நீயின்றி இருக்கும் நான்

விழிகள் கண்டு ரசித்து மகிழ்ந்த
வையகத்தை நெஞ்சில் ஏதுமின்றி
கரம் பற்றியபடி கதைப்பேசி கதைத்திடவே
காதலன் ஒருவன் வருவனென்று
காத்திருந்த கண்கள் பூத்துவிட்டது
இளநரை வந்து இதயம் கனத்து
இளவரசன் தேடிடும் முதிர்கன்னியாய்
இப்படி இப்படியாய் தினம் நடக்கும்
காட்சி பொருளாய் யொரு நாடகம்
கானகத்தில் இருப்பதாய் தோன்றுதடா நெஞ்சம்
கானகத்து குயிலாய் நீ வர மறுப்பது ஏனோ
தேனீ சுவைக்காதா பூவின் மகரந்தம்
நீரில் ஒட்டாத தாமரை இலை
தென்றல் தீண்டாத ஜன்னல் கதவு
ஓவியம் வரையாத துரிகையாக
தனிமையில் நீயின்றி இருக்கும் நான்
                            -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு