இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

நியூட்டன் விதி போல

நியூட்டன் விதி போல இதற்கும் கூட விதிமுறைகள் உள்ளதென நீ சொல்லியே அறிந்தவள் நான் முதல் தோசை சரிவர வேகாது என்றே ஒதுக்கி தள்ளியதே முதல் விதி சற்றே கருகியது வார்த்தவருக்கே என்பது இரண்டாவது விதியாக கூடயிருக்கலாம் மொறு மொறு வென்று காற்றில் பறப்பதே தோசை யென்றே பெயரிட்ட உனக்கு குட்டிமகள் செம்பு நீரில் முக்கியெடுத்த உப்பு சப்பில்லாத தோசை மட்டும் எந்த வித விதிமுறைக்கு சேர்த்தியோ...?!                                       -பிரவீணா தங்கராஜ்.

பிதற்றல் மொழி நீ

விழி மோதி... உயிராகி... எனை நாடி... வா அழகே... நேச கவி... நீ பாடி... எனை தேடி... வா உயிரே... கண நேர... விழி மோதி... இதயமிட... மாறியதே... தீப்பார்வை பார்க்கின்றாய் தேகமது சில்லிடுகின்றது சிதறிடும் வார்த்தை வீசுகின்றாய் மழையின் சாரலாய் தூவுகிறது                  -- பிரவீணா தங்கராஜ் .

திருடி விட்டாய் என்னை

திருடுகின்றாய் என்பதாலே உன்னை எளிதில் நுழைய விடுவதில்லை மனதில் நீயோ கனவில் புகுந்து கள்வனின் வேலையை சரியாக எண்ணில் சரித்துவிடுகின்றாய் இமை திறக்க ஓடிவிட்டு என்னை புலம்ப வைப்பது நியாயமா...?!              -பிரவீணா தங்கராஜ். 

நெஞ்சம் பொறுப்பதில்லையே...

மாடவீதியில் மதில்கள் பளபளக்க மண்குடிசையில் உணவின்றி ஏழையுறங்க அயலவர் ஆண்ட ஆட்சிப் போக அரசியல்வாதிகளின் இன்னலாட்சி காண எல்லாவளம் நாட்டில் பெற்ற நிலைமாறி எல்லையில்லா கொடும்நோய் நிலைவந்து வழியறியும் பலகையில் சுவரொட்டிபூச வழிப்பாதையில் குப்பைவண்டி குப்பை வீச பெண்மைப்போற்றும் கண்ணகி நாட்டில் பெண்மைவிற்கும் விலை மாதுவாக புண்ணிய செயல் புரியும் மருத்துவத்துறையில் புதுமை களவு தான் செயல் உறுப்பு திருட்டும் இரும்பாக இருக்க வேண்டும் இளைஞன் துரும்பாக மாறுகிறான் போதை உண்டு இறைவனிடம் புகார் அளிக்க இதயம் நாடுது இயற்கை வடிவில் இறைவன் தரும் துன்பம் கண்டு இதயம் நொறுங்குது. நெஞ்சம் பொறுப்பதில்லையே இன்னும் பல செயல்களை விழிகள் காண்பதால்...                                -பிரவீணா தங்கராஜ்.  

வழிச்சொல்

படம்
இமைமூடியும் விழிகள் நீரை நிறுத்துவதில்லை-நீ இல்லையென்ற வெறுமையை மனம் ஏற்பதில்லை உன் வாசமில்லா  சுவாசம் கொல்லுதிங்கே உன் காதலெனும் கடலில் கலந்தவள் உன் குறும்பெனும் தேனில் ஊறியவள் உன் அருகாமையில் அன்பை கண்டவள் நீயில்லா வெற்றிடத்தில் வெறுக்கிறேன் நீயெங்கே நீயெங்கே என பிதற்றுகின்றேன் வானவில்லில் வண்ணங்கள் சேர்க்க  வாழ்க்கையெனும் கடலில் மூழ்க வழிச்சொல்.                                           - பிரவீணா தங்கராஜ்.