ரயில் பயணங்களில்...

அரை மணிநேர ரயில் பயணம்
பார்த்ததும் அள்ளி அணைத்து
முத்தமிட தூண்டும் மழலையை
கையில் ஏந்தி யிருந்தமையால்
ஜன்னலோர யிருக்கை சாதகமாய் கிட்டின
கையிலிருந்த மொட்டுக்கு பின்னுக்குச் செல்லும்
மரங்களும் வீடுகளும் பார்த்துக் கொண்டே வர
போதுமானதாய் யிருக்க
எனக்கு தான் உள்ளுக்குளிருக்கும் மன ஏட்டில்
 பதிக்க கருக் கொண்ட வரிகள் தேடியது
முதலில் சிநேகா புன்னகை விடுத்த
எதிர் யிருக்கை பெண்மணி
அதற்கடுத்து தொடுதிரையை துழாவியபடி
விழிகளை செல்சிறைக்குள் செலுத்திய கல்லூரி மாணவி
இசைஞானியின் ஏதோவொரு இசைக்கு
தன் செவியினை கொடுத்து விட்டு
கண்கள் சொருகி ரசித்த
நாற்பதை கடக்கும் பெண்மணி
இதற்கிடையில் வலுக்கட்டாயமாக திணிக்க வந்தது
ஹிந்தி-தமிழ் சமவிகிதத்தில் கலந்து
ஏதோவொரு தேனீர்(டீ)கடை தொண்டனின்
சமோசா விற்பனை
ஒருவித எரிச்சலோடு அவன் சென்ற பின்னர்
முதன் முதலில் கைப்பை அணிந்தவர்களும்
முதன் முதலில் குழந்தையை
முதுகில் சுமக்கும் வித்தை தெரிந்தவர்களுமானவர்கள்
ஊசி மணிகளையும் பாசி மணிகளையும் விற்க வந்தனர்
அவர்களை கண்டு சிலர் ஒதுங்க
அவர்களை கண்டு சிலரோ பேரம் பேசி
மணிகளை வாங்கவும் செய்தனர்
இடைப்பட்ட நிறுத்தத்தில் சிலர் இறங்க சிலர் ஏறினர் .
அவர்களில் இருபாலினரும் கொண்டவர்கள்
யாசகம் கேட்டு வந்தனர்
சிலர் முகம் கடுக்க , சிலர் எதற்கு வம்பென
நாணயம் தந்தனர்
சிலரோ மற்றவர்களுக்கு கேட்டிராது
முணுமுணுத்து வசைப் பாடினார்
மேலும் சில நிறுத்தங்கள் வந்திட்ட போது
பாதங்களில் வெடிப்பையும்
கழுத்தில் அழுக்குயேரிய மஞ்சள் கயிறும்
தலையில் சும்மாடு மேல் கூடையில் மாம்பழமேந்தி
கூவிக் கூவி கால் மணிக்குள் விற்று
கையில் கொண்டு வந்த தள்ளுவண்டியின்
உணவு பொட்டலத்தை உண்டு முடித்து
இடையில் சொருகிய வெற்றிலையை
வாயில் கொதப்பி விழுங்கிட
சற்றே காலியானது ரயில் பெட்டி
தலையில் சுற்றிய சும்மாடு துண்டை உதிர்த்து
சட்டெனெ விழிமூடி படுக்க
அக்கணமே நித்திரா தேவி அணைத்தும் கொண்டாள்
பஞ்சு மெத்தையில் கிட்டிராத
பணம் படைத்தவனுக்கு கிட்டிடாத உறக்கம்
அந்த கிழிசல் யுடைய வெடிப்பு கால்களுக்கு
எளிதில் கிட்டியது
எனக்கும் கவிதைக்கு கரு கிட்டிய நிறைவுடன்
அரை மணிநேர ரயில் பயணம்
அரை நொடியில் கழிந்தன .
               --- பிரவீணா தங்கராஜ் .



















Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1