உயிர் மீட்கும் காதல்
ஒரு வாரம் ஓடிப்போனது
அச்சண்டையின் பாதிப்பு
இருவரும் பேசாமடந்தையாக
உன் ஒவ்வொரு அசைவையும்
பார்த்துப் பார்த்து
எப்பொழுது பேசுவாயென
சிறு இதயம் ஏங்கியே தவித்து
நீண்ட மனப்போராட்டத்திற்கு பின்
உன் கம்பீரத்திற்கு குறைவு வந்திடாது
ஒரு வழியாய் மவுனத்திற்கு விடை கொடுத்து
உன்னிடமே கேட்டு விட்டேன்
எப்படி உன்னால் மட்டும்
என் பார்வையை புறக்கணித்து
என் மேனியை தழுவாது
என் மூச்சை சுவாசிக்காது
எப்படி இருக்க முடிகின்றதென்று
நீயோ
என் கண்களை ஆழமாகப் பார்த்து
சுவாதீனமாக கூறுகின்றாய்
உயிரற்ற உடலுக்கு என்ன தெரியும்
நீ பேசிய பின்பு தானே
உயிர் வந்தது என்கிறாய்...
பிரவீணா தங்கராஜ் .
அச்சண்டையின் பாதிப்பு
இருவரும் பேசாமடந்தையாக
உன் ஒவ்வொரு அசைவையும்
பார்த்துப் பார்த்து
எப்பொழுது பேசுவாயென
சிறு இதயம் ஏங்கியே தவித்து
நீண்ட மனப்போராட்டத்திற்கு பின்
உன் கம்பீரத்திற்கு குறைவு வந்திடாது
ஒரு வழியாய் மவுனத்திற்கு விடை கொடுத்து
உன்னிடமே கேட்டு விட்டேன்
எப்படி உன்னால் மட்டும்
என் பார்வையை புறக்கணித்து
என் மேனியை தழுவாது
என் மூச்சை சுவாசிக்காது
எப்படி இருக்க முடிகின்றதென்று
நீயோ
என் கண்களை ஆழமாகப் பார்த்து
சுவாதீனமாக கூறுகின்றாய்
உயிரற்ற உடலுக்கு என்ன தெரியும்
நீ பேசிய பின்பு தானே
உயிர் வந்தது என்கிறாய்...
பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment