காதல் பெரிதென பெற்றோரை துறந்தாய் .... போற்றிருப்பேன் . கட்டிய கணவனை துறந்தாய் ... விடு கழுதையென , தலை முழிகி இருப்பேன் . முத்து போன்ற பிள்ளையை துறந்த்தையே ...ஒப்பவில்லை . அதனாலே , என் மனம்... உன்னை தாயன்று ஒப்பவில்லை . மாற்றாந்தாய் ... மறுதாயக , தந்தை மணம்மாற்றி அழைத்துவர , மறுகினேன் . அரவணைக்க மறுத்ததால் ... தாயென ஏற்க மறுத்துவிட்டது . நித்திரையில் மடி சாய்ந்து , தாய் விரல் என் கேசம் கோதிடை, தாய் தேடினேன் . பருவம் வந்தது . கொட்டும் மழையும் , குழந்தை சிரிப்பும் , அலை தொடும் தென்றலும் , வரிகளை வடித்திடும் கவிகளையும் , காதல் கொன்டேன் . கவியே ..! எனக்கு கற்பனையை தர , எனக்கு பிடித்த விதத்தில் தாயை படைத்திட்டேன் . கற்பனை தாய் மடியில், அவள் விரல் என் கேசம் கோதிட , நிம்மதியான நித்திரை கிட்டியது . -- பிரவீணா தங்கராஜ் .