முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 &15

💘 14

அன்று ஞாயிறு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். பவித்ரா, தன்யா, சுவாதி மூவரும் தாவணி அணிந்தனர். இதுவரை அஸ்வின் பவித்ராவை சுடிதாரில் தளர பின்னிய ஒற்றை ஜடையில் பார்த்து இருந்தான். இன்று பாவாடை தாவணியில் இரட்டை ஜடையில் பார்க்க மேலும் அழகாக தெரிந்தாள்.


ஆகாஷிற்கும் அதே என்ன ஓட்டம் தான். அஸ்வினை போல நேரிடையாக தன் காதலை சொல்ல நினைத்தான். இன்று சுவாதி தனியாக இருக்க நேரிட்டால் கூறிட வேண்டியது தான் என்று நினைத்தான்.


தனுவை விஸ்வநாதன், ''என் மகளா இது? அழகா தேவதை போல இருக்கா, என்ன வாய் தான் கொஞ்சம் நீளம்'' எனக் கூற தன்யா செல்லமாய் முறைத்தாள்.


       முன்பு போலவே அர்ச்சனை வாங்கிப் படியேறினர். சாமி பெயரில் அர்ச்சனை செய்ய...

 

   பிராத்தனை போதும் அஸ்வின் கண்கள் பவித்ராவையே நோக்கின. ராதை கவனித்து தீபம் காட்டியதை மகனுக்கு சுட்டி கட்டிட அசடு வழிந்தான், ஆலயம் வலம் வந்து அமர்ந்து முதல் ஆளாக செருப்பை மாட்டி ராதை கையை சிறு குழந்தை போல கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

 

 அஸ்வினுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி பவித்ரா காணும் போது சிரிப்பை உதிர்த்தான். வீடு வந்து சேரும் வரை அப்பாடி என இருந்தது.
கீழே இறங்கி வீட்டுக்கு செல்ல எத்தனிக்கையில் மூவரையும், வாசலில் நிற்க வைத்தார் ராதை. வீட்டிற்குள் சென்று திருஷ்டி கழிக்க தேவையானதை எடுத்துக் கொண்டு தனி தனியாக திருஷ்டி கழித்தாள். பவித்ரா எனக்கு எதுக்கு அத்தை என்றவளிடம், உனக்கு தான் ரொம்ப முக்கியம் என அஸ்வினை ஒரு முறை பார்த்து விட்டு வெளியே சென்று கற்பூரத்தைக் கொட்டினாள்.


சமையலில் அதே வேகத்துடன் பாயாசம் செய்தாள், ஏலக்காய் தூவி வாசனையோடு கண்ணாடிக் கிண்ணத்தில் ஊற்றினாள். அஸ்வினுக்கும் , ஆகாஷுக்கும் கொடுக்க சொல்லி பவித்ராவிடம் நீட்டினார்.


''
ஐயோ நான் மாட்டேன் சுவாதி போவா'' என்றாள்.


''
கொடுங்க அத்தை'' என சிரித்து வாங்கிக் கொண்டாள்.

 

ராதை நகர்ந்ததும், ''ரொம்ப தான் உஷாரா இருக்க, அதான் கோயிலில் பார்த்தேனே அத்தை கையை இறுக பிடிச்சிகிட்டு குழந்தையாட்டும்'' என சொல்லி சென்றாள்.

 

   “தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தெரியுமாம்’’ என்று விரட்டினாள்.


மாடியில் அஸ்வின் கதவை தட்ட, ''அத்தை கொடுத்துட்டு வர்ற சொன்னாங்க'' என்று நீட்டினாள்.


''
வச்சிட்டு போ'' என்றான்.


ஆகாஷ் கதவை தட்டினாள். ''வா சுவாதி'' என்று ஆசையாக வரவேற்றான்.


''
அத்தை கொடுத்துட்டு வர்ற சொன்னாங்க'' என்று கொடுக்கவும்
''
இங்கவை சுவாதி... நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்?'' என்று நெருங்க வந்தான்.


