முதல் முதலாய் ஒரு மெல்லிய-12

 


 💘 12 

         அடுத்த இரு தினம் கழித்து, தவசுடர் சுவாதியுடன் ஸ்கூட்டியில் வந்து நேராக பவித்ராவை பார்த்து ''ஏன் உனக்கு அஸ்வினை பிடிக்கலை? அவனை போல பையன் கட்டிக்க கசக்குமா உனக்கு?'' என்று சண்டைக்கு வராத குறையாக கேள்வி கேட்டு நின்றார்.


பவித்ராவுக்கு தலை சுற்றியது. இரு தினத்திற்கு முன் இருந்த பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் ஒன்றும் விளங்கவில்லை.


''
என்ன பார்க்குற? என் அஸ்வின் வீட்டுக்கு வந்து உன்னை பத்தி சொன்னான். அவன் மனசைத் திருடிட்டு வந்தவளை எப்படி சும்மா விடுவான். போகப் போக அஸ்வினை உனக்கு பிடிக்கும் இந்தா ஸ்வீட்'' என கொண்டு வந்த ரசகுல்லாவை  வாயில் ஊட்டி ராதையிடம் சென்றார்.


''
அரசியல் கட்சி போல் பல்டி அடிக்கறாங்களா?! அம்மாவுக்கு அஸ்வின்னா ரொம்ப பிடிக்கும் தாத்தாவோட சுபாவம் அப்படியே இருக்கறவன். அவன் விருப்பம் நிறைவேற ஆசை அதான்.'' என்று சுவாதி விளக்கம் அளித்தாள்.


''
எனக்கு எழுத வேண்டியது நிறைய இருக்கு நான் படிக்கிறேன்'' என நழுவினாள்.


நாட்கள் இனிதாக நகர்ந்தன.


கல்லூரியில் இருந்து உணவு நேரம் முடிந்து திரும்புகையில் ஸ்ரீராம் எச்.ஓ.டி ரூமில் இருந்து வெளியே வந்தான்.


''
ஹாய் பவித்ரா'' 


''
ஹலோ ஸ்ரீராம் எங்க இங்க?''


''
ஒரு அசைன்மென்ட் சப்மிட் , சாப்பிட்டீங்களா? ''


''
ம் நீங்க''


''
ஆச்சு... அதுக்கு பிறகு ஒரு போன் கூட இல்லை''


''
எனக்கு... உங்க... நம்பர் தெரியாது'' என்று திணறினாள்.

 

அவளுக்கு இப்படி பேசும் நேரிடை பேச்சில் திகைக்கவே செய்தாள்.
''
அப்படியா...! தெரிஞ்சு இருந்தா பேசுவீங்களா?''


''
ஓ... பேசுவேன் ஏன் சந்தேகம்''


''
இல்லை சும்மா கேட்டேன்'' நம்பர் பரிமாற்றம் செய்தனர்.

‘புது போன் வாங்கிட்டீங்க போல?'' என்று பேச்சை வளர்த்தான்.


''
ஆமாம் அஸ்வின் வாங்கி கொடுத்தார்.''


''
ஒ... அஸ்வின் உங்களுக்கு என்ன வேணும்?'' என வேண்டுமென்றே கேட்டான்.


''
ம் ம் அங்கிளோட பையன், அன்னைக்கு அடிச்சதுக்கு மன்னிப்பா மொபைல் வாங்கி தந்தார்''


''
ஓகே அகைன் மீட் பண்ணலாம் பை.'' என்று கிளம்பினான்.


''
சரி கிளாஸ்ஸுக்கு டைம் ஆகுது பை'' என விடை பெற்றனர். 


சுவாதி இதனை தூரத்தில் இருந்து கண்கள் சிவக்க கவனித்தாள்.
ரம்யாவிற்கு அஸ்வினை சந்தித்து பேச ஆசை. எனக்கு அறிமுகப்படுத்திவை டி’ என சில நாட்களாக கூறி வருகிறாள். இப்பொழுது எல்லாம் அஸ்வினை கண்டு ரூமிற்குள் பதுங்காமல் ஹாலில் எல்லோரிடம் பழகுவது போல் இயல்பாக இருக்க முயல்கின்றது.

 

ஆனால் பேசினால் இரண்டு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தவிக்க திரும்பி விடுவாள். அஸ்வின் மனதில் சிரித்துக் கொள்வான்.


பவித்ராவுக்கு ஒரு ' ஹாய்' என மெசேஜ் வர யாரது என்று பார்த்தால் ஸ்ரீராம் மெசேஜ். போன் எடுத்து ஸ்ரீராமுக்கு கால் செய்ய ரிங் ஒலிக்க கட் ஆனது. இரண்டு நிமிட இடைவெளியில் பிறகு ஸ்ரீரமே கால் செய்தான்.


