பரிதவிப்பு

*பரிதவிப்பு* அந்த பேருந்தில் தட்டை ஏந்தி அறுபது வயது முதியவர் பிச்சை கேட்டு கொண்டிருந்தார். கல்லூரி திறந்து முதல் வருடம் செல்ல பயணித்திருந்தாள் தீபா. இந்த நிகழ்வை கண்டதும் உள்ளுக்குள் அந்த பரிதவிப்பு உதித்தது. மெல்ல மெல்ல தன் பர்சில் அப்பா தனக்கு கேன்டீனுக்கு கொடுத்த பணம் இருந்தது. அதில் சில்லறையும் கணத்திருந்தது. ஐந்து இரண்டு ரூபாய் நாணையத்தை எடுத்தவள் அந்த முதியவர் அருகே வந்ததும் போட முடிவெடுத்தாள். ஆனால் அவளுக்கு முன்னேயிருந்த சீனியரோ,"எப்பா... மாசத்துக்கு பத்து முறை வந்திடறார். உடல்நிலை நல்லா தானே இருக்கு. வேலை செய்ய வேண்டியது தானே" என்று முணங்குவது ஜன்னலோரம் பின்னிருக்கையில் இருந்த தீபா செவியிலும் விழுந்தது. எடுத்ததை போடலாமா வேண்டாமா? என்ற குழப்பம் தாக்க, இரண்டு ரூபாய் நாணையத்தை கைகளில் மறைத்து கொண்டாள். இவளருகே வந்த முதியவர் தட்டை நீட்டியபடி இரண்டு மூன்று பேர் யாசகமாக போட்டிருந்த நாணையம் மின்னியது அது போதுமென படியில் இறங்கி க...