கோழையின் மரணம் சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது. ''போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்'' என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு 'இனி பேச வேண்டாம்' என அன்பு கட்டளை விடுத்தாள். ''என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி'' என பெரு மூச்சு வ...