முதல் முதலாய் ஒரு மெல்லிய-1
முதல் முதலாய் ஒரு மெல்லிய
💘 1
பேருந்தில் அதிகக் கூட்டம் இல்லை. ஜன்னலோர இருக்கை பவித்ராவுக்கு கிடைத்தது. இதே தோழிகளுடன் செல்லும் போது கிடைத்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும். இதே மற்ற நேரமாக இருந்தால் தனிமையில் செல்ல ரசித்துக் கொண்டும், வேடிக்கைப் பார்த்து கொண்டும் வருவாள். ஆனால் பவித்ராவிற்கு இது இரண்டும் இல்லாது போனது. தற்போது நெஞ்சம் முழுவதும் சோகங்கள் ஏற்றி கணத்த இதயமாக நெஞ்சுப் பிசைந்தது அவளுக்கு.
அவளையும் அறியாது உறங்க, உறக்கத்திலும் அவள் அழுத தடயம் தென்பட்டது. நேரம் வேகமாக ஓட இதோ
அவளது இறங்கும் இடம் சென்னையும் வந்து விட்டது.
அவளை அழைக்க அவளது தந்தையின் நண்பர், விஸ்வநாதன் அங்கிள் காத்திருந்தார். இறங்கிய உடனே தனதுச் சிறு புன்னகையை
சிந்தினாள்.
''வெல்கம்
டு சென்னை மா.'' என்று ஆசையாக
வரவேற்றார்.
''தேங்க்ஸ்
அங்கிள் ரொம்ப நேரம் காத்திருக்க வச்சிட்டேன் . பஸ் அரை மணி நேரம் லேட் அங்கிள்
ஸாரி.'' என்றாள்.
''பரவாயில்லைமா
நான் இப்ப தான் வந்து பத்து நிமிடம் ஆகுது. சொந்தக் கார் சர்வீஸ் விட்டு
இருக்கேன். அதனால கார் புக் பண்ணி வந்தேன், வெயிட்டிங்ல இருக்கு போகலாமா?'' என்றார்.
''ம்...ஓகே
அங்கிள்'' என்று
பதிலுரைத்தாள்.
ஓட்டுனர் இருப்பதால் நாகரீகம் கருதி
ஏதும் பேசாது வந்தனர். வீட்டிற்கு வர மாலை ஐந்து மணி ஆயிற்று. வாசலில் உள்ளே வரும்
போதே விஸ்வநாதன் ''இது உன் வீடு மாதிரி தான் பவித்ரா. நீ சங்கடப்படாம
சகஜமா இருக்கலாம்.'' என்று அவளின்
தயக்கம் கண்டு உரைத்தார்.
தர்ம சங்கடமா இருப்பினும் ''சரி அங்கிள்'' என கூறி தலையாட்டினாள்.
''வாங்க
வாங்க.. வந்தாச்சா.
வா மா பவித்ரா'' என ராதை இருவரையும் வரவேற்றார்.
''இது என் அன்பு மனைவி ராதை'' என சிரித்தப்படி
அறிமுகப்படுத்த இரு கரம் குவித்து வைத்து ''வணக்கம் ஆன்ட்டி'' என தெரிவித்தாள்.
''நல்ல முகலட்சணம்மா உனக்கு.
வா.... இது உன் வீடு, நான் உன் அம்மா மாதிரி, எது வேண்டும் என்றாலும் பயப்படாம கேளு.. களைச்சுப்
போய் வந்து இருப்ப, போய் ப்ரஷ் ஆகிட்டு வாம்மா. என்றார் கரிசனையாக.
‘’காபி டீ இல்ல ஹார்லிக்ஸ் எது குடிப்ப பவித்ரா?” என்று ராதை கேட்டார்.
“காபி ஆன்ட்டி.'' என்றாள்
அமைதியாய். பவித்ராவுக்கு தயக்கம் துளியும் போகவில்லை. ஆனால் ஏதோ இதம் உணர்ந்தாள்.
கீழே இருக்கும் ஒரு அறையை
சுட்டிக் காட்டி, ''முகம் அலம்பிக்கோ இதோ வந்துட்டேன்'' என ராதை நகர்ந்தார்.
விஸ்வநாதன் புன்னகைத்து ''டேக் கேர் பவித்ரா''
என மற்றோரு அறையில்
நுழைந்தார்.
தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் முகம் அலம்பி கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டு டவல்
எடுத்துத் துடைத்தாள்.
ஒரே நொடியில் மனிதனின்
இயல்பை பறைச்சாற்ற முடியுமா?
இதோ இந்த இருவரும் பார்த்த உடனே நல்ல மனம் கொண்ட குணம்
படைத்தவர் என கூறிடலாம். மனம் பூரித்து லேசாகியது போன்று தோன்ற வெளியே வந்தாள்.
அங்கே ஹாலில் விஸ்வநாதன் டிவியை ஆன் செய்து பார்வையிட்டவாறு ''உட்காரு பவித்ரா''
என எதிர் சோபாவைச் சுட்டிக்
காட்டத் தயக்கத்துடன் அமர்ந்தாள்.
ராதை ஆவி பறக்க மணம் மிக்க காபியை டிரேயில்
எடுத்துக் கொண்டு வந்து, சோபா நடுவில் இருந்த டீபாயில் வைத்து '' எடுத்துக்கோ பவித்ரா'' என்றார். விஸ்வநாதன் தன்
அறைக்கு சென்றார்.
'' ஆன்ட்டி
காபி சூப்பர் எங்க வீட்டில் குடிச்சது போல இருக்கு’' என மகிழ்ச்சியாய் கூறினாள்.
'
''இதுவும்
உன் வீடு தான்மா'' என ராதை கூறவும் அமைதியாக ''ம்ம்’’ என்று மீண்டும் காபியைப் பருகினாள்.
திடீரென உற்சாகமான குரல் கேட்டது. ''ஹாய்... யார் இந்த அழகானப் பொண்ணு. பொம்மை மாதிரி இருக்கு'' என துடுக்காக வந்தது ஒரு பள்ளி சீருடை அணிந்த பெண்ணின் கேள்வி.
அங்கு இருந்த ரதையோ ''அடி வாலு பிளஸ் டூ படிக்கறப் பொண்ணு நீ. என்ன சின்ன பிள்ளை மாதிரி
அவளை கேள்வி கேட்குற... அவ உன்னை விட சின்னவனு நினைச்சுட்டியா? '' எனக் கடிந்தார்.
''ஓகே ஓகே
யார் இவங்க? அப்பா சொன்னாங்களே அவங்களா?'' என ஆர்வம் தாளது கேட்டாள் அவள்.
''ஆமாம் டி'' என தனுவிடம் கூறி ''சாரி பவித்ரா சரியான வாலு, இவ எங்க வீட்டு கடைக்குட்டி தன்யா பிளஸ் டூ படிக்கறா, ரொம்ப செல்லம் அதான் வாய் நீளுது'' என்று செல்லமாய் மக்களின் கதை திருகினார் ராதை.
''எங்க வீட்டுல கூட என்னை அப்படித் தான் சொல்வாங்க
வாய் காது வரை இருக்குனு. ஆனா கடைக்குட்டி இல்லை வீட்டுக்கு மூத்தப்பெண் எனக்கு அப்பறம் ஒரு தம்பி.” என்றவளுக்கு வீட்டு நினைவு தாக்கியது. லேசாக கண்ணீர் துளிர்த்தது.
தாய் தந்தை நினைவு
வருகின்றதே என்று ராதை
தனுவை விரட்டினார்.
''ஓ... தனு போய் யூனிபோர்ம் சேஞ்சு பண்ணி சீக்கிரம் வா பூஸ்ட் போட்டு
வைக்கிறேன்'' என்று வழமையான
பணியை பார்த்து வர கூறினார் ராதை.
''ஜஸ்ட் எ
மினிட் வந்துடறேன். வந்து பேசுவோம்'' எனப் பறந்தாள்.
பவித்ராவிடம் ''எங்க வீட்டுல மூன்றும் மூனுவிதம். மூத்தவன் ஆகாஷ்
ஓரளவு நல்ல பேசுவான். ரெண்டாவது அஸ்வின் கேட்டதுக்கு மட்டும் பதில் வரும். மூனாவது
தன்யா அதிகம் வாயாடுவா. பார்த்தியே” என்று கூற பவித்ரா புன்னகைத்தாள்.
உடை மாற்றி பூஸ்ட் பருகிய படி தனு வரவும், ராதை கசமையலறையில் நுழைந்தாள்.
''ஹாய் நான் தன்யா எல்லாரும் தனு என்றே
கூப்பிடுவாங்க. பவித்ரா இங்கப் படிக்க வந்திங்களா? நீங்க ரொம்ப கியூட்டா இருக்கீங்க. எவ்ளோ பெரிய ஹேர் உங்களுக்கு...
