செந்நீர் துளிகள்
செந்நீர் துளிகள் பனிக்காற்று சில்லென்று ஊசியின்றியே உடலில் குத்தியது. பனிப்புகை எதிரே வருபவர்களை நிதானித்து தான், கண்டுயுணர்ந்திட நிமிடங்கள் எடுத்தது. தன் கைகளால் சூடுபரக்க தேய்த்து கன்னத்தில் ஒற்றி எடுத்தாள் தனிஷ்கா. "சூடா ஏதாவது சாப்பிட்டா நல்லாயிருக்கும் மேம்... வண்டியை நிறுத்திட்டு சாப்பிடுவோமா?" என்று தன் கல்லூரி பேராசிரியர் நிர்மலாவிடம் தனிஷ்கா கேட்டு முடித்தாள். "நோ... இங்க நிறுத்தினா நாம போக வேண்டிய இடத்துக்கு ரீச் ஆக நேரமெடுக்கும். இன்னும் அரை மணி நேரம் கழித்து ஹரியானா பார்டர் கிராஸ் பண்ணிட்டு பஞ்சாப் நுழைவு வந்ததும் தான் பிரேக். அதுவரை எங்கயும் நிறுத்தப் போறதில்லை." என்று பின்சீட்டிலிருக்கும் அவளுக்கு திரும்பாமலே இடது கையை ஆட்டி ஆட்டி பேசி முடித்து வலது கையால் தலைக்கு முட்டுக் கொடுத்து, போனை எடுத்து மணியை பார்த்தார். மணி ஆறானது. ஆனாலும் பனி விலகாமல் இருக்க, கல்லூரி மாணவிகளை இப்படி அரை இருள் நேரத்தில் எங்கும் நிறுத்தி சாப்பிட வாங்கி தர மறுத்...