என்னை சிலையாக்கி விட்டாய்- காதல் பிதற்றல் 37
நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு
தொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கி
விற்புருவத்திற்கு வாள் போல் கூர்தீட்டி
துள்ளும் விழிகளுக்கு மையிட்டு
கண்ணாடி வளையல் சப்தம் எழுப்ப
முத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தே
முகம் நிறைய புன்னகை பூசி நின்று
வெள்ளி கொலுசொலி சினுங்க
உன்னிடம் வந்து நின்றேன்
நீ சிலையாக
நீயோ சாதாரணமாக
கேசத்தை கலைத்து பெயருக்கு வாரியப்படி
ஒற்றை கைக்கடிகாரத்தை
உந்தன் இடது கையில் கட்டியவாறு
மொத்த கம்பீரத்தையும் அழகையும்
உனக்கே சொந்தமாக்கி
என்னை சிலையாக்கி விட்டாய்...!
-- பிரவீணா தங்கராஜ் .
தொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கி
விற்புருவத்திற்கு வாள் போல் கூர்தீட்டி
துள்ளும் விழிகளுக்கு மையிட்டு
கண்ணாடி வளையல் சப்தம் எழுப்ப
முத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தே
முகம் நிறைய புன்னகை பூசி நின்று
வெள்ளி கொலுசொலி சினுங்க
உன்னிடம் வந்து நின்றேன்
நீ சிலையாக
நீயோ சாதாரணமாக
கேசத்தை கலைத்து பெயருக்கு வாரியப்படி
ஒற்றை கைக்கடிகாரத்தை
உந்தன் இடது கையில் கட்டியவாறு
மொத்த கம்பீரத்தையும் அழகையும்
உனக்கே சொந்தமாக்கி
என்னை சிலையாக்கி விட்டாய்...!
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment