கவிக்கோ _ பிறந்த நாள் _ பரிசு போட்டி -----படைப்பு குழுமம் தலைப்பு -பாதங்களால் நிறையும் வீடு

கோமாதா பாதம் பட்டு தான் ,குடி புகுந்தோம் குடும்பமாக .
குடி வந்த பிறகு தான் ,
கண்ணன் பாதம் பார்த்தோம் .
ஒன்று , இரண்டு ,மூன்றென ,
மூன்று சிசு ஈன்றேடுத்தோம் .
மூவருக்குமே ....
பெயர்சூட்டு விழா ,
காது குத்தல் ,
பிறந்த நாள் விழா...என்று
நன்னாள் பார்த்து ,
உறவுகளின் பாதங்களால்
வீட்டை நிறைத்தோம் .
அதிலும் ,
மகள் எனும் சேய்
பூப்பெய்தபோது ,
 உறவு மட்டும் இன்றி
ஊரையே வீட்டிற்குள் அழைத்தோம் .
பாதங்கள் கணக்கிடாது பந்தியிட்டோம்.
அடுத்த எட்டு ஆண்டுகளில்
அடுத்தடுத்தாய் ...
வரிசையாய் ...விமர்சனமாய் ...
மணம் முடித்து வைத்தோம் .
அன்று ....
வந்த பாதங்களின் இரைச்சலில்
கிண்டல் ,கேலி செய்து
மகிழ்ந்து குலாவினோம் .
குட்டி குட்டி குடும்பமானது ...
ஆஸ்திரேலியா... அமெரிக்கா ...
க்ரீன் கார்டு வாழ்க்கை
அங்கே .
பதித்து வைத்த தரப்பலகை
தேய்மானம் ஆக - இங்கு
பாதங்கள் மட்டும் இல்லை .
கோகுல கண்ணன் பாதம் பதிக்க ,
பேரன்-பேத்தி பாதம் தேடி
கடல் தாண்டாவா முடியும் ?
அல்லது ஸ்கைப் மூலமாக வா
பாதம் பதிக்க இயலும் .
அவர்கள் வரும் நாளே
எங்களுக்கு கோகுல அஷ்டமி .
என்ன செய்ய ? ஏது செய்ய ?
நேரங்கள் மட்டுமே
வெறுமையாய் நகர்கின்றன .
எப்படி சொல்வேன்
கழிப்பறையில் கரப்பான் பாதம் ,
சமையல் அறையில் பல்லி பாதம் ,
கூடத்தில் சிலந்தி பாதம் ,
மனித பாதம் எங்கே ?
நாளை மனித பாதங்கள்
நிரம்பி வழியும் .
என் மரணத்தினை கண்டு செல்ல ....

                            
     -- பிரவீணா தங்கராஜ் . கவிக்கோ _ பிறந்த நாள் _ பரிசு போட்டி .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1