''
என்ன?'' என்று சுவாதி திடுதிருவென விழித்தாள்.


''
யார்கிட்டயும் மாட்டி விட மாட்டியே?'' என்று முன்னெச்சரிக்கையாய் கேட்டான்.


''
சொன்னாதான் என்னனு தெரியும்'' என்று சலித்தாள்.
''நான் உன்னை.... விரும்பறேன் சுவாதி.'' என்றதும் சுவாதி திகைத்து நின்றாள்.

''
அதென்னவோ சின்னதுல இருந்தே அஸ்வினுக்கு உன்னை பேசி வச்சதால நான் என் மனசுல உள்ள காதலை அழிச்சேன்.  இப்ப அஸ்வின் உன்னை விரும்பல, நீயும் அவனை விரும்பலைன்னு தெரிஞ்சதோ, எனக்குள் திரும்ப வந்துட்ட ஐ லவ் யூ சுவாதி.’’ என்றான்.


சுவாதிக்கு பேச்சு எழவில்லை. கீழே இருந்து ராதை, '' சுவாதி எவ்ளோ நேரம் வடை செஞ்சு வச்சிருக்கேன் வந்து எடுத்துட்டுப் போ'' என்று குரல் கொடுத்தார்.


''
கீழே யார்கிட்டயும் சொல்ல மாட்டீயே?'' என ஆகாஷ் மென்று விழுங்க, தலையை இடவலமாக ஆட்டினாள்.


''
எனக்கு பதில்?''


''
யோசிக்கணும் நான் போறேன்'' என்று ஓட்டமெடுத்தாள்.


ஆகாஷிற்கு மலையை புரட்டியத் திருப்தியை உணர்ந்தான். எத்தனை காலமாக  பூட்டி வைத்த நேசம் இது.


''
இந்த வடை சட்னி கொண்டுப் போய் கொடுத்துட்டு வா சுவாதி'' என்றார் ராதை.


''
நான் போல தனுகிட்ட கொடுத்து அனுப்புங்க'' என பவித்ரா அருகே அமர்ந்தாள். என்ன இது இப்ப தன் தலைவலியும் காய்ச்சலும் வந்தா தாண் தெரியும்னு சொன்னா அதுக்குள்ள தலைவலி வந்துடுச்சு? என்று மனதில் பேசினாள்.


''இந்தா நீ சாப்பிடு'' என்று நீட்ட,'' எனக்கு வேணாம் நான் கிளம்பறேன்.'' என ஸ்கூட்டி எடுத்து விரைந்தாள்.


''
என்னாச்சு சாப்பிட சொன்னா ஓடிட்டா'' என்றதும் தன்யா தோளை குலுக்கினாள்.

 
இரண்டு நாட்கள் நகர்ந்தன

 

.தனுவிற்கு பரீட்சை என்பதால் டிவி அமர்த்தப்பட்டு இருந்தது. விஸ்வநாதன் தினசரி நாளிதழ் படித்துக் கொண்டு இருக்க, ஆகாஷ் அவனது அறையில் அடைந்துக் கிடந்தான். அஸ்வின் பவித்ராவுக்கு போர் அடிப்பதை உணர்ந்தான்.

 

 பவித்ராவிடம் சென்று, ''உனக்கு போர் அடிச்சா என் ரூம்ல நிறைய புக்ஸ் இருக்கு எடுத்து படி இல்லையா அங்கேயே மூவி பாரு'' என்று பொழுதை கழிக்க ஆலோசனை தந்தான்,

 
''
வேணாம்'' என்று மறுத்தாள். அவன் இருப்பானே என்று.


''
ஏய் நான் இங்கேயே இருக்கேன் நீ புக்ஸ் எடுத்துக்கோ போ'' என சிரிப்பை அடக்கினான்.


மெதுவாக மாடியேறி அவனது அறைக்கு செல்ல ஏனோ அவளையும் அறியாது அந்த அறை அவளுக்கு மிகவும் பிடித்தது. எவ்வளவு நேர்த்தியாக வச்சி இருக்கான். அலைமாரியில் இருந்த புக்கை துழாவி ஒரு புக் எடுத்து கொண்டு, திரும்ப அவளது புகைப்படம்.

  எங்கே தீடீரென வந்து விடுவானோ எனப் புகைப்படத்தை தடவி பார்த்தவள் அஞ்சி வெளியேறினாள்.


அடிக்கடி ஸ்ரீராமுக்கு மெசேஜ் செய்தும், படித்துக் கொண்டும், நேரம் கழிந்தன. மேலும் இரு நாட்கள் கழிய துவங்கியது.


''
சுவாதி ஏன் வரலை அத்தை'' என பவித்ராவே கேட்டு விட்டாள்.


''
தெரில பவித்ரா போன் போட்டு கேளு'' என்றார் ராதை.


''
வர்றியா? வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்'' என அஸ்வின் கேட்டான்.


''
இல்லை வேணாம்'' என மறுத்தாள்.


''
ஏன் என்கூட வர்ற பயமா? என புன்னகை சிந்தினான்.

ஆமாம் என மனம் கூறினாலும்


''
எனக்கு ஒன்னும் பயம் இல்லை, நான் ஸ்ரீராம் வீட்டுக்கு போயிட்டு சுவாதியை பார்க்க போறேன்.'' என பொறாமை தீயை உருவாக்க முயற்சித்தாள்.


ஆகாஷ் அஸ்வினிடம் வந்து, '' ஸ்ரீராம் வம்பு பண்றதுக்காகவே பவித்ராகிட்ட பழகறான்'' என்று கல்லூரி கதையை நினைவில் வைத்து கூறினான் ஆகாஷ்.


''
எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை.''
''
ஒரு வேளை பவித்ராவும் ஸ்ரீராமும் விரும்பறாங்களோ? '' என்று சந்தேக தீயை துளிர்க்க கேட்டான். 


''
விரும்ப மாட்டாங்க.'' என்றான் அஸ்வின். அவனுக்கு இந்த சந்தேக பிசாசு என்பது எல்லாம் யாராலும் புகுத்த இயலாது.


''
ஹி ஸ் செட்டில் மேன், இண்டஸ்ட்ரீஸ் ரன் பண்றான், பவித்ரா விரும்பினால்னா?'' என்று உசுப்பேத்தினான்
''
விரும்ப மாட்டாங்க'' என்றவன் கோபமாய் கத்தி விட்டான். நல்ல வேளை யாரும் அங்கில்லை. 
அஸ்வின் எழுந்து வேகமாக மாடியேறி தனது அறையில் உடை மாற்றி பைக்கில் கிளம்பினான்.



 💘15 

பவித்ரா ஸ்ரீராம் வீட்டை அடைந்தாள்.


''
வா பவித்ரா'' என்றான் சுரத்தையின்றி.

 
''
என்ன ரொம்ப டல்லா இருக்கற மாதிரி இருக்கு ஸ்ரீராம்?'' என்றாள் அக்கறையாக.

 
''
நத்திங்.., என்ன சாப்பிடற?'' என்று பேச்சை மாற்றினான்.


''
காப்பி... பட் நான் போட்டு தர்றேன்''


''
இல்லை அது வந்து....'' என ஆரம்பித்த ஸ்ரீராமிடம், ''பயப்படாத எனக்கு நல்லா காபி போடா தெரியும்'' என்றாள் பவித்ரா.


காபி போட்டு இருவரும் பருக ஆரம்பித்தனர்.


''
நீ கூட டல்லா இருக்க பவித்ரா என்ன காரணம்?''


''
கொழுப்பு அவனுக்கு?'' என்று காரமாய் உரைத்தாள்.


''
யாருக்கு?'' 


''
ஆஹ் அந்த அஸ்வினுக்கு.. ட்ரோப் பண்றேன் வா சுவாதி வீட்டுக்குனு கூப்பிடறான். அதான் உன்னை பார்த்துவிட்டு போக போறேன் என்று அவனுக்கு புகைச்சல் கிளப்பினேன்'' என்று அஸ்வின் தள்ளி வைக்கும் பேச்சை ஆற்றினாள்.

 
ஸ்ரீராம் என்ன நினைத்தானோ தீடீரென, ‘’நீ என்ன விரும்பறியா பவித்ரா?''


''
இல்லை ஸ்ரீராம். ஏன் கேட்குற யாராவது கேட்டாங்களா?'' என்று கேட்டாள்.


''
அது.. வந்து...''


''
ரம்யா உன் நம்பர் வாங்கி இருந்தா, உன்னை குழப்ப ஏதாவது மெசேஜ் அனுப்பினாளா?'' என்று தனது சிநேகிதியின் லீலை என்று கேட்டு வைத்தாள்.

 
''
இல்லை... சற்று யோசித்து ''அப்ப அஸ்வின்கிட்ட ஏன் அப்படி சொன்ன?''


''
ப்ரெண்ட்லியா தானே பழகறேன், லவ்வரா இல்லையே? ஏன் என்னாச்சு யாராவது உன்னை குழப்பறாங்களா?''


''
இல்லை... சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்''


''
இப்ப என்ன நான் ஏன் உங்கிட்ட கிளோஸ்ஸா பழகறேன்னா? அவள் இங்கு வந்து படிக்கும் காரணத்தையும், அவள் ஸ்ரீராமோடு பழகும் காரணத்தையும் விளக்கி கூறினாள்.

 

அனைத்தையும் கேட்டு விட்டு ஸ்ரீராம் ''சாரி பவித்ரா'' என்றான்.


''
இப்ப சந்தேகம் போச்சா...''


''
சந்தேகம் இல்லை ஊரிலிருந்து வந்த பொண்ணு நீ. அஸ்வின் எனிமி நான் என்று ஆகாஷ் சொல்லியும் பழகறியா. எந்த நம்பிக்கையில் என்னிடம் பிரெண்ட்ஸ் அஹ் பழக்கறேனு தெரிஞ்சுக்க ஆர்வம்'' என்று ஸ்ரீ பதில் தந்தான்.


''
நீ யாரையாவது விரும்பறியா ராம்?''

 
''
இதுவரை இல்லை, எனக்கு ஆபீஸ் கவனிக்கவே நேரம் இல்லை. அதுவும் இல்லாம எனக்கு என் பிரென்ட் தான் பொண்ணு பார்க்கனும்னு கண்டிப்பா சொல்லி இருக்கேன். எனக்கு எல்லாமே அவன் தான் இப்ப நீ''


''
எனக்கு உன் பிரென்ட்டை பார்க்கனும் போல இருக்கு ஸ்ரீராம். உன் வருங்கால மனைவியை சூஸ் பண்ணறதே அவரோட சாய்ஸ் விட்டிருக்க'' என்று பவித்ரா பேசினாள்.


''
ம் கண்டிப்பா பார்க்கலாம், உண்மைய சொல்லு நீ அஸ்வினை விரும்பறியா? காலேஜ் படிக்கிறப்பா எத்தனை பேர் அவனை காதலிச்சிருக்காங்க தெரியுமா?'' என்று வினவினான்.


''
ஐயோ கடவுளே! நான் கிளம்புறேன். வீட்ல தான் அவன் தொல்லை என்றால் எங்கே போனாலும் அவன் பேச்சு தானா'' என்று சலித்தாள்.


''
எங்கே போனாலும்னா?''


''
காலேஜில ரம்யா, சஞ்சனா எப்ப பாரு அஸ்வின் பேச்சு தான், அதுவும் ரம்யா இருக்காளே! அஸ்வினை மீட் பண்ண வேற கேட்டு இருக்கா, சரியான கேடி. அஸ்வினை நல்லா சைட் அடிக்கிறா. உன் நம்பர் கூட வாங்கி வச்சி இருக்கா சரி நான் கிளம்பறேன்''


''
என்ன அவசரம்?''


''
சுவாதியை பார்க்கப் போறேன் ராம்.''


''
ஒரு நிமிஷம் நான் ட்ராப் பண்றேன் வெயிட்.'' என்று பவித்ராவை அழைத்து சென்றான்.


சுவாதி வீட்டில் இறக்கி விட்டு சென்றான். இதற்கு முன் சுவாதி பல முறை கூப்பிட்டும் வராத பவித்ரா தீடீரென வந்தமையால் சுவாதி மகிழ்ச்சி அடைந்தாள்.


''
என்னாச்சு சுவாதி வீட்டு பக்கமே வரலை.''  என்ற பவித்ரா கேள்விக்கு உண்மை கூற மனமின்றி ''நான் வரலை என்றால் நீ தேடி வருகிறாயா என்று பார்க்க தான்'' என சமாளித்தாள்.


தவசுடர் ''காபி போடட்டுமா?'' என்றதும் “வேணாம் இப்ப தான் குடிச்சேன் ஆன்ட்டி” என்று மறுத்தாள்.


''
சரி வேற எதாவது?''


''
ஓகே''  என்றதும் தவசுடரிடம் சுவாதி பிரட் ஆம்லேட் போடா சொன்னாள்.


''
ஆமா என்னாச்சு ஏன் வீட்டுக்கு வரலை''


''
அது கம்ப்யூட்டர் கோர்ஸ்ல ஒரு ஒர்க் அதான்'' என்று பொய்யுரைத்தாள்.


''
நீ இல்லாம போர் அடிக்கு உன் ஒர்க்கை அங்க வந்து பாரு, ப்ளீஸ்'' என்றவளிடம் ஆம்லேட் சாப்பிட கொடுத்தாள்.


''
அத்தை எனக்கும் ஆம்லேட்'' என கூறியப்படி அஸ்வின் வந்தான்.

 இவன் எங்க இங்க? எப்ப பாரு வாசலிலே நின்று பேச்சு ஆரம்பிக்கிறான் என பவித்ரா நினைக்கையில்,
''
ஹலோ இது எங்க அத்தை வீடு எப்ப வேணும்னாலும் வருவேன். என்ன வேண்டுமானாலும் பேசுவேன்'' என்றான்.


''
நான் ஏதும் கேட்கலையே.''


''
என் பதில் உன் பார்வைக்கு'' என புன்னகை சிந்தினான். 


இவன் என்ன நான் நினைப்பதை உடனே ஸ்கேனர் கண்கள் கொண்டு ஆராய்ந்து விடுகிறான் எப்ப பாரு கண்களை லேசர் மாதிரி துருவி ஒரு பார்வை என எண்ணுகையிலே தவசுடர் கொடுத்த ஆம்லெட் அஸ்வின் சுவைத்தான்.


இவன் வேற இங்கையும் வந்துட்டான். கிளம்பறது பெஸ்ட் என அவனின் பார்வையில் இருந்து தப்ப எண்ணினாள்.


''
சுவாதி நான் கிளம்பறேன் பை''


''
சரி போகலாம்'' என அஸ்வினும் எழுந்தான்.


''
நான் நடந்து போக போறேன்''


''
ஏன் ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் என்னோடு பைக்ல வருவேன்னு சபதம் எடுத்து இருக்கியா?'' என்று அஸ்வின் கேட்டு முடித்தான்.


''
ஏய், டைம் ஆச்சு, அஸ்வின்வோட போ'' என சுவாதி கூற, தவசுடரும் அதையே ஆமோதித்தாள். தவசுடர் சொன்னால் பதிலுக்கு மறுக்க பயந்தாள்


''
சரி ஆன்ட்டி கிளம்பறேன் பை'' என்றவளை


''
நில்லு நில்லு, சுவாதி உன் கூட பிறந்தவ மாதிரி, அதனால என்ன பெரியம்மானு கூப்பிடு சரியா?'' என்று உத்தரவிட்டார்.


