முதல் முதலாய் ஒரு மெல்லிய-8

                      


       💘 8
             
                அடுத்த நாளும் பெயருக்கு சாப்பிட்டுக் கிளம்பினாள். அஸ்வின் பைக்கில் ஸ்டார்ட் செய்கையில் வேண்டுமென்றே பிரேக் போடா அவளது தோல் அஸ்வினை இடித்தது. பவித்ரா சற்றுத் தள்ளி அமர்ந்து வண்டியை இறுகப் பற்றினாள்.

 

   விஸ்வநாதன் ஜன்னல் வழியாக இதை எல்லாம் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அஸ்வினை கண்டிக்கத் தான் இயலவில்லை. அவர் மனதிலும் பவித்ராவை இந்த வீட்டு மருமகளாக ஏற்கும் ஆசை தான் அதற்குக் காரணம்.


எப்பொழுதும் போல் கல்லூரி அடைந்தவுடன் திரும்பி பார்க்காது நடந்தாள். அஸ்வின் 'எவ்வளவு தூரம் ஓடுறியோ ஓடு' என மனதில் நினைத்துக் கொண்டான்.


இப்பொழுது தான் வந்து பயில்வது போல் இல்லாமல் சூழ்நிலையாவும் இயல்பாக மாறியது புது மாணவி என்ற நினைவேயின்றி கல்லூரியிலும் தோழிகளிடமும் ஐக்கியம் ஆனாள்.


ஆசிரியர் யாரோ இறக்க நேரிட, இன்று எப்பொழுதும் விடும் நேரத்தை விட அரை மணி நேரம் முன்னதாகவே கல்லூரி மணி ஒலித்தது. கல்லூரியில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த பஸ் ஸ்டண்டில் காத்திருந்தாள்.


திடீரென பின்னாளில் இருந்து அவளது கண்ணை யாரோ மூட திரும்பிப் பார்க்க, அவளது பள்ளி தோழி நித்யா.

     பரஸ்பர நலன் விசாரிப்பு முடிந்து, பவித்ராவை நித்யா வீட்டிற்கு அழைக்க, முதலில் மறுத்தாலும் பின் யோசித்த பவித்ரா சரி என்றாள். அரை மணி நேரம் முன் கூட்டியே விட்டதால் போக வர கணக்கிட்டு திரும்பி விடலாம் எனக் கருதினாள். நித்யாவிடம் பேசும் பொழுது பழைய உற்சாகம் பெற்றாள். நித்யா வீட்டிற்கு பழங்கள் வாங்கிக் கொண்டு பஸ்சில் பயணித்தாள்.


அங்கே சென்று அரை மணி நேரத்தில் திரும்ப வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள். ஆனால் நித்யாவின் தாய்- தந்தையர், அக்கா என எல்லோரிடம் உரையாடித் திரும்ப நேரம் கூடுதல் ஆனது. ராதையிடம் தெரிவிக்க போன் எடுத்தாள்.

 சார்ஜ் இன்றி போனும் செயல் இழந்தது. போனைப் பார்த்துக் கொண்டே பாதை மாறி வேறு ஒரு பாதையில் செல்ல, அங்கே பஸ் வராமல், நேரம் மட்டுமே நகர்ந்தது.

 

  வழி தெரியாமல் ஏன் தான் வந்தோமோ என கவலையுற்றாள். யாரும் அற்ற சாலையில் இருவரது வருகை தெரிய பயம்  கவ்வியது. அந்த இருவரின் தோற்றம், தோரணை கண்டு, கடவுளே உடனே பஸ் வரணும் என்று பிராத்தனை செய்தாள். அவளது பிராத்தனை வீணானது. அவளது அருகே வந்த நபர்கள் அவளை ஆக்கிரமிக்க எண்ண, பயத்தில் ஓட ஆரம்பித்தாள்.

 

கையில் இருந்த பர்ஸ், மொபைல், சில புத்தகம் என தவறவிட்டு ஓடினாள்.


எதிரே ஒரு கார் வேகமாக வருவதை அறியாது மோதி மூர்ச்சையானாள்.


அதே நேரம் அஸ்வின் வீட்டில் பவித்ரா இன்னும் வராதது பெரும் கலக்கத்தை உண்டாக்கியது. இது நாள் வரை அஸ்வின் இத்தகைய பதட்டம் அடைந்தது அல்ல. இன்று அவன் முகம் வெளிறியது போதாதற்கு விஸ்வநாதன் ''எல்லாம் உன்னால தான். இப்ப அவளை எங்கே என்று தேடுவேன். போனும் சுவிட்ச் ஆப்னு வருது'' என கடிந்தார்.


''
அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை வந்துடுவா'' என்று உரைத்தான்.


''
வருவா நீ அவளை காதலிக்கறேன்னு டார்ச்சர் பண்ணாம இருந்தா, நீ தான் நடந்துக்கிட்ட விதத்தை பார்தேனே.'' என்று பவித்ரா வராத கோவத்தை அஸ்வினிடம் காட்டினார்.


''
பிடிச்ச பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணினது தப்பா?” என்று எதிர் கேள்வி கேட்டான்.


''
இல்ல டா ஆனா நேத்து கையை பிடிச்சு பேசினது தப்பு, அது மட்டுமா காலையில் நீ வண்டி ஸ்டார்ட் பண்ணின விதத்தைப் பார்தேனே'' என முடிக்க, முதல் முறையாக பதில் கூறாமல் மவுனமானான்.

 
நேரம் கூட கூட விஸ்வநாதன் வார்த்தையில் நெருப்பை சுட்டார். அஸ்வினுக்கோ தன் தேவதை மீண்டும் எங்கே தேட என நொடிக்கு ஒரு முறை போனில் ரிங் செய்ய சுவிட்ச் ஆப் என்றே வந்ததது. ராதை விஸ்வநாதனை எப்படி சமாதானம் செய்ய என பரிதவித்தாள். ஆகாஷ், சுவாதி, ராதை மாறி மாறி வீட்டுக்கும் வாசலுக்கும் ஓடினர்.


அஸ்வினுக்கு பித்துப் பிடிக்காத குறை மட்டுமே.

 

விஸ்வநாதனோ ஏற்கனவே எங்கயாவது கண்காணாத இடமாக போக வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தவள் இன்று நிஜமாகவே போய்விட்டாளா? என நெஞ்சம் படப்படப்பானது.

 அஸ்வினை கோபத்தால் வார்த்தையால் ஈட்டி போல் குத்தினார்.


பவித்ரா மோத வந்த கார் பிரேக் போட்டு நிற்க, ஓடி வந்த பவித்ரா காரில் மோதி கீழே சேரில் விழுந்தாள். காரில் இருந்து ஸ்ரீராம் இறங்கி வந்தான். துரத்தி வந்த இருவரையும் பார்த்துத் தன் கால்களை முன்னுக்கு எடுத்து வைத்தான். அவனது முறைப்பையும், முஷ்டியையும் கண்டு அவ்விருவரும் பின்னடைந்தனர்.


ஸ்ரீராம் தன் மொபைலில் நம்பர் அழுத்த ஓட்டமெடுத்தனர். போனை பேக்கெட்டில் வைத்து விட்டு பவித்ராவைப் பார்த்தான். காரில் இருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் அடிக்க, பதறிய படி பவித்ரா சுற்றி சுற்றி விழித்தாள்.

 

 ஸ்ரீராமோ ''ஜஸ்ட் ரிலாக்ஸ் அவங்க போயிட்டாங்க. பி கூல். இந்த தண்ணி குடிங்க'' என கொடுக்க, பவித்ராவிற்கு இவனை எங்கோ பார்த்த ஞாபகம். ஆனால் எங்கே என யோசிக்கக் கூட முடியாமல் நீரை வாங்கி 'மடக் மடக்' என குடித்து முடித்தாள்.
எழுந்து முகம் அலம்பி '' நன்றி '' தெரிவித்தாள்.

 

 காரில் இருந்த டவலை கொடுத்தான். அதனையும் மறுப்பின்றி வாங்கிக் கை, முகம் துடைத்து மீண்டும் '' நன்றி'' தெரிவித்தாள்.


''
நீங்க எங்க இங்க''


''
நான் யாருனு தெரியுமா? ''


''
ஓ காட், பஸ்ட் கார்லா ஏறுங்க போய்கிட்டே பேசுவோம்.''
பவித்ராவும் ஆமோதித்தாள். கண்கள் சுற்றி சுழலச் சற்று நடுக்கத்துடன் ஏறினாள்.

பவித்ரா நிதானம் ஆகும் வரை ஸ்ரீராம் பொறுமை காத்தான். திரும்ப '' இங்க எப்படி வந்தீங்க'' என்று கேட்டான்.


''
என்னை தெரியுமா?'' என்று மீண்டும் அதே வினாவை தொடுத்தாள்.


''
காலேஜில பென்(pen) வாங்கினீங்களே மறந்து போச்சா?'' என்றான். 

சற்று யோசித்து ''ஆ... சாரி இந்த நிகழ்வுல யோசிக்கற சக்தியே இல்லை. எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு  சாரி.'' என்றாள்.


''
இட்ஸ் ஓகே'' என்றவன் பவித்ராவை அளவிட்டான்.

 
''
காலேஜ் சீக்கிரம் விட்டதால, இங்க என் பிரென்ட் வீட்டுக்கு வந்தேன். புது இடம் என்பதால பாதை மாறிட்டேன் போல, அந்த இரண்டு பேர், கடவுளே...., நீங்க இல்லனா....'' என கூறுகையில் அவளது நடுக்கம் அவனுக்கு நன்றாக தெரிந்தது.


''
உங்களுக்கு கஷ்டம் இல்லனா வீட்ல விட்டுட முடியுமா? அட்ரஸ் சொல்றேன்.'' என்று இறைஞ்சினாள்.


''
தாராளமா.'' என்றவன் அவளோடு பயணிக்க ஆர்வம் கொண்டான்.


''
தேங்க்ஸ்'' என்றாள்.


''
ஒரு செகண்டுக்கு ஒரு ஸாரி ஒரு தேங்க்ஸ்ஸா'' என சிரித்தான்.


பவித்ராவுக்கு சிரிக்கும் நேரமாக அமையவில்லை. அந்த இருவரிடம் இருந்து தப்பித்தாலும் அதன் தாக்கம் அவளுள் இருந்தன. ஸ்ரீராம் அலைபேசி சிணுங்கிட எடுத்தான்.


''
கான்ஸ்ட்ரக்சன் பார்த்தேன் ஓகே தான், நாளைக்கு மீட்டிங்ல பார்க்கலாம்.'' என அணைத்தான்.


''
கடவுளே என் போன்'' பவித்ரா முனங்கினாள்.


''
என்னாச்சு?''


''
என் போன் அங்கேயே மிஸ் ஆயிடுச்சு. ராதை ஆன்ட்டிக்கு கூட இன்பார்ம் பண்ணல, நான் வரலைன்னு தேடுவாங்க.'' என்று மொழிந்தாள்.


''
என் மொபைல்ல இருந்து பேசுங்க.'' என்று போனை நீட்டினான்.
''
எனக்கு நம்பர் தெரியாது. என் மொபைலும் சுவிட்ச் ஆப் ஆனதால் ஏதும் தெரியப்படுதலை.'' என்று போனில் பேச முடியதாதற்கு காரணம் தெரிவித்தாள். தந்தை எண்ணுக்கு அழைக்கலாம் ஆனால் அவருக்கு பதற்றம் கூடும்.

 
''
அ அப்படிய ஓகே.'' என்று விழித்தான்.


''
அங்கிள் ரொம்ப கவலைப்படுவார்'' என விசும்பினாள்.


''
பவித்ரா அழாத வீட்டுக்கு ஜஸ்ட் ஒன் ஹவர்ல போயிடலாம்'' என்று ஆறுதலுரைத்தான்.


''
டைம் என்ன.'' என்று கேட்டாள்.


''
செவென் ஓ கிளாக்'' என்றான் ஸ்ரீராம்.
''
சே முட்டாள் தனம் செஞ்சுட்டேன்.'' என விசும்பினாள்.


அதிக போக்குவரத்து சாலை அடைந்ததும் ஏதாவது சாப்பிடுறியா? பவித்ராவுக்கு மிகுந்த பசி, நேற்று இரவில் இருந்துப் பெயருக்கு சாப்பிட்டாலே தவிர ஒழுங்காக சாப்பிடவில்லை. ஆனாலும் நேரம் கூடும் என்பதால் வேண்டாம் என மறுத்து விட்டாள்.

 

 '' வீட்டுக்கு சீக்கிரமாக போகலாம்'' என்றதையே ஜெபித்தாள்.


''
போகலாம் போகலாம் டோன்ட் ஒர்ரி'' என்றவன்கார் பெட்ரோல் போடா நிறுத்த அங்கிருந்த பணியாள் பவித்ராவின் ஆடையை  வினோதமாகப் பார்த்து நகர்ந்தான்.

    ஸ்ரீராம் அப்பொழுது தான் கவனித்தான். அவளது ஆடை அங்கங்கே சேறாக காட்சியளித்தது. கார் புறப்பட்டு அவள் கல்லூரி தாண்ட பவித்ராவுக்கு சற்று மூச்சு சீரானது.
''
நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?'' என்று பீடிகை போட்டான்.


''
சொல்லுங்க'' என்றாள் பவித்ரா.


''
பக்கத்துல தான் என் வீடு, என் சிஸ்டர் டிரஸ் இருக்கு நீங்க வந்து சேஞ்சு பண்ணிட்டு போனீங்கன்னா பெட்டர்'' என்று கூறினான்.


பவித்ரா தன் ஆடையை உற்று நோக்க துப்பட்டா இன்றி அங்கங்கே சேறாகக் காணப்பட யோசித்து, ''சரி'' என்றாள்.


பத்து நிமிடத்திற்குள் ஒரு வீட்டினுள் நுழைந்தான். வேகமாக கதவு திறந்து தன் அக்காவிற்கு வாங்கிய ஆடையை பவித்ராவிடம் நீட்டினான்.


''
வீட்ல யாரும் இல்லையா?'' என பவித்ரா மென்று முழுங்கினாள்.


''
இல்லை. நான் மட்டும் தான். அக்கா ஆஸ்திரேலியால இருக்காங்க. நான் வெளிய வெயிட் பண்றேன். இந்த ரூம்ல ரைட் சைடு பாத்ரூம்'' என சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தான்.


''
டிரஸ் புதுசா இருக்கு பில் கூட பிரிக்கலையே? '' என கேட்டாள்.


''
அது என் சிஸ்டருக்கு பார்சல் அனுப்ப வாங்கினது பரவாயில்லை. நீ போட்டுக்கோ பவித்ரா நான் வேற வாங்கி அனுப்பிக் கொள்கிறேன்.'' என்றான் ஸ்ரீராம்.


மட மட வென மாற்றி விட்டு வெளியே வந்த போது தான் இவன் தன்னை பார்த்த நொடி முதல் பெயரிட்டு அழைக்கின்றானென அறிந்தாள். இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும் என யோசித்தாள். 

      - மெல்லிய பூகம்பம் தொடரும், 

பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு