Posts

Showing posts from November, 2020

முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 &15

Image
💘  14 அன்று ஞாயிறு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். பவித்ரா , தன்யா , சுவாதி மூவரும் தாவணி அணிந்தனர். இதுவரை அஸ்வின் பவித்ராவை சுடிதாரில் தளர பின்னிய ஒற்றை ஜடையில் பார்த்து இருந்தான். இன்று பாவாடை தாவணியில் இரட்டை ஜடையில் பார்க்க மேலும் அழகாக தெரிந்தாள். ஆகாஷிற்கும் அதே என்ன ஓட்டம் தான். அஸ்வினை போல நேரிடையாக தன் காதலை சொல்ல நினைத்தான். இன்று சுவாதி தனியாக இருக்க நேரிட்டால் கூறிட வேண்டியது தான் என்று நினைத்தான். தனுவை விஸ்வநாதன் , '' என் மகளா இது ? அழகா தேவதை போல இருக்கா , என்ன வாய் தான் கொஞ்சம் நீளம் '' எனக் கூற தன்யா செல்லமாய் முறைத்தாள்.        முன்பு போலவே அர்ச்சனை வாங்கிப் படியேறினர். சாமி பெயரில் அர்ச்சனை செய்ய...      பிராத்தனை போதும் அஸ்வின் கண்கள் பவித்ராவையே நோக்கின. ராதை கவனித்து தீபம் காட்டியதை மகனுக்கு சுட்டி கட்டிட அசடு வழிந்தான் , ஆலயம் வலம் வந்து அமர்ந்து முதல் ஆளாக செருப்பை மாட்டி ராதை கையை சிறு குழந்தை போல கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.    அஸ்வினுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி பவித்ரா காணும் போது சிரிப்பை உதிர்த்தான். வீடு

குறுநாவல்- ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...

Image
                                                                     ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில்...                                                                              📲 1          பெயர் பெற்ற கல்லூரி கட்டிடதின் உள்ள இருந்த ஒரு வகுப்பறையில் எல்லோரும் வீட்டுக்கு செல்ல ஆயத்தமாக இருக்க அவள் மட்டும் தன் வீட்டிற்கு செல்லவே பிடிக்காமல் அமர்ந்து இருந்தாள்.        ஏதோ ஒரு சோகத்தை உள்ளடக்கி அமர்ந்த நிலை யாராயிருப்பினும் கண்டு கொள்ளலாம். ஆனால் நின்று பேச தான் இவ்வுலகில் நேரமில்லை எவருக்குமே.  தனது கவலை ஒதுக்கி தன் அருகே இருந்த தன் தோழி செய்கை கண்டு இருந்தாள் ஸ்வேதா. ஸ்வேதா பற்றி தான் நாம் பார்க்க போவது.      "என்ன பண்ற வித்யா?" என்றாள் ஸ்வேதா.      "பார்த்தா தெரியலை என் போன்ல சிம் போட்டு கொண்டு இருக்கேன்." என்றாள் வித்யா.       "ஏற்கனவே ஒரு சிம் இருக்கே இது என்ன இரண்டாவது சிம்?"         "எவடி இவ... இது ரஞ்சித் கொடுத்தான். அப்பாக்கு என் மேல சின்ன சந்தேகம்... அதனால என் கார்டை போஸ்ட் பெயிடா மாற்றிட்டார். அதிக மெசேஜ் பண்ணின