பராமரிக்க கஷ்டம்ல'' என பதில் கூற கூட விடாது பேசிக்கிட்டே இருக்க
அனைத்திற்கும் ''ம்” “ம்..'' என சிரித்தவாறு பதில்
விடுத்தாள் பவித்ரா.
பவித்ராவிற்கு தனுவை மிகவும் பிடித்தது. அவள்
அதிகம் பேசியது ஏதோ தூரத்தில் இருந்த அந்நியம் குறைந்ததுப் போல் உணர மனம்
லேசாகியது.
''அம்மா
வெங்காயப் பக்கோடா வாசம் வருது ஏதாவது ஸ்பெஷலா?'' என ஆகாஷ் வாசலிலேயே வாசம்
பிடித்து வீட்டின் உள்ளே வந்தான்.
ஆகாஷ் பவித்ராவை பார்க்க சற்று அமைதியாக
சமையற்கட்டில் சென்றான்.
''அம்மா அப்பா சொன்னரே அந்த பொண்ணு தானே'' என பக்கோடாவை வாயில் போட்டு சுவைத்தான்.
''ஆமா டா ..” என்றவர் அவன் அப்படியே சுவைக்கவும் “டேய் போய் கை, கால் அலம்பிட்டு
சாப்பிட வா டா'' என
அதட்டினார்.
''சரி சரி.
உங்க சின்னப் பையனுக்கு ஹாட் பாக்ஸ்ல வச்சிட்டு மீதியை எங்களுக்கு வைக்காதிங்க மா
. முதல்ல எங்களுக்கு வைங் '' என மாடிப் படி ஏறிய படிசொல்லிச்
சென்றான்.
''என்னமா
எப்ப எனக்கு பக்கோடா வரும்'' என தனு சலித்தாள்.
ஒரு தட்டு முழுவதும் பக்கோடா நிரப்பி ராதை
டேபிளில் வைத்து ''எடுத்துக்கோ டி.. பவித்ரா சாப்பிடுமா'' என்றார் ராதை.
நேரம் செல்ல செல்ல தனுவோ '' ஓகே நான் ட்யூஷன் கிளம்பறேன் பவி பை. என் ரூம்ல
தானே இருப்பிங்க வந்து நிறைய கதை பேசுவோம்'' என எழுந்தாள்.
''ஓ.. டியூஷன் இருக்கா?” என்று இதுவரை நேசம் கிடைத்தவள் செல்ல முகம்
வாடினாள்.
''ம்.. நைட் பார்க்கலாம் பவித்ரா'' என தனு விடைப் பெற்றாள்.
அறையிலிருந்து வெளி
வந்த விஸ்வநாதனும், ஆகாஷும் டிவியை பார்க்க தனக்கான அறையில் கொடுக்கப்பட்ட அலமாரியில்
துணியை அடுக்கி இருந்தாள்.
ராதை அதற்கு உதவிப் புரிந்தார்.
திடீரென ஒரு உருவம் மாடிப்படியில் வேகமாக
ஏறியதோ!? என பவித்ரா யோசிக்கையில் ராதை சின்ன ஹாட் பாக்சில்
பக்கோடா எடுத்துக் கொண்டுப் படியேறினார்.
ராதை தன்னிடம் வந்துப்
பேசும் போது எல்லாம் இது இப்பொழுது வந்துப் பழகிய வீடு போன்று இல்லாமல் இயல்பாக இருப்பது
திருப்தியாக இருந்தது. எப்படியாவது காலேஜ் சீட் கிடைத்து ஹாஸ்டலில் இடம் கிடைக்கும் வரை, இந்த வீட்டில் இதே சூழ்நிலை
மாறாது இருக்க வேண்டும்.
கடவுளே! முதலில் தனக்கு
சென்னையில் சீட் கிடைக்குமா? பவித்ரா மார்க்கிற்கு உடனே கிடைக்கும். ஆனால் அவள்
படிக்க வந்தது முதல் வருடம் அல்ல மூன்றாம் வருடம். பாதியில்
வந்து புதிய காலேஜில் சீட் கிடைப்பது அரிதே. அதே யோசனையில் நேரம் போனது.
தனு வந்தப் பின் பவித்ரா நேரம் பறந்தது. ராதை தனுவையும் பவித்ராவையும் இரவு சாப்பிட அழைத்தார்.
டைனிங் டேபிளில்
அமர்ந்தவாறு இந்த வீட்டில் தான் எத்தனை சந்தோஷம் மனசு ரிலாக்ஸ்டா இருக்கு. நன்றி
கடவுளே! என்று பெருமூச்சு விட்டாள்.
மாடி அறையில் இருந்து
கதவுத் திறந்து கம்பீரத்திற்கு சொந்தக்காரன் அழகாக நடந்து
வந்தான்.
விஸ்வநாதன் பவித்ராவை
பார்த்து ''இவன் தான் என் இரண்டாவது மகன் அஸ்வின்'' இயல்பாக படிக்கட்டைப் பார்த்த பவித்ராவுக்கு
மூச்சு முட்டியது. இவன் அவன் அல்லவா?! எனப் புருவம் முடிச்சு விழ, உடனே தன்னை இயல்புப் படுத்திக் கொண்டாள். விஸ்வநாதன் தவறாக எண்ணிடுவரோ என்று.
மேஜையில் உணவு பரிமாற தட்டை நோக்கியே உணவு உண்டாள். எதிரே
இருப்பவனை பார்க்க தவிர்த்தே. யாரோ தன்னை உற்று நோக்கி பார்வையிடுகின்றனர் என உள்ளுணர்வு கூற தலை
நிமிர்ந்தாள்.
அஸ்வினது கண்கள் அவளைப்
பார்க்க செய்வதறியது மீண்டும் தட்டில் கண் பதித்து உண்டாள்.
''அஸ்வின்
நீயும் ஆகாஷும் படிச்ச
காலேஜில பவித்ராவுக்கு தேர்ட் இயர் சீட் வேணும். உனக்கு தான் காலேஜ் பிரின்சிபால்
ரொம்ப நெருக்கம், ஒரு போன் பண்ணி விஷயத்தை சொன்னா நாளைக்கு ஈஸியா
இருக்கும்.'' என்று பேசினார்.
''ம்ம் நேத்தே சொன்னிங்க நினைவு இருக்கு '' என்று கூறி உண்டு
முடித்துக் கை அலம்பச் சென்று விட்டான்.
கல்லூரியில் ஒரு முறை
அரசியல் கட்சி ஆட்கள் பிரச்சனை செய்தப் போது அஸ்வின் அவனது மொத்த வகுப்பு மாணவரும்
ஒன்றிணங்க பிரின்சிபால்க்கு ஆதரவு தந்தனர்.
அஸ்வினுக்கு
அக்கல்லூரியில் என்றும் தனி மரியாதையும் பெயரும் உண்டு.
ராதையோ ''இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா'' என பரிமாற, “போதும் ஆன்ட்டி பருப்பும் பாவக்காய் பொறியலும் ரொம்ப ருசியா
இருந்துச்சு. மோஸ்ட்டா இந்த துவர்ப்பு கசப்பு ரொம்ப பிடிக்கும்'' என்றவளுக்கு ஏனோ வாழ்க்கையும் அதே
சுவையை தருகின்றாரோ என அந்த நொடியும் தோன்றாமல் இல்லை.
''இந்த காம்பினேஷன் அஸ்வின்
அண்ணாக்கு பிடிக்கவே பிடிக்காது உங்களுக்கு ருசியா இருந்துச்சா? '' என்று விளையாட்டாய் தனு தனது அண்ணாவோடு ஒப்பிட பவித்ரா பதிலுக்கு சிரிப்பை
உதிர்த்து நழுவினாள்.
அறைக்கு வந்தப் பின் இவனை தானே அன்றைக்கு மாலில் பார்த்தோம். அவனுக்கு என்னை அடையாளம்
தெரியல. அவனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சா என்ன? தெரியலனா என்ன? தெரியாமல் இருப்பது நல்லது.
அவன் என்னைப் பார்த்த
பார்வை ஏதோ... என்ன பார்வைனு புரியல... அன்னைக்கு ‘வில் யூ மேரிட் மீ'னு ஒரு கிப்ட் வாங்கினானே அது யாருக்கு? யாருக்காக இருந்தா எனக்கென்ன..? ஒரு வேளை லவ் பெயிலியரா? எதுவா இருந்தாலும் இருக்கற ஒரு வாரத்தில் அவன் கண்ணில்படாம போய்ட்டா
பிரச்சனை இல்ல. அது தான் சரியென முடிவு எடுத்து உறங்கச் சென்றாள். புது இடம் என்ற
ஒன்றைத் தாண்டி உறக்கம் அவளை தழுவியது.
Comments
Post a Comment