பெண்ணிவள் முதிர்க்கன்னி
நெஞ்சில் காதல் பொங்கி வழிந்ததால்
வஞ்சியிவள் தனியே நடந்தாள்
கன்னியவள் மனம் அறிந்த ஏடு...
கரம் பற்றி கதைப் பேசும் அவனது சுவடு
வையகம் கண்ணில் வரமறுப்பாய்...
காரிருள் நித்திரையில் கனவில் வருவாய்...
முகமது நீ காட்ட மறுக்கின்றாய்...
அகமது உன்னிடம் அடிமைக் கொள்வதாய்...
பகலவனைப் போல வதைக்காதே...
பனிமழையாய் எண்ணில் கலந்திடவா !
நினைவில் கனவில் உன்னை எண்ணி
நித்தம் தொலைக்கின்றது என் தனிமை
புரவியில் அமர்ந்து நீ வருவாயோ...
தரணியில் வந்து கால் பதிப்பாயோ...
பெண்ணிவள் முதிர்க்கன்னி யென்பதை உடைத்து
உன்னவள் என்பதை உலகுக்கு காட்டு .
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment