சிறுகதை-4 இல்லாளின் பந்தம் 144

                                                         
                                                           இல்லாளின் பந்தம் 144அம்மாடி லட்சுமி பேப்பர் எங்க?'' என்றே ரகுவரனின் குரலுக்கு கையில் மணக்க மணக்க தேநீர் எடுத்து கொண்டு பேப்பர் நீட்டினாள்.
      தேநீர் சுவைத்த ரகுனந்தன் ''என்ன எப்பவும் விட சுவை வித்தியாசமா இருக்கு''
      ''அது ஒண்ணுமில்லைங்க ஊரே கொரானா கிடக்கு அதான் சுக்கு கிராம்பு பட்டை அரைத்து டீதூளில் கலந்து டீ போட்டு கொண்டு வந்தேன்''
       ''என்னவோ கொரனாவை விரட்டுதோ இல்லையோ டேஸ்ட் நல்லா இருக்கு'' என்றபடி பேப்பரில் மூழ்கினார்.
           அதில் '24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து... இருசக்கர வாகனத்தில் வருவருக்கு அறிவுறுத்தி தொப்புக்காரணம் போட்டு அனுப்பி வைக்கின்றார்கள்' என்றே வாசித்தவர்
       ''இங்க பாரு வசந்த் ப்ரெண்ட்ஸ் கூட கிரிகெட் ஆட போகணும் சொன்ன இப்ப பாரு வெளியே போறவங்களுக்கு தண்டனையை... சிலர் வாகனத்தின் ஒட்டும் உரிமையை பறித்து அனுப்பறாங்க....'' என்றே பேசியவர் பரவாயில்லை போலீஸ் மாமூல் அது இது கேள்வி பட்டு இப்படி நடுக்காக உழைக்கின்ற போலீஸ் இருக்க தான் அந்த உத்தியோகதிற்கே பெருமை ஒரு கம்பீரம்.'' என்றே அடுத்த நாளிதழின் பக்கம் திருப்ப
   'மருத்துவமனையில் முககவசம் மருத்துவ உபகாரம் தட்டுபாடா? அரசு அதீத கொடுத்ததாக பேசபடுவது உண்மையா?' என்றே படிக்க
     ''என்னங்க நம்ம பக்கத்து தேவிகா நகரில் இருக்கற டாக்டர் இப்படி எல்லாம் உடை இல்லாம பார்த்து இப்போ அவருக்கும் அந்த நோய் தொற்று இருக்கறதா பேசிக்காறாங்க'' என்றே லட்சுமி சொல்ல ரகுனந்தன்
      ''வீட்டுக்குள் இருந்துகிட்டே உனக்கு எல்லாம் தெரியும் போ.. போயி காலையில் என்ன சமைக்க யோசி'' என்றே கடுகடுக்க லட்சுமி இவர் குடித்து வைத்த டீ டம்பளர் எடுத்து போனார். அடுத்த பக்கம்
    'திரிவூர்தியில்(ஆம்புலன்சில்) கர்ப்பிணி பெண் மகப்பேறு அடைந்தாள். செவிலியருக்கு பாராட்டு' என்றே படிக்க ஆரம்பித்தார்.
        மகன் வசந்த் மகள் ஜீவிதா இருவரும் போனில் வாட்ஸ் ஆப் பேஸ்புக் ட்விட்டர் இன்ஸிட்ராகிராம் எண்ட்ரூ எல்லா சோசியல் மீடியாவிலும் செய்தியில் வந்த யாவும் இவர்கள் டெக்னாலஜி அறிந்த படி தந்தை தாய் பேசும் நிலவரம் அறிந்து அவர்கள் பாட்டுக்கு இருந்தார்கள்.
        அந்நேரம் காலிங் பெல் அடிக்க லட்சுமி திறக்க ரோட்டை பெருக்கும் கற்பகம் தான் நின்று இருந்தாள்.
        எப்பொழுதும் ரோட்டை கூட்டி குளித்து அதன் பின் மதியம் வந்து பாத்திரம் விளக்கி வீட்டை கூட்டி செல்லும் கற்பகம் 144 தடை காரணமாக 10 மணிக்கு வந்து நிற்க
   "கற்பகம் வேப்பிலை தண்ணீர் மஞ்சள் உப்பு கலந்து இருக்கு கை காலை அலம்பி வா தப்பா எடுத்துக்காதே கொரானா கிருமி தான். உனக்கும் எங்களுக்கும் நல்லதுக்கு தான் அப்படி" என்றதும்
    "அதை சொல்ல ஏன் மா பயப்படற எங்களுக்கும் கவுர்மெண்ட் சொல்லிச்சு எங்க இத செய்ய நேரம்" என்றே கை கால்கள் அலம்பி நிற்க
    "இந்தா மோர் குடி" என்றே மஞ்சள் உப்பு இஞ்சி பச்சை மிளகாய் பூந்தமல்லி போட்டு கொடுக்க கற்பகம் பாத்திரம் தேய்க்க லட்சுமி சமாளிக்க செய்ய
"    ஏம்மா... இப்ப குத்தியே மோரு அத்தையும் காலையில மீந்து போச்சுனு சொன்னீயே இட்டிலி கொடு எங்கூட்டாண்ட தினகூலிக்கு போறாங்க நிறைய பேர் வேலைக்கு போகாம ஊட்லயே கிடக்க சோறு தண்ணி இல்லாம கிடைக்கு அதுங்களுக்கு கொண்டு போறேன்" என்றதும் லட்சுமி சரி என்றே தலை அடைந்தாள்.
     "சே சேம் டாபிக்.... மிம்மீஸ் செல்பி சேலஜ் ப்ரைன் அவுட் பசில் அது இது போன் பார்த்து பார்துது போர் அடிக்கு... அம்மா நீ எப்படி வீட்லையே இருக்க?" என்று அம்மா கட்டி கொண்டு ஜிவிதா கேட்க
     "எப்பவும் அம்மா இப்படி தான் இருக்கேன்... எனக்கு 144 தடை போட்ட மாதிரி தெரியலை எனக்கு வீட்டுக்குள்ளயே இருந்து பழகிடுச்சு" என்றே சாதாரணமாக கடக்க இந்த கொஞ்ச வாரத்தில் வீட்டுகுள் முடங்கி இருக்கும் ரகுநந்தன் வசந்த் ஜிவிதாவுக்கு அம்மாவின் சாதாரண வார்த்தையே இத்தனை நாள் இப்படி அவர்களை வீட்டிலே முடங்கி இருக்கும் சூழ்நிலை எண்ணி வருந்தினார்கள்.
      "கற்பகம் இந்தா நீ கேட்ட மோர் இட்லி... அதோட கொஞ்சம் பிரட் பால் பிஸ்கேட் இருக்கு உனக்கு தெரிந்தவர்கள் தினக்கூலி சொன்னீயே அவங்களுக்கு கொடு.... அப்புறம் இது ரேசன் கொடுத்த புது சேலையில் செய்த முககவசம் சும்மாயிருக்க செய்தேன் நீ தான் அடிக்கடி வெளிய போற இந்தா.. 50 60 செய்தேன் வெளிய போனா உபயோகப்படுத்து..." என்றே கொடுக்க
     "ரொம்ப டாங்ஸ் மா... எங்களுக்கு இது எல்லாம் வாங்க துட்டு ஏது... கொடும்மா" என்றே வாங்கி ஆனந்தம் கொள்ள சென்றாள்.
     வேலைக்கு வரும் கற்பகம் கூட வெளி உலகத்தை தினசரி கண்டு பார்க்க இல்லத்தரசி என்று வீட்டிலே முடக்கி மனைவியை நான்கு சுவற்றில் இருக்க வைத்ததை எண்ணி ரகுநந்தன் இரு வாரமே தன்னால் வீட்டிலே நாள் முழுதும் இருக்க முடியாது இருக்க லட்சுமி மனம் எண்ணி வருந்தி 144 தடை அகற்றியதும் அவளை வெளி உலக வாழ்வில் சேர்த்து அழைத்து செல்ல முடிவெடுத்தனர் வசந்த் மற்றும் ரகுநந்தன் பேசி கொண்டனர்.   அதனோடு குற்றம் குறை சொல்லியே இருப்பதை தவிர்த்து கொஞ்சம் மென்மையாகவே எதையும் எடுத்து சொல்ல எண்ணி கொண்டார்.
        ஜிவிதா அம்மாவுக்கு மாலை சிற்றுண்டி செய்ய ஹெல்ப் செய்திட போனாள்.
நாள் முழுதும் வீட்டிலே இருக்கும் இல்லத்தரசிக்கு என்றுமே 144 தடை தான்...

-பிரவீணா தங்கராஜ்

*மருந்தே உணவு உணவே மருந்து.
*மாட்டு சாணம் வாசலில் தெளித்து மஞ்சள் பூசி உப்பு மோர் கூழ் என்று இயற்கையிலே என்றும் வாழ்ந்த முறையையே பழகு..

                          


பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...