முதல் முதலாய் ஒரு மெல்லிய -3

 


💘 3

       
இனிதாக இரு நாட்கள் நகர்ந்ததே அறியாதுச் சென்றன.

திங்கள் காலை வேளை உதித்தது.  பவித்ரா இன்று இயல்பானா பணி முடிந்து பரபரப்பாக இயங்கினாள். தலை குளித்து நீண்டப் பின்னலில், ராதை கொடுத்தப் பூவைச் சூடி, இளஞ்சிவப்பு சுடிதாரில் ஹாலுக்குள் நுழைந்தாள்.


  ''அங்கிள் எந்த பஸ் எப்படி போகணும்னு தெளிவா சொன்னிங்கன்னா கொஞ்சம் ஈஸியா இருக்கும்.'' என்று வந்து நின்றாள்.


    '' முதல் நாள் பயப்படாம ரிலாக்ஸா போகணும். அதனால  அஸ்வின்கிட்ட கேட்டேன்அவன் ஆபீஸ் போகற வழி என்பதாலா உன்னை பிக் அப் பண்ணிக்கறதா சொல்லிட்டான்'' என்றார் அவர். தங்கள் வீட்டில் இருக்கும் பெண் தங்கள் மகன் அழைத்து செல்வதில் அவருக்கு ஒரு கருத்தும் தோன்றவில்லை. அதுவும் அஸ்வின் பேசுவதே அரிது. அதனால் கொண்டு சென்று அமைதியாக வருவான் பவித்ராவும் பேசாமல் இருப்பாள். இங்கு வந்த நாளில் அப்படி ஒன்றும் தனது இரு மகனிடமும் பேசி அவர் பார்த்ததே இல்லை. எல்லாம் மகள் தன்யாவிடம் மட்டுமே.

 
  பவித்ராவுக்கோ ‘அஸ்வினா? என மனத்திரையில் ஒரு கேள்வி எழும்பியது.

      ''பரவாயில்லை அங்கிள் நான் ஆட்டோ பிடிச்சுப் போறேனே.'' என்று தயங்கினாள்.


   '’இல்லைம்மா  நந்தகோபாலன் போன் பண்ணினா நிம்மதியான பதில் சொல்லணும் நீ எப்படி போய் இருப்பேன்னு கவலையா இருப்பான்.'' என்று தந்தை மனம் என்ன எண்ணும் என்பது அறிந்து கூறினார்.


  '' அங்கிள் அவருக்கு எதுக்கு சிரமம் அதான்.'' என்று அஸ்வின் கூட போகவும் தயங்கினாள். மேலும் அவனுக்கு எதற்கு சிரமம் என்றும் யோசித்தாள்.
  

''எனக்கு எந்த சிரமமும் இல்லை . ஆபீஸ் போற வழி தான் பரவாயில்ல'' என தனது ஷூ லேஸை இறுகக் கட்டினான் அஸ்வின்.

   ஒரு நிமிடம் நெஞ்சு கூடு வேகமா அடித்தது பவித்ராவிற்கு இவனோடவா? இவனை பார்த்தால் என்னவோ அச்சம் பரவுகின்றது.
  '' சரிம்மா மற்றதைப் போயிட்டு வந்துப் பார்க்கலாம்.'' என்று அவரின் அலுவலக கார் வரவும் சென்றார். 

  '' அங்கிள் அது வந்து.'' என இழுக்க, ''டைம் ஆச்சு '' என அஸ்வின் நேர் பார்வைக் கொண்டு அளவிட்டான். விழியில் என்ன செய்தியோ படபடப்பைக் கூட்டியது. அங்கிள் ரிலாக்ஸா இருன்னு சொல்லி டென்சன் ஏத்தி விட்டுட்டாரு கடவுளே! என மனதில் முனங்கிக் கொண்டு ராதையிடம் விடைப் பெற்றாள்.

   ஏற்கனவே தன்யா பள்ளிக்கு சென்றிருந்தாள் ஆகாஷும் தொலைவு என்று விரைவாக கிளம்பி இருந்தான்.


தன் பையை முன்னே வைத்து ஹெல்மெட் அணிந்து திரும்பிப் பார்த்தான். அந்தப் பார்வைக்கு நீ இன்னும் உட்காரலையா? என கேட்பதாகப்பட்டது. ஒரு பக்க கால் போட்டு அமர்ந்து கடவுளை வேண்டிக் கொண்டாள். மிதமான வேகத்தோடு கல்லூரி வந்தடைந்தான். வண்டி நின்றதும் தேங்க்ஸ் சொல்லலாமா ? வேணாமா? என நினைக்கையில் ''ஆல் த பெஸ்ட்'' என ஒரு பார்வைப் பார்த்துவிட்டு பைக் வேகம் எடுத்தான்.


   சே! நான் ஒரு தேங்க்ஸ் கூட சொல்லல. அவரா அமைதியா இருக்கார். நானா தேவையில்லாம பயந்துட்டேன். தேங்க்ஸ் மட்டுமாவது சொல்லி இருக்கலாம். என்னைப் பற்றி என்ன நினைச்சு இருப்பார் என்று பவித்ரா தன்னையே திட்டிக் கொண்டாள் .


ஏதோ மிரட்சியோடு தான் தனது வகுப்பறையைத் தேடிக் கண்டு பிடித்தாள். ப்ரின்சிபால் கொடுத்த சேர்க்கைக் கடிதத்தை எடுத்து கொண்டு வகுப்பு ஆசிரியரிடம் கொடுக்க , அவர் சக மாணவ, மாணவியருக்கு பவித்ராவை பற்றி சிறு வரவேற்பை அளித்தார்.

   '' லிசன் ஸ்டுடென்ட், இந்த ஸ்டுடென்ட் பவித்ரா தஞ்சையில படிச்சிட்டு அங்கயிருந்து இங்க இனிமே உங்களோட சேர்ந்து படிக்க வந்து இருக்காங்க. ஒரு ஹாய் சொல்லி தோழியா அக்ஸ்சப்ட் பண்ணிக்கோங்க'' என்று கூறினார்.

 
  '' ஹாய்'' என கூக்குரல் காதை பிளந்தது. எல்லோரையும் பார்த்தவாறு ஒரு ''ஹலோ'' சொன்னாள். சக மாணவி ஒருத்தி ''இங்க வா உட்காரு'' எனக் கூப்பிட அவள் அருகே அமர்ந்தாள்.
வகுப்பு செயல்பட இடைஇடையே இருக்கும் நேரத்தில் அந்த பெண் ரம்யா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள், சிறு சிறு தோழமை பறிமாறல் செய்துக் கொண்டாள். ரம்யா உதவியோடு பஸ் பிடித்து முகவரி சொல்லி ஆட்டோவில் வீடு வந்தடைந்தாள்.

  
ராதையிடம் தனது அன்றைய பொழுதை கூறிக் கொண்டு இருக்க, டெலிபோன் மணி ஒலித்தது. ராதையோ '' உங்க அங்கிளா தான் இருக்கும். நீ பத்திரமா வந்துட்டியானு கேட்க பண்றாரோ என்னவோ''  என எடுத்தார்.


''
ஹலோ''
''
…..''
''
ஆ வந்துட்டா''
''.....''
ம் ம் ..போனை வைத்து விட்டு ராதை நெற்றி முடிச்சுட பவித்ராவை பார்க்க மீண்டும் டெலிபோன் மணி அடிக்க எடுத்து ,
''
ஹலோ ''
''......''
“அஹ்.. வந்துட்டாங்க..''
''...........''
''
சரிங்க''
''....'' 
''
ம்.. வச்சிடுறேன் . ''
''
அங்கிள் தான் பவித்ரா, முதலில் போன் பண்ணினது அஸ்வின் நீ வந்துட்டியானு கேட்டான் இப்ப உங்க அங்கிள் கேட்டாங்க. சரி நான் போய் மாடில துணி எடுத்துட்டு வர்றேன்.''
''
இருங்க ஆன்ட்டி நான் போறேன்.'' என்றாள்.
''
சரி நான் கிச்சன் ஒர்க் பார்க்கிறேன்.''


பவித்ரா மாடிக்கு சென்று துணி எடுத்து, தன் தந்தையிடம் பேசினாள். தனு, ஆகாஷ், அஸ்வின், விஸ்வநாதன் என ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள். பவித்ரா தன்யாவோடு பேசி இரவு உணவு உண்டு முடித்து உறங்கினார்கள்.

   அடுத்த நாள் காலையில் சாப்பிட அமரும் போது,  அஸ்வினை தவிர்க்க '' அங்கிள் இங்கேருந்து காலேஜிக்கு ஏறுகின்ற பஸ் ஸ்டாப் எங்க இருக்கு?'' என்றாள்.
''
எதுக்கு மா சிரமம். அஸ்வின் கூட்டிட்டுப் போறேனு சொல்லி இருக்கானே?''
''
அவருக்கு எதுக்கு சிரமம் நானே போய் கொள்ளறேன் அங்கிள்.'' என்று மறுத்தாள்.

 

'' ஹாஸ்டல்ல இடம் கிடைச்சு, நீ இங்கிருந்து போற வரை அஸ்வினோட போய்வாம்மா, அதான் எனக்கும் உங்க அப்பாவிற்கும் நிம்மதி. புது இடம் பாரு.’’ என்று அவரும் மறுத்தார்.

 
''
பழகிக்கறேன் அங்கிள் ப்ளீஸ். எத்தனை நாளுக்கு அவர் அழைச்சிட்டு போவார்'' என வாதிட்டாள்.

''அதான் ரீடர்ன் வர பழகிக்கறல போதும். கிளம்பலாமா? '' என்ற அஸ்வின் பேச்சால் அமைதியாகச் சாப்பிட்டு நகர்ந்தாள். பின் காலேஜ் வந்த பிறகும் திரும்பி கூட பார்க்காமல் அமைதியாக சென்ற பவித்ராவை, அஸ்வின் நின்றுப் பார்த்து விட்டுச் சென்றதை அவள் அறியவில்லை.

  ஏனோ அங்கிளிடம் பேசும் அளவுக்கு அஸ்வினிடம் பேசிட நாவரவில்லை.


ரம்யாவிடம் போனவுடனே '' இங்க ஹாஸ்டல்ல தங்க இடம் வேணும் யாரை காண்டாக்ட் பண்றது.''  என்று கேட்டாள். அதற்கு ரம்யாவோ தோழி வட்டாரத்தில் '' சஞ்சனா ஹாஸ்டல் தான் அவளிடம் கேட்கலாம்'' என்றாள்.
    

    மாலை வீடு வந்தடைய தன்யாவும் சற்று நேரத்தில் வந்து சேர்ந்தாள். நேற்று போலவே இருவரும் மாடிக்கு துணி எடுக்கச் சென்றனர்.
ஸுகூட்டி வரும் சத்தம் கேட்டு ராதை எட்டிப் பார்க்க,
வேகவேகமாக சுவாதி உள்ளே வந்தாள்.


''
வா சுவாதி உடம்பு சரியாச்சா?'


''
எங்க அந்தப் பொண்ணு?'


''
யாரு தனுவையா கேக்கற?''


''
இல்லை... புதுசா வந்தப் பொண்ணக் கேட்டேன்.'' என்றாள் சுவாதி.


''
பவித்ராவையா? ''


''
ஆமாம். அஸ்வின் எதுக்கு அவளை ட்ராப் பண்றான்.'' என்று கேட்க மாடியில் இருந்து தனுவும், பவித்ராவும் வருவதற்கு சரியாய் இருக்க சுவாதி பார்வை பவித்ராவை குறிவைத்தது.


''
அதனால உனக்கு என்ன பிரச்சனை'' என்றவாறு உறுமியது வெளியில் இருந்து வந்த அஸ்வின் குரல்.
''
என் பிரெண்ட்ஸ் எனகிட்ட...'' என சுவாதி ஆரம்பிக்க,
''
ரொம்ப நல்ல பிரெண்ட்ஸ் வேலை வெட்டி இல்லாம ஒழுங்காப் படிக்கச் சொல்லுப் போ'' என ஏதோ சொல்ல வந்தவளை அஸ்வின் முறைக்க வேறு பேச்சுப் பேசாது சோபாவில் ''தொப்'' என அமர்ந்தாள்.


''
புயல் போயாச்சா, பவித்ரா இது சுவாதி. அங்கிளோட தங்கை தவசுடரோட மகள் பெயர் சுவாதி.  அவ பேசினதை மனசுல வச்சிக்காத..''
''
ஆமாம் ஆமாம் மனசுல வச்சிக்காத அது ஒரு லூசு'' என தனு சிரிக்க, சுவாதி முகம் சிவந்தன. அத்தை மகள் மாமா பெண் பேசி கொள்கின்றனர் என பவித்ரா அமைதியானாள்.


ராதை ஆப்பிளை அரிந்து தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
''
சுவாதியை அஸ்வினுக்கு கட்டிக் கொடுக்கணும்னு அங்கிளோட தங்கைக்கு ரொம்ப இஷ்டம். சுவாதிக்கு நீ அஸ்வினோட காலேஜிக்கு போனது தெரிஞ்சு கோபம் இல்லயா  சுவாதி.'' என தலை வருடினார்


''
அதெல்லாம் ஒன்னும் இல்ல ...'' என சுவாதி பவித்ராவை துளைத்து எடுத்தாள்.


''
அம்மா ஆரம்பிச்சிடீங்களா? உங்களுக்கும் வேலை இல்லையா? அவ வரும் போது பூந்தொட்டியில் கால இடிச்சு ரத்தம் வருது, அத பாருங்க வெட்டியா பேசிக்கிட்டு'' என கத்திச் சென்றான்.
பவித்ரா துணி மடிக்க எழுந்துச் சென்றிட, தனுவும் சுவாதியும் உரையாடினார்கள்.

 

    துணி மடித்துக் கொண்டே பவித்ரா 'ஓ அன்னிக்கு மால்ல சுவாதிகாக தான் கிப்ட் வாங்கி இருப்பானோ? சுவாதியை விரும்பறானோ? அவ கால்ல ரத்தம் வந்தா ரொம்பவே கத்துறான்’ என அவன் கத்தலுக்குத் தவறான அர்த்தம் புரிந்துக் கொண்டாள்.


திடீரென '' ஹலோ'' என்றவாறு சுவாதி நுழைய, '' என்ன கோபமா? சாரி என் பிரெண்ட்ஸ் அஸ்வின் ஒரு பொண்ண ட்ராப் பண்றதா சொன்னாங்க யாருனு பார்க்க வந்தேன். என்னாச்சு இன்னும் என்ன முழிக்கற... ப்ரெண்ட்ஸ்?! '' என கை நீட்ட, பவித்ராவும் ''ப்ரெண்ட்ஸ்'' என கைக் கொடுத்தாள்.


ஆகாஷ் வந்தவுடன் ஸுகூட்டியைக் கண்டு வேகநடையுடன் சுவாதியைப் பார்த்து,
''
இப்ப உடம்பு சரியாச்சா ஆர் யூ ஓகே?'' என்று விசாரித்தான்.
''
ம் பைன்'' என்று கூறி விட்டு ''சரி பை பவித்ரா'' என அனைவரிடம் விடைப் பெற்றாள்.


பவித்ராவிற்கு ஹாஸ்டலில் இடம் கிடைக்கவில்லை. லேடீஸ் ஹாஸ்டலில் தேட சொல்லி விஸ்வநாதன் அஸ்வினிடம் கூறினார். அவனோ மந்தமாக சரியென்று தலையாட்டினான்.

 

சுவாதி அதன் பின் தினமும் வருகை புரிந்தாள். ஏற்கனவே வந்து செல்லும் பழக்கம் இருந்தாலும் இன்னும் கூடுதலாக மாமா வீடே கதியென்று இருந்தாள். 

மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...