''
ஹலோ பவித்ரா சாரி கால் அட்டேன் பண்ண முடியல, எனிதிங் ஹப்பேன்?''


''
இல்லை சும்மா தான்... நீங்க மெசேஜ் பண்ணினதும் பேசலாம்னு''


''
ஓ அப்ப என் மெசேஜ் பார்த்து தான் கால் பண்ணி இருக்கீங்களா?'' என்று விளையாடினான்.


''
அப்படில்ல...'' என தடுமாற,
''
என் நம்பர் கொடுத்து ஒன் வீக் ஆகுது ஒரு மெசேஜ், கால் ஒன்னும் இல்லை'' என்று குற்றம் சாட்டினான்.


''
நீங்க எப்படி எடுத்துப்பீங்களோனு தயக்கம்'' என்று பேச நிஜமாகவே தயக்கம் உற்றாள். 


''
ரொம்ப பயந்த சுபாவம் நீங்க. ஓகே என் பிரென்ட் இருக்கான் அப்பறம் பேசறேன் பை'' என தூண்டித்தான்.


''
பை'' அவர்களது போன் உரையாடல் மெசேஜ் உரையாடல் தொடர்ந்தன.


தனுவும் சுவாதியும் ஞாயிறு கிண்டி பார்க் செல்ல திட்டமிட்டனர்.

பறவைகள் விலங்குகள் என சுற்றி திரிந்து அமர்ந்தனர்.


''
எனக்கு பேட்ஸ் தான் ரொம்ப பிடிச்சுருக்கு'' என தனு கூற, சுவாதியும் ஆமோதித்தாள்.

பவித்ராவுக்கு எதிலும் கவனம் செல்லவில்லை. ஸ்ரீராம் அவனோடு டின்னர் சாப்பிட அழைக்க, விளையாட்டிற்கு சரியென தலையாட்டி மெசேஜ் அனுப்பிவிட்டாள். இப்பொழுது அங்கிளிடம் அதை எப்படி கூறுவதென தவித்தாள். ஆனால் அதற்கு சுவாதியே வழி செய்தாள்.


''
பவித்ரா என் மனசுல ரொம்ப நாளா ஒரு கேள்வி கேட்கணும் இருந்தேன் கேட்கலாமா?'' என்று அஸ்வின் இருக்கும் நேரம் கேட்டாள்.


''
சொல்லு சுவாதி''


''
அன்னைக்கு அந்த பையன்கிட்ட என்ன பேசின.''


''
யாரு?'' என்று மறந்தே போனவள் கேட்க,


''
உனக்கு ஹெல்ப் பண்ணினானே அந்த பையன், காலேஜில ரொம்ப நேரம் பேசினியே.'' அஸ்வின் இருக்கும் சமயம் பார்த்து கேட்பதை உணர்ந்தாலும் ''சுவாதி லஞ்ச் சாப்பிட்டு கை அலம்ப வந்து திரும்பின நேரம் உனக்கு ரொம்ப நேரமா?'' என்றாள் பவித்ரா.


''
ஓகே ஓகே பைவ் மினிட்ஸ்''


''
எப்பவும் போல நலம் விசாரிப்பு, அப்புறம் நம்பர் சேஞ்சு பண்ணிகிட்டோம்''
''
சாட் பண்றியா?'' என்றே அதிசயமாக கேட்டாள்.
''
ஆமாம்'' என அஸ்வினை பார்த்து மெல்ல மெல்ல தலைக் கவிழ்ந்தாள் . 


''
அவ்ளோ கிளோஸ்ஸா?'' என்று ஒரு வித நக்கல் போலவே கேட்டாள் சுவாதி.


''
ஏன் நட்பு வட்டத்துல ஆண், பெண் பேதம் இருக்கா சுவாதி?'' விஸ்வநாதனிடம் சட்டென திரும்பி, ''அங்கிள் நாளைக்கு ஈவினிங் வெளிய சாப்பிட ஸ்ரீராம் கூப்பிட்டு இருக்கான். நீங்க அலோ பண்ணலனா நோ சொல்லிடறேன்.'' என்று கேட்டுவிட்டாள்.

''தாராளமா போய்ட்டு வா பவித்ரா'' என விஸ்வநாதன் கூறினார். அஸ்வினோ ஒரு கூர்ந்த விழியை செலுத்தினான். 

-மெல்லிய பூகம்பம் தொடரும். 
 
 -பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...