''
அது..''


''
பெரியவ சொல்றன்ல'' என தவசுடர் அதிகாரம் செய்ய,
''
கூப்பிடறதுல என்னடி ஆகா போகுது அதுக்காக என்னை அக்கா சொக்கா என்று மட்டும் கூப்பிடாதே டி'' என சுவாதி சிரிப்புடன் சொல்ல, தவசுடருக்கு மீண்டும் பயந்து ''சரி பெரிம்மா'' என்றாள்.


பைக்கில் போகும் போது பவித்தரவிடம் அஸ்வின் வம்பு இழுப்பது இல்லை. ஏதேனும் வம்பு இழுத்து பைக்கில் ஏறமாட்டேன் என்றிடுவாளோ என்ற காரணத்தால் அமைதியாக வந்தான்.


வீட்டுக்கு வந்ததும் ராதையை அணைத்து, ''அத்தை சுவாதிக்கு கம்ப்யூட்டர் ஒர்க் இருந்துச்சாம் அதனால வரலை'' என்று கொஞ்சினாள்.
''
ஏன் பவித்ரா நீயும் கம்ப்யூட்டர் கிளாஸக்கு போயேன்...'' என்று ராதை ஆலோசனை வழங்கினார். கணினியின்றி உலகம் ஏது?


''
ஊரில் நாலு மாசம் போனேன் அத்தை, அப்பாகிட்ட கேட்டுட்டு ஜாயின் பண்றேன்'' என்று போனை எடுத்து கொண்டு மாடிக்கு சென்றாள். தனு அவளது அறையில் படித்து கொண்டு இருந்தமையால்....
''
ஹலோ அப்பா எப்படி இருக்கிங்க?'' என்றாள் உற்சாகம் பொங்க.

 
''
நல்லா இருக்கேன். நீ இல்லாத குறை ஒன்று தான்'' என்று கவலையாய் சொன்னார்.


''
பாட்டி, தாத்தா எல்லோரும்எப்படி இருக்காங்க?''


''
பக்கத்துல தான் இருக்காங்க கொடுக்கவா?'' என்று அனுமதி கேட்டார்.
''
கொடுங்க அப்பா'' என்றாள் பவித்ரா.

 

பாட்டி எடுத்த உடனே, ''நாங்க என்னடி பண்ணினோம், இப்படி பேச கூட செய்யாம?'' என கூறுகையில் கண்ணீர் வழிந்தது.

 
''
நான் யாரையும் காயாப்படுத்த விரும்பல பாட்டி.'' என்று மொழிந்தாள்.


''
வருண்கிட்டயாவது பேசினியா, அவன் அக்கா அக்கானு போன்ல புலம்பறான்.'' கண்ணீர் பெருக்கெடுத்து கன்னத்தில் வழிய அரை மணி நேரமாகப் பேசி வைத்தாள்.

 

 பிறகு வருணுக்கு ஹாஸ்டலில் போன் செய்து அழைக்க,
''
அக்கா'' என்றவனின் குரலில் ஒரு பாசநெகிழ்வு உண்டாக ''வருண்'' என்றாள்.


''
உன் குரலை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு அக்கா'' என்று அக்கவிடம் பேசயியலாது ஏங்கிருந்தான்.

 
''
எங்களை எல்லாம் விட்டுட்டு எங்க அக்கா படிக்க போன'' என கேவி கேவி அழுது கூடுதல் அரை மணி நேரம் பேசினாள். ஏதோ நீண்ட நாள் கழித்து மனம் சமநிலை அடைந்து ஆனந்தம் கொண்டது. பவித்ராவுக்கு நெஞ்சில் ஒரு அமைதி வந்தது.


மெல்லிய பூகம்பம் தொடரும் 

பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு