்ன டேடி சந்தேகம்?" என்று பேசியவளிடம், "அப்பா ஒரு டிஸிஷன் எடுத்திருக்கேன். ம்ருத்யுவுக்கும் உனக்கும் மேரேஜ் பண்ணலாம்னு. நான் ஓகே சொல்லிட்டேன். அம்மா யோசிக்கறா. வாட் அபௌவுட் யுவர் ஒபீனியன்." என்று கேட்டதும் தந்தை தாயை பார்த்து திகைத்தாள். 


   ஷண்மதி குறும்புபடர நின்றிருக்க, ஸ்ரீநிதிக்கு எரிச்சல் கூடியது. "நீங்க மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணுங்க டேடி. இதுல என் ஒபீனியன் கேட்க என்னயிருக்கு?" என்று தந்தை சொல் தட்டாத மகளென மொழிந்தாள். 


   ஸ்ரீநிதிக்கு தாயை பற்றிய ஒரு கருத்துண்டு. எப்பொழுதும் தந்தையை விட தாய் ஷண்மதி திமிராக இருப்பதாக. தன் தந்தை அன்பானவர் அதை பயன்படுத்தி அடக்கியாளும் பெண்ணே தன் அன்னை ஷண்மதி. மற்றபடி தன் நலமோ, வீட்டின் நலனோ முக்கியத்துவத்தை விட, பணியிடம் எங்க திரும்பினாலும் வெற்றி, இந்த இரண்டை தான் பெரிதாக மதிப்பவரென்று. 


  அதனால் அவகாசம் கிடைக்கும் நேரமெல்லாம் தாயை மூக்கறுப்ப செய்ய காத்திருக்கும் கழுகு ஸ்ரீநிதி. 


   இன்றும் அதே போல எதுவென்றாலும் நடக்கட்டும் என்று தந்தை விருப்பத்தை தன் விருப்பமாக உரைத்துவிட்டாள் ஸ்ரீநிதி. 


   யுகேந்திரன் தன் தாய் ஸ்ரீவினிதாவிடம் "அம்மா பைரவ் மாமாவிடம் விஷயத்தை சொல்லிடுங்க. அக்கா சந்தோஷப்படுவா." என்றவன் மனைவியை கண்டு எள்ளினான். 


  ஷண்மதியோ யுகேந்திரனுக்கு மீறிய பெண்ணாக, "ம்ருத்யு படிப்பு முடிந்து வர்றதால, அடுத்த வாரத்துல நிச்சயம் வைச்சிடலாமா? சர்பிரைஸ் கொடுப்போம்" என்று எடுத்து கூறவும் யுகேந்திரன் "ஒய் நாட். அம்மா அதையும் தாரிகா அக்காவிடம் தெரிவித்திடுங்க. டேட் பிக்ஸ் பண்ணிடுங்க" என்று மடமடவென தகவல் தெரிவிக்க, ஷண்மதி தோளைக்குலுக்கினாள். 


  ஸ்ரீநிதி தந்தையின் அதிரடி நடவெடிக்கையில் எந்த எதிர்வினை காட்டாமல், அறைக்குள் அடைந்தவளாக மாற, வெளியே நல்லநாள் பார்த்து போனில் பைரவிற்கும் தாரிகாவிடமும் கலந்து பேசி மகிழ்ச்சியாக வீடு மாறியது. 


  ரிதன்யாவோ "ஏ அக்கா கல்யாணம்" என்று குதித்து லலிதா ஸ்ரீவினிதா இருவரிடமும் கைகோர்த்து நடனமாடி  மகிழ்ச்சியை ஆர்ப்பரித்தாள். 


    அப்பாவிடம் தோள் சாய்ந்து "டேடி அக்கா பங்ஷனுக்கு நான் என்ன டிரஸ் போடணும்" என்று இப்பொழுதே குடைந்தாள் ரிதன்யா. 


  ஸ்ரீநிதி அன்னையை வில்லியாக தோற்கடித்த மிதப்பில் வேடிக்கை பார்த்தாள். 


  ஷண்மதியோ 'நான் கொஞ்சம் அரக்கி' என்றால் என் மக முழு குட்டி பிசாசா இருக்கணுமே.' என்று நகைத்தவள் அறைக்கு திரும்பினாள். 


    அன்னை செல்லவும் தனதறைக்கு சென்று தலையை பிடித்து கொண்டு நடந்தாள்.

   

   "ஓ மை காட், ஓ மை காட், மம்மியை டம்மி செய்ய டேடியிடம் ஓகே சொல்லிட்டேன். இப்ப மேரேஜ் என்ற பெரிய புதைக்குழில தள்ளிடுவாங்க.  ஐ ஹேட் மேரேஜ்." என்று கத்தி கதறி ஆள்காட்டி விரலால் தாடையை தட்டியவள் "ஓகே ம்ருத்யு தானே கட்டி வைக்க பேசியிருக்காங்க. ஹீ இஸ் மை மேன். நான் என்ன சொன்னாலும் அதை செவிக்கொடுத்து கேட்பான். மேரேஜ் பிடிக்கலைனு சொல்லி அவனை விட்டு மேரேஜை டிராப் பண்ணகடலாம்‌ பிராப்ளம் சால்வ்ட்" என்று தனக்குள் திட்டம் தீட்டியவளாக வில்லியாக சிரித்தாள். 


ஸ்ரீநிதியின் தலையாட்டலும், ஷண்மதியின் முடிவும் அறிந்தவுடன், யுகேந்திரன் தன் மாமாவிடம் ம்ருத்யுவிற்கு தன் மகள் ஸ்ரீநிதியை மணக்க முழுசம்மதம் என்றதை மகிழ்ச்சியாக பகிர்ந்தான். 

  கூடுதலாக "ம்ருத்யு வரட்டும் மாமா, அவனிடம் இப்பவே சொல்லி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இங்க வந்ததும் சொல்லலாம். இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு" என்று கூறவும் மகிழ்ச்சியாக பேசி அணைத்தார். 


  பைரவும் தாரிகாவும் ஆனந்தத்தில் ம்ருத்யுவிற்கு அழைத்தனர். 


    ம்ருத்யுவும் அழைப்பை ஏற்றவன், "ஹாய் டேட் என்ன தூக்கம் வருதா? இப்பவே கால் பண்ணறிங்க. நான் இன்னும் வீட்டுக்கு ரீச்சாகலை. ஏதாவது வாங்கிட்டு வரணுமா? மறக்க கூடாதுனு இப்பவே கால் பண்ணறிங்களா?" என்று கேட்டு அப்பொழுது தான் ஸ்ரீநிதிக்கு பரிசு வாங்க  வெளியே இருந்தவன் தந்தை தாயை கேலியாக பேசினான். 


   "மறக்கற விஷயமா உங்க மாமன் சொன்னது. 

   நினைக்க நினைக்க தித்திக்கிற விஷயம்டா. 


  ஆமா எனக்கு வாங்கறது இருக்கட்டும். ஸ்ரீநிதி மலைச்சி போகற மாதிரி ஒரு கிப்ட் வாங்குடா" என்று சூசகமாக கூறினான். 


   ம்ருத்யுவோ இதழ் மடித்து சத்தமில்லாமல் சிரித்தவன், ஏற்கனவே வாங்கிய பரிசுக்கு பணம் செலுத்தியபடி, "அவகிட்ட இல்லாத கிப்டா, நினைச்சதை வாங்கணும்னா ஒன்செகண்ட் போதும். நான் கொடுக்கறதுக்காக தான் காத்திருக்காளா?" என்று வெளியே பொய்யாக பேசி முடித்தான். 


  "டேய் முன்ன வேறடா. இப்ப அப்படியா." என்றவர் ஆசையை,  ஆனந்தத்தை அடக்க முடியாமல்,  "எனக்கும் உங்க அம்மாவுக்கும் ரொம்ப நாளா ஸ்ரீநிதியை உனக்கு கட்டி வைக்க ஆசைப்பட்டோம். 

இன்னிக்கு தான் உனக்கு ஸ்ரீநிதியை பொண்ணு கேட்டோம். ஷண்மதியும் யுகேந்திரனும் மேரேஜிக்கு ஓகே சொல்லிட்டாங்க. அநேகமா நீ வந்ததும் உன்னிடம் சொல்லணும்னு ஸ்ரீநிதியே காத்திருப்பா. என்னால சந்தோஷத்தை அடக்க முடியலை ம்ருத்யு." என்று கூறவும் போனை காதில் வைத்திருந்தவன் சந்தோஷத்தை அடக்க முடியாமல் கையை உயர்த்தி ஒரு வட்டமாய் குதித்து முடித்தான். 

   

   "ம்ருத்யு சொன்னது கேட்டுச்சாடா?" என்று மீண்டும் கூப்பிடவும், "யா டேடி, மாமா அத்தை ஓகே சொல்லிட்டாங்களா? ஸ்ரீநிதி ஓ..ஓகே சொன்னாளா?" என்று ஆர்வமாய் கேட்டான். 


   "அவ சொல்லாமலா சந்தோஷமான விஷயம்னு உன்னிடம் ஷேர் பண்ணறாங்க. டேய் அங்க எந்த வெள்ளைக்காரியும் கூட்டிட்டு வந்துடாதே." என்று தாரிகா போனை பிடுங்கி பேசவும், "மாம் இதெல்லாம் ஓவரு. உங்க பையனை நீங்களே டவுன் பண்ணறிங்க. ஓகேம்மா நான் இந்தியா வந்ததும் மீதியை பார்ப்மோம்." என்று கூறியவன் பில் பே செய்து விட்டு தன் இதயத்தில் வைத்து போனை வைத்தவன், மைக்கில் ஜாக்சனின் பாட்டிற்கு நடனமாடியபடி செல்ல கடை ஊழியரும், அந்த ஷாப்பிங்மாலும் திரும்பி பார்த்து சிரிக்க, அவனோ தன்னிலை மறந்து, ஸ்ரீநிதியை மட்டும் நித்தம் தியானம் செய்பவனாக மகிழ்ச்சி கடலில் திளைத்திருந்தான். 


   வீட்டுக்கு வந்ததும் கிப்டை பாதுகாப்பாக வைத்தவன், ஸ்ரீநிதி போன் அழைப்பிற்காக காத்திருந்தான். எப்பொழுதும் போல அழைக்காமல் ஸ்ரீநிதியோ தவிர்த்தாள். 


   ம்ருத்யுவே அழைக்கவும் தவிர்த்து இந்தியா செல்ல வேண்டிய நேரத்திற்கு காத்திருந்தான். 


   இன்னும் ஐந்து நாட்கள் உள்ளதேயென்று வேகத்தை ஓட்ட முடிவெடுத்தான். 


  தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், காலம் அதன் நேரத்தை வேகமாக்கிடாதே. 


   மெதுவாய் மெதுமெதுவாய் நேரங்கள் ஆமையாய் நகர, ம்ருத்யு பொறுமை பறந்தோடியது. சிறகு மட்டும் இருந்தால் உடனே இந்தியாவிற்கு பறந்திருப்பான். 


       ஆனால் அப்படியொரு விந்தை எதுவும் நிகழவில்லை. பொறுமையாக தான் கடந்தான். இந்த இடைப்பட்ட நாளில் எந்தவொரு நேரத்திலும் ஸ்ரீநிதி அலைப்பேசி வாயிலாகவோ ஸ்கைப் வீடியோ கால் என்று எதிலும் தலைகாட்டவில்லை. 


      அதை வெட்கமென்ற பெண்களின் இத்யாதி குணத்தில் ம்ருத்யு சேர்த்து கொண்டான். 


-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்  


   


Comments

  1. கல்யாணம் வேண்டாம் என எப்போ சொல்லப்போரா?

    ReplyDelete

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1